பாத்ரூ(ம்)பூதம் (டாக்டர் இல்லங்க) (A)


மாத்ருபூதம் கேள்விப்பட்டிருப்பீங்க.. அதென்ன ”பாத்ரூம்பூதம்?” இவரும் அவர மாதிரியே “அந்த” டாக்டரோ? பேர் வித்தியாசமா இருக்கே? ஒரு வேளை “அந்த” டாக்டருங்கறாதல “அடையாள”ப்பேரா இருக்குமோ? அடையாளமா இருந்தாலும் பாத்ரூமுக்கு என்ன சம்மந்தம்? என்னங்க ...? பேச்சிலர் பாத்ரூமா? ஒஹோ ...இருந்தாலும் இப்படியெல்லாமா பேர வச்சிப்பாங்க?  என்ன இப்படியெல்லாம் பலரும் பல விதமா மண்டைய உடைச்சிக்கிட்டிருக்கீங்களா? நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்லங்க.. நம்ம ஃப்ரெண்டொட 2 வயசு பொண்னு வீட்டுக்கு வந்திருந்தப்போ இருட்டுல பாத்ரூம் போக பயந்துக்கிட்டு “பாத்ரூம்ல பூதம்”னு மழலையில சொன்னதுதாங்க இது.. முதல்ல நானும் உங்கள மாதிரிதாங்க குழம்புனேன், அப்புறம்தான் புரிஞ்சுது..


அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்?

இருக்கு.. சொல்றேன்..கேளுங்க...(என்னப்பா நம்ம ட்ரூப்ல எல்லாரும் ரெடியா? “ரெடி சார்..” அப்ப ஒன்.. டூ.. த்ரீ.. ஸ்டார்ட்..)

அதாவதுங்க நம்ம நாட்டுலே படிச்சவன், படிக்காதவன்(படம் இல்லப்பா), பாமரன் இன்னும் பல பேர்  இந்த விஷயத்துலே தெளிவான அறிவில்லாமத்தான் இருக்காங்க..  எந்த விஷயத்துல? அதாங்க “அந்த”  விஷயத்துல..

“யோவ் தெளிவு இல்லாமலா நாம உலத்துலயே ரெண்டாவது இடத்துல இருக்கோம்?”

ரெண்டாவது இடத்துக்கு வரக்காரணமே தெளிவு இல்லாததுதான்..புரியுதா..? சித்த நாழி சு(ழிய) வச்சிட்டு சும்மா இருக்கியாடா தம்பி? எல்லா ஊர்லயும் மூத்திர சந்துல பத்திரமா ஒளிஞ்சுக்கிட்டு ஓஹோன்னு யாவாரம் பாத்துக்கிட்டு இருக்கற டாக்டர்களயும் அவங்க பக்கம் பக்கமா கொடுக்கிற விளம்பரத்த பாத்து, அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம, களத்து மேட்ல குத்த வச்சவன்லேருந்து, ஃபில்டர் சிகரெட் பத்த வைக்கறவன் வரைக்கும், செட்டியார்ட்டயோ, சேட்டுக்கிட்டயோ சொத்த வச்சிட்டு மொத்தமா ஏமாந்த கதையையும்தான் நாம இப்ப பாக்கப்போறோம்.. 

உங்களுக்கு தெரியுமா? இந்த விஷயத்துக்காக உலகெங்கும் ஒர் ஆண்டுக்கு மனிதர்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவென்று? (டாக்டருக்கும், மருந்துக்கும்(மற்ற செலவுகள் சேர்க்காமல்) சில ஆயிரம் கோடிகள்... வாயப்பொளக்காதீங்க... பதிவு கொஞ்சம் சென்சிடிவ் மேட்டர்ங்கறாதல எதாவது அசம்பாவிதம் நடந்தா நான் பொருப்பல்ல....


டவுசர் டாக்டரோட பூசனிக்கீரை ஸ்பெஷல், பிரபல பொறனி கோ.கோழிகுத்து, ஆந்திர அடிவேறு வைத்தியர் மற்றும் எனக்கு பெயர் தெரியாத மேலும் பல பிரபலங்கள்... அப்புறமா எந்தக்கட்டுப்பாடும் இல்லாம நீட்டா(neat-ஆ (கரெக்டா படிச்சீங்கள்ல?) விக்கற இங்க்லீஷ் மருந்துகள் ...


 இந்த மாதிரி போலி டாக்டர்கள், கண்ட வீரிய மருந்தயும் கொடுத்து இருக்கற கொஞ்ச “நஞ்சையும்”(புரிஞ்சுதா?) எடுத்து வீரியம் என்ன விஷயமே இல்லாம ஆக்கிடறானுவ.. இதனால என்னாச்சுன்னா ஏகப்பட்ட குடும்பத்துல குத்து, வெட்டு, குடும்பகோர்ட், கேஸ்னு ஆகிப்போச்சு.. அது மட்டுமல்ல .. அரச மரம், ஆல மரம், வேப்ப மரம்னு சிம்பிளா மரத்த சுத்தி வந்து மாங்கா தின்னலாம்னு மட மரமா திரிஞ்ச மாதர்குலத்தை கரெக்டா கரெக்ட் பன்னி, அவங்க வயித்துல புள்ள குட்டிக்கு பதிலா நெசமாவே புழு, பூச்சி நெளிய வச்சானுவ , பிச்சக்காரனுக்கு பொறந்தவனுங்க...

பஜார்ல கிடைக்கிற  நிஜார அவுக்கற சீப்பான படத்தலாம்  கும்பலா கூடி கும்பமேளாவவா பாத்து, அத உண்மைன்னே நம்பி கற்பனை குதிரைய கன்னா பின்னான்னு ஓட விட்டுட்டு கடேசில இளைஞர்களும் இங்கேதான் வர்றாங்க...குமரன்s/oமகாலஷ்மி படத்துல. “துவண்டு கிடந்த பிஸினஸ்ச செங்குத்தா தூக்கி நிறுத்திட்டன்னு” நடிகர் வெ.ஆ.மூர்த்தி சொன்னது மாதிரி, இந்த ஃப்ராடுங்க தனக்கும் செய்வாங்கன்னு நம்பி. ஆனா இந்த போலிங்க  கருங்குரங்கு கஷாயம், குட்டிக்குருவி லேகியம், மயில் தோகை ஆயில், கடா ஆடு பேஸ்ட்டுனு  எதாவத வர்ற கஸ்டமர் இடுப்புல கட்டி அனுப்பிடுவாங்க...

