பொன்னு வெளஞ்ச பூமி..!


வணக்கம் நன்பர்களே.. எல்லாரும் நல்லா ஜாலியா கரும்பெல்லாம் கடிச்சு, பொங்கலெல்லாம் குடிச்சு (நிறய தங்கமனி பொங்கல் வச்சா அப்டிதான் இருக்கும்னு ஒரு கேள்வி ஞானம்தான்) பொங்கல கொண்டாடியிருப்பீங்க. இலவச வேட்டி, சேலை,  ரேஷன்ல பொங்கல் மஞ்சப்பை கொடுத்ததுலாம் போய் இப்ப நாட்டுலருக்கற ஏழைக்கெல்லாம் இலவசமா கான்க்ரீட் வீட்டயே கட்டித்தர போறாங்களாம் கேள்விப்பட்டீங்களா?  இவ்வளவு நடந்தும் இன்னும் ஒரு பய பாராட்டு விழா நடத்த தேதி கேட்டு வரலியே..? ம்ம்.. என்ன செய்யறது? சோற்றாலடித்த பிண்டம் தமிழண்ட்ட என்னத்த எதிர்பாக்கறது?  “அட, ஏன் தலைவரே, இவனுவளுக்கு இவ்வளவு செலவு? எலக்‌ஷன் டயத்துல எதயாவது உட்டு கடாசுனா ஓட்ட குத்து குத்துனு குத்த மாட்டானா இந்த மறத்தமிழன்”னு மந்திரியா இருக்கறவன், மந்திரிக்கு மவனா பொறந்தவன்லாம் டீலா/நோ டீலா?ங்கற மாதிரி கேள்வி மேல கேள்வியா கேட்டாலும் ஓய்வறியா உலகன், ஒத்த உண்னாவிரததுல உலகமைதி ஏற்படுத்தன மாமன்னன் உளியோட ஓசையா இந்த திட்டத்த ‘டனால்’னு (ஆமா, உளியோட ஓசை “புஸ்ஸுல்ல?!!”) அறிவிச்சு கட்சி காண்ட்ராக்டரெல்லாம் புல்லரிக்க வச்சுட்டாரு.. சரி அது கிடக்கட்டும், அதுக்குனு   நேரம் வரும் போது  பாக்கலாம்...

நாட்டுல அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்யுறவங்க மற்றும் தனியார் ஊழியர்கள்னு மூனே பிரிவுதான் (கூலிகள்/அன்னாடங்காய்ச்சிகள், தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகள் இதுல இல்ல). இதுல அரசு ஊழியர்களுக்கு சமீபத்துல அடிச்ச ஜாக்பாட்ல (பொது மக்கள் அப்டித்தான் சொல்றாங்க)  கனிசமான பேரு முதலீடு செஞ்ச இடம் எது தெரியுமா? நிலம்தான்.  ஏன்னா சொற்ப இடம்னாலும் சொந்த இடமா இருக்கனுமாம். (ங்கொய்யால எவண்டா சொன்னது?)  கட்டிங்க கரெக்டிங்கா போடற ஆளுங்க நடமாடற டாஸ்மாக்ல சம்பள உயர்வ கொண்டாட போனா அங்கயும் உற்ற தோழன், “நம்ம மாடசாமி முக்கா கிரவுண்ட் வாங்கிட்டானாம் தெரியுமா?னு” காலி வயித்துல கட்டிங் ஊத்துனா மாதிரி உசுப்பி வுடுவான்..  அட நாமளும் எதாவது ஒரு பிளாட்டோ இல்ல அடுக்கு மாடி குடியிருப்புல ஒரு வீடோ வாங்கி போட்டா பின்னாடி நிம்மதியாயிருக்கலாமேனு வூட்ல போய் படுப்போம்,  இது எப்டித்தான் அந்த புரோக்கருக்கு தெரியுமோ காலைல டான்னு ஏழு மணிக்கெல்லாம், “வணக்கம்ணே, நம்ம வூட்டாண்டயே 30X60ல ஒரு இடம சீப்பா வருதுன்னே, வாங்கிப்போட்டா மூனே வருஷத்துல போட்ட காசு டபுள் ஆயிடும்னே”னு அடி வயித்துலருந்து ஆசைய  எழுப்புவான்.. அது எப்டி மூனு வருஷத்துல டபுள் ஆவுன்னு நாம ஆனு வாயத் தொறந்து யோசிச்சிட்டிருக்கும் போதே,  வேளைக்கு மூனு லிட்டர் கறக்கும்னு சொல்லி,  காள மாட்ட கடவாப் பல்லுல கட்டிட்டு பூடுவானுவ... இப்பத்தான் சனி உங்கள மூனாவது வீட்லருந்து முறைச்சி பாக்க ஆரம்பிப்பான்..

இது என்னாடாது? அசையா சொத்தா வாங்கிப் போடலாம்னா டபுள், ட்ரிபிள்னு புதுக்கரடி மேய்க்கறானே புரோக்கர்!?. சரி யாராவது விஷயம் தெரிஞ்ச ப்ரண்டுட்ட கேக்கலாம்னு போனா அவனுங்க, “என்னது? நீ இன்னும் ஒரு கிரவுண்ட் கூட வாங்கலியான்னு?” என்னமோ ஏற்கனவே மைசூர் பேலஸ்ஸ மாமனாரோட ஷேர் போட்டு  வாங்குன ரேஞ்சுக்கு நக்கல் உடறானுங்க..  நம்ம மாமனார், மச்சான், சகலன் மாதிரி சொந்தக்காரங்க கிட்ட கன்சல்ட் பன்னா (என்னது? அப்பா, அண்னன், தம்பி கிட்டயா? கேக்கலாம் தான். ஆனா ஐடியா மட்டும் தான் கிடைக்கும் தம்பிடி கிடைக்காது. ஓகேவா?)  கிடைக்கற சப்போர்ட் இருக்கே.. அடடா ஒத்தயாவே குதுப்மினார தூக்கிட்டு தெலுங்கானாவ ரெண்டு ரவுண்டு வர அளவுக்கிருக்கும்...


அப்புறமென்ன? அடுத்த கட்ட  வேலய ஜரூரா ஆரம்பிக்க வேண்டியதுதான். எடைக்கு வாங்குன பேப்பர்லருந்து எட்டனா குடுத்து வாங்குன பேப்பர் வரைக்கும் எங்கலாம் இடம் விக்கறாங்க, என்ன விலை, ஆஃபர் எதுனாருக்கா (அதாங்க, தங்க காசு, வெள்ளி குத்து விளக்கு, பத்திர பதிவு இலவசம், சைட் பாக்க போய் வர டாக்ஸி இலவசம் இத்யாதிலாம்) மாதிரி விளம்பரங்கள ப்ரூப் ரீடர விட அதிகமா, சாதா கண்ண பூதகண்ணா மாத்தி தேடனதுல ஹரி ஓம்னு மொத லாவம் பாக்கறது கண் டாக்டர்தான்.



இந்த இடத்துல பாருங்க, போன பாரா வரைக்கும் மாதவன் ரேஞ்சுக்கு இருந்த ஆசாமிலாம் இப்ப மிடில் கிளாஸ் மாதவனா மாறியிருப்பாங்க..  போன வாரம் வரைக்கும் சண்டேன்னா ரெண்டுனு(ச்சீய்!?) இருந்த குடும்ப வாழ்க்கைல அடுத்ததா மன் வுழும், ஏன்னா அன்னிக்குத்தான் சைட் பாக்க போனும்..  அவனுங்க வண்டிலதான் சைட் பாக்க போறோன்னாலும் அந்த தூரம் இருக்கே அடடா என்ன சொல்றது? மரகத லிங்கத்த திருடுனவன் கூட அத பதுக்க இவ்வளவு தூரம் அலைஞ்சிருக்க மாட்டான் போங்க.. எதோ ஒரு இடத்துல வண்டி நிக்க, கீழே இறங்கி பாத்தா அடுத்த அதிர்ச்சி! எப்பவோ பள்ளிக்கூட பாடத்துல படிச்ச பள்ளத்தாக்கு மாதிரி ஒரு இடம். இந்த இடமா பிளாட்டு? சேச்சே, ட்ரைவர் எல்லாரும் ஒன்னுக்கிருக்க நிறுத்தியிருக்கார் போலன்னு நமக்கு நாமே மனச தேத்திக்கும் போது, பொக்ரான்ல போட்டது போவ மீதியிருக்கற குண்டுல ஒன்ன போடுவார்  புரோக்கர், “இதுதான் நீங்க எல்லாரும் வாங்கப் போற “அற்புதமான’ இடம் நல்லா பாத்துக்குங்க”.??  அவ்ளோதாங்க வேன்ல வந்த முப்பத்துமூனு பேர்ல முப்பது பேர் “முன்னாடி இருக்கறது எனக்கு, முக்குல தொங்கறது உனக்குனு” அம்மோனியா ப்ரிண்ட்லயே பங்கு பிரிக்க ஆரம்பிச்சுடுவானுங்க... இதென்னடாது பள்ளத்த பங்கு பிரிக்க இப்டி அடிச்சிக்கிறானுங்கன்னு, “ஏண்டாப்பா, இவ்ளோ பெரிய  பள்ளத்த வாங்க இப்டி போட்டா போட்டி போடறீங்களே, மழை காலத்துல என்ன பன்னுவீங்க?னு கேட்டா, ஒருத்தன் சொல்றான், “நாங்கெல்லாம் ரோடு மட்டத்த விட மூனு அடி உயரமாத்தான் வீடு கட்டுவோம், தண்ணி உள்ள வராது”, சரிடா, தண்ணி உள்ள வராது, ஆனா, நீ வெளிய வரனுமே அதுக்கு என்ன பன்னுவ? “அதெல்லாம் மழை பேஞ்சா பாப்போம்” , என்ன எழவுடா இது? நாம லூஸா? இல்ல இவனுவ எல்லாரும் லூஸானு? கொழப்பத்துல ஒரு முடிவுக்கு வர முடியாம வழக்கம்போல ஃபைல ஹோம் மினிஸ்டர்ட்ட(தங்கமனி) அனுப்புனா, ரெண்டு காதும் ரொம்பி, சட்டப்பை, பேண்ட்பை அப்புறம் கைல வச்சுருக்கற மஞ்சப்பை  வழியற வரை அர்ச்சனை பன்னிட்டு அதுக்கப்புறமும் “ஹய்யோ,   வெவரம் இல்லாத ஆள்கிட்ட எங்கப்பாவும் நானும் இப்டி தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமேன்னு” மூக்க சிந்தி நம்ம முழுக்கை சட்டைல தொடச்சி, தெயவ மச்சான தொனக்கி அனுப்பி (தனியா போனா வெவரம் பத்தாதாம்..!) பணம் கட்டிட்டு வர சொல்லுவாங்க..

