காதல்னா சும்மா இல்ல...


                   தலைப்ப பாத்தீங்கள்ல, சும்மா இழுக்குதா?  ஆமாங்க காதல்ங்கறது ஒரு புனிதமான விஷயம். எப்படின்னு தெரிஞ்சுக்கனுமா? மேல படிங்க. காதல்ல அந்தக்காலம் இந்தக்காலம் அப்படின்னு எதுவும் இல்லங்க, எல்லாம் நம்ம மனச போலத்தாங்க. எல்லாக்காலத்துலயும் இரு பாலருக்கிடையேயான பரஸ்பர புரிதலுக்கு பின்னரான ஈர்ப்பு இழுத்து செல்லும் திசைதான் காதல் என்றால் மிகையாகாது.

                  ஆனா தற்காலத்துல இன்றைய இளைய சமுதாயத்துக்கு எதிர்பாலினரை சந்திக்கும், பழகும் வாய்ப்புகள் கடந்த காலத்தை ஒப்பிடும் போது சற்று அதிகமாகவே உள்ளது. இது எந்த வகையில் இன்றைய இளைய சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்ப்போம்.   
 
                  அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அது அந்தக்காலம், அவனும் நோக்கியா இவளும் நோக்கியா (கனெக்டிங் பீப்பிள்ங்க) இது இந்தக் காலம். இந்த விஷயத்துல செல் ஃபோன் கம்பெனிங்க எல்லாம் கிட்டத்தட்ட மாமா வேலைதாங்க செய்யறாங்க. எப்படின்னு தெரியுமா? ஆம்பள பேசுனா ஒரு காசு, பொண்னுங்க பேசுனா இலவசம். உங்களுக்கு எவ்ளோ இன்கமிங் வருதோ அந்தளவுக்கு உங்க கணக்குல அவுட் கோயிங்குக்கான பாலன்ஸ் ஏறும். (ஏறட்டும் ஏறட்டும் எல்லாம் அப்பன் காசு).

                 தம்பிகளா சினிமாலயும் டிவிலயும் ஹீரோ ஹீரோயின லவ் பன்ற காட்சிகளெல்லாம் உங்கள தூண்டுதா? தூண்டனும் அதுக்குத்தானே படமே எடுக்கறாங்க. கார்ப்பொரேஷன் ஸ்கூல் பசங்களுக்கு கஸ்தூரிராஜா எடுத்தா கான்வெண்ட் பசங்களுக்கு மனிரத்னம் எடுக்கப்போறாரு. இருட்டு அறையில முரட்டு ஒலி அமைப்போட பாக்குற காட்சிகள் இளைய சமுதாயத்துல (அதாங்க டீன் ஏஜ் குரூப்பு) குருட்டாம்போக்கான எண்ணங்கள ஏற்படுத்தி யார் பெத்த புள்ளயோ யார் பெத்த பொண்னயோ இழுத்துக்கிட்டு ஓடறான். ஆனா அதுக்கு பிறகு இரண்டு குடும்பமும், ஓடிப்போனவங்களும் சந்திக்கற பிரச்சினைகள எந்த சினிமாவும் சொல்லல, சொல்லவும் மாட்டாங்க.

                  வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை சுயமாக நிறைவேற்றிக்கொள்ளும் பொருளாதார வசதி இல்லாத, ஏற்படுத்திக்கொள்ளும் வழி தெரியாத நிலையில் திசை மாறி சென்று வாழ்க்கையை தொலைத்த ஜோடிகள் ஏராளம்..

                   இருவருக்குள் வெரும் தோற்றத்தை மட்டுமே வைத்து ஏற்படும் ஈர்ப்புக்கு காதல் என்று இன்றைய கலை உலகம் மிகப்பிரமாதமாக, பிரமாண்டமாக தொடர்ந்து போதித்து வருகிறது (விளைவு அவர்கள் குடும்பத்திலேயே தெரிந்த போதும் கவலைப்படாமல், பணம் ஒன்றே குறிக்கோளாய்). ஆனால் நாடு? குடைக்குள் மழை மாதிரி குடைக்குள் குடும்பம் (வெயிலோ மழையோ ஏன் சுனாமியே வந்தாக்கூட தெரியாம, யாரு மனசுலே யாருங்கறது கூட கண்டு பிடிச்சுடலாம் ஆனா யாரு கை யாருக்கிட்டன்னு கண்டு பிடிக்க முடியாது ) போன்ற காட்சிகள பாக்க வேண்டியிருக்கு

