யூஸ்லெஸ் ஃபெல்லொஸ் (வரி விலக்கு வேண்டாம்)
எனதருமை அன்பர்களே, நன்பர்களே, சக பதிவர்களே, வாசகர்களே, கருத்துக்களை தயக்கமில்லாமல் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்துபவர்களே மற்றும் என்னை பின் தொடர்பவர்களே, இனி தொடரப்போகிறவர்களே (அய்யய்யே... என்ன இது ஒரு எதுகை மோனைக்காக கூப்பிட்டா லேகியம் விக்கற எஃபக்ட் வந்துடுச்சி? சரி பரவால்ல.. உலகமயமாக்கலால எதிர்காலத்துல வயித்துப்பொழப்புக்கு உதவும்) எல்லாருக்கும் வணக்கம்.. என்னங்க எப்படி இருக்கீங்க? சந்தோஷமா இருக்கீங்களா? இருப்பீங்கன்னு நம்பறேன்.
இந்தப்படத்த பாக்குறப்ப கண்னுக்கு ஏற்படற குளுமையும், சந்தோஷமும் நேர்ல போய் பாக்கனுங்கற எண்ணத்த ஏற்படுத்துது இல்ல? ஆமான்னு சொல்றவங்க சொந்தக்காசுலயோ, கம்பெனி காசுலயோ போங்க இல்லன்னா வெயிட் பன்னுங்க தனக்கு தானாவே செய்வின வச்சுக்கிட்டு வர்ற யார் காசுலயோ போய்ட்டு வந்து சும்மா நச்சுன்னு ஒரு பதிவு போடுங்க, நிச்சயம் என் ஓட்டயும் , என் கருத்தையும் பதிவு செய்யறேன். ஏங்க.. ஏங்க... அத சொல்றதுக்கு நீ யாருய்யான்னு சொல்லிட்டு எங்க போறீங்க? ஏன் கோச்சுக்கறீங்க? என்ன சொல்லிட்டேன் இப்போ? என்னது ? நான் அதுக்கு சரியா வர மாட்டேனா? எதுக்குங்க? அட .... சொல்லிட்டு போங்க....
போங்க நீங்க ... நான் பதிவு போட்டு 3 நாளாச்சு ஒருத்தரும் அடுத்த பதிவு எப்பன்னு ஒரு சின்ன மெயில் கூட அனுப்பலே.. எப்படியிருக்கும் என் பிஞ்சு மனசு..? காமக்கேசுல கம்ப்ளெய்ண்ட் ஆன சாமியார்லாம் “எல்லாத்துக்கும் ஒத்துழைக்க தயார்னு” பேட்டி கொடுக்கறான் ஆனா, சார் எப்ப அடுத்த பதிவுன்னு யாருமே கேக்கலயே? அதனாலல்லாம் நான் சும்மா இருந்துருவேனா என்ன? சும்மா கிருக்கு... கிருக்கு.. கிருக்குனு மௌச புடிச்சு ஆரம்பிச்சுட்டன்ல.. .(தல பின்றீங்க..) ஸ்ஸ்ஸ்ஸ்... யாருப்பா அது? கொஞ்சம் பொறுங்க.. பதிவ முடிச்சிட்டு வர்றேன்...(ஓட்டுங்கற விஷயம் இருக்கறதால கொஞ்சம் செலவு ஆகத்தான் செய்யும். ஓக்கே?)
யாருப்பாது? கூட்டத்த கலைச்சது? “யாரும் கலைக்கலே.. நாங்களாத்தான் போறதுன்னு முடிவு பன்னோம்...”
ஏங்க? தத்திங்கினத்தோம்... ததாங்கினத்தோம்னு சொர்னமுகி மாதிரி என் நிலை ஆடிக்கிட்டிருக்கும் இந்த சூழ்நிலையில காசில கானடிச்ச காவி வேட்டி (சில பேரு பொண்டாட்டிய வேனுன்னே தொலைக்கிறாங்களாமே? அப்படியா?) மாதிரி என்ன உட்டுட்டு போவாதீங்க.. ப்ளீஸ்...
”அண்ணே... காசிக்கு போனா பாவம் தொலஞ்சு போவுமாம்.. உம்பின்னாடி வந்து என்ன ஆவப்போது?” (ஆம்பள பின்னாடி நாங்களாவது?)