பார்த்திபன், வடிவேலுவ சாட்சி கையெழுத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி நம்ம தெ.மச்சான் சைட் ஆபீசுக்கு கூட்டிட்டு போவான். கோழி திருடுறவன்  ஈர கோனியோட தயாரா இருக்கறா மாதிரி, சைட் ஆபீசுல புரொக்கரும், ஓனரும் ரெடியா இருப்பாங்க.. பணம் கை மாறுனதும், “அமாவசைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம் தம்பி”னு சொல்லி எலுமிச்சை சூஸ் குடுத்து, கிருதா டூ கிருதா சிரிச்சி வழியனுப்புவாங்க..

அப்பாடா நாமளும் ஒரு இடத்த கிட்டத்தட்ட வாங்கியாச்சு, அமாவாசை என்னிக்குனு காலண்டர கிழிச்சி காத்துக்கிட்டிருக்கும் போதுதான் தரித்திரம் தபால்ல வந்தா இடி ஏரோப்ளேன்ல வருமான்ற மாதிரி புரோக்கரும், ஓனரும் ஒரேடியா தலை மறைவாகிட்ட விஷயம் டிவில ஓடும். அடப்பாவிகளா!, இதே டிவில தாண்டா ஒரு கை மண்னுண்னாலும் இவண்ட்ட தான் வாங்கனும்னு வழுக்க தலயன வச்சி விளம்பரமா கொடுத்தீங்க? (மண்னு வாங்க சொல்லி பல பேர் வாழ்க்கைல மண்னள்ளி போட்டவர் இப்ப கம்பி வாங்க சொல்றார் மக்களே மைண்ட்ல வச்சுக்குங்க!) இப்ப யாரோ மாதிரி செய்தி போடறீங்களே? உங்களுக்கு அப்பவே தெரியாதா? விளம்பர காசெல்லாம் வாங்கிட்டீங்களாடா? இப்ப என்னடா செய்றது? நகையெல்லாம் வேற வித்தாச்சு..?!!!! டிவிய பாத்தா சொறி, சிரங்கு படைய தவிர அத்தன படையும் அவனுவள தீவிரமா தேடறதா பக்கத்தூட்டு ஆயா மாதிரி இருக்கற ஒரு பொம்பள  பேட்டி கொடுக்குது. ஏம்மா உன்னா பாத்தாலே பாவமா இருக்கு.. நெசமாலுமே நீ அவனுவள கண்டு பிடிச்சுடுவியா? அப்டியே பிடிச்சாலும் எங்க காசெல்லாம் திரும்ப கிடைக்குமா? அய்யோ பணம் போச்சே... யார் கிட்ட கேக்கறது?

மறுபடியும் தங்கமனி அர்ச்சனையோட மூ/சிந்தி மு.சட்டைல தொடச்சி மீண்டும் தெ.மச்சானை கூட அனுப்புவாங்க சைட் ஆபீசுக்கு.  அத்த பொண்னு மாதிரி அன்பா சிரிச்சி, மாமன் பொண்னு மாதிரி முறையா சூஸ்லாம் கொடுத்து கவனிச்சு அனுப்புன சைட் ஆபீஸ்ல இப்ப சைனா பூட்டுதான் நம்மள வரவேற்கும்.  ஆனா, ஒரே ஆறுதல் என்னன்னா, நம்மள மாதிரியெ நெறய இனா வானாங்க மலங்க மலங்க, எந்த டிவில பேட்டி எடுப்பாங்களோன்னு முழிச்சிக்கிட்டு நிக்கறதுதான்... ஒரு வழியா கைல இருக்கற சேவல் மார்க் ஃபைல்லேருந்து ஜெராக்ஸ் காப்பிய வச்சி கம்ப்ளெய்ண்ட் கொடுத்துட்டு வீட்டுக்கு போவ வேண்டியதுதான்..

ஆச்சி இன்னியோட ஆறு மாசம். ஒரு தகவலும் இல்ல. இப்பல்லாம் சண்டேனா நாலு! (இப்ப ச்சீய் இல்ல, சேச்சே?!   காசு போன சோகத்துல  கட்டிங்தான்!)


என்னங்க வீடு புகுந்து, ஓட்ட பிரிச்சி, பீரோவ ஒடச்சி திருடுனாத்தான் திருட்டா? இந்த மாதிரி ஏமாத்தி பொழக்கிறதுக்கு பேரும் திருட்டுதாங்க.. என்னா நாட்டுல நாலஞ்சு பேரு திருடனா உலாத்துனா, இவனுக பல பேர்ல நாடெங்கும் பரவி கெடக்கானுக..  நாம திருடன விட இவனுங்க கிட்ட தான் அதிக எச்சரிக்கையா இருக்கனும்.. திருட்டு ஒரு நாட்டோட பொருளாதாரத்த பாதிச்சுதுனா, விவசாய பூமிய இந்த மாதிரி திருடறது, எந்த நாடாருந்தாலும், அதோட முதுகெலும்பையே உடைக்கிறதுக்கு சமம். தயவு செய்து அத எல்லாரும் நல்லா புரிஞ்சுக்குங்க...


நல்ல வேளை நாங்கெல்லாம் இந்த மாதிரி மோசடிலேருந்து தப்பிச்சிட்டோம், நாங்க வாங்குன இடம் பத்திர பதிவெல்லாம் நல்ல படியா முடிஞ்சுடுச்சுனு நெனக்கறீங்களா? அங்கதான் நீங்க தப்பு பன்றீங்க. ஆமாங்க இன்னிய தேதிக்கு இந்த புண்ணிய பூமில இருக்கற விவசாய நிலம், பொறம்போக்குல்லாம் அவன், இவன்னு அடயாளம் காட்ட முடியாத ஆளெல்லாம் கட்டம் கட்டி சகட்டு மேனிக்கு வித்துக்கிட்டு இருக்கானுங்க.  இப்டி விவசாய நிலத்த  மொத்தமா அழிச்சி நம்ம தாய் நாட்டுக்கு மாபெரும் உணவுப் பஞ்சத்த எதிர் காலத்துல நிச்சயமா உருவாக்கறதுக்கு தீவிரமா ஈடுபட்டுக்கிட்டுருக்கற  ஒரு கும்பலுக்கு, அவங்க வித்த இடத்த வாங்குனதால நீங்களும் மறைமுக உதவியாளரா ஆயிடறீங்க..


