பொன்னு வெளஞ்ச பூமி..!


வணக்கம் நன்பர்களே.. எல்லாரும் நல்லா ஜாலியா கரும்பெல்லாம் கடிச்சு, பொங்கலெல்லாம் குடிச்சு (நிறய தங்கமனி பொங்கல் வச்சா அப்டிதான் இருக்கும்னு ஒரு கேள்வி ஞானம்தான்) பொங்கல கொண்டாடியிருப்பீங்க. இலவச வேட்டி, சேலை,  ரேஷன்ல பொங்கல் மஞ்சப்பை கொடுத்ததுலாம் போய் இப்ப நாட்டுலருக்கற ஏழைக்கெல்லாம் இலவசமா கான்க்ரீட் வீட்டயே கட்டித்தர போறாங்களாம் கேள்விப்பட்டீங்களா?  இவ்வளவு நடந்தும் இன்னும் ஒரு பய பாராட்டு விழா நடத்த தேதி கேட்டு வரலியே..? ம்ம்.. என்ன செய்யறது? சோற்றாலடித்த பிண்டம் தமிழண்ட்ட என்னத்த எதிர்பாக்கறது?  “அட, ஏன் தலைவரே, இவனுவளுக்கு இவ்வளவு செலவு? எலக்‌ஷன் டயத்துல எதயாவது உட்டு கடாசுனா ஓட்ட குத்து குத்துனு குத்த மாட்டானா இந்த மறத்தமிழன்”னு மந்திரியா இருக்கறவன், மந்திரிக்கு மவனா பொறந்தவன்லாம் டீலா/நோ டீலா?ங்கற மாதிரி கேள்வி மேல கேள்வியா கேட்டாலும் ஓய்வறியா உலகன், ஒத்த உண்னாவிரததுல உலகமைதி ஏற்படுத்தன மாமன்னன் உளியோட ஓசையா இந்த திட்டத்த ‘டனால்’னு (ஆமா, உளியோட ஓசை “புஸ்ஸுல்ல?!!”) அறிவிச்சு கட்சி காண்ட்ராக்டரெல்லாம் புல்லரிக்க வச்சுட்டாரு.. சரி அது கிடக்கட்டும், அதுக்குனு   நேரம் வரும் போது  பாக்கலாம்...

நாட்டுல அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்யுறவங்க மற்றும் தனியார் ஊழியர்கள்னு மூனே பிரிவுதான் (கூலிகள்/அன்னாடங்காய்ச்சிகள், தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகள் இதுல இல்ல). இதுல அரசு ஊழியர்களுக்கு சமீபத்துல அடிச்ச ஜாக்பாட்ல (பொது மக்கள் அப்டித்தான் சொல்றாங்க)  கனிசமான பேரு முதலீடு செஞ்ச இடம் எது தெரியுமா? நிலம்தான்.  ஏன்னா சொற்ப இடம்னாலும் சொந்த இடமா இருக்கனுமாம். (ங்கொய்யால எவண்டா சொன்னது?)  கட்டிங்க கரெக்டிங்கா போடற ஆளுங்க நடமாடற டாஸ்மாக்ல சம்பள உயர்வ கொண்டாட போனா அங்கயும் உற்ற தோழன், “நம்ம மாடசாமி முக்கா கிரவுண்ட் வாங்கிட்டானாம் தெரியுமா?னு” காலி வயித்துல கட்டிங் ஊத்துனா மாதிரி உசுப்பி வுடுவான்..  அட நாமளும் எதாவது ஒரு பிளாட்டோ இல்ல அடுக்கு மாடி குடியிருப்புல ஒரு வீடோ வாங்கி போட்டா பின்னாடி நிம்மதியாயிருக்கலாமேனு வூட்ல போய் படுப்போம்,  இது எப்டித்தான் அந்த புரோக்கருக்கு தெரியுமோ காலைல டான்னு ஏழு மணிக்கெல்லாம், “வணக்கம்ணே, நம்ம வூட்டாண்டயே 30X60ல ஒரு இடம சீப்பா வருதுன்னே, வாங்கிப்போட்டா மூனே வருஷத்துல போட்ட காசு டபுள் ஆயிடும்னே”னு அடி வயித்துலருந்து ஆசைய  எழுப்புவான்.. அது எப்டி மூனு வருஷத்துல டபுள் ஆவுன்னு நாம ஆனு வாயத் தொறந்து யோசிச்சிட்டிருக்கும் போதே,  வேளைக்கு மூனு லிட்டர் கறக்கும்னு சொல்லி,  காள மாட்ட கடவாப் பல்லுல கட்டிட்டு பூடுவானுவ... இப்பத்தான் சனி உங்கள மூனாவது வீட்லருந்து முறைச்சி பாக்க ஆரம்பிப்பான்..