                “உங்களால இதெல்லாம் செய்ய முடியலேங்கற பொறாமையில ஈஸியா  இப்படி எங்கள குற்றம் சொல்ல முடியுது” அப்படிங்கற முடிவுக்கு யாரும் வந்துடாதீங்க. ஏன்னா இந்த காட்சிகள பாக்காத நன்பர்கள் யாராவது இருக்கீங்களா?  பாத்துருப்பீங்க, சிலர் நைஸா, டிக்கெட் இல்லாத பிட் ஓடுதுன்னு  அப்படி இப்படி நின்னு கூட பாத்துருக்கலாம். ஆனா சாலையக்கடக்கும் போது நீங்க பாத்த இந்த குடைகள்ல உங்க வீட்டு புள்ளங்க இருந்தா? நெனைக்கும் போதே பகீர்னு இருக்கா? அன்பு வாசகர்களே நீங்க பெற்றோர்களா இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்த செலவிடுங்க, உங்களோட புள்ளங்களுக்கு வாழ்க்கைய பத்தி சொல்லி கொடுங்க. ஏன்னா நீங்க சொல்லி தரலேன்னா அவங்க தானாவே தப்பா கத்துப்பாங்க.

             பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இளைய நன்பர்களே  பிடிச்சவங்களோட பிடிச்ச மாதிரி பழகுங்க. உங்களோட பெற்றோர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் உங்களுக்கான நல்ல வாழ்க்கையை கையில் வைத்துக்கொண்டு என்பதை மனதில் வைத்து..ஏனெனில் எந்த பெற்றோரும் தங்கள் செல்லங்களை எங்கும் தள்ளிவிட மாட்டார்கள். பாதியில் வந்த பையனயும் பொன்னயும் நம்புற நீங்க உங்க பெற்றோர நம்ப மாட்டீங்களா என்ன?
             
            அப்படீன்னா நீ காதலுக்கு மரியாதை செய்யாதவனா?ன்னு கேக்கறவங்களுக்கு “காதல் என்பது மனிதன் அல்ல மரியாதை செய்வதற்கு, மனிதன்தான் மரியாதையை எதிர்பார்ப்பான், அது ஒரு உணர்வு, புரிந்து கொண்டு தெளிவாக தெரிந்து கொண்டு, நிகழ் கால இன்பங்களை பார்த்து அவையே நிரந்தரம் என ஏமாறாமல் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல உதாரணமாக திகழக்கூடிய காதல் தம்பதியினரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்.”

                அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சின்னு சந்தோஷமா போய்க்கிட்டுருக்கற ரெண்டு குடும்பங்களோட சந்தோஷத்தத்தான் இன்றைய இளைய சமுதாயம் காதலுங்கற பேருல பலி கொடுக்குது. இப்ப புரியுதா ஏன் காதல்னா சும்மா இல்லன்னு?
               

                                 
                 


48 comments:

அன்புடன் மலிக்கா said...

ஓட்டு போட்டாச்சில்ல நாங்களும்..

Chitra said...

அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சின்னு சந்தோஷமா போய்க்கிட்டுருக்கற ரெண்டு குடும்பங்களோட சந்தோஷத்தத்தான் இன்றைய இளைய சமுதாயம் காதலுங்கற பேருல பலி கொடுக்குது. இப்ப புரியுதா ஏன் காதல்னா சும்மா இல்லன்னு? .................இவ்வளவு கடுமையா காதலுக்கு "மரியாதை" செய்யுறீங்க. கருத்துக்கள் சிந்திக்க வைக்குது.

பூங்குன்றன்.வே said...

