நீங்களும் ஹீரோதான்..

வணக்கம் தோழர்களே.  எல்லாரும் நல்லாருக்கீங்களா? நீங்க யாராவது பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ,  ஸ்ரீலஸ்ரீ இத்யாதி விருது எதாவது, நீங்க அறிஞ்சோ அறியாமலோ, தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச எதுக்காவது (உதா: தலைவன்(ர்) வாழ்கன்னு கத்திருந்தா கூட போதும்) இந்த வருஷம் வாங்கிருக்கீங்களா? அப்டி யாராவது ‘வாங்கி’யிருந்தா சொல்லுங்க, சந்தோஷத்த பகிர்ந்துக்கலாம். ஏன்னா, இந்த உலகத்துல இப்பலாம் எத வாங்கறதுனாலும் ரொம்ப ஈஸி, காசே இல்லன்னாலும் கையெழுத்துக்கு தருவாங்க...  ஆமாங்க, பொண்டாட்டியே கையெழுத்துல சேந்துக்கறா, பிரிஞ்சுடறா..!!? (யார் கூட வேனுன்னாலும், சம்மந்த பட்டவங்களும், ஜட்ஜும் போடற கையெழுத்தால!) அது மட்டுமில்லேங்க, உங்களை எப்படி எதாவது வாங்க வைக்கறதுங்கற வித்தைல  எல்லா யாவரிங்களும் (அரசியல் யாவாரம் உட்பட) தலகீழா நின்னு தண்ணி குடிச்சவங்க.. எப்டி இருந்தாலும் கடேசில ஏமாளி நீங்கதான்..

இன்னிய நெலமைக்கி நீங்க கடைத்தெருவுக்கு குடும்பத்தோட போனா திரும்பி வரும் போது, நீங்க பல முக்கியமான நேரம் கவனமா இருந்த, உங்க அளவான குடும்பத்துல ஒரு டிக்கெட் கூடியிருந்தா கூட ஆச்சரியமில்லே.. அந்தளவுக்கு உங்கள ஏமாத்தி எதயாவது உங்கள்ட்ட வித்துர்றதுதான் அவங்க சாமர்த்தியம்.  ஒரு உதாரணம் பாருங்க, “யானை வாங்குனா பூனை ஃப்ரீ”, அப்டின்னு ஒரு விளம்பரம் வந்தா, கூட்டத்த கட்டுபடுத்த மிலிட்டரி தான் வரனும்.. ஏன்னா, யானைக்கும் பூனைக்கும் என்ன சம்மந்தம்?, வாங்குனா என்ன பிரயோஜனம்? அப்டின்னு யாரும் யோசிக்கறதுல்ல.. ஃப்ரீ அவ்ளோதான்! வுழுந்தடிச்சி ஓடி வாங்கிட வேண்டியது.. பாக்கிய அப்புறம் பாத்துக்கலாம்னு.. அப்புறம் பாத்தாதான் தெரியும்,  யான கக்கா போனா கூட அத பக்காவா க்ளீன் பன்ற தளவாடமெல்லாம் அதே கம்பெனிலதான் வாங்கி தொலையனும்னு.. அதும் அவங்க சொல்ற விலைக்கி.. இப்டி நீங்க நொந்துகிட்டிருக்கும் போதுதான் அந்த ஃப்ரீ பூனை மியாவ் மியாவ்ன்னு (ஸ்ரேயாவ நெனைக்காதீங்க) இடுப்புல பொறாண்டும்.. என்னன்னு பாத்தா, சாப்புட எலியும், சைட் டிரிங்ஸ்சா பாலும் கேக்கும். அதயும் பாத்தா அந்த கம்பெனிதான் தயாரிக்கும்...  “எப்பவும் குடிங்க ஏழரைப்பால்”னு அதுக்கு விளம்பரம் வேற..! சரி பால்தானேன்னு வாங்க போனா அங்கதான் உங்களுக்கு ஏழரை ஆரம்பிக்கும்....  பால் கம்பெனில வாயெல்லாம் பல்லா, ரெகுலரா 6 வருஷத்துக்கு காண்ட்ராக்ட் போட்டாத்தான் வாங்கலாம்னு தலயில கல்ல போட்டு  சொல்வாங்க.. (பூனை அத்தன வருஷம் இருக்குமா? இருந்தாலும் நம்மளோடயே இருக்குமா? அப்டியே இருந்தாலும் நாம இருப்போமா?) இத மாதிரி (வாங்கறப்ப வராத) சனியன் புடிச்ச சந்தேகம்லாம் இப்பத்தான் வரும்.

இன்னும் சில பேரு, 300 ரூவாய்க்கு 35000 பொருளுன்னு ஒரு நல்ல ஞாயித்துகிழமையா விளம்பரம் கொடுப்பான் (அதயும் இந்த பேப்பர் காரங்க இலவச இனைப்புல போட்டு நம்மள ஏமாத்துவாங்க)... நம்ம பொது ஜனம் எல்லா சாமானயும் எண்ணி வாங்க கூட நேரமில்லாம அடிச்சி புடிச்சி வாங்கிட்டு போவாங்க.. அப்புறம், செய்கூலி இல்ல, சேதாரம் இல்லன்னு தமுக்கடிச்சி சொல்றவங்க, சொல்லாம விடறது தரமும் இல்லங்கறதுதான்...  மேலும், சில ஓட்டல் காரங்க திருவிழா நடத்துவாங்க, புளி கொழம்பு காரம், புன்னாக்கு   வாரம் அப்டின்னு.. அங்கனயும் அடிதடிதான்.  சில இடத்துல 32 அடி தோசையும் 6 வாளி சாம்பாரும் ஐநூறே ரூவாதான்னு வாய்க்குள்ளயே ஆசைய அலய வுடுவாங்க.. ஏன், எதற்கு, எப்படின்னு எவன் சொன்னாலும் யோசிக்காத நம்ம மஹா ஜனம் எல்லா இடத்துலயும், காவல் துறையே வந்து கூட்டத்த கட்டுப்படுத்துனாலும்  அந்த கூட்டத்துல முட்டி மோதி வெற்றி வாகை சூடிடும்...

இப்பலாம் சினிமா போறதுன்னா கேக்கவே வானாம், தனியா போனா ஒரு நாள் சம்பளமும், குடும்பத்தோட போனா ஒரு வார சம்பளமும் நிச்சய காலி... கூடவே மருத்துவ செலவு வேற.. (தியேட்டர்ல விக்கற தின்பண்டங்கள்,  படத்தால வர தல வலி அப்புறம் இந்த ரசிக குஞ்சுகள் போடற கூச்சலால வர காது வலி எக்ஸ்ட்ரா..) இதில்லாம போற வர ரோடெல்லாம் இந்த மிக்ஸி வாங்குங்க, பைக் வாங்குங்க, முடிஞ்சா பரலோகத்துக்கு டிக்கெட் வாங்குங்கன்னு ஒரே விளம்பர பேனர் தொல்ல..

சரி, வீட்டுலயாவது நிம்மதியா இருக்கலாம்னா அங்கயும் டிவி வழியா வந்து. “இந்த மாத்திரய போடுங்க, ராத்ரி பூரா ஜோருங்க”னு. (ராத்ரி பூரா ஜோருனா காலயில? டர்ர்ருதானா?).  ஏன் இப்டி தொரத்தி தொரத்தி மக்கள வாங்கறதுக்கு தூண்டறாங்க? பொருளாதாரம் வளந்துடுச்சா? இல்லியே.. (இன்னும் 50%-60% சதவீத நம் மக்கள் நல்ல தண்ணிருக்கும், உணவுக்கும் நாயாதான் அலயுறாங்க) அப்புறம்? உலகத்துல அதிகளவு நுகர்வோர் இருக்கற நாடு நம்மளுது, அது மட்டுமில்ல, மிக பரந்த ஏரியாவுல அமைஞ்ச நாடுங்கறதால வித்தவன தேடுறது கஷ்டம், விற்பனைக்குப் பின்னான சேவைகளை பத்தியும் அதிகளவில் தெரியாதுங்கறதாலயும், உலகத்துல எங்க, எத தயாரிச்சாலும், அந்த குப்பைய கொட்டி காசாக்க முதல்ல நம்ம நாட்டத்தான் தேர்ந்தெடுக்கறாங்க..   பாருங்க பாதி ஜனத்தொகைக்கு ஒரு வேள சோத்துக்கே வழியில்லன்னு சர்வே சொன்னாலும், அம்பத்தஞ்சு கோடி செல் கனெக்‌ஷன்  வச்சுருக்கற நாடு நம்ம தாய் நாடுதான்.. ஏன்னா சோத்துக்கே வழியில்லன்னாலும் சூ வுக்கு போட சந்தன சோப்பு கேக்கற ஆளுங்கதான் நம்ம பயளுவ.

நம்மாளுங்க நெறய பேரு இன்னிக்கு கொறஞ்சது ஒரு நாளக்கி நூறு ரூவாயிலேருந்து(ஃப்ரீ) , ஆயிரம் ரூவாய்க்கும் மேல சம்பாதிக்கறாங்க. ஆனா அத எப்படி செலவு பன்றாங்க? யோசிச்சு பாத்தா பாதிக்கும் மேல வேஸ்ட்டா தான் இருக்கும்..  டிவி வச்சிருக்கவங்க, எல்சிடி டிவி, எல்ஈடி டிவி அப்டின்னு பல டிவிக்கள பெருமைக்கு வாங்கி சுவத்துல மாட்டுனாலும், அதுல வழக்கம் போல அண்ணன்-தம்பி டிவி கம்பெனியோட விளம்பரக்காரன் தான் வந்து வாஆஆஆடான்னு கத்தி எவனுமெ வராத தியேட்டருக்கு கூப்புடுவான்...  இத மறந்துட்டு, எல்லாரும் பட்ஜெட்ல  ஆஃபர், மந்திரி வார்த்தை சூப்பர்னு வருஷா வருஷம் ஏமாறது மட்டுமில்ல,  தொனக்கி நண்பர்களயும் இழுத்து கொல்லயில  விடுவாங்க... இத மாதிரி பல உதாரணம் சொல்லலாம்..