நல்லா கேட்டீங்கய்யா டீட்டெயிலு,,, நாடு போற போக்குல அத திருத்த ஒரு ஆளுமே இல்லேன்னு ஒத்தயா பூலோகத்த பத்தி கவலப் பட்டிட்டிருக்கேன் பாரு... எனக்கு நானே தனக்கு தானே தண்டனயா விஜய் படத்தயும் கலர் நாயகன் ரித்தீஷ் படத்தயும் பாத்துர்றேன்.
”விஜய் படம் மாதிரி என்ன சொல்ல வர்றேன்னு தெரியாத குழப்பத்துலே நீ இருக்கன்னு தெளிவா தெரியுது...”
அப்படி சொல்லாதீங்க மதுரை மாவட்ட தலைவரே.. சீனே தெரியாம ஷூட்டிங் வந்த விஜய் போல, நயன்தாராவ பாத்த பிரபுதேவா மாதிரி நானே தட்டுத்தடவிக்கிட்டு (நல்லா படிங்க.. ’தட்டு’ தொட்டுல்ல..) இருக்கேன்.. எதுக்கா..? ஹாலிவுட்டா ..? கோலிவுட்டா?ன்னு தமிழ் திரையுலகமே தவிச்சுக்கிட்டு இருக்கு.. இதுலெ நம்ம பங்குக்கு எதாவது செஞ்சு தமிழனயும், தமிழ் திரையுலகத்தையும் காப்பாத்தனும்னு விஜய் படம் ஓட்டற ஆப்பரேட்டர் மாதிரி துடிச்சுட்டுருக்கேன்..தெரியுமா..?
“நீ என்ன நினைக்கறேன்னு எங்களுக்கெல்லாம் தெரிஞ்சுடுச்சு.. பேசாம எடத்த காலி பன்னு”
யாருன்னு தெரியலியே..?! சரி எதாவது ஒரு தெருப்பொறுக்கியா சாரி தெருப்பொருப்பாளரா இருக்கும் போல..அதனால என்ன.. நாம சொல்ல வந்தத சட்டு புட்டுனு (அப்படின்னா என்ன?) சொல்லிடுவோம்.
ஆங்... எங்க வீட்டேன்..?
“எங்க விட்டே? விட்டாத்தான் ஓடிப்போயிருப்போம்ல”..?
சினிமாங்கறது வெறும் பொழுது போக்கு மட்டுமே, அதை பாக்கும் ரசிகனுக்கு. ஒரு சினிமான்னு வந்தா நம்மள மாதிரி ஆளுங்க பாக்கெட்ட குறி வச்சுத்தான் ரிலீஸ் பன்னுவாங்க. அதனால உங்க இஷ்டப்படி படத்துக்கு போங்க, ஆனா, நியாயமான விலையில டிக்கெட் வாங்கி போங்க. ப்ளாக்குல டிக்கெட் வாங்குறதால சில சமூக விரோதிகள நீங்களே உங்கள அறியாம உருவாக்க காரனமா இருக்கறீங்க..தியேட்டர்ல டிக்கெட் வில கூட விக்கறதுல என்ன சமூக விரோதம் வந்துரப்போது? உங்க வருமானத்த விட அதிகமா, படத்துக்கான தகுதிய விட இதெல்லாத்துக்கும் மேல ரசிகன்ற ஒரே முட்டாள்தனமான பட்டத்தால உங்களோட பொன்னான நேரத்தையும் (நம் நாட்டின் உழைப்பு நேரம்) எழுபது கோடி இந்தியர்களில், ஒரு தனி மனிதனின் ஒரு முழு நாள் வருமானத்தை விடவும் அதிகமாக செலவு செய்கிறீர்கள். இந்த செலவால் எதாவது பலன் உண்டா? உண்டு. லாபம் சம்பாதிக்கும் பட, தியேட்டர் அதிபர்கள், கலைஞர்கள் வரி ஏய்ப்பு செய்யற ஒன்னுதான் அது.
அத அரசாங்கம்ல கேக்கனும்? எங்கள குறை சொன்னா?
