பொன்னு வெளஞ்ச பூமி..!


வணக்கம் நன்பர்களே.. எல்லாரும் நல்லா ஜாலியா கரும்பெல்லாம் கடிச்சு, பொங்கலெல்லாம் குடிச்சு (நிறய தங்கமனி பொங்கல் வச்சா அப்டிதான் இருக்கும்னு ஒரு கேள்வி ஞானம்தான்) பொங்கல கொண்டாடியிருப்பீங்க. இலவச வேட்டி, சேலை,  ரேஷன்ல பொங்கல் மஞ்சப்பை கொடுத்ததுலாம் போய் இப்ப நாட்டுலருக்கற ஏழைக்கெல்லாம் இலவசமா கான்க்ரீட் வீட்டயே கட்டித்தர போறாங்களாம் கேள்விப்பட்டீங்களா?  இவ்வளவு நடந்தும் இன்னும் ஒரு பய பாராட்டு விழா நடத்த தேதி கேட்டு வரலியே..? ம்ம்.. என்ன செய்யறது? சோற்றாலடித்த பிண்டம் தமிழண்ட்ட என்னத்த எதிர்பாக்கறது?  “அட, ஏன் தலைவரே, இவனுவளுக்கு இவ்வளவு செலவு? எலக்‌ஷன் டயத்துல எதயாவது உட்டு கடாசுனா ஓட்ட குத்து குத்துனு குத்த மாட்டானா இந்த மறத்தமிழன்”னு மந்திரியா இருக்கறவன், மந்திரிக்கு மவனா பொறந்தவன்லாம் டீலா/நோ டீலா?ங்கற மாதிரி கேள்வி மேல கேள்வியா கேட்டாலும் ஓய்வறியா உலகன், ஒத்த உண்னாவிரததுல உலகமைதி ஏற்படுத்தன மாமன்னன் உளியோட ஓசையா இந்த திட்டத்த ‘டனால்’னு (ஆமா, உளியோட ஓசை “புஸ்ஸுல்ல?!!”) அறிவிச்சு கட்சி காண்ட்ராக்டரெல்லாம் புல்லரிக்க வச்சுட்டாரு.. சரி அது கிடக்கட்டும், அதுக்குனு   நேரம் வரும் போது  பாக்கலாம்...

நாட்டுல அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்யுறவங்க மற்றும் தனியார் ஊழியர்கள்னு மூனே பிரிவுதான் (கூலிகள்/அன்னாடங்காய்ச்சிகள், தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகள் இதுல இல்ல). இதுல அரசு ஊழியர்களுக்கு சமீபத்துல அடிச்ச ஜாக்பாட்ல (பொது மக்கள் அப்டித்தான் சொல்றாங்க)  கனிசமான பேரு முதலீடு செஞ்ச இடம் எது தெரியுமா? நிலம்தான்.  ஏன்னா சொற்ப இடம்னாலும் சொந்த இடமா இருக்கனுமாம். (ங்கொய்யால எவண்டா சொன்னது?)  கட்டிங்க கரெக்டிங்கா போடற ஆளுங்க நடமாடற டாஸ்மாக்ல சம்பள உயர்வ கொண்டாட போனா அங்கயும் உற்ற தோழன், “நம்ம மாடசாமி முக்கா கிரவுண்ட் வாங்கிட்டானாம் தெரியுமா?னு” காலி வயித்துல கட்டிங் ஊத்துனா மாதிரி உசுப்பி வுடுவான்..  அட நாமளும் எதாவது ஒரு பிளாட்டோ இல்ல அடுக்கு மாடி குடியிருப்புல ஒரு வீடோ வாங்கி போட்டா பின்னாடி நிம்மதியாயிருக்கலாமேனு வூட்ல போய் படுப்போம்,  இது எப்டித்தான் அந்த புரோக்கருக்கு தெரியுமோ காலைல டான்னு ஏழு மணிக்கெல்லாம், “வணக்கம்ணே, நம்ம வூட்டாண்டயே 30X60ல ஒரு இடம சீப்பா வருதுன்னே, வாங்கிப்போட்டா மூனே வருஷத்துல போட்ட காசு டபுள் ஆயிடும்னே”னு அடி வயித்துலருந்து ஆசைய  எழுப்புவான்.. அது எப்டி மூனு வருஷத்துல டபுள் ஆவுன்னு நாம ஆனு வாயத் தொறந்து யோசிச்சிட்டிருக்கும் போதே,  வேளைக்கு மூனு லிட்டர் கறக்கும்னு சொல்லி,  காள மாட்ட கடவாப் பல்லுல கட்டிட்டு பூடுவானுவ... இப்பத்தான் சனி உங்கள மூனாவது வீட்லருந்து முறைச்சி பாக்க ஆரம்பிப்பான்..