ஒரேயொரு வழில வருமானம் வாங்கிக்கிட்டு, நாம ஒவ்வொரு வருஷமும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூவாய்க்கி நம்ம இந்தியாவுல பிரமாதமான யாவாரம் பன்றோம். எல்லாம் நான், நீங்க  சேந்து செஞ்சது...  இப்டி எக்கச்சக்கமா கண்டது, கேட்டதையெல்லாம் வாங்கறோம், இன்னும் பல வழில நாம சம்பாதிக்கற பணத்த செலவு பன்றோம்.. பணத்த மட்டுமல்ல நேரத்தையும் கூட தான்.. எதெதுக்கோ காலத்தையும், காசையும் செலவழிக்கற நாம சுத்தமா மறந்துட்டது ஒன்னு இருக்கு. அது? அதுக்கு காரனமும் பணமும், மனசு மறத்து போனதும்தான்.......

நம்ம இந்தியாவுல கடேசி இனம் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கறவங்கதான்.. ஆனா அவங்களுக்கும் அடுத்து ஒரு இனம் அரசாங்க கணக்குலே வராம இருக்கு தெரியுமா? அவங்கதாங்க ஆதரவற்றோர், அநாதைகள், மன நலமில்லாமல் பெற்றோர், உறவினரால் கைவிடப்பட்டு தெருவில் அலைபவர்கள் மற்றும் மனசாட்சி இல்லாம கைவிடப்படும் முதியோர்கள். சின்ன சின்ன தளிர் குழந்தைகள், முதியோர்கள் இரண்டு வகையினரும் எதிர்பாக்குறது என்ன? காசோ, நல்ல சுவையான உணவோ, உடையோ இல்ல.. அன்பு... அன்பு ஒன்னுதான்... இன்னிக்கி ஆதரவற்றோர், அநாதைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அப்டிங்கற விஷயம் பெரிய அளவுல இருக்கறதுக்கு காரனம் நாம  பொறுப்பற்றதனமா இருக்கறதுதான்.. நம்ம எல்லாருமே ஏதோ ஒரு வகையில இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருக்கிறோம்...

அதெல்லாம் கிடையாது நான் எப்பவுமே மாச சம்பளத்துல 2% இந்த மாதிரி விஷயங்களுக்கு ஒதுக்கிடுறேன்னு சொல்றீங்களா? அப்டி நீங்க ஒதுக்கறத பதுக்கத்தான் பல பேரு ரெடியா இருக்காங்கன்னு ஞாபகம் வச்சுக்கங்க...  அப்டி நீங்க ஒதுக்கறது கூட டாக்ஸ் ஃப்ரீயானு உங்க சுயநலம் பாத்துதானே? அது மட்டுமில்லே கடைதெருவுலயோ, கார் நிக்கற சிக்னல்லயோ கடமைக்கு சில்லறையோ, ஒர்ரூவாயோ தூக்கி போட்டுட்டு தர்மம் தல காக்கும்னு நம்பிக்கிட்டு போறவங்களும் தப்புதான் பன்றீங்கன்னு புரிஞ்சுக்குங்க... ஏன்னா பிச்சை எடுக்கறதுக்குன்னு பல கொழந்தகள கடத்தறாங்கன்னு. கொழந்தகள இழந்த அந்த பெற்றோர்கள் பாவம் இல்லியா? இதெல்லாம் யோசிக்காம நம்ம தல தப்புனா போதுன்னு சில்லறயில புண்னியம் தேடுறோம் நாம..

இந்த முதியோர்கள் இருக்காங்களே அவங்க நெலம ரொம்ப மோசம்.. யாருமே இல்லாம இருக்கறவங்கதான் அநாதங்க, (யாரோ யாரோடயாவது சேந்தாத்தான் கொழந்த பொறக்கும், அப்புறம் எப்டி அநாத? பொறுப்ப தட்டிக் கழிச்சிட்டு போற மனிதம் செத்த பெற்றோர்கள் செய்யற வேல அது) ஆனா பாருங்க, எல்லாரும் இருந்தும் பாத்துக்கற பொறுமையும், அன்பும், கடமயும் மறந்துட்டு சில ஆயிரம் ரூவாய இல்லத்துல கட்டிட்டு பெற்றோர்கள தவிக்க விட்டுட்டு போறாங்களே, அவங்கள என்ன செய்யறது? அந்த அன்ப மறந்த வாரிசுகள நெனச்சே எவ்வளவோ பெரியவங்க உயிர விட்டுருக்காங்க..  ஏக்கமே உயிர கொல்லுங்கறதுக்கு சாட்சியா எத்தன உயிர்  போயிருக்கு தெரியுமா?

குப்ப தொட்டியிலே போட்ட கொழந்தங்க, திருடிட்டு வந்து பிச்ச எடுக்க வைக்கற புள்ளங்கனு, இப்டி லட்சக்கணக்கான இளம் தளிர்கள் வெயில்லயும், மழையிலயும் தெருவுல வெறும் சில்லறை காசுக்காக திரியறாங்கன்னு யாராவது நெனச்சி பாத்திருக்கீங்களா?  நம்ம வூட்டு புள்ளங்களுக்கு நம்மளால முடிஞ்ச அளவுக்கு கேட்டது, கேக்காததுன்னு வாங்கி கொடுத்து அழகு பாக்குற நாம, இந்த மாதிரி தெருவுல திரியற கொழந்தகள பத்தி ஈஸியா எடுத்துகிட்டு போறோமே ஏன்?

“யோவ் உனக்கு வேற வேலயில்ல, இதே மாதிரி எல்லா விஷயத்துலயும் எதாவது கொற கண்டு புடிச்சுட்டே இரு, அவ அவனுக்கு ஆயிரம் வேலயிருக்கு, நாங்க முடிஞ்ச அளவுக்கு திருப்பதிக்கு வருஷா வருஷம் உண்டியல்ல போட்டுர்றோம்”  அப்டின்னு சட்னு சொல்லிட்டு போய்டாதிங்க தோழர்களே... நம்ம எல்லாருக்கிட்டேயும் மனசாட்சி இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கு. அதனால முடிஞ்ச அளவுக்கு உதவி பன்னுங்க.. உதவின்னதும் தர்மமோ, டொனேஷனோ இல்ல..

பச்ச கொழந்தகள எங்க பாத்தாலும், அவங்க உண்மையிலே பிச்ச எடுக்கற சூழ்நிலயிலயோ அல்லது வேல பாத்து சாப்புடற நெலமயிலொ இருக்காங்களான்னு தெரிஞ்சுக்குங்க.  தெரிஞ்சுக்கிட்டு உங்க அளவுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அத தயங்காம, புண்னிய பாவம் எதிர் பாக்காம செய்யுங்க..  அப்டி யாரையுமே நான் பாத்ததுல்லன்னு சொல்றவங்க ஏழ பாழைங்க ளோட கொழந்தைகள படிக்க வைக்க எதாவது ஒரு உதவி பன்னுங்க... டிவி, பேப்பர், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்ல எவ்வளவோ கொழந்தைகள காணவில்லனு விளம்பரம் வருது, அந்த பெற்றோருக்கு எதாவது துப்பு கொடுத்தீங்கண்னா கூட பெரிய உதவிதான்....(அப்டி தொலச்சவங்க மன நிலய எண்ணி பாருங்க... நம்மூட்டு செல்லங்க, கிழிஞ்ச சட்டயோட தெருவோரத்துல கையேந்துனா எப்டியிருக்கும்? கற்பனையே ஹார்ட் அட்டாக்க வரவழைக்குதுல்ல?)

அநாதைகள் அப்டிங்கற வார்த்தைய நாம நெனச்சா ஒழிச்சிரலாம்.  ஏன்னா உருவாக்குனதே நாமதான்.. ஆட்டுக் குட்டிக்கு நாய் பால் கொடுக்குது, கொரங்கு பூனக்குட்டிய வளக்குது, இதெல்லாம் பேப்பர்ல பாத்துட்டு பிஸ்கெட் தின்னுட்டு போய்டறோம். அப்ப ஆறறிவு உள்ள நம்மளால நாலு புள்ளங்கல எந்த எதிர் பார்ப்பும் இல்லாம வளத்து ஆளாக்க முடியாதா? மனசு வச்சா முடியும்.

அது மட்டுமல்ல, 2000 ரூவாயிலேருந்து 200000 வரைக்கும் விக்கற வகை வகையான நாய்க்குட்டிகள வாங்கி, அதுக்கு ஜலுக்கா, புலுக்கான்னு ஏதோ ஓர் பேர வச்சி கொஞ்சி குலாவர நெறய பேர், தெருவோர புள்ளைங்களுக்கு, எதோ அந்த நாய் குட்டிக்கு பிஸ்கெட் வாங்கிப்போடற காசளவுக்காவது உதவுனா தேவல....

வயதானவர்கள் இருக்கற முதியோர் இல்லத்துலயும், ஆதரவற்றோர் மற்றும் அநாதை விடுதிகளிலும் இருக்கறவங்க நல்ல சொகுசா இருக்கறாங்களா? இல்ல. எதோ சாப்பாடு கெடச்சாலும் நிம்மதியும், அன்பும் எதிர் பாத்து,  கெடைக்காம வாழ்க்கைய முடிவுக்கு கொண்டு வர  போராடிக்கிட்டிருக்கவங்கதான்  அங்க இருக்காங்க....