இப்ப ஹெய்டி(HAITI)ல நடந்த பூகம்பத்த பாத்தீங்களா? அதுல அந்நாட்டு அதிபரே, மாளிகை இடிஞ்சு தெருவுல நின்னாரு.. அதனால எல்லாரும் அவிங்க வாங்குனாங்க, இவுக விக்கறாங்கன்னு வூட்ல இருக்கற நகை நட்டெல்லாம் வித்து, சொத்து வாங்கறதா நெனச்சி தவறுகளுக்கு துனை போகாதிங்க, நிம்மதிய தொலச்சி தெருவுல நிக்காதீங்க. “உண்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம்னு”  கடைசியாத்தான் இடம் வருது..  இன்னும் நம்ம இந்தியாவுல தெருவுலேயே  பொறந்து, குடும்பம் நடத்தி. செத்து போற சணம் கோடியிருக்கு தெரியுமா? அதுக்காக என் காசுல நான் வாங்குறத நிறுத்த முடியுமான்னு கேக்காதிங்க.. அவசரப்படாதீங்கன்னுதான் சொல்றேன். ஏன்னா உங்க அவசரம்தான் (அப்டி அவசரம் இல்லன்னாலும் அவங்க உங்கள தூண்டுவாங்க) மோசடி கும்பலோட துருப்பு சீட்டு.  எங்கயாது வெளியூர் போனா பாருங்க, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் என்ன இருக்குன்னு.. அநேக இடங்கள் திடீர் நகரா மாறியிருக்கும்..  இப்டி எல்லா இடத்தையும் நகரா மாத்தி பூமிய கான்க்ரீட் காடா மாத்தற போட்டியில நம்ம பங்கு இல்லாம இருக்கலாமே? ஏன்னா நாம் இப்ப தெருவுல இல்ல, நமக்கு எதோ ஒரு இடம் நிச்சயமா இருக்கு ஒண்டிக்க..! அவசரப்படாம நிதானமா இருந்தா அவங்கவங்களுக்கு தேவையான அழகான வீடு தானா கிடைக்கும்.  தோழர்களே... தாய் நாட்ட காக்கற ஒரு நல்ல விஷயம் நம்ம கிட்டேயிருந்து ஆரம்பிக்கட்டுமே... இந்த பொன்னு வெளஞ்ச பூமித்தாய  காப்பாத்தற முயற்சில உங்க பங்கும் இருக்கறது சந்தோஷமான விஷயம்தானே? இந்த பதிவுல சொன்ன விஷயத்துல உங்களுக்கு உடன் பாடு இருந்தா, நல்லா தெரிஞ்ச நாலு பேர்ட்ட  எடுத்து சொல்லுங்க.. சொல்லுவீங்கன்னு எதிர் பாக்கலாமா?













222 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 222   Newer›   Newest»
Paleo God said...

கலக்கல் பதிவு மல.. இவனுங்க பண்ற அட்டூழியம் இருக்கே அடேயப்பா..வாழ்க்கையில மனுசனுக்கு புறியாத மொழி எல்லாம், ஒரு எடம் வாங்கும்போது பாக்கலாம். எப்போதும் ஏமாந்த சோனகிரி நாமதான், பதிவு பண்ணினவனோ, வித்தவனோ சிரிச்சிகிட்டே மாயமாயிடுவானுங்க. DTCP, பட்டா, அடங்கல், சிட்டா, பவர், சொத்துவரி, தண்ணிவரி, முத்திரை கட்டணம், போக்கியம், செண்ட் ல வாங்கினா, ஸ்கொயர் மீட்டர்ல கணக்கு போடுவான், இத்து போன கட்டடத்துக்கு கள பணி, அதுக்கு வர ஆட்டோகாரன் மொதக்கொண்டு அழனும்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லா ஊர்லயும் அரசாங்கம் சரியாவும் மக்களுக்கு சாதகமாவும் சென்ஞா போதும், தலய சுத்தி, பதிவு பண்ணி, இது பொரம்போக்குன்னு சொல்லுவான் கடைசில....

இன்னும் நல்லா வருது வாய்ல..(மன்னிசிடுங்க)
போங்கடா ந்னு நம்ம மக்கள் கொஞ்ச காலம் அமைதியா இருந்தாலே போதும், குப்ப எது நல்லது எதுன்னு புரிஞ்சிடும்..

தொடரட்டும்...உங்கள் எழுத்து. வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷம்.. வருகைக்கு,கருத்துக்கு நன்றி.

அண்ணாமலையான் said...

பலா நீங்க சொன்னது உண்மைதான். நாம சும்மா இருந்தாலே போதும் பாதி பேர் ஓடி ஒளிஞ்சுடுவாங்க.

பாலா said...

ம்ம்ம்ம்ம்ம்.....

கௌதமன் said...

ஆமாம் நீங்க சொல்லியிருப்பது சரிதான். இந்த மாதிரி ஏமாற்றுப் பேர்வழிகளையும், நிறுவனங்களையும் எப்படி எதிர்காலத்தில் இனம் கண்டு ஒதுக்குவது என்று நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும். மற்றவர்களையும் விழித்தெழச் செய்யவேண்டும்.

Unknown said...

நீங்கள் சொல்லிய விஷயம் மிகவும் அருமை..வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்
ஃபாயிஷாகாதர்

சாமக்கோடங்கி said...

ஷோக்கா சொன்னீங்க தலைவா.. உங்க நடை ரொம்ப அருமை. தெய்வ மச்சான் இத படிப்பாரா? எங்க வூட்டு பக்கத்துல கூட ஒரு சின்ன நெலம் ரேசெர்வ்டா இருந்துச்சு. லைப்ரரி கட்டலாம்னு எங்க ஏரியா ஆளுங்கள்லாம் யோசிச்சிகிட்டு இருந்தோம். ராவோட ராவா ஒருத்தன் வந்து வீட்டையும் கட்டிட்டு பத்திரத்தையும் காமிகிறான். என்ன பண்றது.ஏதோ இதனை ஏரியா பிரிச்சா, அதில, இவ்வளவு எடம் லைப்ரரி அப்புறம் பூங்காவுக்கு ஒதுகனும்னு இருக்காமே. இதெல்லாம் எங்க போய் கம்ப்ளைன்ட் பண்றது. எந்த ஊர்லயுமே பூங்கா இல்ல. இத தனியா ஒரு பதிவே எழுதலாம் போல இருக்கு தலைவா. காசு காசுன்னு அலைஞ்சு கடைசியில மண்ணாதான் போகப் போறாங்கன்னு தெரியாமையே அலையிறாங்க.தனக்குன்னு தேவையான அளவு போதும்னு வாழுற புது உலகம் படைக்க எல்லாரும் முன் வரணும். என்ன சொல்றீங்க.. ஏதோ என் ஆதங்கத்த கொட்டி தீர்த்துட்டேன்.

vasu balaji said...

இன்னைக்கு தங்கச்சுரங்கம்னு ஒரு விளம்பரம் வந்திருக்கு தினத்தந்தில. செங்கல் பட்டுல இருந்து 13ஏஏஏஏஏகி.மீ தானாம். அப்புடியே வாங்கி போட்டாலும் அங்க அடாவடியா வீடு கட்டி பத்திரம் நீட்டுற கொடுமை வேற. எங்க போய் முடியுமோ?:(

கும்மாச்சி said...

அண்ணாமலையான் அய்யா, நடை அற்புதம், சும்மா போட்டுத் தாக்குங்க. வெறும் வயத்துல கட்டிங் உட்டாபோல உவமை சூப்பருங்கோ.

விக்னேஷ்வரி said...

ம், ரொம்ப ஆழமான விஷயத்தை நகைச்சுவை கலந்து அழகா சொல்லிருக்கீங்க.

நாடோடி said...

அவசரப் பட்டு வாங்குபவர்கள் அனைவருக்கும் தேவையான பதிவு...

Sinthu said...

இவ்வளவு இருக்கா........?

Thenammai Lakshmanan said...

ஒரு குடிசையப் போட்டு உக்கார்ந்துட்டு 5 அல்லது 6 வருஷம் ஏதோ ஒரு வரியைக் கட்டிட்டு பின்னாடி பவர் வாங்கி கூட்டுப் பட்டாவா போட்டு ஏமாந்தவங்க தலையில கட்டுறாங்க... சிலர் கடை எல்லாம் கட்டி இடிபட்டு இருக்குறதை பார்த்து இருக்கேன்... அண்ணாமலையான் சொன்ன மாதிரி எச்சரிக்கையும் நல்லா தேர்வு செஞ்சும் வாங்கணும்

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தொடரட்டும்...உங்கள் எழுத்து. வாழ்த்துக்கள்.

சரவணன். ச said...

நிலத்த ஏமாத்தி வித்தவனவிட அத ரிஜிஸ்டர் பன்ன பதிவாளர் அதுக்கு துனை போன அனைத்து அரசு பனியாளர்கலையும் பனிநீக்கம் செஞ்சி சிறையில போடனும்.அப்பத்தான் இது கொஞ்சம் குறையும்.
இல்லையா காலிங்?

அண்ணாமலையான் said...

@ஹாலி பாலா : என்ன புலி உறுமுது?

அண்ணாமலையான் said...

@கௌதமன் : அதுக்குத்தானே கூப்டுருக்கேன்.. முடிஞ்சளவு முயற்சி பன்னுங்க...

அண்ணாமலையான் said...

@ azhara உங்க வருகையும் கருத்தும் கூட்டத்துக்கு வலு சேக்குது. நன்றி.

அண்ணாமலையான் said...

@ பிரகாஷ் : நீங்க சொன்னது முழுக்க உண்மைதான். நாம எல்லாரும் கை கோத்தாதான் சில விஷயம் நடக்க வாய்ப்புருக்கு.. வாங்க எல்லாரும் சேந்து புது உலகம் படைக்க புறப்படுவோம்..

அண்ணாமலையான் said...

@வானம்பாடிகள் : அய்யா உங்க வருகை சந்தோஷமா இருந்தாலும், உங்களையொத்த வயதுடையோரின் பாதிப்பும், அவர்களின் வேதனையும் தான் இதை எழுத தூண்டியது.. உங்களின் குரல் இந்த கருத்துக்கு மிக வலு சேர்ப்பதாக கருதுகிறேன்.. நன்றி...