இது என்னாடாது? அசையா சொத்தா வாங்கிப் போடலாம்னா டபுள், ட்ரிபிள்னு புதுக்கரடி மேய்க்கறானே புரோக்கர்!?. சரி யாராவது விஷயம் தெரிஞ்ச ப்ரண்டுட்ட கேக்கலாம்னு போனா அவனுங்க, “என்னது? நீ இன்னும் ஒரு கிரவுண்ட் கூட வாங்கலியான்னு?” என்னமோ ஏற்கனவே மைசூர் பேலஸ்ஸ மாமனாரோட ஷேர் போட்டு  வாங்குன ரேஞ்சுக்கு நக்கல் உடறானுங்க..  நம்ம மாமனார், மச்சான், சகலன் மாதிரி சொந்தக்காரங்க கிட்ட கன்சல்ட் பன்னா (என்னது? அப்பா, அண்னன், தம்பி கிட்டயா? கேக்கலாம் தான். ஆனா ஐடியா மட்டும் தான் கிடைக்கும் தம்பிடி கிடைக்காது. ஓகேவா?)  கிடைக்கற சப்போர்ட் இருக்கே.. அடடா ஒத்தயாவே குதுப்மினார தூக்கிட்டு தெலுங்கானாவ ரெண்டு ரவுண்டு வர அளவுக்கிருக்கும்...


அப்புறமென்ன? அடுத்த கட்ட  வேலய ஜரூரா ஆரம்பிக்க வேண்டியதுதான். எடைக்கு வாங்குன பேப்பர்லருந்து எட்டனா குடுத்து வாங்குன பேப்பர் வரைக்கும் எங்கலாம் இடம் விக்கறாங்க, என்ன விலை, ஆஃபர் எதுனாருக்கா (அதாங்க, தங்க காசு, வெள்ளி குத்து விளக்கு, பத்திர பதிவு இலவசம், சைட் பாக்க போய் வர டாக்ஸி இலவசம் இத்யாதிலாம்) மாதிரி விளம்பரங்கள ப்ரூப் ரீடர விட அதிகமா, சாதா கண்ண பூதகண்ணா மாத்தி தேடனதுல ஹரி ஓம்னு மொத லாவம் பாக்கறது கண் டாக்டர்தான்.இந்த இடத்துல பாருங்க, போன பாரா வரைக்கும் மாதவன் ரேஞ்சுக்கு இருந்த ஆசாமிலாம் இப்ப மிடில் கிளாஸ் மாதவனா மாறியிருப்பாங்க..  போன வாரம் வரைக்கும் சண்டேன்னா ரெண்டுனு(ச்சீய்!?) இருந்த குடும்ப வாழ்க்கைல அடுத்ததா மன் வுழும், ஏன்னா அன்னிக்குத்தான் சைட் பாக்க போனும்..  அவனுங்க வண்டிலதான் சைட் பாக்க போறோன்னாலும் அந்த தூரம் இருக்கே அடடா என்ன சொல்றது? மரகத லிங்கத்த திருடுனவன் கூட அத பதுக்க இவ்வளவு தூரம் அலைஞ்சிருக்க மாட்டான் போங்க.. எதோ ஒரு இடத்துல வண்டி நிக்க, கீழே இறங்கி பாத்தா அடுத்த அதிர்ச்சி! எப்பவோ பள்ளிக்கூட பாடத்துல படிச்ச பள்ளத்தாக்கு மாதிரி ஒரு இடம். இந்த இடமா பிளாட்டு? சேச்சே, ட்ரைவர் எல்லாரும் ஒன்னுக்கிருக்க நிறுத்தியிருக்கார் போலன்னு நமக்கு நாமே மனச தேத்திக்கும் போது, பொக்ரான்ல போட்டது போவ மீதியிருக்கற குண்டுல ஒன்ன போடுவார்  புரோக்கர், “இதுதான் நீங்க எல்லாரும் வாங்கப் போற “அற்புதமான’ இடம் நல்லா பாத்துக்குங்க”.??  அவ்ளோதாங்க வேன்ல வந்த முப்பத்துமூனு பேர்ல முப்பது பேர் “முன்னாடி இருக்கறது எனக்கு, முக்குல தொங்கறது உனக்குனு” அம்மோனியா ப்ரிண்ட்லயே பங்கு பிரிக்க ஆரம்பிச்சுடுவானுங்க... இதென்னடாது பள்ளத்த பங்கு பிரிக்க இப்டி அடிச்சிக்கிறானுங்கன்னு, “ஏண்டாப்பா, இவ்ளோ பெரிய  பள்ளத்த வாங்க இப்டி போட்டா போட்டி போடறீங்களே, மழை காலத்துல என்ன பன்னுவீங்க?னு கேட்டா, ஒருத்தன் சொல்றான், “நாங்கெல்லாம் ரோடு மட்டத்த விட மூனு அடி உயரமாத்தான் வீடு கட்டுவோம், தண்ணி உள்ள வராது”, சரிடா, தண்ணி உள்ள வராது, ஆனா, நீ வெளிய வரனுமே அதுக்கு என்ன பன்னுவ? “அதெல்லாம் மழை பேஞ்சா பாப்போம்” , என்ன எழவுடா இது? நாம லூஸா? இல்ல இவனுவ எல்லாரும் லூஸானு? கொழப்பத்துல ஒரு முடிவுக்கு வர முடியாம வழக்கம்போல ஃபைல ஹோம் மினிஸ்டர்ட்ட(தங்கமனி) அனுப்புனா, ரெண்டு காதும் ரொம்பி, சட்டப்பை, பேண்ட்பை அப்புறம் கைல வச்சுருக்கற மஞ்சப்பை  வழியற வரை அர்ச்சனை பன்னிட்டு அதுக்கப்புறமும் “ஹய்யோ,   வெவரம் இல்லாத ஆள்கிட்ட எங்கப்பாவும் நானும் இப்டி தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமேன்னு” மூக்க சிந்தி நம்ம முழுக்கை சட்டைல தொடச்சி, தெயவ மச்சான தொனக்கி அனுப்பி (தனியா போனா வெவரம் பத்தாதாம்..!) பணம் கட்டிட்டு வர சொல்லுவாங்க..

