என்னை சளிக்கு பிடிச்சிருக்கு

அன்பர்களே நன்பர்களே...எல்லாருக்கும் வணக்கம். என்னை மாதிரியே நீங்க எல்லாரும் ரொம்ப நல்லாருப்பீங்கன்னு நம்பறேன் . என்னடா இது      சளிக்கு பிடிச்சிருக்குன்னு தலைப்பு வச்சிட்டு என்ன மாதிரியே நல்லாருப்பீங்கன்னு சொல்றேன்னு பாக்கறீங்களா? சாபம் விடலீங்க உண்மையாதான் சொல்றேன்.. ஏன்னு கேக்கறீங்களா? கேக்கலன்னாலும் சொல்லுவேன் ..என்னோட பதிவுக்கு தொடர்ந்து ஆதரவு தர்ற உங்களோட நல்வாழ்வுக்கு நான் எப்பவுமே இறைவனை ப்ரார்த்திக்கறேன்.(அப்பாடா காரணம் சொல்லியாச்சு) இன்னய தேதிக்கு தமிழ் நன்பர்கள் பலர் சளின்னா” ஏதோ வட இந்திய பொண்ண சார்  க்ரெக்ட் பன்றாரு போலன்னு நெனைக்க வாய்ப்பு அதிகம்(கோல்ட் -னாதான் தெரியுது). அதனால எல்லா தமிழ் இளைஞ, இளைஞிகளும் சளி என்பது மனிதர்களுக்கு சாதாரனமாக வரும் ஒரு இடஞ்சல் என கற்பூரம்  போல புரிந்து கொள்வார்கள்  என சத்தியமாக நம்புகிறேன்.

யோவ் உலகத்துல கோடிப்பேருக்கு என்னன்னமோ வியாதில்லாம் வருது.. எல்லாரும் வியாதிக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்ன ஆவறதுன்னு” யாரும் பின்னூட்டம் போட்டுடாதீங்க.. 

பத்து நாளைக்கு முன்னாடி லேசா, போக்கிரி படத்துல நம்ம காமெடியண்ணண் விஜய் அடிக்கடி மூக்க உறிஞ்சற மாதிரி அளவுல  இருந்த என் பிரச்சனை கொஞ்சம்  கொஞ்சமா தீவிரமாயி இன்னிய தேதிக்கு தெலுங்கானா அளவுக்கு பெரிசாயிடுச்சு. 

எப்பவும் போல சாதாரன ஆளா இருந்தா இந்த அளவுக்கு கவலைப்பட போறதில்லே...நான் பதிவுலகிற்கு வந்து நாலு நாள் ஆயிடுச்சு.. இதுல மூனு நாளா எந்த பதிவும் போடாததால, எங்கே பதிவுலக நன்பர்களெல்லாம், முதல் படம் ஹிட் கொடுத்த டைரக்டர் பலர் அதுக்கப்புறம் தொடர்ந்து ப்ளாப் கொடுத்த மாதிரி இவனும் அவ்ளோதான்னு நெனச்சிடப்போறாங்கன்னு பயத்துல பல பேருட்ட ஐடியா கேட்டப்போ (அதுல ஒருத்தர் ஏற்கனவே ஆறு மாசமா பதிவு போட்டுக்கிட்டு இருக்கார்) மூக்குப்பொடி போடுங்க , யூகலிபட்ஸ் பொடி போடுங்கனு மேலோட்டமா சொன்னாங்க. சிலர் மஞ்சள கொளுத்தி புகைய இழுங்கன்னு பத்த வச்சாங்க.. இன்னும் கொஞ்ச பேரோ , “சார் தைலத்த நல்லா கொதிக்கற தண்ணில் போட்டு போர்வையால போத்திக்கிட்டு ஆவி புடிங்கன்னு திகில் பட ரேஞ்சுக்கு தீ மூட்டினார்கள்”. இன்னும் சில நன்பர்கள் “நைட் ஒரு கட்டிங்கும், ஒரு சிட்டிங்கும் சைட் டிஷா கல்பெப்பரும்(சிக்கன்) போட்டா சளிக்கு கிலி வந்து சொல்லாம கொள்ளாம பொழுது விடியறதுக்குள்ள போய்டும்னு” உசுப்பேத்துனாங்க.

தோ பருங்க தம்பி, ஏதோ படிச்சுட்டு போலாம்னு வந்தா நீங்க பாட்டுக்கு என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க. சளி புடிச்சத சனி புடிச்ச ரேஞ்ச்சுக்கு பில்ட்ப் தராம பிரச்சனை என்னன்னு சொல்லுங்க” அப்படின்னு உங்கள்ள ஒருத்தர் அலுத்துக்கறது புரியுது, அண்ணே தயவு செய்து கோச்சுக்காம, இவ்வளவு தூரம் வந்த நீங்க முழுசா படிச்சுட்டு போங்க.

