நீங்களும் ஹீரோதான்..

வணக்கம் தோழர்களே.  எல்லாரும் நல்லாருக்கீங்களா? நீங்க யாராவது பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ,  ஸ்ரீலஸ்ரீ இத்யாதி விருது எதாவது, நீங்க அறிஞ்சோ அறியாமலோ, தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச எதுக்காவது (உதா: தலைவன்(ர்) வாழ்கன்னு கத்திருந்தா கூட போதும்) இந்த வருஷம் வாங்கிருக்கீங்களா? அப்டி யாராவது ‘வாங்கி’யிருந்தா சொல்லுங்க, சந்தோஷத்த பகிர்ந்துக்கலாம். ஏன்னா, இந்த உலகத்துல இப்பலாம் எத வாங்கறதுனாலும் ரொம்ப ஈஸி, காசே இல்லன்னாலும் கையெழுத்துக்கு தருவாங்க...  ஆமாங்க, பொண்டாட்டியே கையெழுத்துல சேந்துக்கறா, பிரிஞ்சுடறா..!!? (யார் கூட வேனுன்னாலும், சம்மந்த பட்டவங்களும், ஜட்ஜும் போடற கையெழுத்தால!) அது மட்டுமில்லேங்க, உங்களை எப்படி எதாவது வாங்க வைக்கறதுங்கற வித்தைல  எல்லா யாவரிங்களும் (அரசியல் யாவாரம் உட்பட) தலகீழா நின்னு தண்ணி குடிச்சவங்க.. எப்டி இருந்தாலும் கடேசில ஏமாளி நீங்கதான்..

இன்னிய நெலமைக்கி நீங்க கடைத்தெருவுக்கு குடும்பத்தோட போனா திரும்பி வரும் போது, நீங்க பல முக்கியமான நேரம் கவனமா இருந்த, உங்க அளவான குடும்பத்துல ஒரு டிக்கெட் கூடியிருந்தா கூட ஆச்சரியமில்லே.. அந்தளவுக்கு உங்கள ஏமாத்தி எதயாவது உங்கள்ட்ட வித்துர்றதுதான் அவங்க சாமர்த்தியம்.  ஒரு உதாரணம் பாருங்க, “யானை வாங்குனா பூனை ஃப்ரீ”, அப்டின்னு ஒரு விளம்பரம் வந்தா, கூட்டத்த கட்டுபடுத்த மிலிட்டரி தான் வரனும்.. ஏன்னா, யானைக்கும் பூனைக்கும் என்ன சம்மந்தம்?, வாங்குனா என்ன பிரயோஜனம்? அப்டின்னு யாரும் யோசிக்கறதுல்ல.. ஃப்ரீ அவ்ளோதான்! வுழுந்தடிச்சி ஓடி வாங்கிட வேண்டியது.. பாக்கிய அப்புறம் பாத்துக்கலாம்னு.. அப்புறம் பாத்தாதான் தெரியும்,  யான கக்கா போனா கூட அத பக்காவா க்ளீன் பன்ற தளவாடமெல்லாம் அதே கம்பெனிலதான் வாங்கி தொலையனும்னு.. அதும் அவங்க சொல்ற விலைக்கி.. இப்டி நீங்க நொந்துகிட்டிருக்கும் போதுதான் அந்த ஃப்ரீ பூனை மியாவ் மியாவ்ன்னு (ஸ்ரேயாவ நெனைக்காதீங்க) இடுப்புல பொறாண்டும்.. என்னன்னு பாத்தா, சாப்புட எலியும், சைட் டிரிங்ஸ்சா பாலும் கேக்கும். அதயும் பாத்தா அந்த கம்பெனிதான் தயாரிக்கும்...  “எப்பவும் குடிங்க ஏழரைப்பால்”னு அதுக்கு விளம்பரம் வேற..! சரி பால்தானேன்னு வாங்க போனா அங்கதான் உங்களுக்கு ஏழரை ஆரம்பிக்கும்....  பால் கம்பெனில வாயெல்லாம் பல்லா, ரெகுலரா 6 வருஷத்துக்கு காண்ட்ராக்ட் போட்டாத்தான் வாங்கலாம்னு தலயில கல்ல போட்டு  சொல்வாங்க.. (பூனை அத்தன வருஷம் இருக்குமா? இருந்தாலும் நம்மளோடயே இருக்குமா? அப்டியே இருந்தாலும் நாம இருப்போமா?) இத மாதிரி (வாங்கறப்ப வராத) சனியன் புடிச்ச சந்தேகம்லாம் இப்பத்தான் வரும்.

இன்னும் சில பேரு, 300 ரூவாய்க்கு 35000 பொருளுன்னு ஒரு நல்ல ஞாயித்துகிழமையா விளம்பரம் கொடுப்பான் (அதயும் இந்த பேப்பர் காரங்க இலவச இனைப்புல போட்டு நம்மள ஏமாத்துவாங்க)... நம்ம பொது ஜனம் எல்லா சாமானயும் எண்ணி வாங்க கூட நேரமில்லாம அடிச்சி புடிச்சி வாங்கிட்டு போவாங்க.. அப்புறம், செய்கூலி இல்ல, சேதாரம் இல்லன்னு தமுக்கடிச்சி சொல்றவங்க, சொல்லாம விடறது தரமும் இல்லங்கறதுதான்...  மேலும், சில ஓட்டல் காரங்க திருவிழா நடத்துவாங்க, புளி கொழம்பு காரம், புன்னாக்கு   வாரம் அப்டின்னு.. அங்கனயும் அடிதடிதான்.  சில இடத்துல 32 அடி தோசையும் 6 வாளி சாம்பாரும் ஐநூறே ரூவாதான்னு வாய்க்குள்ளயே ஆசைய அலய வுடுவாங்க.. ஏன், எதற்கு, எப்படின்னு எவன் சொன்னாலும் யோசிக்காத நம்ம மஹா ஜனம் எல்லா இடத்துலயும், காவல் துறையே வந்து கூட்டத்த கட்டுப்படுத்துனாலும்  அந்த கூட்டத்துல முட்டி மோதி வெற்றி வாகை சூடிடும்...

இப்பலாம் சினிமா போறதுன்னா கேக்கவே வானாம், தனியா போனா ஒரு நாள் சம்பளமும், குடும்பத்தோட போனா ஒரு வார சம்பளமும் நிச்சய காலி... கூடவே மருத்துவ செலவு வேற.. (தியேட்டர்ல விக்கற தின்பண்டங்கள்,  படத்தால வர தல வலி அப்புறம் இந்த ரசிக குஞ்சுகள் போடற கூச்சலால வர காது வலி எக்ஸ்ட்ரா..) இதில்லாம போற வர ரோடெல்லாம் இந்த மிக்ஸி வாங்குங்க, பைக் வாங்குங்க, முடிஞ்சா பரலோகத்துக்கு டிக்கெட் வாங்குங்கன்னு ஒரே விளம்பர பேனர் தொல்ல..

சரி, வீட்டுலயாவது நிம்மதியா இருக்கலாம்னா அங்கயும் டிவி வழியா வந்து. “இந்த மாத்திரய போடுங்க, ராத்ரி பூரா ஜோருங்க”னு. (ராத்ரி பூரா ஜோருனா காலயில? டர்ர்ருதானா?).  ஏன் இப்டி தொரத்தி தொரத்தி மக்கள வாங்கறதுக்கு தூண்டறாங்க? பொருளாதாரம் வளந்துடுச்சா? இல்லியே.. (இன்னும் 50%-60% சதவீத நம் மக்கள் நல்ல தண்ணிருக்கும், உணவுக்கும் நாயாதான் அலயுறாங்க) அப்புறம்? உலகத்துல அதிகளவு நுகர்வோர் இருக்கற நாடு நம்மளுது, அது மட்டுமில்ல, மிக பரந்த ஏரியாவுல அமைஞ்ச நாடுங்கறதால வித்தவன தேடுறது கஷ்டம், விற்பனைக்குப் பின்னான சேவைகளை பத்தியும் அதிகளவில் தெரியாதுங்கறதாலயும், உலகத்துல எங்க, எத தயாரிச்சாலும், அந்த குப்பைய கொட்டி காசாக்க முதல்ல நம்ம நாட்டத்தான் தேர்ந்தெடுக்கறாங்க..   பாருங்க பாதி ஜனத்தொகைக்கு ஒரு வேள சோத்துக்கே வழியில்லன்னு சர்வே சொன்னாலும், அம்பத்தஞ்சு கோடி செல் கனெக்‌ஷன்  வச்சுருக்கற நாடு நம்ம தாய் நாடுதான்.. ஏன்னா சோத்துக்கே வழியில்லன்னாலும் சூ வுக்கு போட சந்தன சோப்பு கேக்கற ஆளுங்கதான் நம்ம பயளுவ.