பார்த்திபன், வடிவேலுவ சாட்சி கையெழுத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி நம்ம தெ.மச்சான் சைட் ஆபீசுக்கு கூட்டிட்டு போவான். கோழி திருடுறவன்  ஈர கோனியோட தயாரா இருக்கறா மாதிரி, சைட் ஆபீசுல புரொக்கரும், ஓனரும் ரெடியா இருப்பாங்க.. பணம் கை மாறுனதும், “அமாவசைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம் தம்பி”னு சொல்லி எலுமிச்சை சூஸ் குடுத்து, கிருதா டூ கிருதா சிரிச்சி வழியனுப்புவாங்க..

அப்பாடா நாமளும் ஒரு இடத்த கிட்டத்தட்ட வாங்கியாச்சு, அமாவாசை என்னிக்குனு காலண்டர கிழிச்சி காத்துக்கிட்டிருக்கும் போதுதான் தரித்திரம் தபால்ல வந்தா இடி ஏரோப்ளேன்ல வருமான்ற மாதிரி புரோக்கரும், ஓனரும் ஒரேடியா தலை மறைவாகிட்ட விஷயம் டிவில ஓடும். அடப்பாவிகளா!, இதே டிவில தாண்டா ஒரு கை மண்னுண்னாலும் இவண்ட்ட தான் வாங்கனும்னு வழுக்க தலயன வச்சி விளம்பரமா கொடுத்தீங்க? (மண்னு வாங்க சொல்லி பல பேர் வாழ்க்கைல மண்னள்ளி போட்டவர் இப்ப கம்பி வாங்க சொல்றார் மக்களே மைண்ட்ல வச்சுக்குங்க!) இப்ப யாரோ மாதிரி செய்தி போடறீங்களே? உங்களுக்கு அப்பவே தெரியாதா? விளம்பர காசெல்லாம் வாங்கிட்டீங்களாடா? இப்ப என்னடா செய்றது? நகையெல்லாம் வேற வித்தாச்சு..?!!!! டிவிய பாத்தா சொறி, சிரங்கு படைய தவிர அத்தன படையும் அவனுவள தீவிரமா தேடறதா பக்கத்தூட்டு ஆயா மாதிரி இருக்கற ஒரு பொம்பள  பேட்டி கொடுக்குது. ஏம்மா உன்னா பாத்தாலே பாவமா இருக்கு.. நெசமாலுமே நீ அவனுவள கண்டு பிடிச்சுடுவியா? அப்டியே பிடிச்சாலும் எங்க காசெல்லாம் திரும்ப கிடைக்குமா? அய்யோ பணம் போச்சே... யார் கிட்ட கேக்கறது?