அவ்வளவுதான் மருந்துங்கற பேர்ல போலிங்ககிட்ட வாங்குன   கஸ்மாலத்த உள்ளுக்க தள்ளிட்டும் வெளிய தடவிக்கிட்டும் பப்பரப்பான்னு மல்லாக்க படுத்துக்கறாங்க.. நம்பாளுங்க.  இதுல  ’நான் அவனில்லை’ கதாநாயகன் மாதிரி 5.1 (dts இல்ல) கனவு வேற... விடிய விடிய குனிஞ்சே (நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் ப்ளீஸ்..) பாத்துக்கிட்டுருந்ததுல கழுத்து வலிதான் மிச்சம். முடிவு என்ன ஆகும்? எதிர்காலத்துல 1க்கு மட்டும்தான் போலாம், வேற 1க்குள்ளயும் போக முடியாத  மாதிரி ஆயிடும்.

மாமியார், நாத்தனார், கொழுந்தனார்னு பல பேரு மருமகள மகளா நினைக்காம ”இன்னுமான்னு?” நக்கலா கேக்கற கேள்வினால அவசரப்பட்டு போலிங்ககிட்ட வர்ற பொண்னுங்கள ”கர்ப்பப்பைல அழுக்கு” இந்த மருந்த ஒரு மண்டலம் சாப்புடுங்கன்னு ஏதோ மஞ்சப்பைய அழுக்கெடுக்கறாப்புல சுலபமா அவங்க ஏக்கத்த பயன்படுத்தி பணத்த புடுங்கிடுவாங்க போக்கத்த பசங்க..

இவனுங்க மட்டும் இல்லங்க, மொட்ட தலையில முடி வளக்கிறேன், மூலம் வந்தவன கூலாக்கறேன்ன்னு  இன்னும் பல பேர் பல வகையிலே மக்களையும் சமுதாயத்தையும் நல்லா ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. அதுலயும் இந்த ”அபார்ஷன் ஸ்பெஷலிஸ்ட்”னு ஒரு கோஷ்டி அபார்ஷன்னா ஆம்லெட் போடறதுங்கற மாதிரி ஏகப்பட்ட இளம் பெண்களோட வாழ்க்கையில விளையாடிட்டு இருக்கானுங்க..

இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

இருக்கு. எல்லாரும் எல்லாருக்கும் முடிஞ்ச வரைக்கும் விழிப்புனர்வு வரவழைக்கற வகையில தெளிவான கருத்துக்களை பரப்புங்க.  நல்ல ஆரோக்யமான , காய்கறிகள் நிறைந்த, சத்தான உணவுகள எடுத்துக்குங்க. இன்றைய இளைய சமுதாயத்தினர் பலர் ”குடிக்க ஒரு பீரு
சாப்புட கொஞ்சம் சோறு
பாக்க ஒரு படம்
படுக்க சின்ன இடம்”னு
தவறான சந்தங்களோடு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. ஆகையால், குடி, பொடி, பீடி, லேடி(யுமா?) போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாமல் வாழ பழகுங்கள். எப்போ யாருக்கு என்ன பிரச்சனைன்னாலும் நல்ல மருத்துவரை அனுகுங்க.. சந்தேகங்கள தயக்கமில்லாம கேளுங்க.. நீங்களே டாக்டரா மாறி சொந்தமா கடா மார்க் லேகியம், காட்டெருமை கோமியம்னு வாங்கி சாப்புடாம மருத்துவர் அறிவுரைப்படி மட்டுமே மருந்துகள உட்கொள்ளவும். விழிப்புணர்வு இல்லாம மீறினா, கடேசில பின் விளைவா முன் விளைவே இல்லாம போய்டும் ஜாக்கிரதை. இன்றைய கால கட்டத்துல நவீன மருத்துவம் மிக பிரமாண்டமாய் வளர்ந்துள்ளது. நாம் போலி மருத்துவர்களிடத்தில் போகும் பிரச்சனைகளெல்லாம் மிக சாதாரண ஒன்றுதான் தற்கால மருத்துவ வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்கும்போது... செலவுகள் அதிகமென்று சிக்கனத்திற்காக உங்கள் வாழ்க்கையை பனயம் வைக்காதீர்கள்.. எல்லாம் சரி ஏன் இவனுங்கள அரசாங்கம் நெனச்சா கட்டுப்படுத்தலாமேன்னு சொல்றீங்களா? அப்ப உங்களுக்கு அரசியல் தெரியாதுன்னு அர்த்தம். மேலும், மருத்துவ பதிவுல அரசியல் வேண்டாம்..  ப்ளீஸ் ஓக்கே?

மகா ஜனங்களே.. இத பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்.. வழக்கம் போல கருத்து மழையா, காட்டாற்று வெள்ளமா பொங்கிட்டு போங்க..

(ஆண்குறி, ஆச்சர்யக்குறின்னு பதிவுலகத்துலயும், பத்திரிக்கையுலகத்துலயும் கவிதை, கட்டுரைன்னு கலக்குறவங்க இந்த பக்கத்துலயும் எதாவது சொன்னா அது  விழிப்புனர்வ ஏற்படுத்தற முயற்சிக்கு பெரிய  அளவுல உதவுறா மாதிரி சந்தோஷமான விஷயம்னு நெனைக்கறேன்)


அது மட்டுமல்ல  எல்லாரும், வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம வாக்குகள அள்ளி வீசுற வாக்காளர்கள் மாதிரி, ஓட்டுக்கள ’வார்ட்’ புயல் கணக்கா வாரி கொட்டுங்க....