நம்மாளுங்க நெறய பேரு இன்னிக்கு கொறஞ்சது ஒரு நாளக்கி நூறு ரூவாயிலேருந்து(ஃப்ரீ) , ஆயிரம் ரூவாய்க்கும் மேல சம்பாதிக்கறாங்க. ஆனா அத எப்படி செலவு பன்றாங்க? யோசிச்சு பாத்தா பாதிக்கும் மேல வேஸ்ட்டா தான் இருக்கும்..  டிவி வச்சிருக்கவங்க, எல்சிடி டிவி, எல்ஈடி டிவி அப்டின்னு பல டிவிக்கள பெருமைக்கு வாங்கி சுவத்துல மாட்டுனாலும், அதுல வழக்கம் போல அண்ணன்-தம்பி டிவி கம்பெனியோட விளம்பரக்காரன் தான் வந்து வாஆஆஆடான்னு கத்தி எவனுமெ வராத தியேட்டருக்கு கூப்புடுவான்...  இத மறந்துட்டு, எல்லாரும் பட்ஜெட்ல  ஆஃபர், மந்திரி வார்த்தை சூப்பர்னு வருஷா வருஷம் ஏமாறது மட்டுமில்ல,  தொனக்கி நண்பர்களயும் இழுத்து கொல்லயில  விடுவாங்க... இத மாதிரி பல உதாரணம் சொல்லலாம்..

ஒரேயொரு வழில வருமானம் வாங்கிக்கிட்டு, நாம ஒவ்வொரு வருஷமும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூவாய்க்கி நம்ம இந்தியாவுல பிரமாதமான யாவாரம் பன்றோம். எல்லாம் நான், நீங்க  சேந்து செஞ்சது...  இப்டி எக்கச்சக்கமா கண்டது, கேட்டதையெல்லாம் வாங்கறோம், இன்னும் பல வழில நாம சம்பாதிக்கற பணத்த செலவு பன்றோம்.. பணத்த மட்டுமல்ல நேரத்தையும் கூட தான்.. எதெதுக்கோ காலத்தையும், காசையும் செலவழிக்கற நாம சுத்தமா மறந்துட்டது ஒன்னு இருக்கு. அது? அதுக்கு காரனமும் பணமும், மனசு மறத்து போனதும்தான்.......

நம்ம இந்தியாவுல கடேசி இனம் வறுமை கோட்டுக்கு கீழே இருக்கறவங்கதான்.. ஆனா அவங்களுக்கும் அடுத்து ஒரு இனம் அரசாங்க கணக்குலே வராம இருக்கு தெரியுமா? அவங்கதாங்க ஆதரவற்றோர், அநாதைகள், மன நலமில்லாமல் பெற்றோர், உறவினரால் கைவிடப்பட்டு தெருவில் அலைபவர்கள் மற்றும் மனசாட்சி இல்லாம கைவிடப்படும் முதியோர்கள். சின்ன சின்ன தளிர் குழந்தைகள், முதியோர்கள் இரண்டு வகையினரும் எதிர்பாக்குறது என்ன? காசோ, நல்ல சுவையான உணவோ, உடையோ இல்ல.. அன்பு... அன்பு ஒன்னுதான்... இன்னிக்கி ஆதரவற்றோர், அநாதைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அப்டிங்கற விஷயம் பெரிய அளவுல இருக்கறதுக்கு காரனம் நாம  பொறுப்பற்றதனமா இருக்கறதுதான்.. நம்ம எல்லாருமே ஏதோ ஒரு வகையில இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருக்கிறோம்...

அதெல்லாம் கிடையாது நான் எப்பவுமே மாச சம்பளத்துல 2% இந்த மாதிரி விஷயங்களுக்கு ஒதுக்கிடுறேன்னு சொல்றீங்களா? அப்டி நீங்க ஒதுக்கறத பதுக்கத்தான் பல பேரு ரெடியா இருக்காங்கன்னு ஞாபகம் வச்சுக்கங்க...  அப்டி நீங்க ஒதுக்கறது கூட டாக்ஸ் ஃப்ரீயானு உங்க சுயநலம் பாத்துதானே? அது மட்டுமில்லே கடைதெருவுலயோ, கார் நிக்கற சிக்னல்லயோ கடமைக்கு சில்லறையோ, ஒர்ரூவாயோ தூக்கி போட்டுட்டு தர்மம் தல காக்கும்னு நம்பிக்கிட்டு போறவங்களும் தப்புதான் பன்றீங்கன்னு புரிஞ்சுக்குங்க... ஏன்னா பிச்சை எடுக்கறதுக்குன்னு பல கொழந்தகள கடத்தறாங்கன்னு. கொழந்தகள இழந்த அந்த பெற்றோர்கள் பாவம் இல்லியா? இதெல்லாம் யோசிக்காம நம்ம தல தப்புனா போதுன்னு சில்லறயில புண்னியம் தேடுறோம் நாம..

இந்த முதியோர்கள் இருக்காங்களே அவங்க நெலம ரொம்ப மோசம்.. யாருமே இல்லாம இருக்கறவங்கதான் அநாதங்க, (யாரோ யாரோடயாவது சேந்தாத்தான் கொழந்த பொறக்கும், அப்புறம் எப்டி அநாத? பொறுப்ப தட்டிக் கழிச்சிட்டு போற மனிதம் செத்த பெற்றோர்கள் செய்யற வேல அது) ஆனா பாருங்க, எல்லாரும் இருந்தும் பாத்துக்கற பொறுமையும், அன்பும், கடமயும் மறந்துட்டு சில ஆயிரம் ரூவாய இல்லத்துல கட்டிட்டு பெற்றோர்கள தவிக்க விட்டுட்டு போறாங்களே, அவங்கள என்ன செய்யறது? அந்த அன்ப மறந்த வாரிசுகள நெனச்சே எவ்வளவோ பெரியவங்க உயிர விட்டுருக்காங்க..  ஏக்கமே உயிர கொல்லுங்கறதுக்கு சாட்சியா எத்தன உயிர்  போயிருக்கு தெரியுமா?

குப்ப தொட்டியிலே போட்ட கொழந்தங்க, திருடிட்டு வந்து பிச்ச எடுக்க வைக்கற புள்ளங்கனு, இப்டி லட்சக்கணக்கான இளம் தளிர்கள் வெயில்லயும், மழையிலயும் தெருவுல வெறும் சில்லறை காசுக்காக திரியறாங்கன்னு யாராவது நெனச்சி பாத்திருக்கீங்களா?  நம்ம வூட்டு புள்ளங்களுக்கு நம்மளால முடிஞ்ச அளவுக்கு கேட்டது, கேக்காததுன்னு வாங்கி கொடுத்து அழகு பாக்குற நாம, இந்த மாதிரி தெருவுல திரியற கொழந்தகள பத்தி ஈஸியா எடுத்துகிட்டு போறோமே ஏன்?

“யோவ் உனக்கு வேற வேலயில்ல, இதே மாதிரி எல்லா விஷயத்துலயும் எதாவது கொற கண்டு புடிச்சுட்டே இரு, அவ அவனுக்கு ஆயிரம் வேலயிருக்கு, நாங்க முடிஞ்ச அளவுக்கு திருப்பதிக்கு வருஷா வருஷம் உண்டியல்ல போட்டுர்றோம்”  அப்டின்னு சட்னு சொல்லிட்டு போய்டாதிங்க தோழர்களே... நம்ம எல்லாருக்கிட்டேயும் மனசாட்சி இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கு. அதனால முடிஞ்ச அளவுக்கு உதவி பன்னுங்க.. உதவின்னதும் தர்மமோ, டொனேஷனோ இல்ல..

பச்ச கொழந்தகள எங்க பாத்தாலும், அவங்க உண்மையிலே பிச்ச எடுக்கற சூழ்நிலயிலயோ அல்லது வேல பாத்து சாப்புடற நெலமயிலொ இருக்காங்களான்னு தெரிஞ்சுக்குங்க.  தெரிஞ்சுக்கிட்டு உங்க அளவுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அத தயங்காம, புண்னிய பாவம் எதிர் பாக்காம செய்யுங்க..  அப்டி யாரையுமே நான் பாத்ததுல்லன்னு சொல்றவங்க ஏழ பாழைங்க ளோட கொழந்தைகள படிக்க வைக்க எதாவது ஒரு உதவி பன்னுங்க... டிவி, பேப்பர், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட்ல எவ்வளவோ கொழந்தைகள காணவில்லனு விளம்பரம் வருது, அந்த பெற்றோருக்கு எதாவது துப்பு கொடுத்தீங்கண்னா கூட பெரிய உதவிதான்....(அப்டி தொலச்சவங்க மன நிலய எண்ணி பாருங்க... நம்மூட்டு செல்லங்க, கிழிஞ்ச சட்டயோட தெருவோரத்துல கையேந்துனா எப்டியிருக்கும்? கற்பனையே ஹார்ட் அட்டாக்க வரவழைக்குதுல்ல?)