//“காதல் என்பது மனிதன் அல்ல மரியாதை செய்வதற்கு, மனிதன்தான் மரியாதையை எதிர்பார்ப்பான், அது ஒரு உணர்வு, புரிந்து கொண்டு தெளிவாக தெரிந்து கொண்டு, நிகழ் கால இன்பங்களை பார்த்து அவையே நிரந்தரம் என ஏமாறாமல் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல உதாரணமாக திகழக்கூடிய காதல் தம்பதியினரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்.”//

அப்பாடி..காதலை பத்தி ஒரு பெரிய ஆராய்ச்சியே பண்ணிருக்கீங்க ஸார்.நல்ல நடை;நல்ல எழுத்து;
உண்மைதான்.புரிந்துகொண்டால் வாழ்க்கை நலமே!!!

அண்ணாமலையான் said...

“இவ்வளவு கடுமையா காதலுக்கு "மரியாதை" செய்யுறீங்க. கருத்துக்கள் சிந்திக்க வைக்குது.” உண்மைதான் சித்ரா, எதையும் முழு அளவுல செய்யும் போதுதான் நிறைவு கிடைக்கும்..

அண்ணாமலையான் said...

ஓட்டு போட்டாச்சில்ல நாங்களும்..” அப்படீன்னா குடும்பத்தோட வந்தீங்களா? ரொம்ப சந்தோஷம்.

அண்ணாமலையான் said...

”அப்பாடி..காதலை பத்தி ஒரு பெரிய ஆராய்ச்சியே பண்ணிருக்கீங்க” கடந்த 2000 வருஷமா நம்ம முன்னோர்கள் பன்னாத ஆராய்ச்சியா? என்ன எந்த நல்ல விஷயத்தயும் நாம் தெளிவான கண்ணோட்டத்துல பாக்குறதுல்ல.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புடன் மலிக்கா, சித்ரா, பூங்குன்றன்..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...

Mrs.Menagasathia said...

காதலை பத்தி ஒரு பெரிய ஆராய்ச்சியே பண்ணிருக்கீங்க.கருத்துக்கள் சிந்திக்க வைக்குது.

ஜெயக்குமார் said...

// அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சின்னு சந்தோஷமா போய்க்கிட்டுருக்கற ரெண்டு குடும்பங்களோட சந்தோஷத்தத்தான் இன்றைய இளைய சமுதாயம் காதலுங்கற பேருல பலி கொடுக்குது//

சத்தியமான வார்த்தைகள். நல்ல கட்டுரை.. கூட்டத்தோட கோவிந்தா போடாம உண்மையான உணர்வுகளை சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

Mrs.Menagasathia ஜெயக்குமார் பிரியமுடன்...வசந்த் மற்றும் ஜலீலா, ஃபுல்மூன் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

malar said...

வாங்க சார் வணக்கம் !

இப்படி கூப்பிடுறது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் நான் அடித்த காபியில் விலை இல்ல சார் .எனக்கு முந்தி இந்த பதிவை யாரவது போட்டு விட குடாதே என்ற அவசரத்தில் அடித்த காபியை முழுதும் அடிக்காமல் விட்டு விட்டேன் .
உங்கள் பதிவை படித்தேன் ஆரம்பத்தில் சார் ப்ளேடு போடுறாரோ என்று நினைதேன் .உமையை சொல்லி இருக்கிறீர்கள் .


'''''பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இளைய நன்பர்களே பிடிச்சவங்களோட பிடிச்ச மாதிரி பழகுங்க. உங்களோட பெற்றோர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் உங்களுக்கான நல்ல வாழ்க்கையை கையில் வைத்துக்கொண்டு என்பதை மனதில் வைத்து..ஏனெனில் எந்த பெற்றோரும் தங்கள் செல்லங்களை எங்கும் தள்ளிவிட மாட்டார்கள். பாதியில் வந்த பையனயும் பொன்னயும் நம்புற நீங்க உங்க பெற்றோர நம்ப மாட்டீங்களா என்ன?'''