அப்ப, மீண்டும் ஒரு அட்டகாசமான தருனத்தில் சந்திப்போமா?யூஸ்லெஸ் ஃபெல்லொஸ் (வரி விலக்கு வேண்டாம்)

எனதருமை அன்பர்களே, நன்பர்களே, சக பதிவர்களே, வாசகர்களே, கருத்துக்களை தயக்கமில்லாமல் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்துபவர்களே மற்றும் என்னை பின் தொடர்பவர்களே, இனி தொடரப்போகிறவர்களே (அய்யய்யே... என்ன இது ஒரு எதுகை மோனைக்காக கூப்பிட்டா லேகியம் விக்கற எஃபக்ட் வந்துடுச்சி? சரி பரவால்ல.. உலகமயமாக்கலால எதிர்காலத்துல வயித்துப்பொழப்புக்கு உதவும்) எல்லாருக்கும் வணக்கம்.. என்னங்க எப்படி இருக்கீங்க?  சந்தோஷமா இருக்கீங்களா? இருப்பீங்கன்னு நம்பறேன்.

இந்தப்படத்த பாக்குறப்ப கண்னுக்கு ஏற்படற குளுமையும், சந்தோஷமும் நேர்ல போய் பாக்கனுங்கற எண்ணத்த ஏற்படுத்துது இல்ல? ஆமான்னு சொல்றவங்க சொந்தக்காசுலயோ, கம்பெனி காசுலயோ போங்க இல்லன்னா  வெயிட் பன்னுங்க தனக்கு தானாவே செய்வின வச்சுக்கிட்டு வர்ற யார் காசுலயோ போய்ட்டு வந்து சும்மா நச்சுன்னு ஒரு பதிவு போடுங்க, நிச்சயம் என் ஓட்டயும் , என் கருத்தையும் பதிவு செய்யறேன். ஏங்க.. ஏங்க... அத சொல்றதுக்கு நீ யாருய்யான்னு சொல்லிட்டு எங்க போறீங்க? ஏன் கோச்சுக்கறீங்க?  என்ன சொல்லிட்டேன் இப்போ? என்னது ? நான் அதுக்கு சரியா வர மாட்டேனா?  எதுக்குங்க? அட .... சொல்லிட்டு போங்க....

போங்க நீங்க ... நான் பதிவு போட்டு 3 நாளாச்சு ஒருத்தரும் அடுத்த பதிவு எப்பன்னு  ஒரு சின்ன மெயில் கூட அனுப்பலே.. எப்படியிருக்கும் என் பிஞ்சு மனசு..?  காமக்கேசுல கம்ப்ளெய்ண்ட் ஆன சாமியார்லாம் “எல்லாத்துக்கும் ஒத்துழைக்க தயார்னு” பேட்டி கொடுக்கறான் ஆனா, சார் எப்ப அடுத்த பதிவுன்னு யாருமே கேக்கலயே? அதனாலல்லாம் நான் சும்மா இருந்துருவேனா என்ன? சும்மா கிருக்கு... கிருக்கு.. கிருக்குனு மௌச புடிச்சு ஆரம்பிச்சுட்டன்ல.. .(தல பின்றீங்க..) ஸ்ஸ்ஸ்ஸ்... யாருப்பா அது? கொஞ்சம் பொறுங்க.. பதிவ முடிச்சிட்டு வர்றேன்...(ஓட்டுங்கற விஷயம் இருக்கறதால கொஞ்சம் செலவு ஆகத்தான் செய்யும். ஓக்கே?)

யாருப்பாது?  கூட்டத்த கலைச்சது? “யாரும் கலைக்கலே.. நாங்களாத்தான் போறதுன்னு  முடிவு பன்னோம்...”

ஏங்க? தத்திங்கினத்தோம்... ததாங்கினத்தோம்னு சொர்னமுகி மாதிரி என் நிலை ஆடிக்கிட்டிருக்கும் இந்த சூழ்நிலையில காசில கானடிச்ச காவி வேட்டி (சில பேரு பொண்டாட்டிய வேனுன்னே தொலைக்கிறாங்களாமே? அப்படியா?) மாதிரி என்ன உட்டுட்டு போவாதீங்க.. ப்ளீஸ்...

”அண்ணே... காசிக்கு போனா பாவம் தொலஞ்சு போவுமாம்.. உம்பின்னாடி வந்து என்ன ஆவப்போது?” (ஆம்பள பின்னாடி நாங்களாவது?)


நல்லா கேட்டீங்கய்யா டீட்டெயிலு,,, நாடு போற போக்குல அத திருத்த ஒரு ஆளுமே இல்லேன்னு ஒத்தயா பூலோகத்த பத்தி கவலப் பட்டிட்டிருக்கேன் பாரு... எனக்கு நானே  தனக்கு தானே தண்டனயா விஜய் படத்தயும் கலர் நாயகன் ரித்தீஷ் படத்தயும் பாத்துர்றேன்.

”விஜய் படம் மாதிரி என்ன சொல்ல வர்றேன்னு தெரியாத குழப்பத்துலே நீ இருக்கன்னு தெளிவா தெரியுது...”

அப்படி சொல்லாதீங்க மதுரை மாவட்ட தலைவரே.. சீனே தெரியாம ஷூட்டிங் வந்த  விஜய் போல, நயன்தாராவ பாத்த பிரபுதேவா மாதிரி நானே தட்டுத்தடவிக்கிட்டு (நல்லா படிங்க.. ’தட்டு’ தொட்டுல்ல..) இருக்கேன்.. எதுக்கா..? ஹாலிவுட்டா ..? கோலிவுட்டா?ன்னு தமிழ் திரையுலகமே தவிச்சுக்கிட்டு இருக்கு.. இதுலெ நம்ம பங்குக்கு எதாவது செஞ்சு தமிழனயும், தமிழ் திரையுலகத்தையும் காப்பாத்தனும்னு விஜய் படம் ஓட்டற ஆப்பரேட்டர் மாதிரி துடிச்சுட்டுருக்கேன்..தெரியுமா..?