அநாதைகள் அப்டிங்கற வார்த்தைய நாம நெனச்சா ஒழிச்சிரலாம்.  ஏன்னா உருவாக்குனதே நாமதான்.. ஆட்டுக் குட்டிக்கு நாய் பால் கொடுக்குது, கொரங்கு பூனக்குட்டிய வளக்குது, இதெல்லாம் பேப்பர்ல பாத்துட்டு பிஸ்கெட் தின்னுட்டு போய்டறோம். அப்ப ஆறறிவு உள்ள நம்மளால நாலு புள்ளங்கல எந்த எதிர் பார்ப்பும் இல்லாம வளத்து ஆளாக்க முடியாதா? மனசு வச்சா முடியும்.

அது மட்டுமல்ல, 2000 ரூவாயிலேருந்து 200000 வரைக்கும் விக்கற வகை வகையான நாய்க்குட்டிகள வாங்கி, அதுக்கு ஜலுக்கா, புலுக்கான்னு ஏதோ ஓர் பேர வச்சி கொஞ்சி குலாவர நெறய பேர், தெருவோர புள்ளைங்களுக்கு, எதோ அந்த நாய் குட்டிக்கு பிஸ்கெட் வாங்கிப்போடற காசளவுக்காவது உதவுனா தேவல....

வயதானவர்கள் இருக்கற முதியோர் இல்லத்துலயும், ஆதரவற்றோர் மற்றும் அநாதை விடுதிகளிலும் இருக்கறவங்க நல்ல சொகுசா இருக்கறாங்களா? இல்ல. எதோ சாப்பாடு கெடச்சாலும் நிம்மதியும், அன்பும் எதிர் பாத்து,  கெடைக்காம வாழ்க்கைய முடிவுக்கு கொண்டு வர  போராடிக்கிட்டிருக்கவங்கதான்  அங்க இருக்காங்க....

நண்பர்களே, உங்களால எந்தளவுக்கு முடியுமோ அத்தன உதவிகளும் செய்யுங்க,, ஆனா நேரடியா செய்யுங்க... இன்னிய தேதிக்கு நாம நம்மளோட வருஷ சம்பளத்துல ஒரு சில நாள் அல்லது ஒரு நாள் ஊதியத்த, சரி வேனாம் அதுல பாதிய செலவு பன்னா கூட அது பெரிய உதவிதான். பாருங்க, சாராய காசு தான் நம்ம நாட்டோட பட்ஜெட்டுக்கு முதுகெலும்பா இருக்குது.. யாரு காசு அது? எல்லாம் நம்ம கொடுத்ததுதான்.. இப்டி பற்பல வழில நாம அழிக்கறதுல ஒரே ஒரு துளி நம்மை போன்ற சக மனிதர்களுக்கு செலவிடலாமெ? அப்டி செலவு பன்ன நெனச்சா, டி.டி. எடுத்து அனுப்பறத விட நேர்ல குடும்பத்தோட போங்க, (தயவு செய்து ப்ரட், பிஸ்கெட் வாங்கிட்டு போறத தவிருங்க, ஏன்னா எல்லாரும் அதயேதான் வாங்குறாங்க, அதனால தேவை என்னன்னு கேட்டு செய்யுங்க)  நாலு வார்த்த அவங்களோட அன்பா பேசுங்க, அப்ப அவங்களுக்கு கிடைக்கிற சந்தோஷம்தான் உங்களுக்கு கிடைக்கிற புண்ணியம்... முக்யமா உங்க புள்ளங்களுக்கு, மத்தவங்களுக்கு உதவறது முக்யம், நல்ல விஷயம்னு கத்து கொடுங்க.. இதோ இப்ப கூட இந்த பதிவ படிக்க எதோ ஒரு ப்ரவுசிங் செண்ட்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கற காச கூட வருஷத்துக்கு ஒரு தடவ உங்க கண்ல படற யாருக்காவது உதவியா செஞ்சா கூட போதும்.  எங்கிட்ட காசு இல்ல நான் கூலிக்கு வேல செய்றேன், ஆனா எப்டி உதவி செய்யறதுன்னு கேக்கறவங்களுக்கு, காசு கொடுத்தலோ, அறுசுவை உணவு போட்டாலோ உதவி இல்லங்க, அன்பா, ‘நல்லாருக்கீங்களான்னு’ ஒரு வார்த்த கேட்டா கூட போதும், இத மாதிரி கேக்க ஆளு இல்லாம இருக்கறவங்கதான் இவங்கெள்லாம்..

இதெல்லாம் வாரமோ, மாதமோ போக வேண்டியதில்ல குறைந்த பட்சம் வருஷத்துக்கு ஒரே ஒரு முறையாவது போய் அவங்களுக்கு சந்தோஷம் தந்து உங்க நிம்மதிய கூட்டிக்குங்க... இப்டி விடுதியோ, அநாத ஆஸ்ரமமோ தேட முடியாது / எங்ல ஏரியாவுல இல்லன்னு சொல்றவங்க ஏழ புள்ளங்களுக்கு கல்வி அறிவ கொடுக்க உதவி பன்னுங்க,, பணம் தரலேன்னாலும் ஓய்வு நேரத்துல பாடம் சொல்லி கொடுத்தா கூட போதும்..

அறியாமைய போக்கவும், அன்ப போதிக்கவும்  நம்மாளான முயற்சிகள எடுக்கலாம்.  நாம ஒரு பைசா கூட செலவு செய்யாம நம்ம உடலுழைப்பாலே நாலு பேருக்கு உதவலாம். ஒரு பைசா நமக்கோ, நண்பர்களுக்கோ பிரயோஜனப்படாத, யார் யாருக்கோ கருப்பு பனமா போய் சேர கூடிய பல விஷயங்கள பத்தி  வெட்டியா பேசி பொழுத கழிக்கற நேரம்,  கொஞ்சம் ஆக்க பூர்வமா கருனையோடு செயல் பட்டா, நாளய இந்தியா, நிச்சயம் வல்லரசா மாறலேன்னாலும் மனிதர்களும், மனிதமும் நிறைந்ததா மாறும்... என்றும் உலகளவில் உன்னதமான இடம் பிடிக்கும்.... அதுக்கான மொத அடிய நீங்க ஒவ்வொருவரும் எடுத்து வச்சீங்கன்னா.. மெய்யாலுமே “நீங்களும் ஹீரோதான்”.   


ஆகிடுவீங்கள்ல?









374 comments:

«Oldest   ‹Older   201 – 374 of 374   Newer›   Newest»
ஜெய்லானி said...

நமது பேராசைகளை அவர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அவசியமில்லாததை வாங்காவிட்டால் எல்லாம் தானே சரி ஆகிவிடும்.

அண்ணாமலையான் said...

வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

அன்பு வணக்கம் உயர்திரு. அண்ணாமலையான்,

//அநாதைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அப்டிங்கற விஷயம் பெரிய அளவுல இருக்கறதுக்கு காரனம் நாம பொறுப்பற்றதனமா இருக்கறதுதான்.. நம்ம எல்லாருமே ஏதோ ஒரு வகையில இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருக்கிறோம்// என்று மிக அருமையாக சொன்னீர்கள்.

மகாத்மா மிக அழகாக் சொல்லியிருப்பார், இரண்டு சட்டை போதுமெனில் மூன்றாவதை எடுக்காதே என்று. அந்த மூன்றாவதை தான் எடுக்காத பட்சத்தில் இல்லாதவனுக்கு ஏதேனும் ஒரு வழியில் சென்று சேரும்.

//கைகட்டி இருப்பதால் நான் விவேகானந்தரில்லை// என்றீர்கள் தோழரே; விவேகானந்தரின் மூலக் கருத்தும் நீங்கள் காக்க நினைக்கும் மனிதம் தான். அருமை என்று வார்த்தையில் சொல்லி பயனில்லை. இத பதிவிற்கு உயர் மதிப்பு செய்யும் விதத்தில் ஊர் செல்கையில் குறைந்தது ஐம்பது ஆதரவற்றவர்களுக்காவது ஒருவேளை உணவு வாங்கித் தந்துவிட்டு; நீங்கள் இட்ட பதிவால் கொடுத்தேன் என சொல்லி வருகிறேன்.

மிக உயர்வான சிந்தனை. இதை சொல்லத் தான் நானும் இத்தனை புத்தகங்களை எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாகவே எனக்கொரு பழக்கமுந்து, அங்ஙனம் யாரையேனும் தெருவில் காண்கையில் அழைத்து உணவு வாங்கித் தருவதும், இயலாதோருக்கு பணம் கொடுத்து உதவுவதும் வாலிபத்தில் பிச்சை கேட்போரை உழைக்க சொல்லி வலியுறுத்துவதும் உண்டெனினும்;

உலகம் செல்லும் பாதையிலிருந்து திரும்பி, ஆதரவற்ற ஒரு உலகை தன்னோடு அனைத்துக் கொண்ட ஒரு உயர்ந்த பதிவு. வாழ்க; வளர்க!