இது என்னாடாது? அசையா சொத்தா வாங்கிப் போடலாம்னா டபுள், ட்ரிபிள்னு புதுக்கரடி மேய்க்கறானே புரோக்கர்!?. சரி யாராவது விஷயம் தெரிஞ்ச ப்ரண்டுட்ட கேக்கலாம்னு போனா அவனுங்க, “என்னது? நீ இன்னும் ஒரு கிரவுண்ட் கூட வாங்கலியான்னு?” என்னமோ ஏற்கனவே மைசூர் பேலஸ்ஸ மாமனாரோட ஷேர் போட்டு  வாங்குன ரேஞ்சுக்கு நக்கல் உடறானுங்க..  நம்ம மாமனார், மச்சான், சகலன் மாதிரி சொந்தக்காரங்க கிட்ட கன்சல்ட் பன்னா (என்னது? அப்பா, அண்னன், தம்பி கிட்டயா? கேக்கலாம் தான். ஆனா ஐடியா மட்டும் தான் கிடைக்கும் தம்பிடி கிடைக்காது. ஓகேவா?)  கிடைக்கற சப்போர்ட் இருக்கே.. அடடா ஒத்தயாவே குதுப்மினார தூக்கிட்டு தெலுங்கானாவ ரெண்டு ரவுண்டு வர அளவுக்கிருக்கும்...


அப்புறமென்ன? அடுத்த கட்ட  வேலய ஜரூரா ஆரம்பிக்க வேண்டியதுதான். எடைக்கு வாங்குன பேப்பர்லருந்து எட்டனா குடுத்து வாங்குன பேப்பர் வரைக்கும் எங்கலாம் இடம் விக்கறாங்க, என்ன விலை, ஆஃபர் எதுனாருக்கா (அதாங்க, தங்க காசு, வெள்ளி குத்து விளக்கு, பத்திர பதிவு இலவசம், சைட் பாக்க போய் வர டாக்ஸி இலவசம் இத்யாதிலாம்) மாதிரி விளம்பரங்கள ப்ரூப் ரீடர விட அதிகமா, சாதா கண்ண பூதகண்ணா மாத்தி தேடனதுல ஹரி ஓம்னு மொத லாவம் பாக்கறது கண் டாக்டர்தான்.