நண்பர்களே, உங்களால எந்தளவுக்கு முடியுமோ அத்தன உதவிகளும் செய்யுங்க,, ஆனா நேரடியா செய்யுங்க... இன்னிய தேதிக்கு நாம நம்மளோட வருஷ சம்பளத்துல ஒரு சில நாள் அல்லது ஒரு நாள் ஊதியத்த, சரி வேனாம் அதுல பாதிய செலவு பன்னா கூட அது பெரிய உதவிதான். பாருங்க, சாராய காசு தான் நம்ம நாட்டோட பட்ஜெட்டுக்கு முதுகெலும்பா இருக்குது.. யாரு காசு அது? எல்லாம் நம்ம கொடுத்ததுதான்.. இப்டி பற்பல வழில நாம அழிக்கறதுல ஒரே ஒரு துளி நம்மை போன்ற சக மனிதர்களுக்கு செலவிடலாமெ? அப்டி செலவு பன்ன நெனச்சா, டி.டி. எடுத்து அனுப்பறத விட நேர்ல குடும்பத்தோட போங்க, (தயவு செய்து ப்ரட், பிஸ்கெட் வாங்கிட்டு போறத தவிருங்க, ஏன்னா எல்லாரும் அதயேதான் வாங்குறாங்க, அதனால தேவை என்னன்னு கேட்டு செய்யுங்க)  நாலு வார்த்த அவங்களோட அன்பா பேசுங்க, அப்ப அவங்களுக்கு கிடைக்கிற சந்தோஷம்தான் உங்களுக்கு கிடைக்கிற புண்ணியம்... முக்யமா உங்க புள்ளங்களுக்கு, மத்தவங்களுக்கு உதவறது முக்யம், நல்ல விஷயம்னு கத்து கொடுங்க.. இதோ இப்ப கூட இந்த பதிவ படிக்க எதோ ஒரு ப்ரவுசிங் செண்ட்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கற காச கூட வருஷத்துக்கு ஒரு தடவ உங்க கண்ல படற யாருக்காவது உதவியா செஞ்சா கூட போதும்.  எங்கிட்ட காசு இல்ல நான் கூலிக்கு வேல செய்றேன், ஆனா எப்டி உதவி செய்யறதுன்னு கேக்கறவங்களுக்கு, காசு கொடுத்தலோ, அறுசுவை உணவு போட்டாலோ உதவி இல்லங்க, அன்பா, ‘நல்லாருக்கீங்களான்னு’ ஒரு வார்த்த கேட்டா கூட போதும், இத மாதிரி கேக்க ஆளு இல்லாம இருக்கறவங்கதான் இவங்கெள்லாம்..

இதெல்லாம் வாரமோ, மாதமோ போக வேண்டியதில்ல குறைந்த பட்சம் வருஷத்துக்கு ஒரே ஒரு முறையாவது போய் அவங்களுக்கு சந்தோஷம் தந்து உங்க நிம்மதிய கூட்டிக்குங்க... இப்டி விடுதியோ, அநாத ஆஸ்ரமமோ தேட முடியாது / எங்ல ஏரியாவுல இல்லன்னு சொல்றவங்க ஏழ புள்ளங்களுக்கு கல்வி அறிவ கொடுக்க உதவி பன்னுங்க,, பணம் தரலேன்னாலும் ஓய்வு நேரத்துல பாடம் சொல்லி கொடுத்தா கூட போதும்..

அறியாமைய போக்கவும், அன்ப போதிக்கவும்  நம்மாளான முயற்சிகள எடுக்கலாம்.  நாம ஒரு பைசா கூட செலவு செய்யாம நம்ம உடலுழைப்பாலே நாலு பேருக்கு உதவலாம். ஒரு பைசா நமக்கோ, நண்பர்களுக்கோ பிரயோஜனப்படாத, யார் யாருக்கோ கருப்பு பனமா போய் சேர கூடிய பல விஷயங்கள பத்தி  வெட்டியா பேசி பொழுத கழிக்கற நேரம்,  கொஞ்சம் ஆக்க பூர்வமா கருனையோடு செயல் பட்டா, நாளய இந்தியா, நிச்சயம் வல்லரசா மாறலேன்னாலும் மனிதர்களும், மனிதமும் நிறைந்ததா மாறும்... என்றும் உலகளவில் உன்னதமான இடம் பிடிக்கும்.... அதுக்கான மொத அடிய நீங்க ஒவ்வொருவரும் எடுத்து வச்சீங்கன்னா.. மெய்யாலுமே “நீங்களும் ஹீரோதான்”.   


ஆகிடுவீங்கள்ல?









374 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 374   Newer›   Newest»
Unknown said...

ரொம்ப அர்த்தம்முள்ள அவசியமான பதிவு...,

Ananya Mahadevan said...

ரொம்ப நல்ல விஷயங்களை சிரிப்போட சொல்லி சிந்திக்கவும் வெச்சிருக்கீங்க. அருமை. வாழ்த்துக்கள் அண்ணாமலையான்.

சைவகொத்துப்பரோட்டா said...

//அப்புறம் பாத்தாதான் தெரியும், யான கக்கா போனா கூட அத பக்காவா க்ளீன் பன்ற தளவாடமெல்லாம் அதே கம்பெனிலதான் வாங்கி தொலையனும்னு.. //

உண்மைதான், வியாபார உலகில் இலவசம் என்பதே இல்லை. நல்ல பதிவு.

Anonymous said...

கடைசி பாரா கவுத்திட்டீங்க. உருப்படியான விஷயம் சொல்லியிருக்கீங்க

கருந்தேள் கண்ணாயிரம் said...

பின்னிட்டீங்க . .ஊருக்கு இளைச்சவந்தானே பிள்ளையார் கோயில் ஆண்டி . அதுதான் இவனுங்க நம்மள சொரண்டுரதுக்குக் காரணம் . . சாதாரணமா ரோட்டுல நடக்கக் கூட முடியல . . எங்கிருந்தோ ரெண்டு பேரு பாஞ்சி வந்து நம்ம முன்னாடி குதிச்சி, ஒன்னு கிரெடிட் கார்டுன்றான் . .இல்லே ஏதாவது ஆசிரமம் . .டொனேஷன் குடு.. இல்லே வேல குடுங்கறான் . .என்ன கொடும தல இது . .

நம்மளால முடிஞ்சா உதவிய அடுத்த உயிருக்குப் பண்ணனும்னு போட்டுள அடிச்ச மேரி சொல்லிட்டிங்க . . கண்டிப்பா நாம மாறுவோம் . . ஒரு நல்ல எதிர்காலத்துக்கு . .

எண்ணங்கள் 13189034291840215795 said...

அருமையான பதிவு.. நல்லெண்ணத்தோடு...

வாழ்த்துகள்

Lucky Limat - லக்கி லிமட் said...

நல்லா சொன்னீங்க நண்பரே

ambi said...

அப்படியே உங்களுக்கு தெரிஞ்ச சில உதவி இல்லங்களின் முகவரியும் இந்த பதிவுல போட்டு இருந்தா பதிவு அதன் நோக்கத்தை மிக சரியா எட்டி இருக்கும்னு நான் நினைக்கறேன். :)

(நம்மாட்களுக்கு பழத்த உறிச்சு வாயில குடுத்து அது ஜீரணம் ஆக ஒரு குவளை தண்ணியும் குடுக்கனுமாக்கும்). :))


NRI - இந்த இல்லங்களுக்கு நேர்ல போறது (வருஷத்துக்கு ஒரு தடவை கூட) சில பேருக்கு சாத்யம் இல்லைங்க. அவங்களுக்கு அக்கவுண்ட் டிரான்ஸ்பர் தான் சவுகரியம். :)

மரா said...

ஆகா.....நிறையா விசயங்கள் நெருடலா இருக்கே. நானெல்லாம் வயசானவர்களை ரோட்டில பாத்தா பத்து ரூவா கொடுத்துட்டா போதும்னு நெனைப்பேன். இவ்ளோ விசயங்கள் இருக்கா. கண்டிப்பாக யோசிக்க வைக்கின்றன உங்க பதிவுகள் எல்லாமே.

தக்குடு said...

//குடும்பத்தோட போனா திரும்பி வரும் போது, நீங்க பல முக்கியமான நேரம் கவனமா இருந்த, உங்க அளவான குடும்பத்துல ஒரு டிக்கெட் கூடியிருந்தா கூட ஆச்சரியமில்லே.. // முற்றிலும் உண்மைதான் வாத்தியாரே! தேவையில்லாத சாமான்களை வாங்குபவர்களை கண்டாலே எனக்கு எரிச்சல்தான் வரும்...:(

அறிவு GV said...

பல நாள் கழிச்சு வந்தாலும் பயங்கரமான விஷயத்தோட தான் வந்திருக்கீங்க. 100% உண்மைங்க நீங்க சொல்றது. படிக்கும்போதே சூடாகிறது ரத்தம். ஆனால் "அசலா..? வேட்டைக்காரனா..?" அப்டின்னு ஒரு லிங்க் பாத்தா உடனே கவனம் அங்கே போய்டும் நம் மக்களுக்கு.

///உலகத்துல எங்க, எத தயாரிச்சாலும், அந்த குப்பைய கொட்டி காசாக்க முதல்ல நம்ம நாட்டத்தான் தேர்ந்தெடுக்கறாங்க.///
///ஏன்னா சோத்துக்கே வழியில்லன்னாலும் சூ வுக்கு போட சந்தன சோப்பு கேக்கற ஆளுங்கதான் நம்ம பயளுவ///
///யாரோ யாரோடயாவது சேந்தாத்தான் கொழந்த பொறக்கும், அப்புறம் எப்டி அநாத?///
///அநாதைகள் அப்டிங்கற வார்த்தைய நாம நெனச்சா ஒழிச்சிரலாம். ஏன்னா உருவாக்குனதே நாமதான்..///
சூப்பர் வரிகள்...!

///ஆட்டுக் குட்டிக்கு நாய் பால் கொடுக்குது, கொரங்கு பூனக்குட்டிய வளக்குது, ///
அதுக்கெல்லாம் ஐந்து அறிவு தாங்க, அதனால எதையும் எதிர்பாக்காது.