இயலுமாயின் ஒரு சிற்றோலை போல் அச்சடித்து டம்பமடித்து நடத்தும் ஆடம்பர விழாக்களில் கொடுக்க முயலுங்கள். எவருக்கேனும் குத்தி உரைத்ததில் (எனக்குப் போன்று) இரண்டு ஏழை பாழைக்கு சோறு கிடைக்கட்டும்!

வித்யாசாகர்
குவைத்

அண்ணாமலையான் said...

வாங்க வித்யா சாகர்.. உங்க வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி,,, வித்யாசாகரின் எழுத்துப் பயணம் மிக சிறப்பாக இருக்கட்டும்

Anonymous said...

நன்றி நல்லாஎழுதியிருந்தீங்க...
உலகமயமாக்கல் என்ற ஒன்று நம்முடைய வாழ்வுரிமையை நம்மைவைத்தே பறித்துக்கொள்கிறது.

கண்மணி/kanmani said...

ரஜினி வருடத்துக்கு ஒரு படம் தருவது போல மாசம் ஒரு பதிவுன்னாலும் பெர்ர்ர்ர்ர்ரிய பதிவாவும் அதே நேரம் சமூக விழிப்புணர்வோடும் போட்டுடறீங்க.கீப் இட் அப்

அண்ணாமலையான் said...

வாங்க இந்திராகிசரவணன்... உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி கண்மணி...

எறும்பு said...

பதிவ விட பின்னூட்டம் படிக்க நேரம் ஆயிடிச்சு... கலக்குங்க...
:)

அண்ணாமலையான் said...

ரொம்ப நன்றி எறும்பு.. பொண்ணு எப்டி நலமா?

மதன் said...

தல உண்மைலயே இப்ப நமக்கு தேவை ஒரு மனமாற்றம் அந்த மாற்றம் எப்படி இருக்கணும்னு ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க, நாலு பதிவு போட்டாலும் நச்சுனு போடுறீங்க உண்மையா நாம கஸ்ட பட்டு சம்பாரிக்ககிர பணம் எந்த நாட்டுகாரனுக்கோ நம்ப பகட்டு வாழ்க்கையால போகுது நிச்சயம் அத தடுக்கணும்.

இன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துகள்.

அண்ணாமலையான் said...

வாங்க டுபாக்கூர்கந்தசாமி வருகைக்கு நன்றி... உண்மையா ஓப்பனா சொன்னதுக்கு சந்தோஷம்....

ஆர்வா said...

அடங்கேப்பா.... அனுபவம் பயங்கரமா விளையாடி இருக்கே..

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷம் கவிதை காதலன் உங்க வருகைக்கும், கருத்துக்கும்...

ராமலக்ஷ்மி said...

அருமை. இறுதியாய் சொல்லியிருப்பது எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டியது.

அண்ணாமலையான் said...

வாங்க மேடம் உங்க வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

Anonymous said...

ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க.வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

வாங்க Ammu Madhu .. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

பித்தனின் வாக்கு said...

ரொம்ப லேட்டா படிக்கின்றேன். மிக அருமையான பதிவு. முயற்ச்சி செய்கின்றேன். உதவுவதற்கு. நன்றி.

அண்ணாமலையான் said...

வாங்க சார். உங்க நல்ல மனசுக்கு நன்றி...

prabhadamu said...

அண்ணா உங்கலுக்கு நகைச்சுவையும், நல்ல கற்ப்பனை சக்தியும் இருக்கு வாழ்த்துக்கள். நல்ல பதிவு.

அண்ணாமலையான் said...

வாங்க prabhadamu உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி....

பத்மநாபன் said...

அண்ணாமலையாருக்கு நன்றி , நன்றி .. தொடர்ந்து பின்னூட்ட சதம் - வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

எல்லாம் நீங்களும், நண்பர்களும் போட்டதுதான்... ரொம்ப நன்றிங்க....

தோழி said...

//இன்னிக்கி ஆதரவற்றோர், அநாதைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அப்டிங்கற விஷயம் பெரிய அளவுல இருக்கறதுக்கு காரனம் நாம பொறுப்பற்றதனமா இருக்கறதுதான்..//

நிட்சயமாங்க...

//நாம ஒரு பைசா கூட செலவு செய்யாம நம்ம உடலுழைப்பாலே நாலு பேருக்கு உதவலாம்.//

செய்துட்டு இருக்கோமுங்க இன்னும் செய்வோமுங்க...

இப்படி நகைச்சுவையா சிந்திக்குற மாதிரி சொன்ன யாருக்கும் செய்யணும் என்ற மனநிலை வருமுங்க...

எல்லோரும் வரவேற்று நடைமுறை படுத்த வேண்டிய பதிவுங்க...

நல்ல ஒரு பதிவ வாசித்த திருப்தியுடன் உறங்க செல்கிறேங்க....

கொஞ்ச நேரம் என்றாலும் எல்லோரையும் சிந்திக்க வைத்து சுட்டீங்க..அதுவே உங்களுக்கு பெரிய வெற்றிங்க...

அண்ணாமலையான் said...

வாங்க தோழி, உங்க கருத்துக்கு மிக்க நன்றி... மத்தவங்களுக்கு உதவனும்னு சொல்ற பதிவ ஆதரிக்கும் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க....

Athiban said...

மிக அருமையான இடுகை...

Menaga Sathia said...

உங்களால் எப்படி இவ்வளவு பெரிய பதிவு எழுத முடிகிறது.ரொம்ப நல்ல பதிவு,அவசியமான பதிவும் கூட....வாழ்த்துக்கள் சகோ!!

Nathanjagk said...

முழுசா படிக்க​லே! ​மொத 2 பாராவும் க​டைசி பாராவும் படிச்​சேன். சூப்பரு, அரு​மை, கலக்கல்!

அண்ணாமலையான் said...

வாங்க தமிழ்மகன், உங்க வாழ்த்துக்கு நன்றி..

அண்ணாமலையான் said...

வாங்க Mrs.Menagasathia ரொம்ப லேட்டா வந்துருக்கீங்க.. உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி....

அண்ணாமலையான் said...

வாங்க ஜெகநாதன் சார்... உங்க பாராட்டுக்கு நன்றி...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படித்தேன்..ரசித்தேன்..சிரித்தேன்...சிந்தித்தேன்..
அத்தனையும் தேன்...தேன்..தேன்...

அண்ணாமலையான் said...

வாங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி மிக சிறப்பா உங்க கருத்த பதிவு செஞ்சிருக்கீங்க நன்றி....

Muruganandan M.K. said...

"ஆதரவற்றோர், அநாதைகள், மன நலமில்லாமல் பெற்றோர், உறவினரால் கைவிடப்பட்டு தெருவில் அலைபவர்கள் மற்றும் மனசாட்சி இல்லாம கைவிடப்படும் முதியோர்கள். சின்ன சின்ன தளிர் குழந்தைகள், முதியோர்கள் ..." பற்றி எடுத்துக் காட்டியது முக்கியமானது. பலரது கண்களைத் திறக்கும் என நம்பலாம்.

அண்ணாமலையான் said...

வாங்க Dr.எம்.கே.முருகானந்தன் உங்க வருகையும் கருத்தும் இந்த பதிவுக்கு மேலும் வலு சேக்குது.... மிக்க நன்றி

Chitra said...

அறியாமைய போக்கவும், அன்ப போதிக்கவும் நம்மாளான முயற்சிகள எடுக்கலாம். நாம ஒரு பைசா கூட செலவு செய்யாம நம்ம உடலுழைப்பாலே நாலு பேருக்கு உதவலாம்.

.......... Good principle. நீளமான பதிவு. வாழ்த்துக்கள்!

Pavi said...

பச்ச கொழந்தகள எங்க பாத்தாலும், அவங்க உண்மையிலே பிச்ச எடுக்கற சூழ்நிலயிலயோ அல்லது வேல பாத்து சாப்புடற நெலமயிலொ இருக்காங்களான்னு தெரிஞ்சுக்குங்க. தெரிஞ்சுக்கிட்டு உங்க அளவுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அத தயங்காம, புண்னிய பாவம் எதிர் பாக்காம செய்யுங்க..

உண்மை தகவல்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள் . அருமையான பதிவு

Anonymous said...

சூப்பர் பதிவு.அண்ணா.நீங்க எழுத்தியவிதம் ரெம்ப பிடிச்சிருக்கு.
நீண்ட இடைவெளி வேண்டாமே. அடிக்கடி எழுதுங்கள்.

Praveenkumar said...

தெளிவான விளக்கத்துடன்.. நகைச்சுவையை சோ்த்து எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் ரொம்ம எளிமையா எழுதி, ஆழமாக யோசிக்க வைச்சிட்டீங்க...சார். இன்றைய பரபரப்பான கால கட்டத்தில் மிகவும் அவசியமான பதிவு என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் சார்.(நான் பார்த்திலேயே...100 ஓட்டுகளை பெற்றுள்ள வெற்றிகரமான ஓரே பதிவு)

புல்லட் said...