“நீ என்ன நினைக்கறேன்னு எங்களுக்கெல்லாம் தெரிஞ்சுடுச்சு.. பேசாம எடத்த காலி பன்னு”

யாருன்னு தெரியலியே..?! சரி எதாவது ஒரு தெருப்பொறுக்கியா சாரி தெருப்பொருப்பாளரா இருக்கும் போல..அதனால என்ன.. நாம சொல்ல வந்தத சட்டு புட்டுனு (அப்படின்னா என்ன?) சொல்லிடுவோம்.

ஆங்... எங்க வீட்டேன்..?

“எங்க விட்டே? விட்டாத்தான் ஓடிப்போயிருப்போம்ல”..?

சினிமாங்கறது வெறும் பொழுது போக்கு மட்டுமே, அதை பாக்கும் ரசிகனுக்கு.  ஒரு சினிமான்னு வந்தா நம்மள மாதிரி ஆளுங்க பாக்கெட்ட குறி வச்சுத்தான் ரிலீஸ் பன்னுவாங்க. அதனால உங்க இஷ்டப்படி படத்துக்கு போங்க, ஆனா, நியாயமான விலையில டிக்கெட் வாங்கி போங்க.  ப்ளாக்குல டிக்கெட் வாங்குறதால சில சமூக விரோதிகள நீங்களே உங்கள அறியாம உருவாக்க காரனமா இருக்கறீங்க..தியேட்டர்ல டிக்கெட் வில கூட விக்கறதுல என்ன சமூக  விரோதம் வந்துரப்போது? உங்க வருமானத்த விட அதிகமா, படத்துக்கான தகுதிய விட இதெல்லாத்துக்கும் மேல ரசிகன்ற ஒரே முட்டாள்தனமான பட்டத்தால உங்களோட பொன்னான நேரத்தையும் (நம் நாட்டின் உழைப்பு நேரம்) எழுபது கோடி இந்தியர்களில், ஒரு தனி மனிதனின் ஒரு முழு நாள் வருமானத்தை விடவும் அதிகமாக செலவு செய்கிறீர்கள். இந்த செலவால் எதாவது பலன் உண்டா? உண்டு. லாபம் சம்பாதிக்கும் பட, தியேட்டர் அதிபர்கள், கலைஞர்கள் வரி ஏய்ப்பு செய்யற ஒன்னுதான் அது.


அத அரசாங்கம்ல கேக்கனும்? எங்கள குறை சொன்னா?

ஏ... இளைய சமுதாயமே....(அப்பாடா அட்வைஸ் ஏரியாவுக்கு வந்தாச்சு) இது போன்ற பொழுது போக்கு விஷயங்களில் நீ செலவழிக்கும் நேரத்தை உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயங்களில் ஈடுபடுத்து. இதனால் உன் வாழ்வும் வளமாகும்.. உன்னைச்சார்ந்த சமுதாயமும் உயர்நிலை அடையும். நம் பாரத நாடு உண்மையிலே உலக அளவில் தலை நிமிரும்.

அதெல்லாம் முடியாது.. எங்க தளபதி முக்கியம். நாங்கெள்லாம் நடிகன் பின்னாடிதான் போவொம், ஒரு நாள் 3 மணி நேரம் சினிமா பாக்குறதுல்ல ஒன்னும் குடிமுழுகிடாது. எவ்வளவோ பேர் இன்னக்கி பெரிய ஆளா இருக்காங்களே அவங்கள்லாம் சினிமாவே பாக்கலியா?  ஏன் சினிமாலயே நிறய ஜாம்பவான்கள் இருக்காங்களே? அப்படின்னு சொல்றீங்களா?

அப்ப நிச்சயம் போங்க..

நாளய உலகம் உங்கள பத்தி ஒரு வரில சொல்லும்..

என்னவா..?

தலைப்ப பாருங்க தம்பி,,,,

பாத்துட்டு பேசாம போறீங்களே இது உங்களுக்கே நியாயமா? இடைத்தேர்தல் ஓட்டா, மழைக்கால குற்றாலாமா வாக்கையும் கருத்துக்களையும் கொட்டோ கொட்டுன்னு
குமுறிட்டுப்போங்க....

காதல்னா சும்மா இல்ல...


                   தலைப்ப பாத்தீங்கள்ல, சும்மா இழுக்குதா?  ஆமாங்க காதல்ங்கறது ஒரு புனிதமான விஷயம். எப்படின்னு தெரிஞ்சுக்கனுமா? மேல படிங்க. காதல்ல அந்தக்காலம் இந்தக்காலம் அப்படின்னு எதுவும் இல்லங்க, எல்லாம் நம்ம மனச போலத்தாங்க. எல்லாக்காலத்துலயும் இரு பாலருக்கிடையேயான பரஸ்பர புரிதலுக்கு பின்னரான ஈர்ப்பு இழுத்து செல்லும் திசைதான் காதல் என்றால் மிகையாகாது.

                  ஆனா தற்காலத்துல இன்றைய இளைய சமுதாயத்துக்கு எதிர்பாலினரை சந்திக்கும், பழகும் வாய்ப்புகள் கடந்த காலத்தை ஒப்பிடும் போது சற்று அதிகமாகவே உள்ளது. இது எந்த வகையில் இன்றைய இளைய சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்ப்போம்.   
 
                  அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அது அந்தக்காலம், அவனும் நோக்கியா இவளும் நோக்கியா (கனெக்டிங் பீப்பிள்ங்க) இது இந்தக் காலம். இந்த விஷயத்துல செல் ஃபோன் கம்பெனிங்க எல்லாம் கிட்டத்தட்ட மாமா வேலைதாங்க செய்யறாங்க. எப்படின்னு தெரியுமா? ஆம்பள பேசுனா ஒரு காசு, பொண்னுங்க பேசுனா இலவசம். உங்களுக்கு எவ்ளோ இன்கமிங் வருதோ அந்தளவுக்கு உங்க கணக்குல அவுட் கோயிங்குக்கான பாலன்ஸ் ஏறும். (ஏறட்டும் ஏறட்டும் எல்லாம் அப்பன் காசு).