ஏ... இளைய சமுதாயமே....(அப்பாடா அட்வைஸ் ஏரியாவுக்கு வந்தாச்சு) இது போன்ற பொழுது போக்கு விஷயங்களில் நீ செலவழிக்கும் நேரத்தை உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயங்களில் ஈடுபடுத்து. இதனால் உன் வாழ்வும் வளமாகும்.. உன்னைச்சார்ந்த சமுதாயமும் உயர்நிலை அடையும். நம் பாரத நாடு உண்மையிலே உலக அளவில் தலை நிமிரும்.
அதெல்லாம் முடியாது.. எங்க தளபதி முக்கியம். நாங்கெள்லாம் நடிகன் பின்னாடிதான் போவொம், ஒரு நாள் 3 மணி நேரம் சினிமா பாக்குறதுல்ல ஒன்னும் குடிமுழுகிடாது. எவ்வளவோ பேர் இன்னக்கி பெரிய ஆளா இருக்காங்களே அவங்கள்லாம் சினிமாவே பாக்கலியா? ஏன் சினிமாலயே நிறய ஜாம்பவான்கள் இருக்காங்களே? அப்படின்னு சொல்றீங்களா?
அப்ப நிச்சயம் போங்க..
நாளய உலகம் உங்கள பத்தி ஒரு வரில சொல்லும்..
என்னவா..?
தலைப்ப பாருங்க தம்பி,,,,
பாத்துட்டு பேசாம போறீங்களே இது உங்களுக்கே நியாயமா? இடைத்தேர்தல் ஓட்டா, மழைக்கால குற்றாலாமா வாக்கையும் கருத்துக்களையும் கொட்டோ கொட்டுன்னு
குமுறிட்டுப்போங்க....
66 comments:
எனக்கு புதுசா என்ன பேரு வைக்கலாம்னு யோசிச்சிகிட்டே இருந்தேன்...!!!
ரொம்ப நன்றிங்க! :) :)
எல்லா நல்ல விசயமும் அந்த வயதில் தெரியாது
கை நழுவி போன பின் தான் நாம் வினாக்க்கியயது நேரம் இல்லை வைர கற்கள் என தெரியும்
சின்ன வயதில் நல்ல விசயம் கெட்டதாக தெரியும் !
என்ன செய்வது வயசு கோளாறு
தல படிக்கற வயசுல சுத்தறவங்களுக்குத்தான் இந்த பேரு.. உங்களுக்கில்ல...
அரும்பாவூர் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி..
//யாருப்பாது? கூட்டத்த கலைச்சது? “யாரும் கலைக்கலே.. நாங்களாத்தான் போறதுன்னு முடிவு பன்னோம்...”//
//ஆங்... எங்க வீட்டேன்..?
“எங்க விட்டே? விட்டாத்தான் ஓடிப்போயிருப்போம்ல”..?//
நல்ல எழுத்து நடை நண்பரே.. கலக்குங்க.
நன்றி பலா பட்டறை வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து வாருங்கள்
முடியல சார் முடியல....
நான் ஒட்டு போட்டுட்டேன் !!!! நல்ல அருமையான எழுத்து நடை
"ஏ... இளைய சமுதாயமே....(அப்பாடா அட்வைஸ் ஏரியாவுக்கு வந்தாச்சு) இது போன்ற பொழுது போக்கு விஷயங்களில் நீ செலவழிக்கும் நேரத்தை உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயங்களில் ஈடுபடுத்து. இதனால் உன் வாழ்வும் வளமாகும்.. உன்னைச்சார்ந்த சமுதாயமும் உயர்நிலை அடையும். நம் பாரத நாடு உண்மையிலே உலக அளவில் தலை நிமிரும்."
வருங்கால ஜனாதிபதி அண்ணன் அண்ணாமலையான் வாழ்க வாழ்க !!!
நீங்க சொன்ன மாதிரியே கூவிட்டேன் அண்ணே !!!
அய்யய்யே... என்ன இது ஒரு எதுகை மோனைக்காக கூப்பிட்டா லேகியம் விக்கற எஃபக்ட் வந்துடுச்சி? சரி பரவால்ல.. உலகமயமாக்கலால எதிர்காலத்துல வயித்துப்பொழப்புக்கு உதவும் //
ஹாஹஹா
நல்ல நகைச்சுவையான எழுத்து. வார்த்தைகள் கோர்வையாய் இருந்தால் இன்னும் கலக்கலாய் இருக்கும்.
நன்றி புகழ். ஜெய பிரபு aazhimazhai மற்றும் விக்னேஷ்வரி வருகைக்கும் கருத்துக்கும்.