மிக அருமையான பதிவு. என் மனதை நான் படிப்பது போலிருந்தது. அடிக்கடி எழுதுங்க..! இதை படித்து ஒருவர் திருந்தினாலும் அது உங்களுடைய வெற்றி தான். அந்த ஒருவனாக நான் ஆக முயற்சி செய்கிறேன்...!

தக்குடு said...

//வெட்டியா பேசி பொழுத கழிக்கற நேரம், கொஞ்சம் ஆக்க பூர்வமா கருனையோடு செயல் பட்டா// நிச்சயமா முயற்சி எடுக்கப்படும்

R.Gopi said...

பலே சிந்தனை அண்ணாமலையார் அவர்களே...

என்ன, கட்டுரை கொஞ்சம் பெருசோ??

சத்ரியன் said...

//மொத அடிய நீங்க ஒவ்வொருவரும் எடுத்து வச்சீங்கன்னா.. மெய்யாலுமே “நீங்களும் ஹீரோதான்”. //

அண்ணா,

செய்யனும்ணா.

நல்ல சமூகச் சிந்தனை மிக்க பதிவுகளா போட்டு உபயோகமா நேரத்தை செலவிடுறீங்க அண்ணா.

malar said...

அருமையான பதிவு ...

வாழை பழத்தில் ஊசி இறங்குகிரமாதிரி சாட்டையடி வரிகள்.....

malar said...

’’பச்ச கொழந்தகள எங்க பாத்தாலும், அவங்க உண்மையிலே பிச்ச எடுக்கற சூழ்நிலயிலயோ அல்லது வேல பாத்து சாப்புடற நெலமயிலொ இருக்காங்களான்னு தெரிஞ்சுக்குங்க. ’’’


விழிப்புனற்வு பதிவு....
இந்த பதிவு எல்லோரையும் சென்றடைய வேண்டும்.

தமிழ் உதயம் said...

பல நல்ல விஷயங்களை ஒரே பதிவுல தொகுத்து வழங்கிட்டீங்க அண்ணாமலையான்.

வரதராஜலு .பூ said...

பெரிய பதிவு என்றாலும் செம சூப்பரான பதிவு அண்ணாமலையாண். கலக்கல்

Karaiyepattyaan... said...

// அந்த அன்ப மறந்த வாரிசுகள நெனச்சே எவ்வளவோ பெரியவங்க உயிர விட்டுருக்காங்க.. ஏக்கமே உயிர கொல்லுங்கறதுக்கு சாட்சியா எத்தன உயிர் போயிருக்கு தெரியுமா? //

sattai adi...

நாடோடி said...

வாழ்த்துக்கள்.......இப்போதைக்கு அவசியமான் பதிவு..தொடரட்டும்..

ரோஸ்விக் said...

ஒரு சில ஹீரோக்களையாவது இந்த பதிவு உருவாக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் அண்ணாமலை.

நிலாமதி said...

நகைச்சுவையோடு நல்ல விடயம் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

settaikkaran said...

நாமள்ளாம் எப்படி எழுதுறதுண்ணு உட்கார்ந்து யோசிக்கிறோம். ஊருலே பல பேரு எப்படி ஏமாத்துறதுண்ணு ரூம் போட்டு யோசிக்கிறாக! செமத்தியான பதிவண்ணே!

Thenammai Lakshmanan said...

/டிக்கெட் கூடியிருந்தா கூட ஆச்சரியமில்லே.. அந்தளவுக்கு உங்கள ஏமாத்தி எதயாவது உங்கள்ட்ட வித்துர்றதுதான் அவங்க சாமர்த்தியம்//

well said ANNAMALAIYAAN

Thenammai Lakshmanan said...

//இப்பலாம் சினிமா போறதுன்னா கேக்கவே வானாம், தனியா போனா ஒரு நாள் சம்பளமும், குடும்பத்தோட போனா ஒரு வார சம்பளமும் நிச்சய காலி...//

உண்மை உண்மை உண்மை

ஜெயந்தி said...

தேவையான பதிவு. ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவா சொல்லியிருக்கீங்க. ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டிய விஷயம்.

கௌதமன் said...

கருத்து நல்லா இருக்கு.
லெங்க்து அதிகமா இருக்கு.

Thenammai Lakshmanan said...

மிக நல்ல இடுகை அண்ணாமலையான் தக்க தருணத்தில் உதவி தேவைப்படுவோருக்கு செய்ய உங்க இடுகை தூண்டுதலா இருக்கு

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான அலசல் .

நாட்டுல பல பேர் இப்படித்தான் இருக்காங்க ..

என்ன செய்வது ? . நல்ல விழிப்புணர்வு சிந்தனை .

hamaragana said...

அன்புடன் நண்பரே இதை பதிவாக வெளியிட்டு எல்லோருக்கும் உதவும் என்னத்தை ஏற்படுத்திய நீங்கள்தான் ஹீரோ !!!!! யாரேனும் ஒருவர் இதை செய்தால் அதுவே உங்களுக்கு கிடைத்த வெற்றி ... வாழ்த்துக்கள்

Cool Lassi(e) said...

You are right on about "free" and "on sale" events.I know its a trap but anytime I see such a sale, I rush to buy whether I need the item or not.People die here during the Thanksgiving holiday trying to rush in to get to the best of sale items..it pathetic! But the companies have figured out the human behavioral pyschology and having a ball.

Unknown said...

அண்ணாமலையாரே நல்ல சிந்திக்க வைத்திருக்கிங்க. மிகவும் அருமையான பதிவு. லேட்டாக ஒரு பதிவு போட்டாலும் சூப்பர் பதிவாக இருக்கு. வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து! பெர்ர்ர்ர்ர்்ர்ர்ர்ர்ர்ரிய பதிவு ஆனா ரொம்ப அர்த்தமுள்ள பதிவு!

Paleo God said...

அது மட்டுமல்ல, 2000 ரூவாயிலேருந்து 200000 வரைக்கும் விக்கற வகை வகையான நாய்க்குட்டிகள வாங்கி, அதுக்கு ஜலுக்கா, புலுக்கான்னு ஏதோ ஓர் பேர வச்சி கொஞ்சி குலாவர நெறய பேர், தெருவோர புள்ளைங்களுக்கு, எதோ அந்த நாய் குட்டிக்கு பிஸ்கெட் வாங்கிப்போடற காசளவுக்காவது உதவுனா தேவல...//

அப்படி போடுங்க அறிவாள..

தமிழ்மணத்துல இணைக்கறதில்லைன்னு எதுனா சபதமா?? எவ்ளோ லேட்டா வந்திருக்கேன் பாருங்க..:(

வழக்கம்போல கலக்கல் மல சார்.. பின்னூட்டம்தான் ரெண்டு மூணு வார்த்த.. ஆனா பதிவு.ம்ம்ம்.:))

வாழ்த்துக்கள்.

Gita Jaishankar said...

Very thoughtful post, I was laughing as I was reading through but very touching in the last....romba nalla vizayam...good one!

karthickeyan said...

அருமையான பதிவு....
வாழ்த்துக்கள் நண்பரே!

எம்.ஏ.சுசீலா said...

எளிமையும்,நேர்மையும்,உண்மையும் கொண்ட நெஞ்சை நெகிழவைக்கும் பதிவு

வேலூர் ராஜா said...

அண்ணாமலை சார் ,நான் ஹீரோ ஆக முடிவு பண்ணிட்டேன் .

kavisiva said...

அருமையான அவசியமான பதிவு! இதைப் படிப்பவர்களில் ஒருவர் இன்றே முதல் அடி எடுத்து வைத்தாலும் அது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான்! இதுவரை கருணை இல்லங்களுக்கு வெறும் பணமும் சாப்பாடும் வாங்கிக் கொடுப்பதோடு என் கடமைமுடிந்து விட்டது என்று இருந்து விட்டேன். இனி அவர்களோடு சில மணி நேரங்களாவது செலவளிக்க முடிவு செய்து விட்டேன். நன்றி!

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கட்டுரைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்மநாபன் said...

வலைப்பூக்களிலும் கருணை மணம் வீசவைக்கமுடியும் என்பதை உணர்த்தும் பதிவு ... எங்கு குறை ..எங்கு குறை என்று அலையாமல் ... ஒரு நிறை செய்யுங்கள் .. என்று உரக்கவே சொல்லியுள்ளீர்கள் ... இந்த எண்ண தாக்கம் சாதனையாக மாறவேண்டும் .. மாற்றவேண்டும் ....மாற்றுவோம் வாழ்த்துக்கள்

வெற்றி said...

//(தியேட்டர்ல விக்கற தின்பண்டங்கள், படத்தால வர தல வலி அப்புறம் இந்த ரசிக குஞ்சுகள் போடற கூச்சலால வர காது வலி எக்ஸ்ட்ரா..)//

'தல' வலியை சமீபமாதான் அனுபவித்து தொலைத்தேன்..

இந்த வருடம் மட்டும் இதுவரை 500 ரூபாய் செலவழித்து விட்டேன் கேளிக்கைகளுக்கு மட்டும் :((

அம்பிகா said...

அர்த்தமுள்ள, அவசியமான பதிவு. வழக்கம் போல் உங்கள் பாணியில். தொடரட்டும், உங்கள் சேவை.

suvaiyaana suvai said...

ரொம்ப நல்ல விஷயம் அருமை!!!

cheena (சீனா) said...

அன்பின் அண்ணாமலயான்

மிக நீண்ட பதிவு - சுருக்கமாகச் சொல்லி இருக்கலாம்

நல்ல சிந்தனை - கடைப்பிடிக்க வேண்டிய சிந்தனை - நானும் சிறிது பணம் இவ்வழியில் செலவழிக்கிறேன். ஆனால் பணம் சரியாகப் பயன்படுகிறதா எனத் தெரியவில்லை. நேரில் சென்று கொடுத்து, பார்த்து வர இயலவில்லை. தேவையானவர்கள் எல்லோரிடமும் வாங்குகிறார்கள்.தேவையை விட பத்து மடங்கு பணம் குவிகிறது அவர்களிடம் - நமக்குத் தெரிய வரும் போது ஒன்றும் செய்ய இயலவில்லை.