சேர் நீங்க பதிவு போட்டது தெரிாயாமப்பொட்டுது.. கடைசி ப்ந்தில கரைச்சுட்டிங்க.. வதழ்த்துக்கள் வாழ்த்துகள்ள..இனி நானும் ஹீரொவாக ட்ரை பண்றென்..

பிந்தி தெரிஞ்சதால ஒரு சந்தோசம்.. தமிழிசில 100 வது ஓட்டுப்போடும் வாய்ப்பு கிடைச்சது.. வாழ்த்துக்கள்..

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி Pavi உங்க கருத்துக்கு...

அண்ணாமலையான் said...

வாங்க பிரவின்குமார் உங்க கருத்து வருகை ரெண்டுக்கும் நன்றி....

அண்ணாமலையான் said...

வாங்க புல்லட் சந்தொஷமா நீங்க போட்ட 100 ஓட்டுக்கு மிக மகிழ்ச்சியான நன்றி... பதிவோட நோக்கம் நல்ல படியா நிறைவேறுனா இன்னும் சந்தோஷம்தான்..

அண்ணாமலையான் said...

வாங்க shanthiya உங்க கருத்துக்கு நன்றி... கிடைக்கிற நேரம் மற்ற பதிவுகளை படிக்கவே சரியாக இருக்கிறது... நிறைய எழுதுவதை விட நிறைவான பதிவிடவே விருப்பம்... சரியா?

மர்மயோகி said...

பயனுள்ள பதிவு..நாய்களுக்கு கொடுக்கும் மரியாதைகூட மனிதர்களுக்கு கொடுக்க மறுக்கும் - அரைகுறை ஆடை - நவ நாகரீக மங்கைகளும், முக்கால் பாண்ட் இளைஞர்களும் உணர்வார்களா?

அண்ணாமலையான் said...

சந்தேகம்தான்... ஆனா உழுந்திருக்கற ஓட்ட பாத்தா ஏதோ ஒரு மாற்றம் வரும் போல தெரியுது... மொத்தத்துல நல்லது நடந்தா சந்தோஷம்தான்.. சரியா மர்மயோகி?

இமா க்றிஸ் said...

அண்ணாமலையான்,
'நீ... ளமா இருக்கு,' என்று தோன்றினாலும் மூடிவிட்டுப் போக முடியாதபடி இருந்தது உங்கள் இடுகை. முழுவதும் படித்து முடித்து விட்டேன். ;) யோசிக்கிற மாதிரி எழுதுறீங்க. பாராட்டுக்கள்.

வந்ததுக்கு உங்க ஸ்டைல்ல ஒரு வரி சொல்லிட்டுப் போறேன்,
'கலக்குங்க' :)

அண்ணாமலையான் said...

வாங்க இமா. உங்க வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி...

கோமதி அரசு said...

நல்ல பதிவு.

//அறியாமைய போக்கவும்,அன்ப போதிக்கவும்,நம்மாளான முயற்சிகளை எடுக்கலாம்.//

நிச்சியம் செய்யலாம்.

வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

வாங்க கோமதி அரசு,, உங்க உறுதிக்கு நன்றிங்க.

கிரி said...

அண்ணாமலையான் இப்படி அநியாத்துக்கு நல்லவனா மாற சொல்றீங்களே! :-) நல்லா எழுதி இருக்கீங்க வாழ்த்துகள்

கிரி said...

நீங்க தான் தமிழிஷ் ல அதிக ஒட்டு வாங்கினவரு போல இருக்கே! ;-)

அண்ணாமலையான் said...

பாஸ் நல்லவனா மாறுனா நல்லதுதானே.? அப்புறம் ஓட்டெல்லாம் உங்கள மாதிரி நண்பர்கள் அவங்க மனசுல ஈரம் இன்னும் நெறய இருக்குதுங்கறதுக்கு சாட்சியா போட்டது... உங்க வருகைக்கு மிக்க சந்தோஷம்..

Unknown said...

அண்ணா... நீங்க ரொம்ப சிந்திக்கிறீங்க.... [நீங்க தஞ்சாவூர் பக்கமா]

அண்ணாமலையான் said...

வாங்க விஜய்கோபால்சாமி சிந்தனை எல்லாரும் பண்ண வேண்டியதுதான்... நமக்கு தஞ்சாவூர் பக்கம்தாங்க....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'நீங்களும் ஹீரோதான்..' பதிவில் தாங்கள்
குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும்
நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தையாகும்.
நாம் அனைவரும் ஹீரோவாக வேண்டும் என்கிற
தங்களின் உள்ளக் கிடைக்கையை மிகச் சிறப்பாகப்
பதிந்திருந்தீர்கள், பாராட்டுக்கள்.

அண்ணாமலையான் said...

வாங்க NIZAMUDEEN நாமளும், நாடும் நல்லா இருந்தா சந்தோஷம்தானே? அதான்.... உங்க ஆதரவுக்கு நன்றி

அண்ணாமலையான் said...

நன்றி செந்தழல் ரவி ..

Anonymous said...

//காசு கொடுத்தலோ, அறுசுவை உணவு போட்டாலோ உதவி இல்லங்க, அன்பா, ‘நல்லாருக்கீங்களான்னு’ ஒரு வார்த்த கேட்டா கூட போதும், இத மாதிரி கேக்க ஆளு இல்லாம இருக்கறவங்கதான் இவங்கெள்லாம்..//

இதையே தான் நானும் எனது நண்பர்களிடம் சொல்லுவேன். வாரத்தில் ஒரு மணி நேரமாவது படிப்பு சொல்லிக்கொடுக்க டைம்மில்லை என்பவர்களை தலை கீழாக கட்டித்தொங்க விடவேண்டும் போல் சில வேலைகளில் சினம் வரும். மக்களாக உணர்ந்து செய்யவேண்டியதை தலையில் நன்றாக குட்டி சொல்லி இருக்கிறீர்கள். பலே.Btw , 106 வோட்ஸ் வாங்கும் பெரியவங்க புதிதான என் புளொக்கிற்கு வந்து உற்சாகப் படுத்துவதற்கு நன்றி

அண்ணாமலையான் said...

உங்க கருத்துக்கு மிக்க நன்றி அனாமிகா துவாரகன்.. நல்லா தொடர்ந்து எழுதுங்க.... வாழ்த்துக்கள்...

அஹோரி said...

நல்ல பதிவு.

Kandumany Veluppillai Rudra said...

தங்களின் தரமான ஆதங்கம்
தங்கு தடையின்றி நிறைவேற
எங்கும் இதைச் சேர்ப்போம்
இயன்றவரை நாமும் இணைவோம்

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி உருத்திரா...

malar said...

என்ன சார் !113ஓட்டா ?
வாழ்த்துக்கள்.......
கையொட டாப் அப் பட்டன் வைங்க......

மதுரை சரவணன் said...

நல்ல பதிவு. உதவ வேண்டும் என்ற சிந்தனை அனைவர் மனதிலும் வர வேண்டும். இலவசம் என்ற பெயரில் ஏமாற்று வேலை அழகா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

நன்றி.. அதென்ன டாப் அப் பட்டன்?

அண்ணாமலையான் said...

ரொம்ப நன்றி Madurai Saravanan ...

வால்பையன் said...

அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளீர்கள்!

அண்ணாமலையான் said...

அந்த வித்தியாச வெற்றில உங்க பங்கும் இருக்கறதுல மகிழ்ச்சி...

சிநேகிதன் அக்பர் said...

அருமை சார்.

ஒரு வரி விடாம படிச்சேன்.

உணரப்படவேண்டிய விசயம்.

அண்ணாமலையான் said...

வாங்க அக்பர், வருகைக்கு நன்றி

Jaleela Kamal said...

ரொம்ப பெரிய பதிவு இரண்டு முன்று முறை வந்தேன் ஆனால் சரியா படிக்க முடியல பதிவு மேலும் கீழும் போகுது.


வாழ்த்துக்கள் இந்த பதிவு விகடன் குட்பிலாக் பகுதியில் வந்துள்ளது

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி,, வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும்...

My Blog said...

very nice one... makimg me to think....too good... congrats

செந்தமிழ் செல்வி said...

மன்னிக்கவும். நான் ரொம்ப லேட்டாக வந்திருக்கேன்னு நினைக்கிறேன்.

மிக நல்ல பதிவு. செய்வதை சொல்லக் கூடாது எனபதால் நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
முக்கியமான ஒன்றை விட்டுட்டீங்க!
ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது மற்ற எல்லாவற்றையும் விட உயர்வானது.

ஏன் வலைப்பக்கம் வருவதே இல்லை?

அண்ணாமலையான் said...

hearty welcome 2 Poopoova. hope u may active after thinkng. thnk u 4 ur presence, comment & thinkng...