அண்ணாமலையான் said...

@ கும்மாச்சி : வாங்க உங்க வருகையும் கருத்தும் நெசமாலுமே கட்டிங் உட்ட எஃபெக்ட் தருது.. நன்றி...

அண்ணாமலையான் said...

@ விக்னேஷ்வரி : ரொம்ப நன்றிங்க. உங்க கருத்துக்கு. தலைமையகத்துல இருக்கீங்க.. தமிழ் நாட்ல நடக்கறத பாத்துக்குங்க..

அண்ணாமலையான் said...

@ நாடோடி : ஆமாங்க, அவங்களும் தாய் நாட்ட பத்தி கவலைப்பட வேனாமா?

அண்ணாமலையான் said...

@நாடோடி : இன்னும் இருக்கு.. இதுக்கே நிறைய பேரு ஏன் கட்டுரையான்னு கேட்டாங்க...

அண்ணாமலையான் said...

@ thenammailakshmanan : ஆச்சி வாங்காதீங்கன்னுதான் நான் சொல்றேன்.. காச பத்திரமா வையுங்க, அப்புறம் பாத்துக்கலாம்.. ( 1 வட்டிக்கு நான் வாங்கிக்கறேன்)

அண்ணாமலையான் said...

@ நண்டு=நொரண்டு : வாங்க , உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

அண்ணாமலையான் said...

@ சரவணன். ச : அப்டி செஞ்சா 80% அதிகாரிகள கம்பிக்கு பின்னாடிதான் பாக்கனும்.. பரவால்லியா?

Muniappan Pakkangal said...

Nice post Annamalaiyan,can this be stopped ?

கருந்தேள் கண்ணாயிரம் said...

தலைவரே . . இவனுங்கள பத்தி என்ன சொன்னாலும் அதுக திருந்தாதுக . . மனசு நெறைய கோவம் இருக்கு இவனுங்க மேல . . முழுக்க முழுக்க கேட்ட வார்த்தையாவே வெச்சி ஒரு பதிவு சீக்கிரமா போட்டுறலாமா இவனுங்கள பத்தி ? (நம்ம 'தமிழ்படத்துல' முழுக்க முழுக்க ஹம்மிங்காலையே போட்ட பாட்டு இருக்காமே . . அந்த மாதிரி) . .

அண்ணாமலையான் said...

@ Muniappan Pakkangal : we all expect so..

அண்ணாமலையான் said...

@ கருந்தேள் கண்ணாயிரம் : absolutely true. நாங்கூட அப்டித்தான் நெனச்சேன். ஆனா யாருக்கு பிரயோஜனம்? அதுக்கு பதிலா நம்மால முடிஞ்சளவு நம்ம தோழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்னு ஒரு எண்ணம்தான்.. நீங்க உங்க பக்கம் முடிஞ்ச வரை நாலு பேருக்கு உதவி பன்னுங்க.. தானா நல்லது நடக்கும்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான தகவல்கள் அண்ணாமலையான் சார் ..

அண்ணாமலையான் said...

@ Starjan ( ஸ்டார்ஜன் ) : ரொம்ப நன்றி தோழா.

jothi said...

பிரச்சனை நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது, இதை முழுக்க ஒப்புக்கொள்கிறேன்.

உண்மையாக சொன்னால் நாம் சிறு வயது முதல் ராப்பகலாக படித்து, இப்போது பகல்ராவாக வேலை பார்ப்பது புரோக்கர்களுக்காக. ஆம்,எவ்வளவுதான் நாம் சம்பாதித்தாலும் நம் உழைப்பு அவர்களைத்தான் அடைகிறது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் படிக்கும் போது நாலாவது முறையாக 9 ஆம் வகுப்பில் பெயில் ஆனவன் இன்னைக்கு ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் (புரோக்கர்ன்னு சொல்ற காலம் மலை ஏறிவிட்டது). செண்ட் வாங்கி, பிளாட் வாங்கி, ஏக்கர் வாங்கி,ஹெக்டேர் வாங்கி, இப்போ எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள மலையையே பாதி வளைத்துப்போட்டுவிட்டான். நான் காணி நிலம் கிடைக்குமா தாயே என புலம்பிக்கொண்டு இருக்கிறேன்.இபப யார் புத்திசாலி???

சொல்லப்போனால் இன்னும் நாம் வெள்ளைக்காரனுக்கு அடிமைதான். நான் சம்பாதிக்கும் பணம் பில்டருக்கு, பில்டரின் பணம், அரசியல்வாதிக்கு, அரசியல்வாதியின் பணம் அயல் நாட்டுக்கு,அயல் நாட்டின் பணம் அயல் நாட்டுக்கே,.

நாம் அயல் நாட்டுக்காரனிடம் சோற்றுக்கு கையேந்த ஆரம்பிச்சாச்சு,..

சமூக நலனுடன் கூடிய அட்டகாசமான பதிவு,..

(ஆமா கட்டிங்னா எவ்வளவு சதுர அடி?)

ஹாய் அரும்பாவூர் said...

எங்கே சாரோட எழுத்து ரொம்ப நாளா காணோம் என்று பார்த்த ரஹ்மான் புது பட ஆல்பம் போல் சூப்பர் ஹிட் தர்ற ஆள் நீங்க .
வாழ்த்துக்கள் கலக்குங்க நகைச்சுவை களத்தில்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பு.. பின்னிப் பெடலெடுக்கிறீங்க..
நல்ல பதிவு.. ஸுப்பரா எழுதுறீங்க...

வாழ்க வளமுடன்...

நட்புடன் ஜமால் said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

எளிதா கிடைக்கும் எதையும் எடை போட்டு பார்க்கனும்.

கொசுறு கேட்டே பழக்கப்பட்டு வளர்ந்து விட்டதால் இந்த நிலை. சிலர் தெரியாம விழறாங்கன்னா சிலர் தெரிஞ்சே வரட்டும் பார்த்துகிடலாமுன்னு இறங்குறாங்க. இதுல பகை வேற மூளும் ---

ஹூம் --- யோசிச்சி செஞ்சா சரியாயிருக்கும் தான் தாங்கள் சொல்வது போல்.

suvaiyaana suvai said...

நல்ல விழிபுணர்வு!!! சமூக அக்கறைக்கு நன்றி!! இப்படி எல்லாம் போட்டு வயித்துல புளியை கரைக்கிரீங்க:)

வேலன். said...

நண்பருக்கு,
எனது மன ஆதங்கத்தை இதற்குமுன் 15-08-2009 பதிவில் வெளியிட்டுள்ளேன். தளமுகவரி:-
http://velang.blogspot.com/2009/08/blog-post_15.html
அதிலிருந்து ஒரு பகுதி கீழே-
விளை நிலங்கள்:-விளை நிலங்களை போலி சான்றிதழ்
கொடுத்துகிராம அதிகாரிகள்பிளாட் போட அனுமதிக்
கின்றனர். அதனால் என்னஆகின்றது. அபரிதமானபணத்தால்
விவசாயி சோம்பேறியாகின்றான்.பகட்டு வாழ்க்கைக்கு
பழகிகொள்கின்றான். காரில் வலம் வருகின்றான்.
கிராமத்துவீட்டிற்கு ஏ.சி.போடுகின்றான்.
(அவர்கள் வீட்டிற்கு ஏ.சி .போடகூடாத என நீங்கள்
கேட்பது புரிகின்றது. கிராமத்து வீடுகளில்
இயற்கையாகவே காற்று நன்றாக வரும்).சமீபத்தில்
ஒரு ஷோ ரூம்சென்றிருந்தேன். அங்கு ஒரு கிராமத்து
பெண் வந்திருந்தார் . உடன்அவர்கள் ஊர் எலக்ட்ரீஷியனும்.
டி.வி.களை பார்ததுகொண்டு வந்தார்பெண்மணி.
அப்போது பெரிய டி.வி.யை காண்பித்து எலட்ரீஷியன்
அம்மாஇதை வாங்குங்கள் . நமது வீட்டிற்கு அருமையாக
இருக்கும் என்றார்.விலை கேட்டார் அம்மணி.ரூபாய் 35,000
என கடைக்காரர் சொல்ல -காய்கறி
கடையில் கத்தரிக்காய் முருங்கைக்காய் வாங்குவது
போல் அதில் ஒன்றுகொடு என கேட்டார்.
இந்த வசதியை பார்க்கும் பக்கத்து நிலத்துக்காரன்
நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும் என தமது
நிலத்தையும் விற்றுவிடுகின்றான். நிலங்களும்
காணவில்லை- விவசாயிகளும்காணவில்லை.
விளைவு இன்று நல்ல அரிசி வாங்க போனால் கிலோ
35 ரூபாய் என்கின்றார்கள்.சர்க்கரை கிலோ 32 ரூபாய்.
வெல்லம் கிலோ42 ரூபாய். துவரம் பருப்பு
கிலோ 92 ரூபாய்.அரசாங்கள் இனியாவது
விழித்துக்கொண்டு விளைநிலங்களை கூறுபோடுவதை
தவிர்க்கவேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
இனியாவது மக்கள் திருந்தினால் சரி....
அருமையான கட்டுரை

வாழ்க வளமுடன்,
வேலன்.