ம்ம்ம் - இருப்பினும் சிந்திப்போம் - நல்ல முறையில் ஏமாறாமல் உதவி செய்வோம்.

ஈரோடு கதிர் said...

மிக அருமையான இடுகை

சாமக்கோடங்கி said...

//ஏன்னா சோத்துக்கே வழியில்லன்னாலும் சூ வுக்கு போட சந்தன சோப்பு கேக்கற ஆளுங்கதான் நம்ம பயளுவ.//

இது தான் அண்ணாமலை பஞ்ச்..

ரிப்பீட்டு......

ஆனா ஒண்ணு சொல்றேன் அண்ணா,.. படிப்பது என்பது வேறு, உணர்வது என்பது வேறு.. வருங்கால மக்களுக்கு இதை உணர வைப்பது என்னுடைய லட்சியங்களில் ஒன்று.. என்னுடைய முந்தைய பதிவுகளில் இருந்து அதை நீங்கள் உணரலாம். படித்த மனிதர்களே, மற்றவர்களை அதிகம் ஏமாற்றுகிறார்கள்.கற்றதனால் ஆய பயனென் கொள்..? ஆகவே கற்பதும் கற்பிப்பதும் மட்டும் போதாது.. உணர்தலும் உணர்வித்தலும் தான் தேவை..

லேட்டா வந்தாலும், சும்மா சுசுகி ஷோகன் மாறி சூறாவளி வேகத்துல வரீங்க..
நன்றி...

கார்க்கிபவா said...

கொஞ்சம் சுருக்கி இருந்தா செம பதிவு.. கலக்கல் பாஸ்

வசந்தமுல்லை said...

அண்ணாமலையான்,

லெட்ட போட்டாலும் லேட்டஸா போட்டீங்க !!!! எல்லாமே super punch!!!!!!!!!!!!!.

Mythili (மைதிலி ) said...

படிச்சு முடிக்கறதுக்குள மூச்சு வாங்குது ... சராசரி மக்களுக்கு ஆசை அதிகம் அது தான் இப்படியெல்லாம் நடக்குது. பள்ளிகள்ள இத பற்றி ஒரு பாடம் வைக்கலாம்....வருங்கால சந்ததியினரை காப்பாற்ற.

goma said...

ஒவ்வொரு கோணத்திலிருந்தும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.
நாலு பேர் உங்கள் வழி கேட்டு நடந்தால் நீங்களும் ஹீரோதான்

நல்ல பதிவு

கார்த்திகைப் பாண்டியன் said...

நெத்திப்பொட்டுல அறையுற மாதிரியான பதிவு.. நம்மாலான உதவிகளை கண்டிப்பாக செய்வோம்.. செய்யணும்

Vijiskitchencreations said...

நல்ல தகவல்+நல்ல கருத்துள்ள பயனுள்ளாவை. அம்பி சொல்வதை போல் உங்களுக்கு தெரிந்த முதியோர் இல்லம், மனவளர்ச்சி மையம், அநாதை இல்லை, இந்த இடங்களின் முகவரி அல்லது தொலபேசி குடுத்தால் அதுவும் ஒரு பெரிய உதவிதான், எல்லாரும் அட்லிஸ்ட் அவங்களால் முடிந்த உதவியை செய்வாங்க.
திருப்பதி உண்டியலில் போடுவதை நிறய்ய பேர் லட்ச லட்ச கணக்கா போடுவதை என் வீட்டுகாராரும் சொல்வார்ங்க ஏன் இதை கொண்டு ஒரு ஏழை குடும்பத்தில் குழந்தைக்கு உதவி அல்லது மருத்துவ செலவு இப்படி செய்யலாம் அதை விட்டு சாமிக்கு போடனும் மீதியை இந்த மாதிரி செய்ய மனசு வர மாட்டேஙுகுது என்று என் வீட்டார் புலம்புவார். நாங்க எங்களால் முடிகிற உதவி இன்றும் நாங்க இந்தியா வரும்போது எல்லாம் நேரில் போய் செய்திட்டிருக்கோம்.

ஸாதிகா said...

அரிதாக வந்து பதிவிட்டாலும்,அர்த்தமுள்ள நெடும் பதிவாக இடும் அண்ணாமலையானுக்கு வாழ்த்துக்கள்.

// 32 அடி தோசையும் 6 வாளி சாம்பாரும் ஐநூறே ரூவாதான்னு வாய்க்குள்ளயே ஆசைய அலய வுடுவாங்க.. //

// சோத்துக்கே வழியில்லன்னாலும் சூ வுக்கு போட சந்தன சோப்பு கேக்கற ஆளுங்கதான் நம்ம பயளுவ.//

//நம்ம தல தப்புனா போதுன்னு சில்லறயில புண்னியம் தேடுறோம் நாம..//


//பைக் வாங்குங்க, முடிஞ்சா பரலோகத்துக்கு டிக்கெட் வாங்குங்கன்னு ஒரே விளம்பர பேனர் தொல்ல../ /

எங்கே இருந்து சார் இப்படி வார்த்தைகளையெல்லாம் அள்ளுகின்றீர்கள்!!!!!!

பொன் மாலை பொழுது said...

நல்லாவேதான் அனலைஸ் பண்ணியிருக்கீங்க. நிறைய எழுதுங்க, என்னுடைய ப்ளாக் வந்து கருத்து இட்டமைக்கு நன்றி. என் முதல் இடுகையை பார்க்கும் படி அழைகின்றேன் வாருங்கள்.
வாழ்த்துக்கள்.

Ramesh said...

நல்ல பதிவு பெ....ரி...ய....ப....தி...வு

அண்ணாமலையான் said...

வாங்க பேநா, மூடிய தொறந்து அழகா சொல்லிட்டீங்க. நன்றி.

அண்ணாமலையான் said...

அநன்யா வழக்கம் போல அருமையா பின்னூட்டம் போட்டிருக்கீங்க.. நன்றி

அண்ணாமலையான் said...

சைவகொத்துபரோட்டா, நீங்க வியாபாரிங்க ஏமாத்துனா தப்பிச்சுருவீங்க...

அண்ணாமலையான் said...

சின்ன அம்மினி, அந்த கடைசி பாராவுக்குத்தான் இவ்வளவு பெரிய பதிவு, உங்க வருகைக்கு நன்றி.

அண்ணாமலையான் said...

தேளு, நம்ம மாறுவோம்னு சொன்னது நம்பிக்கையா இருக்கு. நன்றி

அண்ணாமலையான் said...

புன்னகைதேசம் உங்க வருகை, கருத்துக்கு நன்றி... எதாவது, உங்களால முடிஞ்சது செய்யுங்க

அண்ணாமலையான் said...

லக்கி லிமட் நன்றி

அண்ணாமலையான் said...

அம்பி அப்டி கொடுக்க இஷ்டமில்ல,, ஏன்னா எனக்கு நம்பிக்கையில்ல, நம்ம காசு ஒழுங்கா பயன்படும்னு

அண்ணாமலையான் said...

மயில்ராவணன் யோசிச்சு நல்ல முடிவா எடுங்க. முடிஞ்சா நாலு புள்ளங்கல தத்து எடுத்து பாடம் சொல்லி கொடுங்க... ரொம்ப புண்ணியமா போவும்

அண்ணாமலையான் said...

தக்குடுபாண்டி நீங்க தப்பிச்சுட்டிங்க சாமான் வாங்குறதுல,, மத்தவங்க தப்பிக்க வேனாமா?

அண்ணாமலையான் said...

அறிவு GV உங்க ஸ்பீடுக்கு நன்றி... நாம நெனச்சா நெறய நல்லது செய்யலாம். செய்வோம்

அண்ணாமலையான் said...

R.Gopi ஆமாம் அவசியமா போயிட்டு, அதான் கொஞ்சம் பெரிசா ... முழுசா படிசீங்களா?

அண்ணாமலையான் said...

சத்ரியன், நீங்களும் உபயோகமா செயல்படனும்னுதான் ஆசை. முடிஞ்சத செய்யுங்க

அண்ணாமலையான் said...

பழமைபேசி நன்றி.

அண்ணாமலையான் said...

மலர் உங்க கருத்து நிறைவேறனும்னுதான் ஆசை... பாப்போம்

அண்ணாமலையான் said...

நன்றி தமிழுதயம்.

அண்ணாமலையான் said...

வரதராஜலு.பூ உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

அண்ணாமலையான் said...

வாங்க காவெரிப்பட்டியான். மிக்க நன்றி

அண்ணாமலையான் said...

நாடோடிக்கும் நன்றிகள்...

அண்ணாமலையான் said...

ரோஸ்விக் நீங்க ஹீரோதானே?

அண்ணாமலையான் said...

நிலாமதி உங்க வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

அண்ணாமலையான் said...

சேட்டைக்காரன் நன்றி

அண்ணாமலையான் said...

தேனம்மைலக்ஷ்மணன் உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

அண்ணாமலையான் said...

ஜெயந்தி ஊர் கூடி தேர் இழுக்கறா மாதிரி விஷயம் இது

அண்ணாமலையான் said...

ஸ்டார்ஜன் யாராவது எப்டியாவது போறாங்க.. நாம நம்மாளானத செய்வோம். சரியா?

அண்ணாமலையான் said...

hamaragana sir ஒரு நாலு பேர ஹீரோவாக்கனும்னு பாக்கறேன்.. நீங்க எப்டி already ஹீரோவா?

ஹேமா said...

பதிவே சொல்லுதே நீங்கதான் ஹீரோன்னு.
அருமை அண்ணாமலையாரே.

ஹாய் அரும்பாவூர் said...