இந்த இடத்துல பாருங்க, போன பாரா வரைக்கும் மாதவன் ரேஞ்சுக்கு இருந்த ஆசாமிலாம் இப்ப மிடில் கிளாஸ் மாதவனா மாறியிருப்பாங்க..  போன வாரம் வரைக்கும் சண்டேன்னா ரெண்டுனு(ச்சீய்!?) இருந்த குடும்ப வாழ்க்கைல அடுத்ததா மன் வுழும், ஏன்னா அன்னிக்குத்தான் சைட் பாக்க போனும்..  அவனுங்க வண்டிலதான் சைட் பாக்க போறோன்னாலும் அந்த தூரம் இருக்கே அடடா என்ன சொல்றது? மரகத லிங்கத்த திருடுனவன் கூட அத பதுக்க இவ்வளவு தூரம் அலைஞ்சிருக்க மாட்டான் போங்க.. எதோ ஒரு இடத்துல வண்டி நிக்க, கீழே இறங்கி பாத்தா அடுத்த அதிர்ச்சி! எப்பவோ பள்ளிக்கூட பாடத்துல படிச்ச பள்ளத்தாக்கு மாதிரி ஒரு இடம். இந்த இடமா பிளாட்டு? சேச்சே, ட்ரைவர் எல்லாரும் ஒன்னுக்கிருக்க நிறுத்தியிருக்கார் போலன்னு நமக்கு நாமே மனச தேத்திக்கும் போது, பொக்ரான்ல போட்டது போவ மீதியிருக்கற குண்டுல ஒன்ன போடுவார்  புரோக்கர், “இதுதான் நீங்க எல்லாரும் வாங்கப் போற “அற்புதமான’ இடம் நல்லா பாத்துக்குங்க”.??  அவ்ளோதாங்க வேன்ல வந்த முப்பத்துமூனு பேர்ல முப்பது பேர் “முன்னாடி இருக்கறது எனக்கு, முக்குல தொங்கறது உனக்குனு” அம்மோனியா ப்ரிண்ட்லயே பங்கு பிரிக்க ஆரம்பிச்சுடுவானுங்க... இதென்னடாது பள்ளத்த பங்கு பிரிக்க இப்டி அடிச்சிக்கிறானுங்கன்னு, “ஏண்டாப்பா, இவ்ளோ பெரிய  பள்ளத்த வாங்க இப்டி போட்டா போட்டி போடறீங்களே, மழை காலத்துல என்ன பன்னுவீங்க?னு கேட்டா, ஒருத்தன் சொல்றான், “நாங்கெல்லாம் ரோடு மட்டத்த விட மூனு அடி உயரமாத்தான் வீடு கட்டுவோம், தண்ணி உள்ள வராது”, சரிடா, தண்ணி உள்ள வராது, ஆனா, நீ வெளிய வரனுமே அதுக்கு என்ன பன்னுவ? “அதெல்லாம் மழை பேஞ்சா பாப்போம்” , என்ன எழவுடா இது? நாம லூஸா? இல்ல இவனுவ எல்லாரும் லூஸானு? கொழப்பத்துல ஒரு முடிவுக்கு வர முடியாம வழக்கம்போல ஃபைல ஹோம் மினிஸ்டர்ட்ட(தங்கமனி) அனுப்புனா, ரெண்டு காதும் ரொம்பி, சட்டப்பை, பேண்ட்பை அப்புறம் கைல வச்சுருக்கற மஞ்சப்பை  வழியற வரை அர்ச்சனை பன்னிட்டு அதுக்கப்புறமும் “ஹய்யோ,   வெவரம் இல்லாத ஆள்கிட்ட எங்கப்பாவும் நானும் இப்டி தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமேன்னு” மூக்க சிந்தி நம்ம முழுக்கை சட்டைல தொடச்சி, தெயவ மச்சான தொனக்கி அனுப்பி (தனியா போனா வெவரம் பத்தாதாம்..!) பணம் கட்டிட்டு வர சொல்லுவாங்க..

பார்த்திபன், வடிவேலுவ சாட்சி கையெழுத்துக்கு கூட்டிட்டு போற மாதிரி நம்ம தெ.மச்சான் சைட் ஆபீசுக்கு கூட்டிட்டு போவான். கோழி திருடுறவன்  ஈர கோனியோட தயாரா இருக்கறா மாதிரி, சைட் ஆபீசுல புரொக்கரும், ஓனரும் ரெடியா இருப்பாங்க.. பணம் கை மாறுனதும், “அமாவசைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கலாம் தம்பி”னு சொல்லி எலுமிச்சை சூஸ் குடுத்து, கிருதா டூ கிருதா சிரிச்சி வழியனுப்புவாங்க..