இந்த காலத்தில் பெண் ,ஆண் என்று இல்லை எல்லாம் ஒரே குட்டை தான் (எல்லாம் ஒரே கழுதை கள் தான் நம்ம பிள்ளைகளை பார்த்து நாமளே சொல்ல குடாது பாருங்க )

ஆனா எதையாவது ஒரு தடவைக்கு மேல் இரண்டாவதாக கேட்டல் அதிக படியான டிகிரிக்கு மேல் பையன் கத்துவான் பாருங்க அதில் எந்த தாயாக இருந்தாலும் மேரன்டுதான் போவா .என்ன சொன்னாலும் எனக்கு தெரியும் உன் அட்வைஸ் தேவை இல்லை .அப்புறம் என்ன செய்ய முடியும் .இது காதலுக்கு மட்டும் இல்லை எல்லா விசயத்திலும் பையன்களிடம் இருந்து வந்து விழும் வார்த்தை தான் .அதுங்களா பட்டு திருந்தினாதான் உண்டு .

நான் ரொம்ப பிளேடு போட்டுட்டேனோ ?
விரைவில் வருகிறேன் விலை என்ன என்று வினவி விட்டு ?

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .

ரொம்ப அருதுடனோ (உங்களை விடவா )இல்ல assistant professor ஆச்சே ன்னு சொன்னேன் .

angel said...

சந்திக்கற பிரச்சினைகள எந்த சினிமாவும் சொல்லல, சொல்லவும் மாட்டாங்க.


kadhal padam pathu irukingala
nanum unga karuthakala othukren ana ithu matum xception

அண்ணாமலையான் said...

வாங்க மலர் மற்றும் ஏஞ்சல். தங்களின் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள்.

ஜெஸ்வந்தி said...

சிந்திக்க வைக்கும் பதிவு. இதெல்லாம் எவர் சொன்னாலும் எவருக்கும் புரியாதப்பா. காதலை எந்த சக்தியும் நிறுத்த முடியாது. சிலர் கல்யாணத்தில் முடித்து, பின்னர் உணர்ந்து கண்ணீர் விடுகிறார்கள். சிலர், பிரிவில் வதங்கி கண்ணீர் விடுகிறார்கள். மொத்தத்தில் காதல் என்றால் கண்ணீர் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இப்ப புரியுதா ஏன் காதல்னா சும்மா இல்லன்னு? //
க‌ல‌க்குறீங்க‌ ச‌கா ந‌ல்லாவே புரியுது

கண்மணி said...

//இருவருக்குள் வெரும் தோற்றத்தை மட்டுமே வைத்து ஏற்படும் ஈர்ப்புக்கு காதல் என்று இன்றைய கலை உலகம் மிகப்பிரமாதமாக, பிரமாண்டமாக தொடர்ந்து போதித்து வருகிறது (விளைவு அவர்கள் குடும்பத்திலேயே தெரிந்த போதும் கவலைப்படாமல், பணம் ஒன்றே குறிக்கோளாய்)//
சினிமாவோட சீரியல்களும் இன்றைய இளைஞர்களுக்கு இப்படித்தான் போதிக்கிறது.

அண்ணாமலையான் said...

ஜெஸ்வந்தி, கரிசல்காரன், கண்மணி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

Anonymous said...

"ஏஞ்சல் காதல் படம்தான் பலம் அல்ல. சிலரின் வருமானம் அவ்வளவுதான். மற்றபடி நானும் காதலுக்கு ஆதரவுதான்”

mukilan said...

கடுமையான கருத்தாய் இருக்கிறதே? இருந்தாலும் வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

சரியான கருத்துக்கள்...

அண்ணாமலையான் said...

நன்றி புலவன். வருகைக்கும் கருத்துக்கும்

கல்யாணி சுரேஷ் said...

//நீங்க பெற்றோர்களா இருக்கும் பட்சத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்த செலவிடுங்க, உங்களோட புள்ளங்களுக்கு வாழ்க்கைய பத்தி சொல்லி கொடுங்க. ஏன்னா நீங்க சொல்லி தரலேன்னா அவங்க தானாவே தப்பா கத்துப்பாங்க.//

ரொம்ப சரி. நான் கூட என்னோட பையனுக்கு ஒரு நல்ல தோழியா இருக்கணும் னு நினைக்கிறேன். அப்படிதான் இருக்கிறேன்.

Pavi said...