இவர் சொன்னாருன்னு இதுவும், அவர் சொன்னாருன்னு அதுவும், இப்படி பலர் சொன்னதுல பலவும் போட்டதுல மூக்கு எரிச்சல் வந்து விஜய் மாதிரி ஸ்டைலா(?) மூக்கு உறிஞ்சிட்டுருந்த நானு இப்ப புரட்ச்சி தலைவர் எம்ஜிஆர் ஸ்டைல்ல அடிக்கடி மூக்க தடவிக்கிட்டு இருக்கேன்.  

ஸ்டைல் மாறினது கூட கவலை இல்லீங்க ... திண்டுக்கல் மாவட்ட குடக்கல், மூனு தலை நாலு வால் கன்னுக்குட்டி, அரசியல்வாதிகளின் அதிரடி அறிவிப்பு, இப்படி பல டாபிக்ல சக நன்பர்களெல்லாம் பதிவு போட்டு கலக்குற காட்சி பொறாமைய கிளப்புதுனல மூக்கு சரியில்லன்னாலும் பரவாயில்ல, இருக்கற மூளைய(?) வச்சி பிரச்சனைய ஊதி பெருசாக்கிடுவோம்னு இந்த பதிவு போட்டாச்சு.  

ஆமாங்க நானும் எவ்வளவோ கம்பெனி மருந்துல்லாம் தடவி, உள்ளுக்கு இழுத்து ட்ரை பன்னேன். இப்ப இந்த பதிவுக்கு அதுல ஏதாவது ஒரு ரெண்டு மூனு கம்பெனி ஸ்பான்ஸர் பன்ற வாய்ப்பு இருக்கான்னு விபரம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். (உங்க சளி உடனடியா ஓடிப்போய்டும்.)

இந்த பதிவு உங்களுக்கு பிடிக்கலேன்னா கவலைப்படாதீங்க.. ஏன்னா எனக்கு இப்பதான் லேசா ஜுரம் அடிக்கற மாதிரி இருக்கு அத வச்சி அடுத்த பதிவு போட்டுர்றேன்..... 


வந்ததுதான் வந்தீங்க உங்க பொன்னான வாக்க “தமிழிஷ்ல” குத்திட்டு போங்க..
 

8 comments:

aazhimazhai said...

ஹ ஹ ஹ !!! நீங்க அடிச்ச ஜோக்குக்கு சிருச்சுடேன் !!!!!!!
பட் நிஜமா சளி பிடிச்ச இது எதுவும் பண்ணாம விட்டாலே அதுவா ஒரு மூணு நாள்குள்ள சரியா போய்டும்
ரொம்ப உபத்திரவம் அதிகமா இருந்தா மருத்துவரிடம் செல்வது உசிதம் .....
இந்தாங்க கொசிறு
தேங்காய் எண்ணையை சூடாக்கி கொஞ்சம் கற்பூரம் துளசி அருகம்புல் சேர்த்து ... சூட்டோட நெற்றி உள்ளங்கை, பாதம் மற்றும் நெஞ்சில் தேய்த்தால்... சளி தொல்லை மட்டுப்படும்

அண்ணாமலையான் said...

நன்றி உங்க அன்புக்கும், அக்கறைக்கும்

goma said...

ஏன்னா எனக்கு இப்பதான் லேசா ஜுரம் அடிக்கற மாதிரி இருக்கு அத வச்சி அடுத்த பதிவு போட்டுர்றேன்.....

அட!எனக்கும் இதே நிலைதான்.ஆனா பதிவு போடுறதா இல்லை.
வைரஸ் வந்திடும்னு யாரும் க்ளிக் கூட பண்ணமாட்டாங்க.

goma said...

ஏதோ அதுக்காவது நம்மை பிடிச்சிருக்கேன்னு இருப்பாங்களா அதை விட்டுட்டு முக்கை மூக்கை உறிஞ்சுகிட்டு....இதெல்லாம் நல்லாவா இருக்கு....

அண்ணாமலையான் said...

என்னங்க நம்ம விஜய் பன்னா ரசிக்கறீங்க. நான் பன்னா கமெண்ட் அடிக்கறீங்க..? ம்ம்

goma said...

என் பதிவுகளுக்கு வாசகராய் சேர்ந்தமைக்கு நன்றி

அநன்யா மகாதேவன் said...

coldukku endha kaivaithiyamum kekkaadhu. thaana 3 naalla poidum. kandukkaatheenga

அண்ணாமலையான் said...

சரிங்க அநன்யா

Post a Comment