மறுபடியும் தங்கமனி அர்ச்சனையோட மூ/சிந்தி மு.சட்டைல தொடச்சி மீண்டும் தெ.மச்சானை கூட அனுப்புவாங்க சைட் ஆபீசுக்கு.  அத்த பொண்னு மாதிரி அன்பா சிரிச்சி, மாமன் பொண்னு மாதிரி முறையா சூஸ்லாம் கொடுத்து கவனிச்சு அனுப்புன சைட் ஆபீஸ்ல இப்ப சைனா பூட்டுதான் நம்மள வரவேற்கும்.  ஆனா, ஒரே ஆறுதல் என்னன்னா, நம்மள மாதிரியெ நெறய இனா வானாங்க மலங்க மலங்க, எந்த டிவில பேட்டி எடுப்பாங்களோன்னு முழிச்சிக்கிட்டு நிக்கறதுதான்... ஒரு வழியா கைல இருக்கற சேவல் மார்க் ஃபைல்லேருந்து ஜெராக்ஸ் காப்பிய வச்சி கம்ப்ளெய்ண்ட் கொடுத்துட்டு வீட்டுக்கு போவ வேண்டியதுதான்..

ஆச்சி இன்னியோட ஆறு மாசம். ஒரு தகவலும் இல்ல. இப்பல்லாம் சண்டேனா நாலு! (இப்ப ச்சீய் இல்ல, சேச்சே?!   காசு போன சோகத்துல  கட்டிங்தான்!)


என்னங்க வீடு புகுந்து, ஓட்ட பிரிச்சி, பீரோவ ஒடச்சி திருடுனாத்தான் திருட்டா? இந்த மாதிரி ஏமாத்தி பொழக்கிறதுக்கு பேரும் திருட்டுதாங்க.. என்னா நாட்டுல நாலஞ்சு பேரு திருடனா உலாத்துனா, இவனுக பல பேர்ல நாடெங்கும் பரவி கெடக்கானுக..  நாம திருடன விட இவனுங்க கிட்ட தான் அதிக எச்சரிக்கையா இருக்கனும்.. திருட்டு ஒரு நாட்டோட பொருளாதாரத்த பாதிச்சுதுனா, விவசாய பூமிய இந்த மாதிரி திருடறது, எந்த நாடாருந்தாலும், அதோட முதுகெலும்பையே உடைக்கிறதுக்கு சமம். தயவு செய்து அத எல்லாரும் நல்லா புரிஞ்சுக்குங்க...


நல்ல வேளை நாங்கெல்லாம் இந்த மாதிரி மோசடிலேருந்து தப்பிச்சிட்டோம், நாங்க வாங்குன இடம் பத்திர பதிவெல்லாம் நல்ல படியா முடிஞ்சுடுச்சுனு நெனக்கறீங்களா? அங்கதான் நீங்க தப்பு பன்றீங்க. ஆமாங்க இன்னிய தேதிக்கு இந்த புண்ணிய பூமில இருக்கற விவசாய நிலம், பொறம்போக்குல்லாம் அவன், இவன்னு அடயாளம் காட்ட முடியாத ஆளெல்லாம் கட்டம் கட்டி சகட்டு மேனிக்கு வித்துக்கிட்டு இருக்கானுங்க.  இப்டி விவசாய நிலத்த  மொத்தமா அழிச்சி நம்ம தாய் நாட்டுக்கு மாபெரும் உணவுப் பஞ்சத்த எதிர் காலத்துல நிச்சயமா உருவாக்கறதுக்கு தீவிரமா ஈடுபட்டுக்கிட்டுருக்கற  ஒரு கும்பலுக்கு, அவங்க வித்த இடத்த வாங்குனதால நீங்களும் மறைமுக உதவியாளரா ஆயிடறீங்க..