*இயற்கை ராஜி* said...

namallem aalukku oru veedu katratha niruthinale..intha kodumaigal oliyum..emaaruparkal irukum varai ematupavarkal irukathan seivarkal.

nice post

ப்ரியமுடன் வசந்த் said...

மூக்கு சிந்தி மூக்கு தொடச்சு ஏகப்பட்ட இடத்துல வருது தல அனுபவம் பேசுது...

நல்லா சொல்லியிருக்கீங்க...

ஆனா நம்ம ஏமாந்துகிட்டேதான் இருக்கறோம் இருக்கவும்போறோம் இது மாற்றவேமுடியாதுன்னு மனுசனுங்களுக்கு எழுதி வச்ச நியதி...

KarthigaVasudevan said...

பதிவு மிடில் கிளாஸ் மக்களோட வீட்டுக் கனவை "சிரிப்பா சிரிக்க வச்சு சொன்னாலும்" தரமான யோசனை.பேசாம ஏங்கல்ஸ் ராஜா (அழகப்பால எம்.பி.ஏ முடிச்சுட்டு விவசாயம் பண்றாராம் இவர்,சென்ற வார விகடன்ல கட்டுரை பார்க்கவும்) போல எல்லாருமே விவசாயம் பண்ண ஆரம்பிச்சா என்ன? விவசாயம்ங்கற அகல் விளக்கை விட கண்ணைக் கூச வைக்கற ஷோ ரூம் லைட் (வீட்டுமனை )வெளிச்சம் பார்த்து விவசாயி மயங்கிப் போறதா சொல்றது ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயக் கூலிகளுக்கான செலவுகள் இப்ப கட்டுப்படி ஆறதில்லை,அதனாலேயே பெரும்பான்மையான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக துண்டு போடப் படுகின்றன.சென்ற வார தேவதைல எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் எங்கள் விவசாய நிலங்களை வீட்டு மனைகலாக்க நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம்னு சென்னைக்கு பக்கத்து கிராம விவசாயிகள் சிலர் பேட்டி கொடுத்திருந்தாங்க.விவசாயம் நலிஞ்சு போறதுக்கு விவசாயிகள் சோர்ந்து போனது மட்டுமே காரணம்.உன்னால் முடியும் தம்பி படத்தை போட்டுக் காட்டி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம். :)))

geethappriyan said...

நண்பா அருமையான கட்டுரை,
சிந்திக்க வைத்த ஒன்று,பகிர்வுக்கு நன்றி

மாதேவி said...

வீடு வாங்க நினைப்போரை சிந்திக்கச் செய்யும் நல்ல பதிவு.

இங்கும் மாநகரில் இதே நிலைதான். பணத்தைச் சேகரித்துக்கொண்டு வெளிநாட்டுக்குப் பறந்து விடுவாங்கள்.சில ஆரம்பமாகாமலும் சில முழுவதுமாக பூர்த்தியடையாமலும் நிற்கும்.

நாஸியா said...

சரியா சொன்னீங்க சகோதரரே!!

தமிழ் உதயம் said...

சாமானியனுக்குள்ள அக்கறையும், வேதனையும் ஆட்சியாளர்களுக்கு இல்லை. இப்போது நாம் செய்யும் ஒவ்வொரு தவறும் நம்மை பாதிக்காது. நம் சந்ததியினரை தான் பாதிக்கும். புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்

பின்னோக்கி said...

நல்ல பதிவு. ஒரு சிலரிடம், ஒரு நகரத்திலுள்ள அத்தனை நிலங்களும் இருக்கும் நிலை இப்பொழுது உள்ளது.

S.A. நவாஸுதீன் said...

அவங்க டார்கெட் எப்பவுமே மிடிள் கிளாஸ் மக்கள்தான். எளிதாக ஏமாறுபவர்களும், ஏமாந்தாலும் பிரச்சனை பண்ணவோ, சட்டத்தின் மூலம் போராடவோ பிரயத்தணம் செய்யாதவர்கள் அவர்கள்தான் (அதுவேற வீண் செலவுன்னு நினைப்பவர்கள்).

தனக்கென சொந்த இடம் (இவர்களில் பெரும்பாலும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள்) வேண்டுமென நினைப்பது தவறில்லை. ஆனால் நீங்கள் சொன்னதுபோல் அவசரப்படாமல் இருக்கவேண்டும்.

அருமையான நடையில் ஒரு அவசியமான இடுகை சார்.

(கிருதா டு கிருதா - ஹ்ம்ம் செம)

அண்ணாமலையான் said...

@ jothi : கட்டிங்னா சதுர அடி இல்ல குவார்ட்டர்ல பாதி குடிக்கறது.. (தெரியும் ஆனா தெரியாது அப்டித்தானே?)

அண்ணாமலையான் said...

@ arumbavur : கொஞ்சம் வேலை அதனால தாமதம். மற்றபடி சூப்பர் ஹிட் ஆக்கறது நீங்கதான்...

அண்ணாமலையான் said...

@ பட்டாபட்டி.. : உங்களுக்கு கவலையில்லே.. பேர்லயே பட்டா இருக்கு..

அண்ணாமலையான் said...

@ நட்புடன் ஜமால் : உங்க கருத்து உண்மைதான்

அண்ணாமலையான் said...

@ suvaiyaana suvai : கரச்ச புளி சுவையா இருந்துச்சா?

அண்ணாமலையான் said...

@ வேலன் : அந்த கவலைதான் என்னை தூண்டியது

அண்ணாமலையான் said...

@ இய‌ற்கை : அதத்தான் நான் வலியுறுத்துகிறேன்..

அண்ணாமலையான் said...

@ பிரியமுடன்...வசந்த் :விதிய முடிஞ்ச வரை மதியால வெல்ல முயற்சிப்போம். உங்களால முடிஞ்சளவு உதவி செய்யுங்க

அண்ணாமலையான் said...

@ KarthigaVasudevan : சினிமா எதுக்குங்க? விவசாயத்தோட முக்கியத்த எல்லாரும் உணர்ந்தாவே நிச்சயம் வெற்றிதான்.. நீங்க நெறய படிச்ச, படிக்கற மேத போலருக்கு!?

அண்ணாமலையான் said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. தொடர்ந்து வாருங்கள்..

அண்ணாமலையான் said...

@ மாதேவி : அது போன்றவர்கள்தான் சுலபமாக ஏமாறுகிறார்கள்..

அண்ணாமலையான் said...

@ வால்பையன் : கருத்துக்கு நன்றி தோழா

அண்ணாமலையான் said...

@ நாஸியா : கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி..

அண்ணாமலையான் said...

@ tamiluthayam : அப்டி புரிய வைக்கிற முயற்சிதான் இது.. உங்க ஆதரவுக்கு நன்றி

அண்ணாமலையான் said...

@ பின்னோக்கி : ஆமாங்க, அதும் யாரோடதோ இவனுங்ககிட்ட இருக்கும்.

அண்ணாமலையான் said...

@ S.A. நவாஸுதீன் : நீங்க சொன்ன விஷயம் கரெக்ட். ஏழை சொல் அம்பலம் ஏறாதுல்ல..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அருமையான பதிவு அண்ணாமலையான்.
நேற்று ஓடினவங்களை பிடிச்சிட்டதா சேதி. பிடிக்கிறதெல்லாம் சரியாத் தான் நடக்கும். பிடிச்சதில கிடைச்சது தான் காணாம போயிடும்.

அண்ணாமலையான் said...

@ நாய்க்குட்டி மனசு : ஆள பிடிப்பாங்க, கானாம போவாது போக வேண்டிய இடத்துக்கு போய்டும்.

Vidhoosh said...

nice post. i found your new post in tamilish :)

திவ்யாஹரி said...

நல்ல பதிவு அண்ணா.. இந்த நல்ல பதிவுக்கு தான் இவ்ளோ நாள் ஆச்சா. பரவாயில்லை. நிறைய எழுதுங்க அண்ணா.. கொஞ்சம் பேராவது திருந்தட்டும்..

அண்ணாமலையான் said...

@ திவ்யாஹரி : திருந்தறத நம்மகிட்டேயிருந்து ஆரம்பிக்கலாம்னுதான்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சோத்த வாயில அள்ளி வைக்கயிலேயே எத்தனை நாளைக்கின்னு இருந்துச்சு. உங்க கட்டுரையும்,பின்னூட்டங்களையும் பாத்தா அடுத்த வருசம் நல்ல மகசூல் கிடைக்கும் போலருக்கே! இந்த நேரத்தில் தேவையான சரியான சிந்தனை.
அன்புடன்,
க.நா.லெட்சுமணன்

அண்ணாமலையான் said...

@ க.நா.சாந்தி லெட்சுமணன் : உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ananya Mahadevan said...

Annamalaiyaan

The post was not only hilarious but had a lot of social responsibility in it. Very thought provoking post. Please continue this good work.