அண்ணாமலையான் said...

வாங்க செந்தமிழ் செல்வி உங்க வருகை ரொம்ப சந்தோஷமா இருக்கு..

ஹுஸைனம்மா said...

ரொம்ப சாரி, தாமத வருகைக்கு.

மிக மிக நல்ல கருத்துக்கள் அண்ணாமலை சார். எனது எண்ணங்களும் இவையே!!

விளம்பரங்கள் வெட்டும் குழியில் விழாத அளவு பெரியவர்கள் சுதாரிப்பாக இருந்துவிட முடிந்தாலும், குழந்தைகளுக்குப் புரிய வைப்பதுதான் சவாலாக உள்ளது.

சிலர் நம் இரக்க குணத்தையும் பயன்படுத்தி ஏமாற்ற முனைவதால், இப்போதெல்லாம், நன்கு அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மூலம் வருபவர்களுக்கு மட்டுமே. (என் ஊர் இளைஞர்களின் மின்னஞ்சல் குழுமத்தில் இதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்)

என்னைப் பொறுத்தவரை, தேவைஇல்லாத ஆடம்பரங்களைக் குறைத்து, அநாவசியச் செலவுகளையும் குறைத்துச் சிக்கனமாகவும், எளிமையாகவும் இருந்தாலே உதவும் மனப்பாங்கு வரும்.

அண்ணாமலையான் said...

வாங்க வாங்க சாரிலாம் எதுக்கு.. நீங்க வந்து உங்க கருத்த பதிவு செஞ்சதுல சந்தோஷம்...

settaikkaran said...

சிரிக்கவும் சிந்திக்கவும் பல துளிகள்! சின்ன யோசனைங்க! எல்லாரும் செய்தித்தாள் வாங்குறோம். இரண்டு,மூன்று மாதம் கழித்து பழைய விலைக்குப்போடுறபோது, பத்துப் பதினைந்து பேரும் மொத்தமாப்போட்ட ஒரு பெரிய தொகை தேறும்! அதை வச்சு ஏதாவது நல்ல காரியத்துக்கு செலவு பண்ணலாம்! எங்க மேன்ஷனிலே இதை நாங்க மூணு வருஷமா செஞ்சிக்கிட்டு வர்றோம்.

அண்ணாமலையான் said...

அடடே வாங்க சேட்டை .. ஆனாலும் நீங்க ரொம்ப ஃபாஸ்ட்.... வந்ததுல சந்தோஷம்

நினைவுகளுடன் -நிகே- said...

அருமையான பதிவு.. நல்லெண்ணத்தோடு...
வாழ்த்துகள்
ஒரு பதிவிற்கு இவ்வளவு கருத்துரைகளா?நீங்கள்தான் இப்போது பதிவுலக நாயகன்.

அண்ணாமலையான் said...

வாங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நினைவுகளுட-நிகே

சசிகுமார் said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

prabhadamu said...

ரொம்ப நல்ல விஷத்தை நகைசுவையோடு சொல்லி இருக்கீங்க....

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி சசிகுமார்

அண்ணாமலையான் said...

வாங்க prabhadamu மிக்க நன்றி

மசக்கவுண்டன் said...

எங்க ஊர்லெ இன்னொரு ஆஃபர் வந்திருக்கு தெரியுமுங்களா, அது வந்து, வந்து சொல்றதுக்கு கூச்சமா இருக்குதுங்க. காதக்கிட்ட கொண்டுவாங்க சொல்றேன். அக்காளைக்கட்டுனா தங்கச்சி ப்ரீங்களாம்.

அண்ணாமலையான் said...

அடடே நல்ல சூப்பர் ஆஃபரா இருக்கு... உங்களுக்கு கிடைச்சுதா?

நினைவுகளுடன் -நிகே- said...

அருமையான மிகவும் அவசியமான பதிவு

அண்ணாமலையான் said...

வாங்க மிகவும் நன்றி.. உங்க வருகைக்கும் கருத்துக்கும்

thiyaa said...

அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

அருமையான பதிவு அண்ணாமலையான்.

//நிச்சியம் வல்லரசா மாறலேன்னாலும் மனிதர்களும்,மனிதமும் நிறைந்ததா மாறும்//

நிச்சியம் நடக்கும் அண்ணாமலையான்.

வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

வாங்க விடிவெள்ளி... வருகைகும், கருத்துக்கும் நன்றி

அண்ணாமலையான் said...

தியாவின் பேனா இங்கேயும் எழுதியதுற்கு நன்றி

அண்ணாமலையான் said...

வாங்க மேடம். உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வைகறை நிலா said...

வருடத்தில் ஒரு முறையாவது கஷ்டப்பட்டோர்க்கு
உதவ வேண்டும் என்று உயர்வான ஆலோசனையை எழுதியிருக்கிறீர்கள்..
எல்லோரும் நினைத்தால் பின்பற்றலாம்.

சரியான முறையில் கருணை உள்ளத்தோடு உதவுகின்ற ஸ்தாபனங்களின் முகவரிகளையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

அண்ணாமலையான் said...

அதுல நடக்கற ஃப்ராட பத்தியும் எழுதியிருக்கேன்.. உதவறங்க நேரடியா உதவனுங்கறதுதான் நோக்கம்...

பிரேமா மகள் said...

நெத்தி அடி... என்று சொல்வாங்கள்ள.. அது இதுதான் பாஸ்.. கலக்கிட்டிங்க..

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷங்க.. உங்க வருகைக்கும், கருத்துக்கும்

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு நண்பரே வாழ்த்துக்கள்...

goma said...

மொய் எழுத நிக்கிற வரிசை மாதிரி பின்னூட்ட வரிசையில் கால் கடுக்க நின்னு எழுதியிருக்கேன்

நல்லா பகிர்ந்திருக்கீங்க.....
என் தோழி ஒருத்தி .தன் கைப்பையில் சாக்லேட் வைத்திருப்பார்...சிக்னலில் நிற்கும் சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கி,அவர்களை மகிழ்விப்பது வழக்கம்

Giri Ramasubramanian said...

இனிமே என்னா....எப்பவோ ஆகியாச்சு தலைவா..

அண்ணாமலையான் said...

வாங்க சே.குமார், goma & Giri உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்...

பாற்கடல் சக்தி said...

உண்மைதான் சகா. பிச்சை(இந்த வார்த்தையே சரியில்லணு நெனக்கிறேன்) போடறது தர்மமா? இல்ல அத ஊக்குவிக்கக் கூடாதானு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
ஆனா, அதுக்கும் நம்மாளுங்க சாலமன் பாப்பையாவ கூப்பிட்டு, பிரபல "டிவி'ல ஸ்லாட் கேப்பாங்க. குறைந்தபட்சம் பிறந்தநாள், திருமணநாள், குழந்தைகளோட பிறந்தநாள்னு ஏதாவது ஒரு காரணத்தக் காட்டி, இயலாதவங்களுக்கு உதவலாம். சற்றே நீளமான உங்களின் ஆதங்கம் எனக்கும் புரிகிறது. தொடர்பிலிருப்போம் தொடர்ந்து..

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி சக்தி.

Atchuthan Srirangan said...

இனிமேலாவது மக்கள் திருந்துவார்களா????

தற்போதைய காலகட்டத்திற்கு அவசியமான பதிவு....

அண்ணாமலையான் said...

கஷ்டம்தான் Atchu . உங்கள் வருகைக்கு நன்றி

My days(Gops) said...

மிக மிக அருமையான பதிவு

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி My days(Gops).

ப.கந்தசாமி said...

ஆஜர் போட்டுக்கிறேன். எல்லாவற்றையும் எல்லோரும் முன்னாலயே சொல்லிட்டாங்க.

அண்ணாமலையான் said...

அய்யா வாங்க வாங்க.. ரொம்ப சந்தோஷம்....

மன்னார்குடி said...

நிச்சயம் பின்பற்றப்படவேண்டிய நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள். மிக நல்ல பதிவு.

அண்ணாமலையான் said...

வாங்க மன்னார்குடி... கல கலக்கிட்டீங்க...

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

இது வரை இணைய வரலாற்றில் முதன் முறையாக (சன் டி.வி ஸ்டைல்ல படிக்கணும்)இவ்ள ஓட்டும்,பின்னூட்டமும் உங்களின் இந்தப்பதிவிற்கு மட்டும்தான் நான் அறிந்து பார்த்தது. பயனுள்ள பதிவை நிறைய அன்பர்கள் படிக்கிறார்கள் அப்படித்தான!

Tharshy said...

நீங்களும் ஹீரோதான்”.

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷங்க..

Ramesh said...

தாமதமா பின்னூட்டம் இடுவதற்க்கு மன்னிக்கவும். வெறும படிச்சிட்டு போனா எப்படி, ஏதாவது செய்யனுமில்ல... அதனாலதான். என் மகனின் அடுத்த பிறந்த நாள் (ஏப்ரல் 14) அன்று ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்க்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு விருந்து அளிக்க முடிவெடுத்துள்ளேன்.