அப்பாடா நாமளும் ஒரு இடத்த கிட்டத்தட்ட வாங்கியாச்சு, அமாவாசை என்னிக்குனு காலண்டர கிழிச்சி காத்துக்கிட்டிருக்கும் போதுதான் தரித்திரம் தபால்ல வந்தா இடி ஏரோப்ளேன்ல வருமான்ற மாதிரி புரோக்கரும், ஓனரும் ஒரேடியா தலை மறைவாகிட்ட விஷயம் டிவில ஓடும். அடப்பாவிகளா!, இதே டிவில தாண்டா ஒரு கை மண்னுண்னாலும் இவண்ட்ட தான் வாங்கனும்னு வழுக்க தலயன வச்சி விளம்பரமா கொடுத்தீங்க? (மண்னு வாங்க சொல்லி பல பேர் வாழ்க்கைல மண்னள்ளி போட்டவர் இப்ப கம்பி வாங்க சொல்றார் மக்களே மைண்ட்ல வச்சுக்குங்க!) இப்ப யாரோ மாதிரி செய்தி போடறீங்களே? உங்களுக்கு அப்பவே தெரியாதா? விளம்பர காசெல்லாம் வாங்கிட்டீங்களாடா? இப்ப என்னடா செய்றது? நகையெல்லாம் வேற வித்தாச்சு..?!!!! டிவிய பாத்தா சொறி, சிரங்கு படைய தவிர அத்தன படையும் அவனுவள தீவிரமா தேடறதா பக்கத்தூட்டு ஆயா மாதிரி இருக்கற ஒரு பொம்பள  பேட்டி கொடுக்குது. ஏம்மா உன்னா பாத்தாலே பாவமா இருக்கு.. நெசமாலுமே நீ அவனுவள கண்டு பிடிச்சுடுவியா? அப்டியே பிடிச்சாலும் எங்க காசெல்லாம் திரும்ப கிடைக்குமா? அய்யோ பணம் போச்சே... யார் கிட்ட கேக்கறது?

மறுபடியும் தங்கமனி அர்ச்சனையோட மூ/சிந்தி மு.சட்டைல தொடச்சி மீண்டும் தெ.மச்சானை கூட அனுப்புவாங்க சைட் ஆபீசுக்கு.  அத்த பொண்னு மாதிரி அன்பா சிரிச்சி, மாமன் பொண்னு மாதிரி முறையா சூஸ்லாம் கொடுத்து கவனிச்சு அனுப்புன சைட் ஆபீஸ்ல இப்ப சைனா பூட்டுதான் நம்மள வரவேற்கும்.  ஆனா, ஒரே ஆறுதல் என்னன்னா, நம்மள மாதிரியெ நெறய இனா வானாங்க மலங்க மலங்க, எந்த டிவில பேட்டி எடுப்பாங்களோன்னு முழிச்சிக்கிட்டு நிக்கறதுதான்... ஒரு வழியா கைல இருக்கற சேவல் மார்க் ஃபைல்லேருந்து ஜெராக்ஸ் காப்பிய வச்சி கம்ப்ளெய்ண்ட் கொடுத்துட்டு வீட்டுக்கு போவ வேண்டியதுதான்..

ஆச்சி இன்னியோட ஆறு மாசம். ஒரு தகவலும் இல்ல. இப்பல்லாம் சண்டேனா நாலு! (இப்ப ச்சீய் இல்ல, சேச்சே?!   காசு போன சோகத்துல  கட்டிங்தான்!)


என்னங்க வீடு புகுந்து, ஓட்ட பிரிச்சி, பீரோவ ஒடச்சி திருடுனாத்தான் திருட்டா? இந்த மாதிரி ஏமாத்தி பொழக்கிறதுக்கு பேரும் திருட்டுதாங்க.. என்னா நாட்டுல நாலஞ்சு பேரு திருடனா உலாத்துனா, இவனுக பல பேர்ல நாடெங்கும் பரவி கெடக்கானுக..  நாம திருடன விட இவனுங்க கிட்ட தான் அதிக எச்சரிக்கையா இருக்கனும்.. திருட்டு ஒரு நாட்டோட பொருளாதாரத்த பாதிச்சுதுனா, விவசாய பூமிய இந்த மாதிரி திருடறது, எந்த நாடாருந்தாலும், அதோட முதுகெலும்பையே உடைக்கிறதுக்கு சமம். தயவு செய்து அத எல்லாரும் நல்லா புரிஞ்சுக்குங்க...