அண்ணாமலையான் said...

@ அநன்யா மகாதேவன் : thank u for presence in my blog.

Vijiskitchencreations said...

என்ன ஸாரை கானோம் என்று நினத்தேன். பார்த்தால் நல்ல அருமையான கருத்துகள் இங்கு இருக்கு. ம். பணம் இருக்கிறவங்க எல்லாம் பணத்தை எங்கு எப்படி சேமிப்பது என்று இந்த மாதிரி செயலில் இறங்கி பிறகு வேதனை படுறாங்க. என்ன சொல்லி புரியவைப்பது. ஒன்று இடம் வாங்குவது, இல்லை தங்கத்தில் போடுவது,இல்லை ஷேர் மக்களுக்கு பணம் என்றாலே ஒரு மோகம் தான். என்று தனியும் இந்த தாகம்?

அண்ணாமலையான் said...

@ vijis kitchen : தனியாது.. ஷேர் சட்டப்படியான சூதாட்டம்

ரோஸ்விக் said...

தல, நாட்டு மக்களுக்கு தேவையான விஷயத்தை மிக அருமையா, எச்சரிக்கையா இருக்கும்படி சொல்லி இருக்கீங்க.

உங்க எழுத்து நடை சும்மா லபக்கு வழுக்கிகிட்டு மனசுக்குள்ள இறங்குது. தொடர்ந்து கலக்குங்க.

அன்புடன்
ரோஸ்விக்

http://thisaikaati.blogspot.com

அண்ணாமலையான் said...

@ ரோஸ்விக் : உங்க ஆதரவு மனசுக்கு சந்தோஷமா இருக்குது...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//என்னங்க வீடு புகுந்து, ஓட்ட பிரிச்சி, பீரோவ ஒடச்சி திருடுனாத்தான் திருட்டா? இந்த மாதிரி ஏமாத்தி பொழக்கிறதுக்கு பேரும் திருட்டுதாங்க.. என்னா //

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே. சூப்பர்.

அண்ணாமலையான் said...

@ ஜெஸ்வந்தி : உங்க ஆமோதிப்புக்கு நன்றிகள்...

அண்ணாமலையான் said...

kodangi said...
டாப்ல இருக்கீங்க போங்க..

நல்லா எழுதுங்க..

நன்றி..
@ kodangi : வச்சதே நீங்கதானே.. உங்களுக்குத்தான் என் நன்றிகள்...

சாமக்கோடங்கி said...

டாப்ல இருக்கீங்க..
வாழ்த்துக்கள்...

அண்ணாமலையான் said...

@ பிரகாஷ் : நீங்கதான் அவரா? நடக்கட்டும்...

பாலா said...

நீங்க நினைச்சது ஓரளவுக்காவது வெற்றிங்களா??? :)
--

சினிமான்னா உடனே ஓடி வந்துடுவோம். இப்படி யோசிக்க வைக்கற மேட்டர்ன்னா.. நம்ம பயபுள்ளைய கொஞ்சம் லேட்டாதான் வருவோம்.

அடிச்சி விளையாடுங்க!! :)

வெற்றி said...

நல்லதோர் பதிவு அண்ணா...

இத நாலு பேர்ட்ட என்ன நாற்பது பேர்ட்ட சொல்வோம்ல...

அண்ணாமலையான் said...

@ ஹாலிவுட் பாலா : நான் நெனச்சது உடனடி வெற்றி தர கூடிய விஷயமல்ல. ஆனா தொடர்ந்து முயற்சி செய்தா கிடைக்கும். உங்க ஆதரவும், தொடர் விசாரிப்பும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தாய் நாட்டு மேல உங்களுக்கு இருக்கிற அக்கறைக்கு மகிழ்ச்சி...

அண்ணாமலையான் said...

@ வெற்றி : நன்பரே உங்க பேர் பெற நான் ரொம்ப கஷ்டபட வேண்டியிருக்கும்..

Madhavan Srinivasagopalan said...

//இப்டி எல்லா இடத்தையும் நகரா மாத்தி பூமிய கான்க்ரீட் காடா மாத்தற போட்டியில நம்ம பங்கு இல்லாம இருக்கலாமே? ஏன்னா நாம் இப்ப தெருவுல இல்ல, நமக்கு எதோ ஒரு இடம் நிச்சயமா இருக்கு ஒண்டிக்க..! அவசரப்படாம நிதானமா இருந்தா அவங்கவங்களுக்கு தேவையான அழகான வீடு தானா கிடைக்கும். தோழர்களே... தாய் நாட்ட காக்கற ஒரு நல்ல விஷயம் நம்ம கிட்டேயிருந்து ஆரம்பிக்கட்டுமே... இந்த பொன்னு வெளஞ்ச பூமித்தாய காப்பாத்தற முயற்சில உங்க பங்கும் இருக்கறது சந்தோஷமான விஷயம்தானே?//

Well said.

Geetha6 said...

waav..!!ore kalakkals than..
udtgeeth.blogspot.com

அண்ணாமலையான் said...

@ maddy73 : நன்றி நன்பரே..

balavasakan said...

பதிவு நீளமா இருந்தாலும் வாசிக்க வாசிக்க சுவாரஸ்யத்தில் சுருங்கிட்டே போயிடுத்து... சிந்திக்க வைச்சிருக்கீங்க சார்..

Gowripriya said...

:))))

நல்ல பதிவு..

அண்ணாமலையான் said...

@ Balavasakan : சிந்திக்கனும்னுதான் எழுதுனேன். சிந்திச்சதுல சந்தோஷம்..

பாலா said...

50 ஓட்டு!!!!!!!!! :) :)

அட்ரா சக்கை!!! தொடர்ந்து இரண்டு பதிவுகள் 50-ஐ கடந்த ஒரே ப்லாகர் நீங்கதான் தல!!!! இதே மாதிரி எங்களை சிந்திக்க வைச்சிகிட்டே இருங்க.

பாலா said...

50-ஐ கடந்தன்னு சொல்லணுமா... இல்லை ‘தொட்ட’-ன்னு சொல்லணுமா???

அண்ணாமலையான் said...

@ ஹாலிவுட் பாலா : கண்டிப்பா. அப்புறம் 50-ஐ கடந்தன்னே சொல்லலாம், ஏன்னா 50-த ’தொட்டா’ நல்லாருக்காதுல்ல?
உங்க ப்ளாக்குலயும், நம்ம தேளு ப்ளாக்குலயும் நமக்கு நல்ல இலவச விளம்பரம் கொடுத்தீங்க, ரொம்ப நன்றி...
அது மட்டுமில்ல தொடர்ந்து படிச்சு ஓட்டு போட்டுட்டு வர அத்தன நன்பர்களுக்கும் என் நன்றிகள்...

kailash,hyderabad said...

//மரகத லிங்கத்த திருடுனவன் கூட அத பதுக்க இவ்வளவு தூரம் அலைஞ்சிருக்க மாட்டான்//
//சரிடா, தண்ணி உள்ள வராது, ஆனா, நீ வெளிய வரனுமே அதுக்கு என்ன பன்னுவ?//
//தரித்திரம் தபால்ல வந்தா இடி ஏரோப்ளேன்ல வரும்//
எப்படிங்க இப்படியெல்லாம்?

சூப்பர்.
செம காமெடியா பக்கா சீரியசான பதிவு.
இந்த பதிவு எல்லாருக்கும் போய் சேரணும். (அதனால்) தமிழ் மணம் ,தமிலிஷ் ல் ஓட்டுக்கள் போட்டாச்சு.
திரும்ப திரும்ப படிப்பதற்காக ஆப்லைன்-ல் save பண்ணிகிட்டேன்.

malarvizhi said...

நல்ல பதிவு . நகைச்சுவையுடன் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

@ kailash,hyderabad : உங்களோட நிபந்தனையற்ற ஆதரவுக்கும் என் நன்றிகள்...

அண்ணாமலையான் said...

@ malarvizhi : உங்க கருத்துக்கு நன்றி...

எண்ணங்கள் 13189034291840215795 said...

[[ தாய் நாட்ட காக்கற ஒரு நல்ல விஷயம் நம்ம கிட்டேயிருந்து ஆரம்பிக்கட்டுமே...]]

கண்டிப்பா.. நல்ல விஷயம் யோசிக்க வெச்சீங்க...நல்ல பதிவு.. வாழ்த்துகள்.

அண்ணாமலையான் said...

@ புன்னகை தேசம் : வாங்க, உங்க வருகை, வாழ்த்து ரெண்டுக்கும் நன்றி..

அண்ணாமலையான் said...

@ Padhu :thank u for ur visit & comment..

Ramesh said...

போட்டுத்தாக்கியிருக்கீங்க அண்ணாமலை அண்ணே... ஏமாற்றப்பட வேண்டிய நிலையில் நாம.... ம்ம்
நல்ல பதிவு எழுத்து நடை கவருது.
ஒரு கேள்வி அங்கேயும் இப்படியா..?? சந்திராயன் நிலவுல நீர் கண்டுபிடிச்சது வேஸ்ட் ஊரில மக்களை பார்த்திருக்கலாம். வாழ்க்கையின் அர்த்தம் காசு சேமிப்பிலா??
நிரந்தரம் எதுங்க... மன்னிக்கவும் அடிச்சி துரத்தணும் அட்டூழியக்காரர்களை.....
பதிவு ரொம்ப நீ.........ளம்..