பிரபு பொறுத்துக்கிட்டதற்கு தேங்க்ஸ்.
வருங்கால ஜனாதிபதி அண்ணன் அண்ணாமலையான் வாழ்க வாழ்க !!! ”மெய்யாலுமா ஆழி?”
விக்னேஷ்வரி said... வார்த்தைகள் கோர்வையாய் இருந்தால் இன்னும் கலக்கலாய் இருக்கும். மைண்ட்ல வச்சுக்கறேன்.
thenammailakshmanan சொன்னது…
நன்றி அண்ணாமலையானே
இனிமே சினிமானு வாயத்திறப்பேன் நானு
அய்யோடா சாமி
டிவிடி சிடி டிவில கூட படம் பார்க்க மாட்டேனே அண்ணாமலையானே”
ரொம்பத்தான் ஸ்பீடு நீங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சுவாரசியமா எழுதறீங்க :)
ஆனா பாவம் எழுத்துப்பிழை மட்டும் கொஞ்சம் கவனிச்சிக்குங்க..
நகச்சுவை ஓகே.ஆனா ஏதாச்சும் ஒரு மேட்டர் மெயினா வச்சிக்கிடனும்பேராண்டி.
அப்படியே ......மாதிரி ஜம்ப் பண்ணிக்கிட்டேயிருந்தா என்ன சொல்ல வர்ரீங்கன்னு தெரியாம அவ்வ்வ்வ்வ்....
நடை நல்லாயிருக்கு அப்படியே கொஞ்சம் ஓவர் என்துஸியாசம்.நாங்களும் வந்த புதுசுல இப்படித்தேன்.இப்ப அடக்கி வாசிக்கிறோம்ல[சரக்கு காலி::))))))))))]
தல
நெசமா சொல்லுங்க இது பிரியா விடை இல்லியே
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi & கண்மணி வருகைக்கும் கருத்துக்கும்.நிச்சயமா கவனிச்சுக்கறேங்க முத்துலெட்சுமி(கரெக்டா இருக்கா?)
படிக்கற வயசுல சினிமா பாத்து கெட்டு போகாதீங்கன்னு சொல்றேன்...பாட்டி..
தல
நெசமா சொல்லுங்க இது பிரியா விடை இல்லியே...”
?????
நல்லா, ஜாலியா எழுதுறீங்க; பேச்சுத் தமிழை அப்படியே எழுத்தில்.... தொடருங்கள்.
சார் நீங்க சிதம்பரமா.....அடடடா முதல் முறையா சிதம்பரத்துக்காரரை பாக்கரேன்...நமக்கு அந்த ஊரேதான் :)
ரொம்ப சந்தோஷமுங்க...:)
"//ஆங்... எங்க வீட்டேன்..?
“எங்க விட்டே? விட்டாத்தான் ஓடிப்போயிருப்போம்ல”.."//
ஹா....ஹா...
ஏ... இளைய சமுதாயமே....(அப்பாடா அட்வைஸ் ஏரியாவுக்கு வந்தாச்சு) இது போன்ற பொழுது போக்கு விஷயங்களில் நீ செலவழிக்கும் நேரத்தை உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயங்களில் ஈடுபடுத்து. இதனால் உன் வாழ்வும் வளமாகும்.. உன்னைச்சார்ந்த சமுதாயமும் உயர்நிலை அடையும். நம் பாரத நாடு உண்மையிலே உலக அளவில் தலை நிமிரும்."/
யாரங்கே அந்த பொன்முடியை கொண்டுவாருங்கள்
நம்ம அண்ணாமலையாருக்கு கொடுக்க. [யாரங்கே யாரங்கே எங்கேப்பா போனீங்க இந்த சிப்பந்திகளே இப்படிதான் அவசியமான நேரத்தில் வரமாட்டாங்களே..]
நகைச்சுவை உணர்வோடு பட்டய கெளபுறீங்க.. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..
nallaarukkunga. :)
--vidhya
நல்ல நகைசுவையா எழுதி இருக்கிங்க .. வாழ்த்துக்கள்
ஸ்ரீராம். sarusriraj Vidhoosh அன்புடன் மலிக்கா அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்
அம்பிகா உங்கள் தோழி கிருத்திகா வாங்க வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க. ஆமாங்க நானும் சிதம்பரம்தான்.
