இத படிங்க மொதல்ல
ஹாய் எவ்ரிபடி, என்ன எப்டி இருக்கீங்க..? இந்த நாள் இனிய நாளா போச்சா? வேகமா ஓடிட்டு இருக்கற இந்த உலகத்துல நம்ம வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் உன்னதமான நாள்தான் இல்லீங்களா?(ஆமாங்க, கொஞ்சம் யோசிச்சு பாருங்க, பிறக்காமலே போனவங்க, அல்பாயுசல போனவங்க, அறை குறையா வாழ்ந்து மடிஞ்சவங்க அவங்களுக்கு இல்லாத ஒரு முழு நல்ல நாள் ) அத நாம எப்படி கழிச்சோம் அப்படின்னு திரும்பி பாத்து வருத்தப்பட்டோ, சந்தோஷப்பட்டோ என்ன ஆகப்போது? எல்லோருமே எல்லா நாளையும் நல்ல நாளா மாத்திக்கறது அவங்கவங்க கைலதாங்க இருக்குது.
என்னய்யா இப்படி சொல்றே? கடந்த கால வாழ்க்கைய பாத்து பாடம் கத்துக்கன்னு பெரியவங்கள்ளாம் சொல்லியிருக்காங்களே அதெல்லாம் என்னன்னு கேக்கறீங்களா?
அனுபவங்கறத கிமுலேர்ந்து கிபிக்கு வந்த நாம இன்னும் சரியா , சரியா என்ன சரியா கொஞ்சம் கூட புரிஞ்ச்சுக்கலேங்க.
பின்ன என்னங்க நாம மட்டும் அனுபவத்த பத்தி தெரிஞ்சு வச்சிருந்தா இன்னய தேதிக்கு நம்ம தமிழ் சினிமா ஹீரோக்கள் (யார் பேர சொல்றது யார விடறது) 50 வது படம், 100வது நாள்னு நம்மள பாடா படுத்துவாங்களா சொல்லுங்க?
சினிமால மட்டுமா நாம ஏமாந்து போறோம்? ஒவ்வொரு தடவ தேர்தல் வரும்போதும் மாத்தி மாத்தி ஓட்ட போட்டு உருப்படமா ஆயிருக்கோம். இதுல வெக்கெங்கெட்ட தனமா “ஏண்டா மாரி உங்கூட்ல ஆத்தாள தூக்கிட்டு வரலியா பூத்துக்கு? தலைக்கு 500ரூவா தர்றாங்களேடா..” என அடுத்தவனையும் கெடுக்கறோம், மீன் மார்க்கெட் அண்டாவுல இருக்கற நண்டு மாதிரி.
யாராச்சும் மீன் மார்க்கெட் போவும்போது இத பாத்து இருக்கீங்களா? ஒரு நண்டு இன்னொரு நண்ட வெளிய வர விடாம பிடிச்சு உள்ளே இழுக்கும், அதனால அந்த பாத்திரத்த மூடாமலயே வச்சுருப்பாங்க ஏன்னா நண்டு எங்கயும் போகாது.
ஆனா நம்ம நாடு அப்படியில்லங்க எல்லாத்தையும் தொறந்து போட்டு உலக மயமாக்கங்கற பேர்ல நைஸா நம்ம பணத்த எல்லாம் வெளி நாட்டுக்கு அனுப்பிட்டு இளிச்சவாயனா இருக்கோம். போதாக்கொறைக்கு நம்ப பழய பிரசிடெண்ட் கலாம் அவர்கள் இந்தியாவின் எதிர்காலம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் “யூத்” (பாருங்க இந்த பேருலயும் ஒரு சினிமா எடுத்து காசு பாத்துட்டாங்க) எனப்படும் இளைய சமுதாயம் கிட்டத்தட்ட வெளி நாட்டு பொருட்களை மட்டுமே உபயோகிக்கும் அடிமையாகவே மாறி விட்டிருக்கிறது. இதெல்லாம் எதனாலன்னு தெரியுமா? சுயமா சிந்திச்சு ஏன்?எதற்கு?எப்படி?ன்னு முடிவுகள் எடுக்கற அளவுக்கு மன வளர்ச்சி இல்லாததே காரணங்கறத தவிர வேறென்ன?