இப்ப ஹெய்டி(HAITI)ல நடந்த பூகம்பத்த பாத்தீங்களா? அதுல அந்நாட்டு அதிபரே, மாளிகை இடிஞ்சு தெருவுல நின்னாரு.. அதனால எல்லாரும் அவிங்க வாங்குனாங்க, இவுக விக்கறாங்கன்னு வூட்ல இருக்கற நகை நட்டெல்லாம் வித்து, சொத்து வாங்கறதா நெனச்சி தவறுகளுக்கு துனை போகாதிங்க, நிம்மதிய தொலச்சி தெருவுல நிக்காதீங்க. “உண்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம்னு”  கடைசியாத்தான் இடம் வருது..  இன்னும் நம்ம இந்தியாவுல தெருவுலேயே  பொறந்து, குடும்பம் நடத்தி. செத்து போற சணம் கோடியிருக்கு தெரியுமா? அதுக்காக என் காசுல நான் வாங்குறத நிறுத்த முடியுமான்னு கேக்காதிங்க.. அவசரப்படாதீங்கன்னுதான் சொல்றேன். ஏன்னா உங்க அவசரம்தான் (அப்டி அவசரம் இல்லன்னாலும் அவங்க உங்கள தூண்டுவாங்க) மோசடி கும்பலோட துருப்பு சீட்டு.  எங்கயாது வெளியூர் போனா பாருங்க, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் என்ன இருக்குன்னு.. அநேக இடங்கள் திடீர் நகரா மாறியிருக்கும்..  இப்டி எல்லா இடத்தையும் நகரா மாத்தி பூமிய கான்க்ரீட் காடா மாத்தற போட்டியில நம்ம பங்கு இல்லாம இருக்கலாமே? ஏன்னா நாம் இப்ப தெருவுல இல்ல, நமக்கு எதோ ஒரு இடம் நிச்சயமா இருக்கு ஒண்டிக்க..! அவசரப்படாம நிதானமா இருந்தா அவங்கவங்களுக்கு தேவையான அழகான வீடு தானா கிடைக்கும்.  தோழர்களே... தாய் நாட்ட காக்கற ஒரு நல்ல விஷயம் நம்ம கிட்டேயிருந்து ஆரம்பிக்கட்டுமே... இந்த பொன்னு வெளஞ்ச பூமித்தாய  காப்பாத்தற முயற்சில உங்க பங்கும் இருக்கறது சந்தோஷமான விஷயம்தானே? இந்த பதிவுல சொன்ன விஷயத்துல உங்களுக்கு உடன் பாடு இருந்தா, நல்லா தெரிஞ்ச நாலு பேர்ட்ட  எடுத்து சொல்லுங்க.. சொல்லுவீங்கன்னு எதிர் பாக்கலாமா?

ஹைஸ்பீட் கந்தசாமி...(இவன் முட்டி ஒடஞ்சாத்தான் ஓய்வான்!)


என்ன மச்சான்ஸ் (ச்சே ஒரே நமீதா ஞாபகமாவே இருக்கு!) எல்லாரும் நல்லாருக்கீங்களா? புது வருஷம் பொறந்தாச்சு.. நல்லா ஜாலியா இருங்க.. ஆனா ஜாக்கிரதையா இருங்க.  என்ன ஓகேவா?  (நம்ப சொல்லி யாரு கேக்கப்போறா?) சரி சரி ரோட்ல போம்போது ஜாக்ரதையா போங்க, போனும், ஏன்னா,  நடந்து போனா கூட, புல்லட் மாதிரி வேகமா பைக்ல நம்மள ஓவர்டேக் பன்னி போவானுவ சன் ஆஃப் கன்னுங்க. அவனுக எப்டியாவது போறானுங்க நமக்கென்னன்னு போலாம்னா, போற பைக்க இப்டி கொஞ்சம் அப்டி கொஞ்சம்னு வளச்சு, நெளிச்சு பல பிரச்சனைகளால நெஞ்சம் கலங்கியிருக்கற நம்மள உடனே 108 கூப்புடற ரேஞ்சுக்கு ரெடியாக்கிடுவானுவ காண்டம்க்கு தப்புனவனுங்க..