                 தம்பிகளா சினிமாலயும் டிவிலயும் ஹீரோ ஹீரோயின லவ் பன்ற காட்சிகளெல்லாம் உங்கள தூண்டுதா? தூண்டனும் அதுக்குத்தானே படமே எடுக்கறாங்க. கார்ப்பொரேஷன் ஸ்கூல் பசங்களுக்கு கஸ்தூரிராஜா எடுத்தா கான்வெண்ட் பசங்களுக்கு மனிரத்னம் எடுக்கப்போறாரு. இருட்டு அறையில முரட்டு ஒலி அமைப்போட பாக்குற காட்சிகள் இளைய சமுதாயத்துல (அதாங்க டீன் ஏஜ் குரூப்பு) குருட்டாம்போக்கான எண்ணங்கள ஏற்படுத்தி யார் பெத்த புள்ளயோ யார் பெத்த பொண்னயோ இழுத்துக்கிட்டு ஓடறான். ஆனா அதுக்கு பிறகு இரண்டு குடும்பமும், ஓடிப்போனவங்களும் சந்திக்கற பிரச்சினைகள எந்த சினிமாவும் சொல்லல, சொல்லவும் மாட்டாங்க.

                  வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை சுயமாக நிறைவேற்றிக்கொள்ளும் பொருளாதார வசதி இல்லாத, ஏற்படுத்திக்கொள்ளும் வழி தெரியாத நிலையில் திசை மாறி சென்று வாழ்க்கையை தொலைத்த ஜோடிகள் ஏராளம்..

                   இருவருக்குள் வெரும் தோற்றத்தை மட்டுமே வைத்து ஏற்படும் ஈர்ப்புக்கு காதல் என்று இன்றைய கலை உலகம் மிகப்பிரமாதமாக, பிரமாண்டமாக தொடர்ந்து போதித்து வருகிறது (விளைவு அவர்கள் குடும்பத்திலேயே தெரிந்த போதும் கவலைப்படாமல், பணம் ஒன்றே குறிக்கோளாய்). ஆனால் நாடு? குடைக்குள் மழை மாதிரி குடைக்குள் குடும்பம் (வெயிலோ மழையோ ஏன் சுனாமியே வந்தாக்கூட தெரியாம, யாரு மனசுலே யாருங்கறது கூட கண்டு பிடிச்சுடலாம் ஆனா யாரு கை யாருக்கிட்டன்னு கண்டு பிடிக்க முடியாது ) போன்ற காட்சிகள பாக்க வேண்டியிருக்கு

                “உங்களால இதெல்லாம் செய்ய முடியலேங்கற பொறாமையில ஈஸியா  இப்படி எங்கள குற்றம் சொல்ல முடியுது” அப்படிங்கற முடிவுக்கு யாரும் வந்துடாதீங்க. ஏன்னா இந்த காட்சிகள பாக்காத நன்பர்கள் யாராவது இருக்கீங்களா?  பாத்துருப்பீங்க, சிலர் நைஸா, டிக்கெட் இல்லாத பிட் ஓடுதுன்னு  அப்படி இப்படி நின்னு கூட பாத்துருக்கலாம். ஆனா சாலையக்கடக்கும் போது நீங்க பாத்த இந்த குடைகள்ல உங்க வீட்டு புள்ளங்க இருந்தா? நெனைக்கும் போதே பகீர்னு இருக்கா? அன்பு வாசகர்களே நீங்க பெற்றோர்களா இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்த செலவிடுங்க, உங்களோட புள்ளங்களுக்கு வாழ்க்கைய பத்தி சொல்லி கொடுங்க. ஏன்னா நீங்க சொல்லி தரலேன்னா அவங்க தானாவே தப்பா கத்துப்பாங்க.

             பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இளைய நன்பர்களே  பிடிச்சவங்களோட பிடிச்ச மாதிரி பழகுங்க. உங்களோட பெற்றோர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் உங்களுக்கான நல்ல வாழ்க்கையை கையில் வைத்துக்கொண்டு என்பதை மனதில் வைத்து..ஏனெனில் எந்த பெற்றோரும் தங்கள் செல்லங்களை எங்கும் தள்ளிவிட மாட்டார்கள். பாதியில் வந்த பையனயும் பொன்னயும் நம்புற நீங்க உங்க பெற்றோர நம்ப மாட்டீங்களா என்ன?
             
            அப்படீன்னா நீ காதலுக்கு மரியாதை செய்யாதவனா?ன்னு கேக்கறவங்களுக்கு “காதல் என்பது மனிதன் அல்ல மரியாதை செய்வதற்கு, மனிதன்தான் மரியாதையை எதிர்பார்ப்பான், அது ஒரு உணர்வு, புரிந்து கொண்டு தெளிவாக தெரிந்து கொண்டு, நிகழ் கால இன்பங்களை பார்த்து அவையே நிரந்தரம் என ஏமாறாமல் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல உதாரணமாக திகழக்கூடிய காதல் தம்பதியினரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்.”

                அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சின்னு சந்தோஷமா போய்க்கிட்டுருக்கற ரெண்டு குடும்பங்களோட சந்தோஷத்தத்தான் இன்றைய இளைய சமுதாயம் காதலுங்கற பேருல பலி கொடுக்குது. இப்ப புரியுதா ஏன் காதல்னா சும்மா இல்லன்னு?
               

                                 
                 


சிலர் கை கொட்டி சிரிப்பார்கள்.....