Radhakrishnan said...

சிந்திக்க வைத்த பதிவு.

Padhu Sankar said...

Very nice post!
http://padhuskitchen.blogspot.com/

Padhu Sankar said...

Good post!
http://padhuskitchen.blogspot.com/

சாமக்கோடங்கி said...

//Ramesh said...

தாமதமா பின்னூட்டம் இடுவதற்க்கு மன்னிக்கவும். வெறும படிச்சிட்டு போனா எப்படி, ஏதாவது செய்யனுமில்ல... அதனாலதான். என் மகனின் அடுத்த பிறந்த நாள் (ஏப்ரல் 14) அன்று ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்க்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு விருந்து அளிக்க முடிவெடுத்துள்ளேன்.//

படிக்கும் நூறு பேரை விட செயலில் இறங்கும் உம்போன்ற ஒருவர் போதும்..

வாழ்த்துகள்..

மலை அண்ணே... எழுதுறதை நிறுத்தீட்டிங்களா..?

GEETHA ACHAL said...

எப்படி இப்படி ஒவ்வொரு விஷயாமாக புட்டு புட்டு வெச்சு இருக்கின்றிங்க...படித்த எனக்கு சுமார் 10 நிமிடங்கள் எடுத்தது...அப்படினா அனைத்தும் யோசித்து எழுதின உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்து இருக்கும்...அதுக்காவே பாரட்டுகள்..வாழ்த்துகள்...நல்ல பதிவு...

r.v.saravanan said...

ஆக்க பூர்வமா கருனையோடு செயல் பட்டா, நாளய இந்தியா, நிச்சயம் வல்லரசா மாறலேன்னாலும் மனிதர்களும், மனிதமும் நிறைந்ததா மாறும்..

good words

Namitha said...

You have a great post as usual..good to see you in our blog after a long time :D

Asiya Omar said...

உண்மையில் நீங்க தான் பெரிய ஹீரோ போல,எத்தனை கமெண்ட்ஸ்,எத்தனை பேர் தொடர்றாங்க,எவ்வளவு ஓட்டு,இது என்னோட முதல் வருகை.எனக்கு நேரம் கிடைப்பது ரொம்ப கொஞ்சம்,அதனால நிறைய ப்ளாக்கை பார்க்க முடியாமல் போய் விட்டதேன்னு இருக்கு.உங்கள் எழுத்து எதார்த்தமாக இருக்கு.

அண்ணாமலையான் said...

ஏகப்பட்ட நண்பர்களுக்கு பதில் சொல்ல முடியவில்ல.. மன்னிக்கவும்.. அனைவருக்கும் நன்றி... நன்றி..

Aathira mullai said...

128 ஓட்டுகள். 334 பின்னூட்டங்கள்... அப்பா கமெண்ட் கொடுக்க (கீழே போக)சுத்தினதுல என்னோட மெளஸல் இருக்கிற சக்கரம் தேய்ந்து போய்விட்டது அண்ணாமலையான் சார்!!!..முதன்முறையாக உங்கள் வலைத்தளத்தப் பார்வையிட்டதில் சற்று வருத்தம். இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததற்கு... இன்று எல்லா பதிவுகளையும் பார்த்தபின்பே மற்ற வேலை என்று முடிவு செய்துவிட்டேன்... அது எப்படி சார் இவ்வளவு நீண்ட பதிவை ஒரு எழுத்து கூட விடாம வாசிக்க வைக்கிறீங்க... சில இடங்களில் திரும்பத் திரும்ப பல முறை படிக்க வைக்கறீங்க..
கருத்து சமுதாயம் முன்னேற தேவையான அருமை வாய்ந்தது..
அறிவுரை கசப்பு மாத்திரைதான் எவ்வளவு படித்தவர்களுக்கும், சமுதாய சிந்தனை உள்ளவர்களுக்கும். அந்த மாத்திரைக்கு சிரிப்பு, சிந்திப்பு, நகைச்சுவை சோக்கு, நேக்கு, போக்குன்னு எத்தனை இனிப்பைத்தடவி கொடுத்து இருக்கீங்க...
இன்னும் வேணும் வேணும்னு கேக்கக் கூடிய கசப்ப்ப்ப்பு மாத்திரை இது...
///உலகத்துல எங்க, எத தயாரிச்சாலும், அந்த குப்பைய கொட்டி காசாக்க முதல்ல நம்ம நாட்டத்தான் தேர்ந்தெடுக்கறாங்க.///
எதார்த்தமான உண்மையை யாருசார் புரிஞ்சுக்கறாங்க.. ஏக்கமிருந்தாலும் உங்க கட்டுரை சிந்திக்க மட்டுமல்ல செயல்படவும் வைக்கும் என்பது சத்தியம்..அடுத்த பதிவு எப்ப?? ஏங்கும் மனதுடன்..

அண்ணாமலையான் said...

மிக்க மகிழ்ச்சி ஆதிரா... உங்க வருகைக்கும் கருத்துக்கும்...

priyamudanprabu said...

அர்த்தம்முள்ள பதிவு.
கடைசி பஞ்ச் சூப்பர்

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி பிரபு... ரகசியம்லாம் தேவயில்ல...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பே நா மூடியிலிருந்து
ஆயிரத்தில் ஒருவன்
வரை உங்கள் எழுத்திற்கு
அடிமை ஆசானே








Pe

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அப்டி நீங்க ஒதுக்கறது கூட டாக்ஸ் ஃப்ரீயானு உங்க சுயநலம் பாத்துதானே?
ரொம்ப நாளா
என் மனசுக்குள்ள
எரிஞ்சுக்கிட்டிருந்த
நெருப்பு.....
அண்ணாமலையாரே உன் திருவடி சரணம்.....

Ramesh said...

//தாமதமா பின்னூட்டம் இடுவதற்க்கு மன்னிக்கவும். வெறும படிச்சிட்டு போனா எப்படி, ஏதாவது செய்யனுமில்ல... அதனாலதான். என் மகனின் அடுத்த பிறந்த நாள் (ஏப்ரல் 14) அன்று ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்க்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு விருந்து அளிக்க முடிவெடுத்துள்ளேன்.//


இன்று(14.4.2010)என் மகன் சஞ்சய் ரோஷனின் 3 வது பிறந்த நாளை குடும்பத்துடன் தாம்பரத்திற்க்கு அருகில் உள்ள ஸ்ரீ சாரதா சக்தி பீடத்திற்கு சென்று காலை,மதியம் மற்றும் இரவு விருந்து அளித்து கொண்டடினோம். அவர்களுக்கு என் மனைவி உணவு பறிமாறியதும், அவர்கள் என் குழந்தையை வாழ்த்தியதும் சந்தோஷமாக இருந்தது.
இது போன்ற எண்ணம் உதிக்க காரணமாக இருந்தமைக்கு நன்றி.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//நண்பர்களே, உங்களால எந்தளவுக்கு முடியுமோ அத்தன உதவிகளும் செய்யுங்க,, ஆனா நேரடியா செய்யுங்க...//

ரொம்ப அருமையான, அவசியமான பதிவுங்க..
எனக்கும் என்ன உதவி செய்தாலும் அதை நேரடியாக செய்யத் தான் பிடிக்கும்..!
பகிர்ந்ததற்கு நன்றி.. வாழ்த்துக்கள்..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//கைய கட்டிட்டு இருக்கறதால விவேகானந்தர் இல்லங்க...!(காரும் நம்முள்து இல்லீங்க.. ஹி ஹி) //

இது ரொம்ப சூப்பர்.... ஹிஹி..

Veena Devi said...

ரொம்ப நல்ல பதிவு, சிரிக்கவும் சிந்திக்கவும் ........... இந்த காலத்தில் ரோட்டில் கிடக்கும் கல்லை ஓரமாய் போடும் மனித தன்மை கூட இல்லாம போய்டுது, நமது அடுத்த தலைமுறைக்காவது நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்து மனிதர்களாக வளர்ப்போம் ........

அண்ணாமலையான் said...

ஆயிரத்தில் ஒரு மணிக்கும், அன்புடன் ஆனந்திக்கும், மாமனிதர் ரமேஷுக்கும், நம் தோழி வீணாவுக்கும் மற்றும் bogy.in க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... அனைவருக்கு இனிய தமிழ்(தாமத) புத்தாண்டு வாழ்த்துக்கள்....

கவிதன் said...

மிக அருமையான பகிர்வு அண்ணாமலையான் சார். விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமென்ற தங்களின் மேலான எண்ணம் வெற்றியடையும் .....!
தொடரட்டும் ..... வாழ்த்துக்கள்!

படக்கதை said...

மிகவும் தேவையான பதிவு !!! தங்களின் சிந்தைக்கு தலை வணங்குகிறேன் !!!! -வியன்

pichaikaaran said...

நிறைய எழுதுங்க பாஸ் ..