இவனுக பைக்ல பெட்ரோலா ரோட்ல ஓடறது அப்பனாத்தா கொஞ்சமா வேலை செஞ்சு லஞ்சமா வாங்குன காசு. இது அந்த குடும்பத்தோட ஒழிஞ்சா பரவால்ல,  பைக்க கன்னா பின்னானு ஓட்டி சோத்துக்கு வழியில்லாத, சூவ மறைக்க கூட துனியில்லாத எத்தனயோ ஏழை ஜனங்களோட இடுப்பெலும்பல்ல உடைக்கறானுங்க.. பத்து ரூவாய்க்கி மூனு ஜட்டிங்கற மாதிரி ரெண்டு லட்ச ரூவாய்க்கி ஒரு செட் முட்டி மாத்தறானுங்க இப்ப.. யாருகிட்ட பணமிருக்கு? இதெல்லாம் அந்த பைக்க ஓட்டற ’மஷ்ரூம்’ மண்டையனுக்கு (நெறய பேரு அப்படித்தான் தலய வச்சிருக்கானுங்க) தெரியுமா?


இந்த விஷயத்துல பைக்க வச்சு வீலிங், ரோலிங் அப்டின்னு ஃப்லிம் காட்டற பயபுள்ளக்கெல்லாம்  அப்டி காட்டறப்ப அடி பட்டுச்சுன்னா வர்ற ஃபீலிங்  ரொம்ப கோரமா இருக்கும்னு தெரியல....


இப்டிலாம் சீன் போட்டாத்தான் பிகர் மடியும்னு ஒரு தப்புக்கணக்கு வேற..(ஏதோ ஒன்னு ரெண்டு முட்டாள் இருக்குது)  ஆனா உண்மை என்னனா ஒரு தடவ கீழே விழுந்து எலும்பு துண்டானா, அதுக்கப்புறம் பிகரோட லுக்கு டண்டனக்காதான். (எவ அவ நொண்டியோட டாண்டியா ஆடறது?) எலே இந்த பைக்க வச்சிக்கிட்டு படுத்து ஏந்திரிக்கற புள்ளங்களா ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க..  அதாவது..  ஒரு தடவை முட்டி ஒடஞ்சுதுனா சாவற வரைக்கும் கட்டிலோ இல்ல கட்டாந்தரையோ கீழ தான் படுக்கனும்... நல்லா புரிஞ்சுக்குங்க. (இந்த சூழ்நிலயில கல்யானம் ஆச்சுன்னா மலையாள பகவதிதான் வாரிச உருவாக்க மனசு வைக்கனும்)


கவருமெண்ட்டு எதப்பத்தியும் கண்டுக்காம 150சிசி, 200சிசி, 250சிசி, 500சிசின்னு எல்லா பைக் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் முக்கியமான பேப்பர கரெக்டா வாங்கிக்கிட்டு ரைட் ரைட்டுனு பச்சக்கொடி ஆட்டிடுது.. ஆனா அத ஓட்டறதுக்கு ரோடு வேனுங்கறத  டாக்ஸ் வாங்கனதுக்கப்புறம் அடியோட மறந்துடுது.. யாராரோ பெத்த பொன்னுங்கெல்லாம் இவனுகள சீண்ட, பயலுவ பைக் ஆக்சிலேட்டர தீண்ட முடிவுல ரோட்ல போனவனோ/ளோ இல்ல பைக்ல போனவனோ 108 ல வொய்ங் வொய்ங் வொய்ங்னு போவானுங்க..இதுல இந்த பசங்கள மட்டும் குத்தம் சொல்லி பயனில்ல.. ஏன்னா  நம்ம நாட்டுல ஓட்டிக்காட்டாத வண்டிக்கு லைஸென்ஸ் வாங்கி, இல்லாத ரோட்டுக்கு சாலை வரி கட்டி நாமெல்லாம் ஆடி பள்ளு பாடிக்கிட்டிருக்கோம்.. காந்தி படம் இருக்கற நோட்ல கொஞ்சம் கொடுத்தா  லைஸென்ஸும், அவர் நல்லா சிரிக்கற மாதிரியான நோட்ல கூட கொஞ்சமும் கொடுத்தா ஹெவி லைஸென்ஸும் கிடைக்கற திருநாட்டின் கறைமகன்கள் நாம்...