நாட்டின் பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிரடி சோதனை, உரிமம் இல்லாத, முறையான அனுமதி பெறாத மற்றும் ஓடுவதற்கு தகுதி இல்லாத வாகனங்கள் பறிமுதல்.  ஆகா என்ன ஒரு அருமையான செய்தி..! அடேங்கப்பா.. என்னா ஒரு வேகம்...! அரசாங்கம்  சாட்டைய கையில எடுத்துடுச்சு இனிமே ஒரு கவலையும் இல்லே, நம்மூட்டு புள்ள குட்டிங்க பத்திரமா ஸ்கூலுக்கும், காலேஜுக்கும் போய்ட்டு வந்துடும்.  அப்படீன்னு நிம்மதி பெருமூச்சு விடற ஆளா நீங்க? அப்ப நில்லுங்க ராஜாவே... இந்த பதிவு உங்களுக்குத்தான்..ஏன்னா “படிச்சவன் பாடம் நடத்துறான்.... படிக்காதவன் பல்கலைக்கழகமே நடத்துறான்...”

படிக்கற புள்ளக்காக குடிக்கற டீய க்கூட மிச்சம் பன்னி “எம்மவனும் கான்வெண்ட்ல படிக்கிறான்னு” ஊர் போற்ற நினைத்து பிள்ளைகளை (ஒரு புள்ளயோட யாரு நிறுத்திக்கறா?) நாலு ஆஸ்பெட்டால் சீட்டும் நமுத்துப்போன சுவரும் நசுங்குன ஆட்டோவும் (அம்பது குழந்தைகளும் ஏத்திக்கலாம், கேள்வி கேட்டா வீட்டுக்கு அடியாளும் அனுப்பலாம்) வச்சிருக்கற ஒரு இடத்துல (சேத்தவங்க “ஸ்கூல்னு” சொல்றாங்க?) கொண்டு விட்டுட்டு, அந்த குழந்தை வளர்ந்து டாக்டர், இன்ஞினியர், கலெக்டர் ஆவும்னு கனவ ஸ்டார்ட்னு சொல்லிட்டு தூங்க ஆரம்பிச்சுடுறாங்க..ஃபீஸுக்கு அண்டாவும், டெர்ம் ஃபீஸுக்கு குண்டாவும் வித்து கட்டறாங்க. (என்னது? செயின், தோடு, வளயல்லாம் இருக்கா? இருக்கட்டுங்க.. அதெல்லாம் காலேஜ் படிக்கறப்ப வேனுங்க) இப்படியெல்லாம் ஜனங்க ரத்தத்த சுத்தமா மொத்தமா குடிச்சு, ஆறேழு மாடியும் கூட ரெண்டு லேடியும் சேத்து கட்டிக்கிட்ட கம்மனாட்டிங்க எதயாவது ஒழுங்கா செய்றானுவளா? இல்லயே...நடத்துற ஸ்கூலுக்கு பெர்மிஷன் இல்ல..ஓடுற வண்டிக்கு ஒழுங்கான பேப்பர் இல்ல..அப்புறமா அத ஓட்டுற ட்ரைவருக்கு லைஸென்ஸ் இல்ல (நாங்கள்லாம் ஸ்கூலுக்கே வாங்கலே வேனுக்கா வாங்குவோம்? எந்த ஊருடா நீங்க?) கடைசியா இந்த மாதிரி இடத்துல உயிரினும் மேலான புள்ளங்கல சேக்கற பெற்றோருக்கு தலையில மூளையும் இல்ல...

இந்த உலகத்துல பொறக்கற எல்லாரும் மூளையோடதான் பொறக்கிறாங்க. ஆனா அம்மினிக்கு கலர் டிவி, அய்யனுக்கு டாஸ்மாக், செய்யாத வேலைக்கு கூலி திட்டம் (சில இடங்கள்ல சில அயோக்கியர்கள் திட்டம் போட்டு சில அப்பாவிகளை வேலை வாங்குவதும் நடக்கிறது) போன்ற சுலபமான வழிகள் ஆன்னு தொறந்திருக்கற சாமான்யன் வாய் வழியா மூளைக்கு போய் மழுங்கடிச்சுடுது. போதாக்குறைக்கு குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கான்னு கும்மியடிச்சு, பொடச்சு பொங்கி சாப்புட இலவச அரிசி வேற...

ஏற்கனவே வெற்றிவேல் வீர வேல்னு நின்ன பயதான் நம்ம பயபுள்ளக... இவ்வளவும் செஞ்ச பிறகு கேக்கனுமா? ரொக்கமா வாங்குனான் சொக்காவ போட்டான் பக்காவா குத்துனான் நீலக்கலர் பட்டன. அப்புறமென்ன? அன்னியோட முடிஞ்சது அவன் கத.

நடந்தது நடந்து போச்சு இனி ஆக வேண்டியது என்னன்னு பாப்போம்னு சொல்றீங்களா? அனைவரும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, கல்லூரிக்கு சென்று அங்கீகாரம், இதர வசதிகளின் உண்மை நிலவரம் போன்றவற்றை தீவிரமாக அடிக்கடி (குறைந்தது 3 மாதத்துக்கு ஒரு முறை) விசாரியுங்கள். தகவல் அறியும் சட்டத்தை தேவைப்பட்டால் பயன் படுத்துங்கள். புதிதாக சேர்க்கப்போகிறவர்கள் முன்பே இந்த தகவல்களை தெரிந்து கொண்டு சேருங்கள். ஜனநாயக நாடான நம் இந்திய தேசத்தைப்பற்றி நாம்தான் கவலைப்பட வேண்டும். நம் மக்கள் சக்தி மிகப்பெரிது. மிகச்சரியாக ஒன்றுபட்டால் முட்டாள் அரசியல்வா(வியா)திகளை ஒழித்து விடலாம்.  இல்லையெனில் இந்த பதிவின் தலைப்புக்கு நீங்கள் உதாரணமாக  இருக்க வேண்டியிருக்கும்...

ஒன்று படுவோம்..

உலகிற்கு நம் சக்தியை உணர்த்துவோம்...