இப்படியான பதிவுகள் தான் காலத்தின் தேவை
நன்றாக உள்ளது . படங்களில் வரும் கதாநாயகன் மாதிரியும் , கதாநாயகி போலும் தான் இப்போதைய இளம் மட்டங்கள் இருக்க ஆசைப்படுகிறார்கள் .

Sangkavi said...

//'''''பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இளைய நன்பர்களே பிடிச்சவங்களோட பிடிச்ச மாதிரி பழகுங்க. உங்களோட பெற்றோர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் உங்களுக்கான நல்ல வாழ்க்கையை கையில் வைத்துக்கொண்டு என்பதை மனதில் வைத்து..ஏனெனில் எந்த பெற்றோரும் தங்கள் செல்லங்களை எங்கும் தள்ளிவிட மாட்டார்கள். பாதியில் வந்த பையனயும் பொன்னயும் நம்புற நீங்க உங்க பெற்றோர நம்ப மாட்டீங்களா என்ன?'''//

எதார்த்தமான வரிகள், அழகா இருக்கு.......................

நேரம் இருந்தா என்னோட பதிவை பாருங்களேன்..........
http://sangkavi.blogspot.com/

அண்ணாமலையான் said...

கல்யாணி சுரேஷ், பவி மற்றும் சங்கவி வருகைக்கும் கர்த்துக்கும் மிக்க நன்றி.
@ ஏஞ்சல் காதல் படம் பார்க்கவில்லை. ஆனால் அந்த படமும் தவறான வழிகாட்டுதலையே செய்தது என்பது என் கருத்து.

tamiluthayam said...

உண்மை தான். காதல் படமும் தவறான வழிகாட்டலே. காதல் குறித்தான பார்வை மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. ஏன் ஒரே மனிதரின் பார்வையிலேயே காதல் காலத்துக்கு தகுந்தாற் போல் எண்ணங்களை மாற்றுகிறதே.

thenammailakshmanan said...

உண்மையிலேயே காதலுக்கு மரியாதைதான் இது அண்ணாமலையான்

அண்ணாமலையான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமில்உதயம்

அண்ணாமலையான் said...

வாங்க தேனம்மைலலக்ஷ்மனன் தங்களின் முதல் வருகைகும் பதிவுக்கும் நன்றி.

ஹேமா said...

சரியான காதல் அலசல்.பட்டவனுக்குத்தான் தெரியும் அதன் வேதனையும் கஸ்டமும்.

கிருபாநந்தினி said...

நியாயமாத்தான் எழுதியிருக்கீங்க. காதலுக்கு மரியாதை படம் பார்த்தாப்ல இருந்துச்சு!

அண்ணாமலையான் said...

நன்றி ஹேமா, கிருபாநந்தினி தங்கள் வருகைக்கும் அழகான கருத்து பதிவிற்கும். தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

Anonymous said...

காதலிச்சவங்க கல்யாணம் பண்ணி ஒரு ஏழெட்டு வருஷம் கழிச்சும் சந்தோஷமா இருந்தா அப்பதான் அது காதல் கல்யாணம்.

அண்ணாமலையான் said...

நன்றி சின்ன அம்மிணி வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து வாருங்கள்.

aazhimazhai said...

அது ஒரு உணர்வு, புரிந்து கொண்டு தெளிவாக தெரிந்து கொண்டு, நிகழ் கால இன்பங்களை பார்த்து அவையே நிரந்தரம் என ஏமாறாமல் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல உதாரணமாக திகழக்கூடிய காதல் தம்பதியினரை மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்.”

ரொம்ப நல்ல கருத்துக்கள் சார் , நீங்க எழுதின விதமும் ரொம்ப நல்ல இருந்தது !!!!!

அண்ணாமலையான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆழி.

அண்ணாமலையான் said...

”காதலிச்சவங்க கல்யாணம் பண்ணி ஒரு ஏழெட்டு வருஷம் கழிச்சும் சந்தோஷமா இருந்தா அப்பதான் அது காதல் கல்யாணம்.” சின்ன அம்மிணி said...
ஏழெட்டு வருஷம் இல்லே எப்பொவுமே சந்தோஷமா இருக்க முயற்சி செய்து வாழறதுதான் காதல். சரியா?