இந்த பதிவு கண்ணா பின்னானு எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்துடுச்சு... எ மெயில் ல கூட போவர்ட் செய்றாங்க... இது போதும் நு நினைச்சுடாதீங்க

அண்ணாமலையான் said...

அனைவருக்கும் நன்றி.. என் சொந்த வேலை பளூ(வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்கனுமில்ல?) காரணமாக அடுத்த பதிவில் தாமதம்... தயவு செய்து பொறுத்தருளவும்... முடிந்த மட்டில் விரைவில் அடுத்த பதிவிட முயற்சிக்கறேன்... என்றும் அன்புடன்
அண்ணாமலையான்

malarvizhi said...

நல்ல பதிவு , அண்ணா . பெரிய பதிவாக இருந்தாலும் மிகவும் அருமையான செய்தியை கடைசியில் சொல்லி இருக்கிறீர்கள். நம் சிதம்பரத்திலும் இது போல் சில இடங்கள் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?இரண்டு மாதங்களுக்கு முன் அப்படி ஓர் இடத்திற்கு சென்று வந்தேன் .இரண்டு நாட்களுக்கு மனதே சரியாக இல்லை.ஏன் என்றால் அந்த பெண் குழந்தைகள் (வயது 6 முதல் 15 வரை) அனைவரும் சுனாமியில் பெற்றோரை இழந்தவர்கள். என்னால் முடிந்த அளவிற்கு உதவி விட்டு வந்தேன் ..விரைவில் மீண்டும்செல்வேன்.

அண்ணாமலையான் said...

மிக்க நன்றிங்க.. உங்க சேவை மகத்தானது.. நீங்கள் நீடுழி வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவிட இறைவனை வேண்டுகிறேன்....

இலா said...

வாத்தியார்ன்னா நீங்க தான் சார்! ஆரம்பத்தில நேரா போயி ஓம்ஸ் லா கிச்சாஃப்ஸ் லா.. இப்படி எடுத்தவுடனே தடியெடுக்காம... கொஞ்சமா நகைச்சுவையா ஆரம்பிச்சு.. கொஞ்சம் சப்ஜெக்ட்ல ஆர்வம் வந்ததும்.. என்ன பிரச்சனைன்னு சொல்லி அதுக்கு ரொம்பவும் பிராக்டிகலான பதிலும் கொடுத்து.. முடியல சார்... பின்னிட்டிங்க... வாழ்த்துக்கள்... பை த வே...மெயிலை பாருங்க...

Unknown said...

அருமையான பதிவு

SathyaSridhar said...

Sir,, nalla pathivu naatukku solla vendiya nalla karuthaana pathivu nammala panathala uthavi seiya mudiyalai naalum udal uzhaipala naalu paerukku uthavi seiyanum gara ennam nalla unarvu poorvamaana karuthu nga...

sury siva said...

//ஒரு தடவ உங்க கண்ல படற யாருக்காவது உதவியா செஞ்சா கூட போதும். எங்கிட்ட காசு இல்ல நான் கூலிக்கு வேல செய்றேன், ஆனா எப்டி உதவி செய்யறதுன்னு கேக்கறவங்களுக்கு, காசு கொடுத்தலோ, அறுசுவை உணவு போட்டாலோ உதவி இல்லங்க, அன்பா, ‘நல்லாருக்கீங்களான்னு’ ஒரு வார்த்த கேட்டா கூட போதும், இத மாதிரி கேக்க ஆளு இல்லாம இருக்கறவங்கதான் இவங்கெள்லாம்.. //

வெகு நாட்களுக்கு இல்லை மாதங்களுக்குப் பின்
மனித நேய உணர்வுகளை இதய சுத்தியுடன் பிரதிபலிக்கும்
ஒரு பதிவு இம்முதியவன் நெஞ்சினை விம்மச்செய்வது
உண்மை. வெறும் வார்த்தைகள் அல்ல.

திரு நின்றவூர் அருகில் கசுவா என்னும் கிராமத்தில்
சேவாலயா எனும் தொண்டு நிறுவனம் சுமார் பத்து ஆண்டுகளாக,
அந்த இடத்தைச் சுற்றி வாழும் ஏழை எளியவர் வீட்டுச் சிறு பிள்ளைகளுக்கு
கல்வி அறிவு கொடுத்து அவர்களைத் தம் காலிலே நின்று உழைத்து ஊதியம்
தேடி, தமக்கும் தம் குடும்பத்தார்க்கும் பெருமை சேர்க்கும் உன்னத பணியில்
ஈடு பட்டிருக்கிறது. அண்மையில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில்
இப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.

இவர்களுக்கு ஒரு செக் எழுதி அனுப்புங்கள் என்று நான் சொல்ல வரவில்லை.
அண்ணாமலையான் பதிவுக்கு வரும் அனைவரும் இப்ப்ள்ளிக்குச்
சென்று அங்கு நடக்கும் தன்னலமற்ற தொண்டினைப் பாருங்கள்.
ஒரு வார்த்தை அன்பாக, அண்ணாமலையான் சொன்னது போல,
ஆதரவாக சொல்லுங்கள். இவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனத்தின்
வலை: www.sevalaya.org

சுப்பு ரத்தினம்.
பின் குறிப்பு: தக்குடு பாண்டி வலை வழியே இங்கு வந்தேன். இங்கு இத்தனை நாள்
ஏன் வராமலிருந்தேன் எனத் தெரியவில்லை.

Matangi Mawley said...

ovvoru vaarthyum unmai.. arumayaa ezhuthirukkeenga.. i second to all that you have said here!

கோமதி அரசு said...

நல்ல கருத்துக்களை கொண்ட நல்ல பதிவு.

வாழ்த்துக்கள்.

யுக கோபிகா said...

சமூக பார்வை மிகவும் அருமை..

Dr.R.Anandakumar I.A.S., said...

dear sir, the article is a nice one. I liked it. Please keep writing.

Maayavan said...

அருமையான பதிவு...!!!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

சப்பாஹ்.... அத்தனையும் தாண்டி வந்து கமெண்ட் போடறதுக்குள்ள மூச்சி முட்டுது...!!
அருமையான பகிர்வு.. ஆனா படிச்சு டயர்ட் ஆச்சு.. ஒரு கூல்ட்ரின்க் ப்ளீஸ்.. :-))

சிங்கக்குட்டி said...

நல்ல பதிவுக்கு நன்றி.

நான் ஹீரோ சரி யார் அந்த ஹீரோயீன் சலாமா ஹயாத் தானா? ஹி ஹி சும்மா ஒரு நப்பாசை :-)

சிங்கக்குட்டி said...

இதே இடுகையை படித்து உங்களுக்கு பின்னூட்டம் போட்ட நினைவு இருக்கிறது? ஆமாவா இல்லையா?

அண்ணாமலையான் said...

உங்க ஆசை நிறைவேறட்டும் சிங்கம்

அண்ணாமலையான் said...

கூல் ட்ரிங்க் என்ன? விருந்தே வச்சுடுவோம்... ஓகேயா?

அணில் said...

இது எல்லாருக்கும் தெரிகிற விஷயம்தான், ஆனால் நினைவு படுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. நாம் காணவிரும்பும் மாற்றம் நம்மிலிருந்து ஆரம்பிப்போம். நாம் காண விரும்புவது அன்பையும் ஆனந்தத்தையும் தானே!

அண்ணாமலையான் said...

சரியா சொன்னீங்க ராஜ்குமார்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

நீண்ட நாள் கழித்து உங்கள் பக்கம் வந்தேன் காலத்துக்கேற்ற தேவையான பதிவு உங்கள் மொழிநடையில் சிரிப்போடு சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள்.

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி mrknaughty மற்றும் முனைவர் கல்பனாசெக்கிழார் .. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...

Tharshy said...

என்னண்ணா கனகாலமாயிட்டு கண்டு...:)
ரொம்ப நல்லாருக்கு...அதுவும் “பச்ச கொழந்தகள எங்க பாத்தாலும், அவங்க உண்மையிலே பிச்ச எடுக்கற சூழ்நிலயிலயோ அல்லது வேல பாத்து சாப்புடற நெலமயிலொ இருக்காங்களான்னு தெரிஞ்சுக்குங்க. தெரிஞ்சுக்கிட்டு உங்க அளவுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அத தயங்காம, புண்னிய பாவம் எதிர் பாக்காம செய்யுங்க.. அப்டி யாரையுமே நான் பாத்ததுல்லன்னு சொல்றவங்க ஏழ பாழைங்க ளோட கொழந்தைகள படிக்க வைக்க எதாவது ஒரு உதவி பன்னுங்க” this bit was awesome... எல்லாரும் சொல்றது தான் ஆனா நீங்க சொல்லக்கேல வித்தியாசமா இருக்கு... வாழ்த்துகள்

மாதேவி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

«Oldest ‹Older   201 – 374 of 374   Newer› Newest»

Post a Comment