ஆனாலும் மவன் கேட்டான்னு 200சிசி பைக்க அனாயசமா வாங்கி தர்ற தகப்பன்மாருக்கெல்லாம் ரெண்டாவது வாரிசு இருந்தாத்தான் குடும்பம் தழைத்தோங்குங்கற விஷயம் புரிய மாட்டேங்குது ஏன்னா சாலை வசதில கட்டக்கடேசில இருக்க நாம சாலை விபத்துல முதல் பத்து இடத்துல இருக்கோம்.. இதுல நாட்டுலயே முதல் முதலா உறுப்பு தானம் செஞ்சவரோட பெற்றோர்னு பெத்த பேரு வேற.... நாட்ல அவனவனுக்கு கல்யானம் ஆவறதே பெரிய விஷயமா இருக்கு.. அதுக்கப்புறம் எத்தனயோ கடும் முயற்சிக்குப்பின் திருவினையா பொறக்கற புள்ளய கிட்னி பாதி ஹார்ட் மீதினு தானம் பன்னனும்னா எவ்ளோ கஷ்டம்?பைக்க வாங்கி கொடுத்த அப்பன்லாம் புள்ளக்கி கூடவே ஒரு செல்லும், பொண்ணுக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்த டாடிலாம் ஒரு செல்லும் வாங்கி தராங்க...இந்த மூனு மாமாங்க (ரெண்டு அப்பன்+செல்கம்பெனி) பன்ற சேட்டைல பயலுவ முக்காவாசி நேரம் மெஸேஜும், காவாசி நேரத்த போன கழுத்துக்கு பக்கத்துலயுமா செலவு பன்றாங்க, வண்டி ஓட்டும் போதும்..  இதனால பென்ஷன் வாங்குன காசுல பேரனுக்கு பர்த்டே ஃபங்க்‌ஷன் வைக்க கடத்தெருவுக்கு வர்ற பெரிசெல்லாம் பெரியாஸ்பத்திரி மார்ச்சுவரில இடம் புடிக்கற சம்பவம்லாம் சகஜமா நடக்குது.


இது மட்டுமா? தல ரேஸ் பைக் ஓட்டுறாரு, இளைய பதி மெக்கானிக்கா கலக்குறாரு அப்படின்னு செல்லூலாய்டும், பத்திரிக்கையும் கர  கரன்னு விடற ரீல நம்பி கெட்டவங்க எக்கச்சக்கம்... வாழ்க்கையில மனித உடலோட முக்கிய பாகமான முதுகெலும்போட முக்கிய பங்கு தெரியாம சர்ரு புர்ருனு டூவீலர் வண்டிய ஓட்டி, அப்புறம் மிச்ச வாழ்க்கைய   ஃபோர் வீலர்ல கழிக்கற சூழ்நிலைய உருவாக்குன சாகசகாரங்கதான் நம்ம பயலுவ...


நிலாப்பள்ளத்த நினைவு படுத்தற அட்டகாச சாலையெல்லாம் நம்மூர்ல குறுக்கும் நெடுக்குமா படுத்து கிடக்க, ஷோரூம்லயும், விட்டா வீட்டு ஷெட்லயும்   ஸ்டாண்ட் மட்டுமே போட்டு  நிறுத்தற வண்டிகளெல்லாம் சுலபமா நம்ம தலைல  EMI-ல கம்பெனிக்காரன் கட்ட, அந்த வண்டியெல்லாம் ஓட்ட முடியாத ஒரு ஓரமா நிறுத்தி அழகு மட்டும்தான்  பாக்கலாங்கறது நம்மோட கூடுதல் அதிர்ஷ்டம்.!

மஞ்சப்பைய எடுத்துக்கிட்டு மார்க்கெட் போய் காய்கறி வாங்கிட்டு வரலாம்னு கிளம்புனா,   நடக்கறவன், நாலனாவண்டி ஒட்டறவன், ஆபீசுக்கு போறவன் அப்புறம் திருவாளர் பொதுஜனம்லாம் இதெ ரோட்லதான் போவாங்கன்றதயே மறந்துட்டு,   எவனப்பத்தியும் கவலைப்படாம பைக்ல விர்ர்ர்ரூம்ம்ம்ம்ம்ம்னு ரோட்ல பறக்கற முட்டாளுக்கு மூத்தவனையெல்லாம் என்ன செய்யறது? நமக்குதான் காய்கறியோட வீட்டுக்கு வருவமா இல்ல அந்த காய்கறி நமக்கே திதி கொடுக்க பயன்படுமான்னு தெரியாம பயந்துக்கிட்டே விதுக் விதுக்னு நடக்க வேண்டியிருக்குது...