நல்ல வேளை நாங்கெல்லாம் இந்த மாதிரி மோசடிலேருந்து தப்பிச்சிட்டோம், நாங்க வாங்குன இடம் பத்திர பதிவெல்லாம் நல்ல படியா முடிஞ்சுடுச்சுனு நெனக்கறீங்களா? அங்கதான் நீங்க தப்பு பன்றீங்க. ஆமாங்க இன்னிய தேதிக்கு இந்த புண்ணிய பூமில இருக்கற விவசாய நிலம், பொறம்போக்குல்லாம் அவன், இவன்னு அடயாளம் காட்ட முடியாத ஆளெல்லாம் கட்டம் கட்டி சகட்டு மேனிக்கு வித்துக்கிட்டு இருக்கானுங்க.  இப்டி விவசாய நிலத்த  மொத்தமா அழிச்சி நம்ம தாய் நாட்டுக்கு மாபெரும் உணவுப் பஞ்சத்த எதிர் காலத்துல நிச்சயமா உருவாக்கறதுக்கு தீவிரமா ஈடுபட்டுக்கிட்டுருக்கற  ஒரு கும்பலுக்கு, அவங்க வித்த இடத்த வாங்குனதால நீங்களும் மறைமுக உதவியாளரா ஆயிடறீங்க..


இப்ப ஹெய்டி(HAITI)ல நடந்த பூகம்பத்த பாத்தீங்களா? அதுல அந்நாட்டு அதிபரே, மாளிகை இடிஞ்சு தெருவுல நின்னாரு.. அதனால எல்லாரும் அவிங்க வாங்குனாங்க, இவுக விக்கறாங்கன்னு வூட்ல இருக்கற நகை நட்டெல்லாம் வித்து, சொத்து வாங்கறதா நெனச்சி தவறுகளுக்கு துனை போகாதிங்க, நிம்மதிய தொலச்சி தெருவுல நிக்காதீங்க. “உண்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம்னு”  கடைசியாத்தான் இடம் வருது..  இன்னும் நம்ம இந்தியாவுல தெருவுலேயே  பொறந்து, குடும்பம் நடத்தி. செத்து போற சணம் கோடியிருக்கு தெரியுமா? அதுக்காக என் காசுல நான் வாங்குறத நிறுத்த முடியுமான்னு கேக்காதிங்க.. அவசரப்படாதீங்கன்னுதான் சொல்றேன். ஏன்னா உங்க அவசரம்தான் (அப்டி அவசரம் இல்லன்னாலும் அவங்க உங்கள தூண்டுவாங்க) மோசடி கும்பலோட துருப்பு சீட்டு.  எங்கயாது வெளியூர் போனா பாருங்க, ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் என்ன இருக்குன்னு.. அநேக இடங்கள் திடீர் நகரா மாறியிருக்கும்..  இப்டி எல்லா இடத்தையும் நகரா மாத்தி பூமிய கான்க்ரீட் காடா மாத்தற போட்டியில நம்ம பங்கு இல்லாம இருக்கலாமே? ஏன்னா நாம் இப்ப தெருவுல இல்ல, நமக்கு எதோ ஒரு இடம் நிச்சயமா இருக்கு ஒண்டிக்க..! அவசரப்படாம நிதானமா இருந்தா அவங்கவங்களுக்கு தேவையான அழகான வீடு தானா கிடைக்கும்.  தோழர்களே... தாய் நாட்ட காக்கற ஒரு நல்ல விஷயம் நம்ம கிட்டேயிருந்து ஆரம்பிக்கட்டுமே... இந்த பொன்னு வெளஞ்ச பூமித்தாய  காப்பாத்தற முயற்சில உங்க பங்கும் இருக்கறது சந்தோஷமான விஷயம்தானே? இந்த பதிவுல சொன்ன விஷயத்துல உங்களுக்கு உடன் பாடு இருந்தா, நல்லா தெரிஞ்ச நாலு பேர்ட்ட  எடுத்து சொல்லுங்க.. சொல்லுவீங்கன்னு எதிர் பாக்கலாமா?













222 comments:

«Oldest   ‹Older   201 – 222 of 222   Newer›   Newest»
settaikkaran said...