வாழ்க இந்தியா...இத படிங்க மொதல்ல

ஹாய் எவ்ரிபடி, என்ன எப்டி இருக்கீங்க..? இந்த நாள் இனிய நாளா போச்சா? வேகமா ஓடிட்டு இருக்கற இந்த உலகத்துல நம்ம வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் உன்னதமான நாள்தான் இல்லீங்களா?(ஆமாங்க, கொஞ்சம் யோசிச்சு பாருங்க, பிறக்காமலே போனவங்க, அல்பாயுசல போனவங்க, அறை குறையா வாழ்ந்து மடிஞ்சவங்க அவங்களுக்கு இல்லாத ஒரு முழு நல்ல நாள் ) அத நாம எப்படி கழிச்சோம் அப்படின்னு திரும்பி பாத்து வருத்தப்பட்டோ, சந்தோஷப்பட்டோ என்ன ஆகப்போது? எல்லோருமே எல்லா நாளையும் நல்ல நாளா மாத்திக்கறது அவங்கவங்க கைலதாங்க இருக்குது.

என்னய்யா இப்படி சொல்றே? கடந்த கால வாழ்க்கைய பாத்து பாடம் கத்துக்கன்னு பெரியவங்கள்ளாம் சொல்லியிருக்காங்களே அதெல்லாம் என்னன்னு கேக்கறீங்களா? 
அனுபவங்கறத கிமுலேர்ந்து கிபிக்கு வந்த நாம இன்னும் சரியா , சரியா என்ன சரியா கொஞ்சம் கூட புரிஞ்ச்சுக்கலேங்க. 

பின்ன என்னங்க நாம மட்டும் அனுபவத்த பத்தி தெரிஞ்சு வச்சிருந்தா இன்னய தேதிக்கு நம்ம தமிழ் சினிமா ஹீரோக்கள் (யார் பேர சொல்றது யார விடறது) 50 வது படம், 100வது நாள்னு நம்மள பாடா படுத்துவாங்களா சொல்லுங்க?

சினிமால மட்டுமா நாம ஏமாந்து போறோம்? ஒவ்வொரு தடவ தேர்தல் வரும்போதும் மாத்தி மாத்தி ஓட்ட போட்டு  உருப்படமா ஆயிருக்கோம். இதுல வெக்கெங்கெட்ட தனமா “ஏண்டா மாரி உங்கூட்ல ஆத்தாள தூக்கிட்டு வரலியா பூத்துக்கு? தலைக்கு 500ரூவா தர்றாங்களேடா..” என அடுத்தவனையும் கெடுக்கறோம், மீன் மார்க்கெட் அண்டாவுல இருக்கற நண்டு மாதிரி. 

யாராச்சும் மீன் மார்க்கெட் போவும்போது இத பாத்து இருக்கீங்களா? ஒரு நண்டு இன்னொரு நண்ட வெளிய வர விடாம பிடிச்சு உள்ளே இழுக்கும், அதனால அந்த பாத்திரத்த மூடாமலயே வச்சுருப்பாங்க ஏன்னா நண்டு எங்கயும் போகாது.


ஆனா நம்ம நாடு அப்படியில்லங்க எல்லாத்தையும் தொறந்து போட்டு உலக மயமாக்கங்கற பேர்ல நைஸா நம்ம பணத்த எல்லாம் வெளி நாட்டுக்கு அனுப்பிட்டு இளிச்சவாயனா இருக்கோம். போதாக்கொறைக்கு நம்ப பழய பிரசிடெண்ட் கலாம் அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் “யூத்” (பாருங்க இந்த பேருலயும் ஒரு சினிமா எடுத்து காசு பாத்துட்டாங்க) எனப்படும் இளைய சமுதாயம் கிட்டத்தட்ட வெளி நாட்டு பொருட்களை மட்டுமே உபயோகிக்கும் அடிமையாகவே மாறி விட்டிருக்கிறது. இதெல்லாம் எதனாலன்னு தெரியுமா? சுயமா சிந்திச்சு ஏன்?எதற்கு?எப்படி?ன்னு முடிவுகள் எடுக்கற அளவுக்கு மன வளர்ச்சி இல்லாததே காரணங்கறத தவிர வேறென்ன? 

பொழுது போக்கு சாதனமான தொலைக்காட்சி சானல்களில் நிகழ்ச்சிகளை இன்று அதிகளவில் வழங்க்கும் சானல்களில் நமது சொந்த சான்ல்களுக்கு சமமான அளவில் வெளி நாட்டு சானல்கள் இடம் பிடித்திருக்கின்றன. 

இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? சொந்த அறிவு இல்லாம இவன் சொன்னான், அவன் சொன்னான்னு எல்லாத்தையும் கேட்டு சுயத்தை இழந்து அடையாளம் மாறி கோமாளிகளாக திரிந்து கொண்டிருக்கும் நாம்தான்...

இப்பவும் இதப்படிச்சுட்டு யாராவது இனிமே சுயமா சிந்திக்கப்போறதா முடிவு எடுத்தா அத என்னனு சொல்றது?


வோட்டுன்னு சொன்னாலே அரசியல்தான். அதனாலே அனைவரும் வோட்டு போடுங்க, ஏன்னா இத நிறைய பேர் படிக்கனும்னு நான் விரும்பறேன்..(சுயமா சிந்திச்சு செயல் படுங்க)

என்னை சளிக்கு பிடிச்சிருக்கு

அன்பர்களே நன்பர்களே...எல்லாருக்கும் வணக்கம். என்னை மாதிரியே நீங்க எல்லாரும் ரொம்ப நல்லாருப்பீங்கன்னு நம்பறேன் . என்னடா இது      சளிக்கு பிடிச்சிருக்குன்னு தலைப்பு வச்சிட்டு என்ன மாதிரியே நல்லாருப்பீங்கன்னு சொல்றேன்னு பாக்கறீங்களா? சாபம் விடலீங்க உண்மையாதான் சொல்றேன்.. ஏன்னு கேக்கறீங்களா? கேக்கலன்னாலும் சொல்லுவேன் ..என்னோட பதிவுக்கு தொடர்ந்து ஆதரவு தர்ற உங்களோட நல்வாழ்வுக்கு நான் எப்பவுமே இறைவனை ப்ரார்த்திக்கறேன்.(அப்பாடா காரணம் சொல்லியாச்சு) இன்னய தேதிக்கு தமிழ் நன்பர்கள் பலர் சளின்னா” ஏதோ வட இந்திய பொண்ண சார்  க்ரெக்ட் பன்றாரு போலன்னு நெனைக்க வாய்ப்பு அதிகம்(கோல்ட் -னாதான் தெரியுது). அதனால எல்லா தமிழ் இளைஞ, இளைஞிகளும் சளி என்பது மனிதர்களுக்கு சாதாரனமாக வரும் ஒரு இடஞ்சல் என கற்பூரம்  போல புரிந்து கொள்வார்கள்  என சத்தியமாக நம்புகிறேன்.