’ஜட்டி பட்டி’ வெளில தெரியற மாதிரி (ஆம்பள பொம்பள ரெண்டு பேரும்தான்) பைக்ல இவனுங்க க்ரீச்னு போம்போது திவாரி ரேஞ்சுல இருக்கற பெரிசுக்கெல்லாம் (இளசுக்கும்தான்..!) நெஞ்சடைக்க (வயசான காலத்துல இதான் அடைக்கும்... ஆனா திவாரி மட்டும் கரெக்டா அடைப்ப எடுத்துட்டார்னு டிவி, பேப்பர்லலாம் ஓன்னு அலறுனாங்க...!) அப்புறம் மஞ்ச துண்டு (அது பேரு துண்டுதானே?) மாமனிதர் கலைஞரின் காப்பீட்டு திட்டம்தான் காப்பாத்தனும்...


இந்த மாதிரி பைக்க ஓட்டற அன்புத் தம்பிகளுக்கு நான் சொல்றது என்னன்னா இதோ இந்த படத்த பாருங்க இந்த தம்பி எவ்வளவு சாமான் செட்ட போட்டுக்கிட்டு ஜாக்ரதையா வண்டி ஓட்டறாரு? ஆனா அதே பைக்க எந்த வித பாதுகாப்பு உபகரனங்களும் இல்லாம எல்லாரும் பயனம் செய்ற சாதாரண சாலையில கடும் வேகத்துல ஓட்டிட்டு போறது சரியா? இதனால பைக்க ஓட்டற உங்களுக்கு மட்டுமல்ல எவ்வளவோ வேலைகளுக்காக சாலைக்கு வர்ற எண்ணற்ற மக்களும்தான் தேவையில்லாம மிக கடுமையா பாதிக்கப்படுறாங்க. பைக்க தயாரிக்கும் கம்பெனிகளுக்கு பைக் விக்கறது மட்டும்தான் குறிக்கோள். அதனால மிக பிரமாண்டமா இதுல அது இருக்கு அப்புறம் அந்த இது இருக்குனு ரெட்ட காதுலயும் ரிப்பன் கட்டி ரிங்கா ரிங்கா ரோய்னு பூவ சொருவி ஏமாத்தி வித்துருவானுவ. எப்பவுமே பொதுஜனங்கள பத்தி கவலைப்படாத மிக அருமையான அரசாங்கம் நமக்கு கிடைச்சிருக்கு, எந்தக்கவலையும் இல்லாத இளமையில உங்களுக்கு தேவைக்கு அதிகமான சக்தி கொண்ட பைக் கிடைச்சிருக்கு  ரெண்டாலயும் எல்லாருக்கும் தொந்தரவுதான்... இண்டர்நெட், டிவி, சினிமா இன்னும் பலப்பல தொடர்பு சாதனங்களால் ஈஸியா அந்த மாடல் இந்த மாடல்னு பைக் பித்து பிடிச்சு அலையாம போக்குவரத்துக்கு தேவையான குறைந்த பட்ச அளவிளான இரு சக்கர வாகனங்களை உபயோகிக்க தொடங்குங்கள். முடிந்தால் சைக்கிள் பயன் படுத்துங்கள், உடலுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.  உங்களை பெற்றவர்களும், மற்றவர்களும்  நிம்மதியாக இருப்பார்கள்.இவ்ளோ நேரம் நீங்க பொறுமையா படிச்ச இந்த விஷயத்த பத்தி என்ன நினைக்கறீங்க? இது சம்மந்தமா அவங்கவங்க லெவல்ல எந்த அளவுக்கு இளய சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு முயற்சி செய்யுங்க. குறைந்த பட்சம் உங்க வீட்லயாவது.....  ரோட்ல ஓடற ஒரு அம்பது பைக்காவது திருந்துனா கொஞ்சம் நிம்மதியா பயம் இல்லாம நடக்கலாம் இல்லியா தோழர்களே?