அண்ணாமலையான் said...

@ றமேஸ்-Ramesh : அடிச்சு தொறத்தனும்னு எல்லாரும் விரும்பறாங்க, ஆனா நடக்கலியே? வெய்ட் பன்னுவோம் நல்லது நடக்க......

Unknown said...

எங்கள் பகுதியிலும் (மயிலாடுதுறையில்) விளை நிலங்கள் அனைத்தும் வேகமாக பிளாட் ஆக மாறிகொண்டு இருக்கிறது.

அண்ணாமலையான் said...

@ மின்னல் : எல்லா இடத்திலும் இதே நிலைதான்

புல்லட் said...

ஆஹா! அருமயான நக்கல் செர்.. பல இடங்களில விழுந்து விழுந்து சிரிச்சேன்.. உப்பி டில்லாம் பூமியை பற்றி யொசிசிசட்ருந்தா நமக்கு கொமியத்தால அபிசேகம் பண்ணிட்டு சமூகம் தன்பாட்டுக்கு பொயிட்டிரக்கும்.. பதிவு எழுதுற நேரத்துக்கு ரெண்டு புரொக்கர் கிட்ட விசாரிச்சு பாருங்க எங்கினாசு்சும் நிலமிருக்கா எண்டு..:P

அண்ணாமலையான் said...

@ புல்லட் : ஹா ஹா ஹா. தூள் கெளப்பிட்டீங்க புல்லட்... நன்றி

துபாய் ராஜா said...

எல்லோரும் யோசிக்க வேண்டிய இன்றியமையாத கருத்துக்கள்.மருந்தில் தேன் கலந்து கொடுப்பது போல நல்லதொரு கருத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பது அருமை.

நல்ல நகைச்சுவையான எழுத்து நடை.எதைன்னு குறிப்பிட்டு சொல்ல பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்.அப்படியே அடிச்சு ஆடுங்க.

வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

@ துபாய் ராஜா : மிக்க நன்றி நண்பரே.. தொடர்ந்து வாங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கருத்து.. எங்க பாட்டி காலத்துல பக்கத்து மனை விளைநிலமா இருந்ததுன்னு சொன்ன இடத்துலருந்து ஆரம்பிச்சி இப்ப இன்னொரு ஊரே இருக்கு.. இது பலகாலமா தொடர்ந்து வந்துட்டே இருக்கு..

ஹேமா said...

நான்தான் கடைசி.ஓட்டுப்போட்டு வரவைச் சொல்லிக்கிறேன்.எல்லாரும் கன்னாபின்னான்னு சொல்லிட்டாங்க.அப்புறம் என்ன !

அண்ணாமலையான் said...

@ முத்துலெட்சுமி/muthuletchumi : ஆமாங்க, எல்லா நிலமும் ஊரா மாறிட்டா சோறுக்கு எதிர் காலத்துல கட்டாயம் லாட்டரி அடிக்க வேண்டியதுதான்.

அண்ணாமலையான் said...

@ ஹேமா : நீங்க வந்ததே பெரிய சந்தோஷம்..

நிலாமதி said...

எல்லோருமே சொல்ல வேண்டியதை சொல்லிவிடார்கள். அடுத்த எலக்சனில் நின்று பாருங்கள் நம்ம பதிவர் எல்லோரும் வோட்டு போட்டு சபைக்கு அனுப்பி வைப்பார்கள். ஜமாய்க்கலாம் . நீங்க நாலாய் இருக்கணும் நாடு முன்னேற....

அண்ணாமலையான் said...

@ நிலாமதி : அப்டி அனுப்ப வேண்டாம். எல்லாரும் கொஞ்சம் எதிர் காலத்த பத்தி கவலப்பட்டா போதும். பாதி வெற்றி.

Cool Lassi(e) said...

When do you get the time to respond to all the comments? I wonder.

Chitra said...

இன்னைக்குதான் ஆற அமர அவசரப்படாம படிச்சேன். பயனுள்ள இடுகை. நல்லா இருக்குங்க.

அண்ணாமலையான் said...

@ Cool Lassi(e) : thank u for ur comment. i take it an opportunity to thank them & understand their view too.

அண்ணாமலையான் said...

@ Chitra : என்னங்க இது? நீங்களே இவ்ளோ லேட்?

அனுபவம் said...

ரொம்ப அசத்திட்டீங்க அண்ணாமலை சார்! அருமையா இருக்கு!
-அன்புடன் தணிகாஷ்

அண்ணாமலையான் said...

@ அனுபவம் : உங்க அருமையான கருத்துக்கு நன்றி...

சிவாஜி சங்கர் said...

பயனுள்ள கட்டுரை.. இன்னும் இதுபோல அவலங்களை சொல்லுங்க.. அண்ணா

Menaga Sathia said...

கலக்கிட்டீங்க சகோ..எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு....

அண்ணாமலையான் said...

@ Sivaji Sankar : நன்றி சிவாஜி சங்கர்...

அண்ணாமலையான் said...

@ Mrs.Menagasathia : ரொம்ப நன்றி, உங்க கருத்துக்கு.

ஸாதிகா said...

மிகவும் அவசியமான பதிவு

அண்ணாமலையான் said...

@ ஸாதிகா : நன்றி..

malar said...

இன்று தான் படித்தேன் .நல்ல பதிவு.

எங்களுக்கு நடந்த அனுபவம் ப்ரொக்கர் ஒரு இடததை காட்டி விலையை கூட்டி நாங்க வேண்டாம் என்று சொல்லி ப்ரொக்கர்.;இல்ல கொரச்சு வாங்கிரலாம் நான் வாங்கி தாரேன் சொல்லி முடிவாவுகிர நேரத்தில் பத்திரம் எடுத்து வில்லங்கம் பார்த்தால் மைனர் சொத்து .பின்பு கேஸ் போட்டால் சொத்து நமக்கு செல்லாது.

பணத்துக்காக எதும் செய்வங்க .

அண்ணாமலையான் said...

@ malar : ஆமாங்க, நாமதான் ஜாக்ரதையா இருக்கனும்..

Vidhoosh said...

இன்று தான் படித்தேன் . அவசியமான பதிவு

அண்ணாமலையான் said...

@ Vidhoosh : மிக்க நன்றி..

Namitha said...

Is it about the real estate mafia? Just curious..

அண்ணாமலையான் said...

@ Gulmohar : thank u for ur visit. more than this happen in real, but only a small part i hav wrote here..

நினைவுகளுடன் -நிகே- said...

இன்று தான் படித்தேன் .நல்ல பதிவு.
அருமையான கட்டுரை,
சிந்திக்க வைத்த ஒன்று,பகிர்வுக்கு நன்றி

அண்ணாமலையான் said...

@ நினைவுகளுடன் -நிகே : நன்றி, வருகைக்கும், கருத்துக்கும்...

Jaleela Kamal said...

வீடுவாங்க இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு தரும் அருமையான பதிவு.

வயத்த கட்டி வாயகட்டில் காணி நிலம் வாங்கனும் வரகிறவர்கள் தலையிலும் மொட்டை போட பல பேர் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அண்ணாமலையான் said...

@ Jaleela : thank u for ur presence & valuable comment.

அன்புடன் மலிக்கா said...

அருமையான பதிவு.
விழிப்புடன் இருங்க மக்கா..

அண்ணாமலையான் said...

:@ அன்புடன் மலிக்கா : நீங்களும் விழிப்புடன் இருங்க...

Sunitha said...

Hopefully you are buying that place or something... have fun:)

அண்ணாமலையான் said...

@ Nostalgia : thank u . i dnt hav enough mny to loss.

karthickeyan said...

அருமையான பதிவு. வாழ்த்துகள் ...!

செந்தமிழ் செல்வி said...

சமீபமாக தொலைக்காட்சியில், பதிந்த பத்திரங்களே போலின்னு செய்தியைப் பார்த்த போது என் மனதிலும் ஆவேசம் எழுந்தது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
நாங்கள் இடம் தேடும் போதும் இப்படி ஒரு அனுபவம் நேர்ந்தது. மயிரிழையில் தப்பினோம். சில் நாட்களிலேயே ஏமாந்த ஒருவரின் குமுறலைக் கேட்கவே கஷ்டமாக இருந்தது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கணும்.
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

@ செந்தமிழ் செல்வி : நீங்க தப்பிச்சிட்டீங்க. ஆனா பாவம் பல பேர்.. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

vanathy said...

Well written!(wow! 153 comments)and very interesting to read.

ரிஷபன் said...

அனல் பறக்கிறது.. கிராமத்திற்கு ஒவ்வொரு முறை போய்த் திரும்பும்போதும் வரும் வழியெல்லாம் எல்லைக்கல் நட்டு விவசாய பூமி தன் முகம் மாற்றிக் கொள்வதைப் பார்க்கும்போது மனசு வலிக்கும். இந்த முடிவுக்கு அவர்கள் ஏன் தள்ளப்படுகிறார்கள்.. இந்த அரசியல்வாதிகள் கைகளிலிருந்து அடுத்த சுதந்திரம் எப்போது.. கேள்விகள்????

andal said...