வணக்கம் பதிவுலக ரஹ்மான் அவர்களே

சொல்ல வந்த கருத்தை நச்சுன்னு சொன்னிங்க வாக்கெடுப்பில் வரலாறு காணாத வெற்றி வாழ்த்துக்கள்
என் வோட்டு கொஞ்சம் லேட்டா வந்ததிற்கு மன்னிக்கவும் தம்பி ரொம்ப பிஸி (அது எல்லாம் இல்லை எல்லாம் நெட்டுல கொஞ்சம் பிரச்சினை )

அப்போ அடுத்த ஹிட எப்போ

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலையனுக்கு,
உண்மையை எடுத்து சொல்லியிருக்கீங்க. இது பல பேருக்கு தெரிந்தவைதான். ஆனால் மீண்டும் மீண்டும் நாம் செய்யாமல் இல்லை, பலவற்றை செய்துகொண்டுதான் இருக்கின்றோம். நாம் விளம்பரத்துக்கும் ஆடம்பரத்துக்கும் அடிமையான ஒர் கூட்டமாய் இன்று.

வீட்டில் இருக்கும் பெற்றோர்களை, பெரியவர்களையே பாரமாக நினைக்கும் இன்றைய காலகட்டதில், அப்படி எண்ணாமல் அவர்களுடைய உணர்வுகளுக்கும் முதலில் இடம் கொடுக்க வேண்டும்.

அனாதை குழந்தைகளும், மனநலம் குன்றியவர்களும் என பிறப்பால் சிலபேர் இருந்தாலும், பலபேர் தள்ளப்படுகின்றார்கள். அவர்கள் வளர்ப்பில் அதை உணராமல் இருக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்பதனை அறிந்து செயல்படவேண்டும்.

குற்றாவாளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்க படுகின்றார்கள் என்பதை போலதான் இந்த மனிதர்களும். இந்த அவலநிலைமையை போக்கும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

மனிதாபிமானமும், மனிதநேயமும் அற்ற இன்றைய நிலையில் அவற்றை மனதில்கொண்டு நம் நடைமுறை வாழ்கையில் கடைபிடிப்பதை சாத்திய படுத்துவோமாக.

எழுதிக்கொண்டே போனால் உங்கள் பதிப்பைவிட எ(ன்)ங்கள் விமர்சனம் இன்னும் பெரிதாகிவிடும்.

prabhadamu said...

அவசியமான நல்ல பதிவு.

தாராபுரத்தான் said...

போங்க தம்பி.. படிக்கிறப்ப நச்சுன்னு இருக்கும். ஆமா, ஆமா ன்னு மனசு சொல்லும் ..அப்புறம்..கால ஒட்டத்தில் மனிதம்யற்ற மனிதர்களாகவே மாறிப்போகிறோம்.மனிதர்களின் மனத்தில் ஈரத்தை எழுதிப் புரிய வைக்க முடியாது.அது இயற்கையிலேயே வரவேண்டும். அதற்காக சும்மாவும் இருக்க முடியாது..ஊதர சங்கை ஊதுவோம்...விடிந்தால் நல்லதுதான்... அவசியமான பதிவுதான்.நன்றிங்க.

நட்புடன் ஜமால் said...

பெர்ர்ர்ர்ர்ரிய பதிவுன்னாலும்

படிக்க வச்சிட்டீங்க

அங்கங்கே நிறைய சூடு போட்டு இருக்கீங்க

கடைசில மேட்டருக்கு வந்துட்டீங்க

நல்ல இடுக்கை நண்பரே!

வேலன். said...

நல்ல மனசு சார் உங்களுக்கு...கட்டுரை அருமை. வாழ்க வளமுடன் வேலன்.

வடிவேல் கன்னியப்பன் said...

ஐய்யா, இப்போது தங்களின் வழிகாட்டுதல் தேவையான ஒன்றுதான்.வெறும் சொற்கள் தேவையில்லை. மனித நேயம் வள்ர்வதற்கு பணம் தேவையில்லை. முதல் அடியினை எடுத்து வைக்கச் சொன்னீர்களே. இதுதான் தற்போது தேவையானஒன்று.ஹீரோவாக வேண்டாம். மனித நேயமிக்கவர்களாக மாறினாலே போதுமானது மட்டுமல்ல, தேவையானதும் கூட.தங்களின் சேவையை பாராட்டுகிறேன். ஏனெனில் தற்போது நல்லனவற்றைச் சொல்லக்கூட நமக்கு நேரமில்லை. பணத்தைத் தேடி ஓடவே நேரமில்லையே.
எனவேதான் நல்லனவற்றைக் கூறும் தங்களை என் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன் வடிவேல்கன்னியப்பன்

Vidhoosh said...

அருமையான இடுகை. வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

அண்ணாமலையாரே சூப்பர் பதிவு.

கேட்கும்போதும் பார்க்கும் போதும் தோணுகிற பரிதாப மனசு செத்த நாழிகழிச்சு காணாமபோயிடுது அதான் பிரச்சனையே!

உதவனுங்குரமனசு எல்லார்கிட்டேயும் வரனும்.

KUTTI said...

மிக மிக அருமையான பதிவு.
என் பதிவுக்கு கருத்து தெரிவித்தற்க்கு நன்றி.

டவுசர் பாண்டி said...

யப்பா !! இன்னா மேரி அக்காக்கா அலசி கிளசி, நம்ப நாட்டுல நடக்குற நல்ல ( ? ௦) விசியங்கள புட்டு புட்டு வெச்சிக் கீரீன்கோ !! தல !! சூப்பர் மேட்டரு சூப்பர் பதிவு !! தூள் டக்கரு தல !!

வெள்ளிநிலா said...

இந்த மாதிரியான ஒரு பதிவு அறுபது ஓட்டுகள் வாங்குவதே , கட்டுரையின் நோக்கங்கள் சாத்தியப்படும் என்பதாக நினைக்க தோன்றுகிறது

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல பதிவு அண்ணாமலையான். முடிஞ்சா கொஞ்சம் சுருக்கமா எழுதுங்க. வாசிக்க எளிமையா இருந்தா உங்கள் கருத்துக்கள் இன்னும் பலரை அடையும்.

travelupdate said...

அருமையான பதிவு
"2000 ரூவாயிலேருந்து 200000 வரைக்கும் விக்கற வகை வகையான நாய்க்குட்டிகள வாங்கி, அதுக்கு ஜலுக்கா, புலுக்கான்னு ஏதோ ஓர் பேர வச்சி கொஞ்சி குலாவர நெறய பேர், தெருவோர புள்ளைங்களுக்கு, எதோ அந்த நாய் குட்டிக்கு பிஸ்கெட் வாங்கிப்போடற காசளவுக்காவது உதவுனா தேவல...."

சமீப காலமாக டீவீக்ககளில் surf excell சோப் விளம்பரத்தை பார்க்கலாம். அதில் ரோசி மாம் என்கிற ஒரு பன்னாடை, தனது நாய் செத்து போனதற்காக தனது மாணவனை நாய் போல் நடிக்க செய்து மகிழ்வாள்...இந்த விளம்பரம் சம்பந்தபட்ட அனைத்து நாய்களுக்கும் இதுவரை எந்த மனித உரிமை அமைப்புகளும் ஏன்டா விதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை.

நாய்களுக்கு கொடுக்கும் மரியாதையை கூட குழந்தைகளுக்கு கொடுக்காத இந்த "நாய்களை" என்ன செய்வது...இந்த Surf Excell விளம்பரத்தை தயாரித்தவன், இயக்கியவன், நடித்தவள்..எல்லாரும் நிச்சயமாக கடுமையான தண்டனைக்கு உரியவர்கள்.

Anonymous said...

ஒரு பயனுள்ள பதிவு..கூடவே யோசிக்கவும் வச்சிட்டீங்க...

Anonymous said...

ரொம்ப பெரிய்ய பதிவா போயிட்டே இருந்தாலும் ரொம்பவே யோசிக்கவேண்டிய விஷயங்கள்..

ஒரு பக்கம் ஃப்ரீயா குடுக்குறான்னா இன்னொரு பக்கம் இந்த 'காம்பி பேக்'ன்னு ஒண்ணுக்கு மூணா சேர்த்து தலையில கட்டிடறது.. இது அதை விட பெரிய கொடுமை..

எறும்பு said...

பதிவு நீளமா இருந்தாலும் அருமையான பதிவு...
வாழ்த்துக்கள்..

Ungalranga said...

இது தான் முதல் முறை உங்கள் பதிவை படிக்கிறது..
ஆனா நெஞ்சை தொடும் பதிவா இது அமைஞ்சிடுச்சு என்பது எனக்கு சந்தோஷம்..!!

பதிவு என்னவோ பெரிசுதான்..ஆனால் அதை உலகத்துக்கு சொல்லணும்னு நினைச்ச உங்க மனசு அதை விட பெரிசு..!!

வாழ்த்துக்கள்..என்னால் ஆன மாற்றத்தை கண்டிப்பா செய்வேன்..செய்யணும்..அப்போதான் நானும் மனிதன்.. :)

நன்றி,
ரங்கன்

பின்னோக்கி said...

அருமையான மிகவும் அவசியமான பதிவு

ஜெயந்தி said...

நீங்க ஹூரோதான்னு நிரூபிச்சிட்டீங்க. 70 ஓட்டா? இதுவரை யாரும் இத்தனை ஓட்டு வாங்கி நான் பார்த்ததில்லை. வாழ்த்துக்கள்!

எட்வின் said...

ஹீரோ ஆயிட்டா போச்சு... வாழ்த்துக்கள் அன்பரே

அண்ணாமலையான் said...

hi Cool Lassi(e) u r right.. v people easily traped by them.

அண்ணாமலையான் said...

வாங்க Mrs.Faizakader ரொம்ப நன்றிங்க. லேட்டா வர காரனம் சற்று பிஸி..

அண்ணாமலையான் said...

அன்புடன் அருணா , நீங்க அன்போட கொடுத்த பூங்கொத்துக்கு சந்தோஷமான நன்றி

அண்ணாமலையான் said...

என்ன மாதிரி 2,3 வார்த்தைல போடாம உங்க கருத்த போட்டதற்கு நன்றி ஷங்கர்..

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி karthickeyan ..