வந்திருந்த பல பேரு ஓட்டுப்போட மறந்துட்டீங்கன்னு வருத்தத்தோட அறிவிக்கறேன்.. தயவு செய்து ஓட்டு போடுங்க(எனக்கு)
நல்ல சுவாரசியமான எழுத்து நடை. முழுதையும் படித்து முடிக்க வைத்தது.
//ஆங்... எங்க வீட்டேன்..?
“எங்க விட்டே? விட்டாத்தான் ஓடிப்போயிருப்போம்ல”..?//
ஆமா உங்க தொழிலுக்கு இந்தக் கேள்வி கேட்டிர்களானால் , இதைத் தான் மாணவர்கள் மனதுக்குள் சொல்லி இருப்பார்கள். நினைத்தேன். சிரித்தேன்.
//தயவு செய்து ஓட்டு போடுங்க(எனக்கு)//
ha ha haa
வாங்க ஜெஸ்வந்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆனா நீங்களுமா?(ஏமாத்திட்டீங்களே?)
கன்மனி சொன்னது சரி,என்ன மேட்டர்ன்னு புறிஞ்சிக்கிரத்துகே லேட் ஆச்சு இரண்டு தடவ படிச்சாதான் புரியுது ஒரு வேல எனக்குத்தான் அப்படியானு தெரியல இருந்தாலும் படிக்கவெக்கிரிங்களே அதான் காளிங்... தொடருங்கள்.
சிதம்பரத்துல நம்ம இரண்டு பேர்தான் நினைச்சேன் பரவல “உங்கள் தோழி கிருத்திகா” வேற இருக்காங்க போல விரைவில் நம்ம சிதம்பரத்துல் பதிவர் ”மாநாடு” போட்டு நம்ம மூனு பேரும் பேசிவோம்.......
மைக் இல்லாத குறைதான் .
ஒட்டு போட்டு விட்டேன் .அதான் நம்ம வேலையே .
நிறைய எழுதுங்க
நல்லா யோசிக்கிறீங்க, தோழரே!
//தானாவே செய்வின வச்சுக்கிட்டு வர்ற யார் காசுலயோ போய்ட்டு வந்து சும்மா நச்சுன்னு ஒரு பதிவு போடுங்க//
அதான் போட்டுட்டீங்களே...
//எப்படியிருக்கும் என் பிஞ்சு மனசு..?//
மத்தவங்க கொஞ்சம் நிம்மதியா இருந்தா புடிக்காதே..
//கொட்டோ கொட்டுன்னு
குமுறிட்டுப்போங்க....//
முடியல... முடியல... முடியல...
//இவங்கள்லாம் பின்னாடியே வர்றாங்க.. அப்ப நீங்க?//
நாம முன்னாடி போறோம்.. அப்பீட்டு..
ஓட்டுப் போட்டேனே! சரியாகப் பாருங்க.
நல்லாவே கலக்கலா நகச்சுவையோட எழுதறீங்க அண்ணாச்சி.அதான் உங்களுக்குச் சோகம் பிடிக்கல.நான் எப்பவும் தவறாம ஓட்டுப் போடுறேன்.
Nice picture.. I can't read tamil so..I am guessing whatever you wrote is good
malar .Chitra,கலகலப்ரியா,ஹேமா ,Nostalgia எல்லாருக்கும் நன்றி.. thank u nostalgia.
கலகலப்ரியா said... நாம முன்னாடி போறோம்.. அப்பீட்டு.." அப்ப நாங்க பின்னாடி வர்றோம்
ஹேமா said... நான் எப்பவும் தவறாம ஓட்டுப் போடுறேன். போடுங்க ஆனா எனக்கு போட்டீங்களா?
உங்கள் எழுத்தை படித்தவுடன் ஓரு மேடைப்பேச்சை கேட்டது போல உள்ளது. நன்றாக எழுதுகிறீர்கள்.
http://snehiti.blogspot.com
நீங்க பதிவு போடததால நான சாப்பிடவேஇல்லைதெரியுமா(சும்மா சொன்னேன் நண்பரே)
பதிவு அருமை...தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி மாதவன், வேலன் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து வாங்க..
நல்ல சுவாரசியமான எழுத்து நடை.
நிறைய எழுதுங்க
Hi.. nice posts.. I like ur blog.. Hope u will visit my blog too..