அண்ணே! எளிமையான அமைப்பிலே ஒரு மூர்க்கத்தனமான விஷயத்தைப் பத்தி மனசுலே பதியுறா மாதிரி எழுதியிருக்கீங்க! இப்பவும் சதுர அடி 35 ரூபாய்னு மண்ணடியிலே மாருதி வேனை நிறுத்தி வச்சு, கலர் கலரா நோட்டீசு கொடுக்குறானுக! மக்கள்ஸ் வாங்கிட்டுப்போறாங்க! அப்புறமா, ஏமாந்திட்டு ஆளுக்குக் கையிலே ஒரு அட்டையை வச்சுக்கிட்டு அழுதுக்கிட்டே டிவியிலே போஸ் கொடுப்பாங்களேன்னு நினைச்சா பக்குன்னு இருக்குது.

அண்ணாமலையான் said...

@ சேட்டைக்காரன் : என்ன செய்யறது? அதயும் நாம பாப்போம்..

சுசி said...

நகைச்சுவையோட சூப்பரா சொல்லி இருக்கீங்க..

நல்ல பதிவு.

அண்ணாமலையான் said...

@ சுசி : வாங்க, கருத்துக்கு நன்றி

தக்குடு said...

ஆபிஸ்ல சிரிச்சு சிரிச்சு வயத்துவலி வந்துவிட்டது அண்ணாமலையாரே! ஒரு வரிக்கு சிரிச்சு முடிக்கருதுக்குள்ளையே அடுத்த வரி சும்மா தாமிரபரணி ஆறு மாதிரி பாய்ஞ்சு வருது......:) LOL தல! வணக்கம் வச்சுக்கரேன் தல!

அண்ணாமலையான் said...

@ தக்குடுபாண்டி : நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் பாண்டியாரே...

YUVARAJ S said...

good post. keep writing!

you can reach me at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

happy blogging

இலா said...

ah !!! Double Century comments..Nice work Professor!!

தாராபுரத்தான் said...

அவன் பாட்டுக்கு விவசாயம் பண்ணி காலத்தை கடத்தி கொண்டு இருப்பவனை பததுலட்சம் ,இருபதுலட்சம் என உசுப்பேத்தி பூமி யை பு்டுங்கி கூறு போட்டு கோடி கணக்கிலே லாபம் பார்த்து........ஒண்னும் சொல்ல முடியில்லை அப்பனு. மேலும் மேலும் இதுகுறித்து வாரம் ஒருவர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.அப்பவாவது விழிப்புணர்வு ஏற்படுதா பார்ப்போம்.

அண்ணாமலையான் said...

@தாராபுரத்தான் : நீங்க சொல்றது நெசம்தான்.. உங்க வருகைக்கு நன்றி

ambi said...

சரளமா என்னமா எழுதி இருக்கீங்க, இப்படி சிரிச்சு எவ்ளோ நாளாச்சு. :)0

கடைசில சொல்ல வந்த விஷயத்தை மறக்காம ரெம்ப அழகா சொல்லி புட்டீங்க. மக்களின் அவசரம் தான் ரியல் எஸ்டேட்காரர்களின் ஆயுதம்.

அண்ணாமலையான் said...

@ ambi : வாங்க அம்பி, உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

Ramesh said...

நானும் ஒரு இடம் வாங்கலாம்னு பார்த்துட்டு இருக்கேன் கொஞ்சம் யோசிக்க வச்சிட்டீங்க.

அண்ணாமலையான் said...

யோசிச்சே செய்யுங்க ரமேஷ்

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பதிவு நண்பரே .இதுவரை அறியாத பல விசயங்கள் அறிந்ததுபோல் ஒரு உணர்வு . மிகவும் மகிழ்ச்சி

அண்ணாமலையான் said...

வாங்க சங்கர் உங்க வருகைக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

நண்பரே சரியான நெத்தி அடி சரியா சொல்லி இருக்கீங்க . நான் உங்க பக்கம்தான் . பகிர்வுக்கு நன்றி !

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷம் ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫

பா.வேல்முருகன் said...

//சரிடா, தண்ணி உள்ள வராது, ஆனா, நீ வெளிய வரனுமே அதுக்கு என்ன பன்னுவ?//

சூப்பர்.

நாங்க எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். ஒரு நல்ல இடம் இருந்தா சொல்லுங்களேன்.

அண்ணாமலையான் said...

என்ன விட உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி...

«Oldest ‹Older   201 – 222 of 222   Newer› Newest»

Post a Comment