யோவ் உலகத்துல கோடிப்பேருக்கு என்னன்னமோ வியாதில்லாம் வருது.. எல்லாரும் வியாதிக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன ஆவறதுன்னு” யாரும் பின்னூட்டம் போட்டுடாதீங்க.. 

பத்து நாளைக்கு முன்னாடி லேசா, போக்கிரி படத்துல நம்ம காமெடியண்ணண் விஜய் அடிக்கடி மூக்க உறிஞ்சற மாதிரி அளவுல  இருந்த என் பிரச்சனை கொஞ்சம்  கொஞ்சமா தீவிரமாயி இன்னிய தேதிக்கு தெலுங்கானா அளவுக்கு பெரிசாயிடுச்சு. 

எப்பவும் போல சாதாரன ஆளா இருந்தா இந்த அளவுக்கு கவலைப்பட போறதில்லே...நான் பதிவுலகிற்கு வந்து நாலு நாள் ஆயிடுச்சு.. இதுல மூனு நாளா எந்த பதிவும் போடாததால, எங்கே பதிவுலக நன்பர்களெல்லாம், முதல் படம் ஹிட் கொடுத்த டைரக்டர் பலர் அதுக்கப்புறம் தொடர்ந்து ப்ளாப் கொடுத்த மாதிரி இவனும் அவ்ளோதான்னு நெனச்சிடப்போறாங்கன்னு பயத்துல பல பேருட்ட ஐடியா கேட்டப்போ (அதுல ஒருத்தர் ஏற்கனவே ஆறு மாசமா பதிவு போட்டுக்கிட்டு இருக்கார்) மூக்குப்பொடி போடுங்க , யூகலிபட்ஸ் பொடி போடுங்கனு மேலோட்டமா சொன்னாங்க. சிலர் மஞ்சள கொளுத்தி புகைய இழுங்கன்னு பத்த வச்சாங்க.. இன்னும் கொஞ்ச பேரோ , “சார் தைலத்த நல்லா கொதிக்கற தண்ணில் போட்டு போர்வையால போத்திக்கிட்டு ஆவி புடிங்கன்னு திகில் பட ரேஞ்சுக்கு தீ மூட்டினார்கள்”. இன்னும் சில நன்பர்கள் “நைட் ஒரு கட்டிங்கும், ஒரு சிட்டிங்கும் சைட் டிஷா கல்பெப்பரும்(சிக்கன்) போட்டா சளிக்கு கிலி வந்து சொல்லாம கொள்ளாம பொழுது விடியறதுக்குள்ள போய்டும்னு” உசுப்பேத்துனாங்க.

தோ பருங்க தம்பி, ஏதோ படிச்சுட்டு போலாம்னு வந்தா நீங்க பாட்டுக்கு என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க. சளி புடிச்சத சனி புடிச்ச ரேஞ்ச்சுக்கு பில்ட்ப் தராம பிரச்சனை என்னன்னு சொல்லுங்க” அப்படின்னு உங்கள்ள ஒருத்தர் அலுத்துக்கறது புரியுது, அண்ணே தயவு செய்து கோச்சுக்காம, இவ்வளவு தூரம் வந்த நீங்க முழுசா படிச்சுட்டு போங்க.

இவர் சொன்னாருன்னு இதுவும், அவர் சொன்னாருன்னு அதுவும், இப்படி பலர் சொன்னதுல பலவும் போட்டதுல மூக்கு எரிச்சல் வந்து விஜய் மாதிரி ஸ்டைலா(?) மூக்கு உறிஞ்சிட்டுருந்த நானு இப்ப புரட்ச்சி தலைவர் எம்ஜிஆர் ஸ்டைல்ல அடிக்கடி மூக்க தடவிக்கிட்டு இருக்கேன்.  

ஸ்டைல் மாறினது கூட கவலை இல்லீங்க ... திண்டுக்கல் மாவட்ட குடக்கல், மூனு தலை நாலு வால் கன்னுக்குட்டி, அரசியல்வாதிகளின் அதிரடி அறிவிப்பு, இப்படி பல டாபிக்ல சக நன்பர்களெல்லாம் பதிவு போட்டு கலக்குற காட்சி பொறாமைய கிளப்புதுனல மூக்கு சரியில்லன்னாலும் பரவாயில்ல, இருக்கற மூளைய(?) வச்சி பிரச்சனைய ஊதி பெருசாக்கிடுவோம்னு இந்த பதிவு போட்டாச்சு.  

ஆமாங்க நானும் எவ்வளவோ கம்பெனி மருந்துல்லாம் தடவி, உள்ளுக்கு இழுத்து ட்ரை பன்னேன். இப்ப இந்த பதிவுக்கு அதுல ஏதாவது ஒரு ரெண்டு மூனு கம்பெனி ஸ்பான்ஸர் பன்ற வாய்ப்பு இருக்கான்னு விபரம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். (உங்க சளி உடனடியா ஓடிப்போய்டும்.)

இந்த பதிவு உங்களுக்கு பிடிக்கலேன்னா கவலைப்படாதீங்க.. ஏன்னா எனக்கு இப்பதான் லேசா ஜுரம் அடிக்கற மாதிரி இருக்கு அத வச்சி அடுத்த பதிவு போட்டுர்றேன்..... 


வந்ததுதான் வந்தீங்க உங்க பொன்னான வாக்க “தமிழிஷ்ல” குத்திட்டு போங்க..