அண்ணாமலையான் said...

உங்க ஆசிர்வாதமா எடுத்துக்கறேன் பின்னூட்டத்த எம்.ஏ.சுசீலா, மேம்

அண்ணாமலையான் said...

இனிமே உங்கள “ஹீரோ வேலூர் ராஜானு” கூப்புடறோம்.. ஓகேவா?

அண்ணாமலையான் said...

உங்க கருத்து மிக்க மகிழ்ச்சியா இருக்கு kavisiva ..

மாதேவி said...

முக்கியமான பதிவு.வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

thank u நாமக்கல் சிபி.

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி தமிழ்குறிஞ்சி

அண்ணாமலையான் said...

மாற்றுவோம்னு சொன்னீங்க பாருங்க, அங்கதான் நிக்கறீங்க பத்மநாபன் .

அண்ணாமலையான் said...

உங்க ஒரு ஆளுகிட்டயே நெறய டொனேஷன் வாங்கலாம் போலருக்கே வெற்றி ?

அண்ணாமலையான் said...

ரொம்ப நன்றிங்க அம்பிகா

அண்ணாமலையான் said...

சந்தோஷம் suvaiyaana suvai

அண்ணாமலையான் said...

வாங்க cheena (சீனா) சார், நம்மாளுங்க பல பேரு 3 மணி நேர சினிமா, பல மணி நேர கிரிக்கெட் இப்டி பல வழில நேரத்த வீனடிக்கறோம். இந்த பதிவு சற்று நீளம்தான், ஆனால் ஒரு 10 நிமிஷம் செலவு பன்னா போதும் படிக்க. அப்புறம்,பணம் சரியாக செலவு செய்யபடுகிறதா என தெரியவில்லை என குறிப்பிட்டிருக்கிறீர்கள், உங்களுக்காக இந்த தகவல், இந்தியாவுலேயே, அநாதை விடுதி, முதியோர் இல்லம் மற்றும் பேரழிவால் பாதிக்கப்பட்டோர் விடுதிகளுக்கான நிதி வசூல் முறைகேடுகளில் நம் தமிழ்நாடு 3வது இடம்,, இதுவரை 306 க்கும் மேற்பட்ட போலிகள் கண்டறியப்பட்டுள்ளது.. இது மத்திய அரசின் அறிக்கை.. அதனாலதான் நேர்ல போகனும்னு சொல்றேன்.. மத்தபடி உங்க வருகை, கருத்து ரெண்டும் மகிழ்ச்சியா இருக்கு.. தொடர்ந்து வரனும்னு அன்போட வேண்டிக்கிறேன். நன்றி

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி ஈரோடு கதிர்

அண்ணாமலையான் said...

உங்க உயர்ந்த லட்சியங்களுக்கு தலை வணங்குகிறேன் பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

அண்ணாமலையான் said...

அடுத்த பதிவ நீங்க சொன்னா மாதிரி முயற்சி பன்றேன் கார்க்கி

அண்ணாமலையான் said...

ரொம்ப ரொம்ப சந்தோஷம் வசந்தமுல்லை

அண்ணாமலையான் said...

மைதிலி கிருஷ்ணன் கஷ்டப்பட்டு மூச்சு வாங்கி படிச்சதுக்கு நன்றி

அண்ணாமலையான் said...

என்னயே ஹீரோவாக்கிட்டீங்களா? சரியாப்போச்சு goma .

அண்ணாமலையான் said...

மிக அருமையான உத்தரவாதம் கொடுத்தீங்க கார்த்திகைப் பாண்டியன் சார். ரொம்ப நன்றி

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷம், உங்கள மாதிரி மத்தவங்களும் கொஞ்சம் சிரமம் பாக்காம இருந்தா நல்லா இருக்கும் Vijis Kitchen

அண்ணாமலையான் said...

அரிதாக வர காரனம் வேலை பளுதான் வேண்டுமென்றே செய்வதில்லை ஸாதிகா .

அண்ணாமலையான் said...

கண்டிப்பா வரென் கக்கு - மாணிக்கம் சார்

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி நண்டு=நொரண்டு அவர்களே (உங்க தமிழ் தொண்டு பிரமாதம்)

அண்ணாமலையான் said...

ப... டி... ச்...சீ..ங்..க...ளே... ரொம்ப சந்தோஷம் றமேஸ்-Ramesh

அண்ணாமலையான் said...

லேட்டோ, லேட்டஸ்டோ நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம் arumbavur

அண்ணாமலையான் said...

மிக அழகா நீங்களும் சொல்ல வந்த கருத்த பதிவு செஞ்சிருக்கீங்க தஞ்சை.ஸ்ரீ.வாசன் .. வாழ்த்துக்கள்...

அண்ணாமலையான் said...

ரொம்ப நன்றி prabhadamu

அண்ணாமலையான் said...

தாராபுரத்தான் அய்யா நீங்க சொன்னா மாதிரி ஊதுவோம். நல்லது நடக்க நம்புவோம்.. உங்க வருகைக்கு நன்றிங்க..

அண்ணாமலையான் said...

நட்புடன் ஜமால் சார் உங்க பேருக்கேத்த மாதிரி நட்போட நீங்க கருத்துக்கு நன்றி

அண்ணாமலையான் said...

வேலன் சார் உங்களுக்கும் அதே நல்ல மனசுதானே இருக்குது, அப்புறமென்ன சும்மா பூந்து விளையாடுங்க..

அண்ணாமலையான் said...

வடிவேல்கன்னியப்பன் நீங்க சொன்னது 100க்கு 100 உண்மைங்க..

அண்ணாமலையான் said...

ரொம்ப நன்றி Vidhoosh

அண்ணாமலையான் said...

உங்க கருத்த பாத்தா ஏற்கனவே நெறய உதவுனா மாதிரி தெரியுது அன்புடன் மலிக்கா .

அண்ணாமலையான் said...

சும்மா மெர்சலா கருத்த சொல்லீட்ட டவுசர் பாண்டி..

அண்ணாமலையான் said...

ஆமாங்க வெள்ளிநிலா , அப்டி நடந்தா எல்லாருக்கும் சந்தோஷம்தான் இல்லியா? (இதழுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்..)

அண்ணாமலையான் said...

விக்னேஷ்வரி நீங்க சொன்னத முயற்சி செய்யறேன்..

அண்ணாமலையான் said...

தமிழரசி யோசிக்க வைக்கறது தானெ பதிவோட நோக்கம்.

அண்ணாமலையான் said...

நீங்க சொல்ற மோசடிகளும் நெறய நடக்குது நாஸியா

அண்ணாமலையான் said...

நீளமா இருக்கறதால எறும்பு க்கு ரொம்ப நேரம் ஆயிருக்கும். இருந்தாலும் கடைசி வரை வந்து, கமெண்ட் போட்டதுக்கு நன்றி

அண்ணாமலையான் said...

உங்க உத்தரவாதத்துக்கு நன்றி ரங்கன்

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி பின்னோக்கி

அண்ணாமலையான் said...

எல்லாம் நீங்க அப்புறம் நம்ம நண்பர்கள் போட்டதுதான் ஜெயந்தி

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷம் எட்வின் .

தங்கராசு நாகேந்திரன் said...

மிக நீண்ட பதிவின் மூலம் மிகப் பயனுள்ள கருத்தைக் கூறியிருக்கிறீர்கள் உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் 100 சதவீதம் உடன்படுகிறேன்
வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

ரொம்ப நன்றி தங்கராசு நாகேந்திரன் சார்

அன்புடன் நான் said...

நல்ல விடயங்களை... திறம்பட சுவையோடு சொல்லிய உங்களுக்கு பாராட்டுக்கள். இந்த கட்டுரை நிச்சயம் சில (ஹீரோ) நல்ல மனிதர்களை உருவாக்கும்.... நானும் முயற்சிக்கிறேன்... பகிர்வுக்கும்... தங்களின் உழைப்புக்கும் மிக்க நன்றி.

அண்ணாமலையான் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சி. கருணாகரசு சார்

கும்மாச்சி said...

இப்பலாம் சினிமா போறதுன்னா கேக்கவே வானாம், தனியா போனா ஒரு நாள் சம்பளமும், குடும்பத்தோட போனா ஒரு வார சம்பளமும் நிச்சய காலி... கூடவே மருத்துவ செலவு வேற.. (தியேட்டர்ல விக்கற தின்பண்டங்கள், படத்தால வர தல வலி அப்புறம் இந்த ரசிக குஞ்சுகள் போடற கூச்சலால வர காது வலி எக்ஸ்ட்ரா..) இதில்லாம போற வர ரோடெல்லாம் இந்த மிக்ஸி வாங்குங்க, பைக் வாங்குங்க, முடிஞ்சா பரலோகத்துக்கு டிக்கெட் வாங்குங்கன்னு ஒரே விளம்பர பேனர் தொல்ல..

இங்கதான் நீங்க நிக்கறீங்க. நல்ல பதிவு

கும்மாச்சி said...

ஒட்டு எண்ணிக்கையும் பின்னூட்டங்களும் அபாரம், எங்களுக்கெல்லாம் டெபாசிட் கிடைக்காது போல் இருக்கிறது, அசத்துங்க தலைவா.

Unknown said...

கொஞ்சம் லேட்டா வந்திட்டன் சோ சாரி

பெரிய பதிவுதான் ஆனாலும் நல்லா பதிவு

செந்தில் நாதன் Senthil Nathan said...