பொழுது போக்கு சாதனமான தொலைக்காட்சி சானல்களில் நிகழ்ச்சிகளை இன்று அதிகளவில் வழங்க்கும் சானல்களில் நமது சொந்த சான்ல்களுக்கு சமமான அளவில் வெளி நாட்டு சானல்கள் இடம் பிடித்திருக்கின்றன.
இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? சொந்த அறிவு இல்லாம இவன் சொன்னான், அவன் சொன்னான்னு எல்லாத்தையும் கேட்டு சுயத்தை இழந்து அடையாளம் மாறி கோமாளிகளாக திரிந்து கொண்டிருக்கும் நாம்தான்...
இப்பவும் இதப்படிச்சுட்டு யாராவது இனிமே சுயமா சிந்திக்கப்போறதா முடிவு எடுத்தா அத என்னனு சொல்றது?
வோட்டுன்னு சொன்னாலே அரசியல்தான். அதனாலே அனைவரும் வோட்டு போடுங்க, ஏன்னா இத நிறைய பேர் படிக்கனும்னு நான் விரும்பறேன்..(சுயமா சிந்திச்சு செயல் படுங்க)
11 comments:
சினிமால மட்டுமா நாம ஏமாந்து போறோம்? ஒவ்வொரு தடவ தேர்தல் வரும்போதும் மாத்தி மாத்தி ஓட்ட போட்டு உருப்படமா ஆயிருக்கோம்......உங்கள் மன ஆதாங்கம், நல்லா உங்கள் எழுத்துக்களில் தெரியுது.
//அதனாலே அனைவரும் வோட்டு போடுங்க,//
போடத்தான் போகிறோம்.ஆனால் அதுனால என்ன மாற்றம் வந்துடப் போவுது?
வாங்க பாஸ்.. கலக்குங்க
அண்ணாமலை வந்தேன்.தமிழிஸ் ஓட்டு எங்க காணோம்.போடல.
டெக்னிக்கல் எரர். வந்ததே சந்தோஷம். அனைத்து சீனியர் கமெண்டர்களுக்கும் நன்றி..
வாங்க வாங்க அண்ணாமலையாரே. வந்து நீங்களும் பதிவுலகை ஒரு கலக்கு கலக்குங்க..வாழ்த்துக்கள்
ஓ இப்ப தான் கலக்க ஆரம்பித்து இருக்கீங்களா? ம்ம்ம் நல்ல கலக்குங்க, ஐ
//ரசிக்கவும், கவலைகளை மறந்து சிரிக்கவும் அனைவரும் வாங்க// வரோம், வரோம்,
என் பதிவு பக்கம் வந்து பதில் போட்டது ரொம்ப சந்தோஷம்.
எனக்கும்தான்..Jaleela
நானும் இன்று தான் வந்து படிக்க தொடங்கியுள்ளேன். மெதுவா வருகிறேன். உங்களுக்கு ஸ்வாலஜி பிரிவில் ப்ரொபசர் சதிஷ்குமார் சிதம்பரம் தெரியுமா?
நான் இன்று தான் படித்தே. நல்ல தகவல்கள். உங்களுக்கு ரமேஷ்குமார் ப்ரொபசர் சுவாலஜி டிப்பார்ட்மெண்ட் தெரியுமா?
ரெண்டு குமார்ல எந்த குமார்னு சரியா சொல்லுங்க...
வந்ததுக்கும், அன்பான விசாரிப்புக்கும் நன்றி....
தொடர்ந்து வாங்க....
Post a Comment