யாழினி said...

என்னைப் பொறுத்தவரை பெற்றோர் ஆசீர்வாதம் இல்லாமல் செய்யும் எந்த கலியாணமும் மகிழ்ச்சிகரமாக நிலைப்பதில்லை என்பதே என் அர்த்தம். பெற்றோர்களால் எவ்வளவு செல்லமாக வளர்க்கப்படும் சில பெண் பிள்ளைகள் காதலில் சம்மதம் கிடைக்காத பட்சத்தில்பெற்றோருக்கு தெரியாமல் தனது காதலுடன் ஓடிப் போய் கலியாணம் செய்வதை பார்த்தால் கவலையாக இருக்கும்.

//ஏனெனில் எந்த பெற்றோரும் தங்கள் செல்லங்களை எங்கும் தள்ளிவிட மாட்டார்கள். பாதியில் வந்த பையனயும் பொன்னயும் நம்புற நீங்க உங்க பெற்றோர நம்ப மாட்டீங்களா என்ன?//

இந்த‌ விட‌ய‌த்தில் நீங்க‌ள் சொன்ன‌ இதே க‌ருத்தை தான் நானும் உட‌ன் ப‌டுகிறேன்.

அண்ணாமலையான் said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யாழினி.

மாதேவி said...

"இப்ப புரியுதா ஏன் காதல்னா சும்மா இல்லன்னு?"

இளையவயதினரை சிந்திக்கவைக்கும் பதிவு.நன்றாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

அண்ணாமலையான் said...

ரொம்ப நன்றி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..
(இதுக்கப்புறம் 2 பதிவு வந்துடுச்சு பாக்கலியா?)

நாஞ்சில் பிரதாப் said...

..// அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சின்னு சந்தோஷமா போய்க்கிட்டுருக்கற ரெண்டு குடும்பங்களோட சந்தோஷத்தத்தான் இன்றைய இளைய சமுதாயம் காதலுங்கற பேருல பலி கொடுக்குது. இப்ப புரியுதா ஏன் காதல்னா சும்மா இல்லன்னு? //

அதான் வாத்யாரே அந்த எழவு பக்கம் தலைவச்சுப்படுக்கலை... காதலுங்கறது சும்மா இல்ல செம டேஞசுரு...

கலக்கல் வாத்யாருன்னா சும்மாவா

அண்ணாமலையான் said...

நாஞ்சிலு சும்மா சூப்பரான முடிவ எடுத்தாருப்பா....

இனியாள் said...

Annamalaiyan ungalukku oodagangal mela romba kovam pola irukku.... ella pathivugalyum pongi elureenga, irunga ungala sun tv office la pottu viduren...

அண்ணாமலையான் said...

வாம்மா ஒன்னத்தான் தேடிட்டிருந்தேன்... போட்டு கொடுக்கும் போது என் பேட்டியும் கேட்டு கொடுத்தா நல்லாருக்கும்.. எப்படி வசதி...? ( முன்னாடியே சொல்லனும், ஏன்னா கோட் வாங்கனும், யாராவது ஸ்பான்சர் கிடைப்பாங்களா?)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அண்ணே மனச டச் பண்ணீட்டிங்க..
தோலைப் பாத்து தான் காதலே வருது..
இனக் கவர்ச்சியை காதல்னு நெனச்சு எத்தன பேர் சுத்தறாங்க..
ஏமாந்தா மடக்கிப் போட ஒரு கும்பலாவே பசங்க சுத்தறாங்க.. தெரியாம உள்ள விழுந்து எதுன பொண்ணுக அப்பன எமாத்துறாங்க..
"இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் "
ங்கற வரி ஞாபகம் வருது..
நான் மீண்டும் மீண்டும் கூறிக்கொள்ளும் வரிகள்.. உணர்ந்தால் தான் மாற்றம் வரும்..

அண்ணாமலையான் said...

வாங்க பிரகாஷ் நீங்க சொல்றது நெசம்தான்...

யுக கோபிகா said...

காதலுக்கு (கண்டிப்பு) மரியாதை ...
மிகவும் அருமை

Post a Comment