//போங்க தம்பி.. படிக்கிறப்ப நச்சுன்னு இருக்கும். ஆமா, ஆமா ன்னு மனசு சொல்லும் ..அப்புறம்..கால ஒட்டத்தில் மனிதம்யற்ற மனிதர்களாகவே மாறிப்போகிறோம்.மனிதர்களின் மனத்தில் ஈரத்தை எழுதிப் புரிய வைக்க முடியாது.அது இயற்கையிலேயே வரவேண்டும். அதற்காக சும்மாவும் இருக்க முடியாது..ஊதர சங்கை ஊதுவோம்...விடிந்தால் நல்லதுதான்... அவசியமான பதிவுதான்.நன்றிங்க.
//

என்னுடைய எண்ணமும் இதுவே.. பெரிய இடுகை தான்.. ஆனா சொன்ன விஷயமும் பெருசு.. நம்மால் முடிந்ததை செய்வோம்... இது மாதிரி ஒரு முயற்சில நானும் இறங்கி இருக்கேன்.. கடவுள் அருள் புரிய பிரார்த்தனைகள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணாமலையான்..
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
சில நல்ல முடிவுகளை எடுக்க என்னை தூண்டியதற்க்கு நன்றி

புலவன் புலிகேசி said...

நல்ல பதிவு நாண்பரே..

அண்ணாமலையான் said...

கும்மாச்சி உங்க ஸ்டைல்ல வழக்கம் போல கமெண்ட்ல அசத்திட்டீங்க. அப்புறம், ஓட்டு, கமெண்ட் எல்லாம் நீங்க போட்டதுதானெ?

அண்ணாமலையான் said...

செந்தில் நாதன் உங்க முயற்சியால எவ்வளவு பேருக்கு நல்லது நடந்தாலும் சந்தோஷம் தான்... வெற்றியடைய வாழ்த்துக்கள்....

அண்ணாமலையான் said...

பட்டாபட்டி நல்ல முடிவு எடுத்துருக்கீங்களா? சீக்ரம் செயல் படுத்துங்க... வாழ்த்துக்கள்...

அண்ணாமலையான் said...

வாங்க புலவன் புலிகேசி , உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

Unknown said...

நல்ல பதிவு.ஒரு பதிவிற்கு இவ்வளவு கருத்துரைகளா?நீங்கள்தான் இப்போது பதிவுலக நாயகன்.

அண்ணாமலையான் said...

மின்னல் அடிச்சா மாதிரி வந்து கலக்கிட்டீங்க... மின்னல்

கலகன் said...

// வாஆஆஆடான்னு கத்தி எவனுமெ வராத தியேட்டருக்கு கூப்புடுவான்... //

"வாஆஆஆடா" - இத ஒரு 20 வது தடவைக்கு மேலாவது கேட்டிருபேன்...
same blood தல...

அண்ணாமலையான் said...

வாங்க தர்மா, உங்க பேர்லயே இருக்கு தர்மம் அத நல்லா சிறப்பா பண்ணுங்க... உங்க பேருக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்..

துபாய் ராஜா said...

அருமையான கருத்துகளை அழகா சொல்லியிருக்கீங்க.

நிச்சயம் கடைபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தை தோன்ற வைத்ததே உங்களது இந்த பதிவின் மிகப்பெரிய வெற்றி.

வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

வாங்க துபாய் ராஜா இப்ப துபாய்ல ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நடக்குது போல? உங்க கருத்துக்கு நன்றி...

ஸ்ரீராம். said...

இவ்வளவு வோட்டையும், இவ்வளவு கமெண்ட்களையும் இங்கதான் பார்க்கறேன். பாராட்டுக்கள் அண்ணா...

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷம் ஸ்ரீராம் நீங்க வந்ததுல...

பனித்துளி சங்கர் said...

ஆஹா அற்புதமான பதிவு வாத்தியாரே ! வாழ்த்துக்கள் .
அப்படினா இன்றுமுதல் நானும் ஹீரோதானே .

அண்ணாமலையான் said...

ஆயிட்டா சந்தோஷம்தான்..

Prathap Kumar S. said...

என்ன அண்ணமலையாரே ஆளையேக்காணோம்...
பதிவு சூப்பர்...
இப்ப ஒரு ஆபர் போட்டுருகாங்காளமே... மொபைல் வாங்குனா லைப்டைம் கார்டு ப்ரீயாம் விளம்பரம் பார்த்திஙகளா-? :):)

Anonymous said...

அண்ணே சும்மா சொல்லக்கூடாது பின்னீட்டீங்க..,எல்லோருக்கும் சுள்ளுன்னு உறைக்கிற மாதிரி

அண்ணாமலையான் said...

பிரதாப் சார், கொஞ்சம் வேல அதிகம், அதான் . .. ஆமாம் அந்த விளம்பரம் பாத்தேன்.. என்ன செய்யறது? எத்தன பேர் ஏமாந்தாங்களோ?

அண்ணாமலையான் said...

ஒருவார்த்தை உங்க வருகைக்கு நன்றி.

சிவாஜி சங்கர் said...

அண்ணே உங்க மனசு மாதிரி பதிவும் கொஞ்சம் பெர்சா போச்சு..!
ஃபுல்லா படிச்சேன் கலக்குறீங்க... நானும் இனி ஹீரோ தான்.. :)

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷம் சிவாஜிசங்கர், பேருக்கேத்தா மாதிரி ஹீரோ வாயிட்டீங்க... வாழ்த்துக்கள்..

ILLUMINATI said...

நகைச்சுவயயோட கலந்து கொடுக்கப் பட்ட அரு மருந்து....

திவ்யாஹரி said...

//எல்சிடி டிவி, எல்ஈடி டிவி அப்டின்னு பல டிவிக்கள பெருமைக்கு வாங்கி சுவத்துல மாட்டுனாலும், அதுல வழக்கம் போல அண்ணன்-தம்பி டிவி கம்பெனியோட விளம்பரக்காரன் தான் வந்து வாஆஆஆடான்னு கத்தி எவனுமெ வராத தியேட்டருக்கு கூப்புடுவான்... //

//கடைதெருவுலயோ, கார் நிக்கற சிக்னல்லயோ கடமைக்கு சில்லறையோ, ஒர்ரூவாயோ தூக்கி போட்டுட்டு தர்மம் தல காக்கும்னு நம்பிக்கிட்டு போறவங்களும் தப்புதான் பன்றீங்கன்னு புரிஞ்சுக்குங்க... ஏன்னா பிச்சை எடுக்கறதுக்குன்னு பல கொழந்தகள கடத்தறாங்கன்னு. கொழந்தகள இழந்த அந்த பெற்றோர்கள் பாவம் இல்லியா? இதெல்லாம் யோசிக்காம நம்ம தல தப்புனா போதுன்னு சில்லறயில புண்னியம் தேடுறோம் நாம..
அன்ப மறந்த வாரிசுகள நெனச்சே எவ்வளவோ பெரியவங்க உயிர விட்டுருக்காங்க.. ஏக்கமே உயிர கொல்லுங்கறதுக்கு சாட்சியா எத்தன உயிர் போயிருக்கு தெரியுமா?//

//நம்ம வூட்டு புள்ளங்களுக்கு நம்மளால முடிஞ்ச அளவுக்கு கேட்டது, கேக்காததுன்னு வாங்கி கொடுத்து அழகு பாக்குற நாம, இந்த மாதிரி தெருவுல திரியற கொழந்தகள பத்தி ஈஸியா எடுத்துகிட்டு போறோமே ஏன்?
அப்டி தொலச்சவங்க மன நிலய எண்ணி பாருங்க... நம்மூட்டு செல்லங்க, கிழிஞ்ச சட்டயோட தெருவோரத்துல கையேந்துனா எப்டியிருக்கும்? கற்பனையே ஹார்ட் அட்டாக்க வரவழைக்குதுல்ல?)//

//ஆறறிவு உள்ள நம்மளால நாலு புள்ளங்கல எந்த எதிர் பார்ப்பும் இல்லாம வளத்து ஆளாக்க முடியாதா? மனசு வச்சா முடியும்.//

//2000 ரூவாயிலேருந்து 200000 வரைக்கும் விக்கற வகை வகையான நாய்க்குட்டிகள வாங்கி, அதுக்கு ஜலுக்கா, புலுக்கான்னு ஏதோ ஓர் பேர வச்சி கொஞ்சி குலாவர நெறய பேர், தெருவோர புள்ளைங்களுக்கு, எதோ அந்த நாய் குட்டிக்கு பிஸ்கெட் வாங்கிப்போடற காசளவுக்காவது உதவுனா தேவல....//

அண்ணா ரொம்ப நல்லா பதிவு அண்ணா.. நன்றி.. சங்கர் அண்ணா சொல்ற மாதிரி "பின்னூட்டம்தான் ரெண்டு மூணு வார்த்த.. ஆனா பதிவு.ம்ம்ம்.:))"

கமலேஷ் said...

ஒரு ரொம்ப நல்ல விஷத்தை ரொம்ப நகைசுவையோடு சொல்லி இருக்கீங்க...நல்ல பகிர்வு நண்பரே வாழ்த்துக்கள்...

கருணையூரான் said...

இன்றுதான் உங்கள் வலைக்கு முதல் வந்தேன் ..அருமையான கருத்துக்கள்...வாழ்த்துகள் ..தொடர்ந்து இணைந்திருப்பேன்

அண்ணாமலையான் said...

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திவ்யாஹரி.

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி கமலேஷ்

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷம் கருணையூரான் அவர்களே..

ஜோதிஜி said...

அக்கறை என்பதை முதன் முதலாக உங்கள் எழுத்துக்கள் மூலம் மொத்த சிந்தனைகள் வாயிலாக, வந்த பின்னூட்டங்கள் பதில் அளித்த பாங்கு என்று மொத்தத்திலும் அண்ணாமலை போலவே உயரத்தில். வாழ்த்துகள் தலைவா நண்பா தோழா சக மனிதா,

அண்ணாமலையான் said...

வாங்க ஜோதி ஜி உங்களோட வருகைக்கும், அருமையான, மிக நாகரீகமான மற்றும் அன்பான கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.... உங்க கருத்தே சொல்லுது நீங்க ரொம்ப ஈர மனசுக்காரர்னு... எனக்கு நம்பிக்கையிருக்கு... ரொம்ப சந்தோஷம்...

«Oldest ‹Older   1 – 200 of 374   Newer› Newest»

Post a Comment