வந்தாச்சு ஒகெவா, பதிவு சூப்பர். ரியல் எஸ்டேட் பற்றிய ரியலான பதிவு

அண்ணாமலையான் said...

@ vanathy : thank u for ur presence & leave a comment.

அண்ணாமலையான் said...

@ ரிஷபன் : பதிலும் நம்மகிட்டதான் இருக்குது.. யார் சொல்றதுன்னு எல்லாரும் யோசிக்கறோம்...

அண்ணாமலையான் said...

@ andal : டபுள் ஓகே. ஒரே தடவ இல்லாம ஒவ்வொரு தடவயும் வாங்க.. எங்க இன்னொரு முறை ஓகே சொல்லுங்க....

இலா said...

அண்ணாமலையான் சார்!!! அருமையா இருக்கு.. எனக்கு காமெடியா ஆனா கருத்து கந்தையா மாதிரி சொல்லும் எழுத்து நடை பிடிக்கும்.. மீண்டும் வருவேன்... சமீபத்தில சென்னையில் பிளாட் வாங்கலாம்ன்னு போனா.. நாங்க நிலம் மட்டும் தான் எழுதுவோம்ன்னு சொன்ன பிட்டுக்கு பயந்து கிராமத்தில 2 ஏக்கரா வாங்க முடிவு செய்தாச்சு... எதுக்கு வம்புன்னு.... யாருமே ஒரு வக்கீல் கிட்ட போயி செக் பண்ண மாட்டாங்களா???

பத்மா said...

நல்ல பதிவு .
பத்மா

அண்ணாமலையான் said...

@ இலா : நன்றி உங்க வருகைக்கும் கருத்துக்கும்

Unknown said...

Sir appadiye oruthar unmayaga vithu, adhai oruthar unmayagave vanginalum, patthiram poliyaga pochepa!!!. Naadu urupadarathukku vazhiye illai sir.

Natarajan

சிங்கக்குட்டி said...

நல்ல நகைச்சுவை நடையுடன் ஆழமான கருத்து.

அண்ணாமலையான் said...

@ சிங்கக்குட்டி : நன்றி..

அன்பரசன் said...

நல்ல உபயோகமான பதிவு

அண்ணாமலையான் said...

@ அன்பரசன் : நன்றி உங்க கருத்துக்கு..

Anonymous said...

Hi, thanks a lot for your comment in my blog. You have an impressive and thought provoking blog.

Gita Jaishankar said...

Nalla ezuthi irukenga...kandippa yosikka vendiya vishayam...good and thoughtful post!

அண்ணாமலையான் said...

@ Gita : மிக்க நன்றி

CS. Mohan Kumar said...

தங்களின் மதிப்பிற்குரிய நூறாவது நானாக்கும்; இது பற்றி நீங்கள் சொல்லாட்டி நான் follower -லிருந்து resign பண்ணிடுவேன் :))(யப்பா Professor-ஐயே மிரட்டற அளவு தைரியமா??)

அண்ணாமலையான் said...

@ மோகன் குமார் : ரொம்ப சந்தோஷம் மோகன் குமார். really am proud for having 100 followers. i thank u and all others.. each and every followers are important to me..am very very happy....

Sakthi said...

என்னங்க வீடு புகுந்து, ஓட்ட பிரிச்சி, பீரோவ ஒடச்சி திருடுனாத்தான் திருட்டா?

நல்ல கேளுங்க நாக்க புடுங்குற மாதிரி

அண்ணாமலையான் said...

@ சக்தியின் மனம் : தொடர்ந்து கேப்போம்...

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

சுவாரஸ்யமான முறையில் எழுதப்பட்ட உபயோகமான பதிவு

கலக்கல் தொடரட்டும்

வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

@ ஜோ.சம்யுக்தா கீர்த்தி : வாங்க வாங்க. உங்க கருத்துக்கு நன்றி... தொடர்ந்து வாங்க...

பத்மநாபன் said...

வணக்கம் ...
சமுகத்தில் புற்று நோயாக பரவி விரவி வரும் ஒரு பிரச்சினையை அழுத்தமாக பதித்து உள்ளீர்கள்.
நீங்கள் எழுதி பல நாட்கள் ஆகியும் , வாரங்களாக , மாதங்களாக தொடர்ந்து வரும் பின்னூட்டம் அதை நீருபிக்கிறது ..
வாழ்த்துக்கள் ...
( இவ்வளவு பரபரப்பான சுழலிலும் ( 104 ++ தொடர்வோர்கள் ... பின்னூட்டங்கள் ) என் 1+ வலைப்பூவிற்கு வந்து ஊக்களித்தமைக்கு
நன்றி )

அண்ணாமலையான் said...

@ பத்மநாபன் : வாங்க சார்.. நாட்ல அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுருக்காங்க,, அதான் .. வேறொன்னுமில்ல.. உங்க கருத்துக்கு நன்றி.. தொடர்ந்து வாங்க...

ஜீனோ said...

ஆத்தீ...இம்பூட்டு கமெண்ட்டையும் படிச்சு முடிக்கவே ஜீனோக்கு ஒரு மாசம் ஆயிடும் போல கீதே..அண்ணே, உங்கள மாதிரி பெரிய ஆளுங்க இந்த பொழுதுபோக்கியின் ப்ளாகுக்கு வந்ததுக்கு சந்தோஷம்!!

கனமான மேட்டரா சொல்லிருக்கீங்க..ஜீனோ பொறுமையா படித்து பயன்பெறும். நன்றி!

Unknown said...

நல்ல பதிவு.. அனைவரும் சிந்தித்து செயல்படவேண்டிய நல்ல விசயம்...

அண்ணாமலையான் said...

@ ஜீனோ : ha ha ha நல்லா நிதானமா படிச்சுக்க ஜீனோ.. அப்புறம், பெரிய ஆளு, சின்ன ஆளுலாம் இல்ல, எல்லாரும் ஒன்னுதான்.. சரியா?

அண்ணாமலையான் said...

@ Rebacca : அதுக்காகத்தான் எழுதனது.. சிந்திச்சா சந்தோஷம்...

பழமைபேசி said...

மூச்சு விடமாப் படிச்சேன்... தமிலீசுல இவ்ளோ ஓட்டு வாங்கினது நீங்களாதான் இருக்கும்!

அண்ணாமலையான் said...

@ பழமைபேசி : வாங்க பாஸ், உங்க வருகைக்கு நன்றி. எல்லாம் உங்கள மாதிரி நண்பர்கள் போட்டதுதான்....

Nathanjagk said...

Superb..! I liked ur witty writing very much!! All the best!

சத்ரியன் said...

அண்ணா...... மலைச்சி போயிட்டேன்.

நையாண்டியுமா நக்கலுமா... கொண்டு போயி... தாயைக்காக்கும் சூக்குமத்தை அற்புதமா சொல்லியிருக்கீங்க.

அண்ணாமலையான் said...

@ ஜெகநாதன் : thank u very much for ur presence and comment..

அண்ணாமலையான் said...

@ சத்ரியன் : ரொம்ப நன்றி தோழா..

அன்புடன் மலிக்கா said...

என்னாச்சொன்னாலும் ஏமாருகிறவக ஏமந்துகிட்டேதான் இருப்பாக இல்ல அண்ணாச்சி..

நல்ல கட்டுரை அண்ணாமலையாரே..

அண்ணாமலையான் said...

@ அன்புடன் மலிக்கா : நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புடன் அண்ணாமலையானுக்கு,

படைப்புக்கள் அனைத்தும் அருமை... மென்மேலும் படைத்திட வாழ்த்துகள்.

இவன்,
தஞ்சை.வாசன்

அண்ணாமலையான் said...

@ தஞ்சை.ஸ்ரீ.வாசன் : வாங்க ஸ்ரீ.வாசன், உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

ஜெய்லானி said...

இந்த பிரச்சனை நகரத்தை ஒட்டி இருந்தது. இப்போது எல்லா ஊர்களிலும் ஆரம்பித்துவிட்டது. அதீத விளம்பரமும் மக்களின் பேராசையும் தான் காரணம்.

அண்ணாமலையான் said...

@jailani : பாருங்க பிரபல காமெடிக்கு நேர்ந்த கதிய...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

போட்டியும், பொறாமையும், கூட இருந்தே குழி பறிக்கும் எண்ணங்களும் மற்றும் பலவும் காலத்தினால் மாறி மனிதனை முற்றிலும் சீரழிப்பதற்கு மேலும் மேலும் உதாரணங்களாய் இன்றைய பல நிகழ்வுகள் நம்மோடு.

ILLUMINATI said...

தல!நாங்க இருக்குறது சென்னைல........
தளபதி வாழ்க.........

அண்ணாமலையான் said...

@ ILLUMINATI : அப்ப கட்டம் கட்ன ஆளுங்க..

«Oldest ‹Older   1 – 200 of 222   Newer› Newest»

Post a Comment