நினைவுகளுடன் -நிகே, Sun வாங்க வாங்க உங்க கருத்த போட்டு அசத்திட்டீங்க. அடிக்கடி வாங்க என்ன?
Hi, thanks for stopping by my blog and the wonderful blog. You have a nice blog, good and funny posts! good one...
thnx gita for ur visit to my blog. pls b read regularly.
//நல்லா கேட்டீங்கய்யா டீட்டெயிலு,,,//
நல்லா கிளப்புறாங்கையா பீதியை :)
//விஜய் படம் மாதிரி என்ன சொல்ல வர்றேன்னு தெரியாத குழப்பத்துலே நீ இருக்கன்னு தெளிவா தெரியுது//
கரீட்டு..கரீட்டு.. :)
//எங்க விட்டே? விட்டாத்தான் ஓடிப்போயிருப்போம்ல”..?//
ஹி ஹி ..
மிஸ்டர் மலை,எப்படிங்க இப்படி? செம ரகளை பண்றீங்க..கலக்கல் பதிவு பாஸ் !!!
படிப்பதற்கு நல்ல சுவாரசியமா இருக்கு...
நல்லா எழுதுறீங்க!
nallairuku. sorry, ini adikadi varugaitharugiren.
அண்ணாத்த, நீங்க கூப்பிடுறதுக்கு முன்னாடியே நான் பலவாட்டி இங்க வந்துட்டு போய்ட்டேன் :)
தேங்க்ஸ் பூங்குன்றன்.வே, Priya ,malarvizhi வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து வாருங்கள்.
ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததுல, கூப்புடறதுக்கு முன்னயும், அப்புறமும்.. தொடர்ந்து வாங்க.. எனக்கு சந்தோஷமா இருக்கும்.
//எனதருமை அன்பர்களே, நன்பர்களே, சக பதிவர்களே, வாசகர்களே, கருத்துக்களை தயக்கமில்லாமல் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்துபவர்களே மற்றும் என்னை பின் தொடர்பவர்களே, இனி தொடரப்போகிறவர்களே ///
நெசமாவே இத கோர்வையா படிச்சா லேகியம் விற்பது போப் தானுங்க தெரியுது
அருமையா எழுதுறீங்க வாழ்த்துக்கள்.
அந்த படம் கண்ணுக்கு குளிர்சியா ரொம்ப நல்ல இருக்கு
ya kandipa varuven.. nandri..Thanks for visiting my blog too..
வாழ்த்துக்கள் அண்ணாமலை, சுவாரஸ்யமான இடுகை, வாழ்த்துக்கள்.
SUFFIX, Die Hard, Jaleela வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Jaleela கோர்வையா மனப்பாடம் பன்னி வச்சுக்கங்க என்னிக்காவது உதவும்...
//கம்பெனி காசுலயோ போங்க இல்லன்னா வெயிட் பன்னுங்க தனக்கு தானாவே செய்வின வச்சுக்கிட்டு வர்ற யார் காசுலயோ போய்ட்டு வந்து சும்மா நச்சுன்னு ஒரு பதிவு போடுங்க, நிச்சயம் என் ஓட்டயும் , என் கருத்தையும் பதிவு செய்யறேன்.//
இந்த லொள்ளுதானே வேண்டாங்கிறது...நல்ல பதிவுங்க...எழுத்துநடையும் நல்லாருக்கு...
அடடே... ஹார்ட்டி வெல்கம் டூ உமா.. தேங்க்ஸ் ஃபார் யுவர் கமெண்ட்ஸ்.. தொடர்ந்து வரனும் என்ன?
புகழ். ஜெய பிரபு said...
முடியல சார் முடியல....
repeatttttttttttttt
தேங்க்யூ ஏஞ்சல்..
ரசனையான பதிவு.
வாங்க வாங்க நீங்களும் வந்ததுல சந்தோஷம்.. தொடர்ந்து வாங்க..
sir ena 3 daysah oru postum kanum
வருது வருது வெய்ட்டீஸ்
இத கோர்வையா மனப்பாடம் பண்ணிட்டேன், என் அடுத்த பதிவுக்கு....
உங்க அன்பான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. Jaleela (ஆமா எதை மனப்பாடம் பன்னீங்க?)
wish u a happy new year
நன்றி...ஏஞ்சல்.....
Post a Comment