சிலர் கை கொட்டி சிரிப்பார்கள்.....

நாட்டின் பள்ளி கல்லூரி வாகனங்கள் அதிரடி சோதனை, உரிமம் இல்லாத, முறையான அனுமதி பெறாத மற்றும் ஓடுவதற்கு தகுதி இல்லாத வாகனங்கள் பறிமுதல்.  ஆகா என்ன ஒரு அருமையான செய்தி..! அடேங்கப்பா.. என்னா ஒரு வேகம்...! அரசாங்கம்  சாட்டைய கையில எடுத்துடுச்சு இனிமே ஒரு கவலையும் இல்லே, நம்மூட்டு புள்ள குட்டிங்க பத்திரமா ஸ்கூலுக்கும், காலேஜுக்கும் போய்ட்டு வந்துடும்.  அப்படீன்னு நிம்மதி பெருமூச்சு விடற ஆளா நீங்க? அப்ப நில்லுங்க ராஜாவே... இந்த பதிவு உங்களுக்குத்தான்..ஏன்னா “படிச்சவன் பாடம் நடத்துறான்.... படிக்காதவன் பல்கலைக்கழகமே நடத்துறான்...”

படிக்கற புள்ளக்காக குடிக்கற டீய க்கூட மிச்சம் பன்னி “எம்மவனும் கான்வெண்ட்ல படிக்கிறான்னு” ஊர் போற்ற நினைத்து பிள்ளைகளை (ஒரு புள்ளயோட யாரு நிறுத்திக்கறா?) நாலு ஆஸ்பெட்டால் சீட்டும் நமுத்துப்போன சுவரும் நசுங்குன ஆட்டோவும் (அம்பது குழந்தைகளும் ஏத்திக்கலாம், கேள்வி கேட்டா வீட்டுக்கு அடியாளும் அனுப்பலாம்) வச்சிருக்கற ஒரு இடத்துல (சேத்தவங்க “ஸ்கூல்னு” சொல்றாங்க?) கொண்டு விட்டுட்டு, அந்த குழந்தை வளர்ந்து டாக்டர், இன்ஞினியர், கலெக்டர் ஆவும்னு கனவ ஸ்டார்ட்னு சொல்லிட்டு தூங்க ஆரம்பிச்சுடுறாங்க..ஃபீஸுக்கு அண்டாவும், டெர்ம் ஃபீஸுக்கு குண்டாவும் வித்து கட்டறாங்க. (என்னது? செயின், தோடு, வளயல்லாம் இருக்கா? இருக்கட்டுங்க.. அதெல்லாம் காலேஜ் படிக்கறப்ப வேனுங்க) இப்படியெல்லாம் ஜனங்க ரத்தத்த சுத்தமா மொத்தமா குடிச்சு, ஆறேழு மாடியும் கூட ரெண்டு லேடியும் சேத்து கட்டிக்கிட்ட கம்மனாட்டிங்க எதயாவது ஒழுங்கா செய்றானுவளா? இல்லயே...நடத்துற ஸ்கூலுக்கு பெர்மிஷன் இல்ல..ஓடுற வண்டிக்கு ஒழுங்கான பேப்பர் இல்ல..அப்புறமா அத ஓட்டுற ட்ரைவருக்கு லைஸென்ஸ் இல்ல (நாங்கள்லாம் ஸ்கூலுக்கே வாங்கலே வேனுக்கா வாங்குவோம்? எந்த ஊருடா நீங்க?) கடைசியா இந்த மாதிரி இடத்துல உயிரினும் மேலான புள்ளங்கல சேக்கற பெற்றோருக்கு தலையில மூளையும் இல்ல...

இந்த உலகத்துல பொறக்கற எல்லாரும் மூளையோடதான் பொறக்கிறாங்க. ஆனா அம்மினிக்கு கலர் டிவி, அய்யனுக்கு டாஸ்மாக், செய்யாத வேலைக்கு கூலி திட்டம் (சில இடங்கள்ல சில அயோக்கியர்கள் திட்டம் போட்டு சில அப்பாவிகளை வேலை வாங்குவதும் நடக்கிறது) போன்ற சுலபமான வழிகள் ஆன்னு தொறந்திருக்கற சாமான்யன் வாய் வழியா மூளைக்கு போய் மழுங்கடிச்சுடுது. போதாக்குறைக்கு குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கான்னு கும்மியடிச்சு, பொடச்சு பொங்கி சாப்புட இலவச அரிசி வேற...

ஏற்கனவே வெற்றிவேல் வீர வேல்னு நின்ன பயதான் நம்ம பயபுள்ளக... இவ்வளவும் செஞ்ச பிறகு கேக்கனுமா? ரொக்கமா வாங்குனான் சொக்காவ போட்டான் பக்காவா குத்துனான் நீலக்கலர் பட்டன. அப்புறமென்ன? அன்னியோட முடிஞ்சது அவன் கத.

நடந்தது நடந்து போச்சு இனி ஆக வேண்டியது என்னன்னு பாப்போம்னு சொல்றீங்களா? அனைவரும் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, கல்லூரிக்கு சென்று அங்கீகாரம், இதர வசதிகளின் உண்மை நிலவரம் போன்றவற்றை தீவிரமாக அடிக்கடி (குறைந்தது 3 மாதத்துக்கு ஒரு முறை) விசாரியுங்கள். தகவல் அறியும் சட்டத்தை தேவைப்பட்டால் பயன் படுத்துங்கள். புதிதாக சேர்க்கப்போகிறவர்கள் முன்பே இந்த தகவல்களை தெரிந்து கொண்டு சேருங்கள். ஜனநாயக நாடான நம் இந்திய தேசத்தைப்பற்றி நாம்தான் கவலைப்பட வேண்டும். நம் மக்கள் சக்தி மிகப்பெரிது. மிகச்சரியாக ஒன்றுபட்டால் முட்டாள் அரசியல்வா(வியா)திகளை ஒழித்து விடலாம்.  இல்லையெனில் இந்த பதிவின் தலைப்புக்கு நீங்கள் உதாரணமாக  இருக்க வேண்டியிருக்கும்...

ஒன்று படுவோம்..

உலகிற்கு நம் சக்தியை உணர்த்துவோம்...

வாழ்க இந்தியா...



16 comments:

Chitra said...

“படிச்சவன் பாடம் நடத்துறான்.... படிக்காதவன் பல்கலைக்கழகமே நடத்துறான்.........
”சூப்பர், அப்பு!

malarvizhi said...

மிக மிக சரியான வார்த்தைகள் முனைவரே ! நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே வார்த்தைகளில் கொட்டி விட்டீர்கள் . பதிவு நன்றாக இருந்தது. தாங்கள் சிதம்பரத்தில் தான் இருக்கிறீர்களா? இங்கு எனக்கு தெரிந்தே நாலைந்து பேர் ஈமு வளர்கிறார்கள் . எங்கள் உறவினர்கள் சிலர் முட்டை அடைகாக்கும் இயந்திரம் கூட வைத்துள்ளனர்.

angel said...

hi
nala eluthirukinga ana konjam perusa poidichu coz eluthiruka topic apdi

ரொக்கமா வாங்குனான் சொக்காவ போட்டான் பக்காவா குத்துனான் நீலக்கலர் பட்டன. அப்புறமென்ன? அன்னியோட முடிஞ்சது அவன் கத.

ithu mathri idail neenga koduthathu elame super nala iruku all the best

angel said...

ungaluku 325 number pidikuma
pidikanum ena nan than unga blogah 325th ah open pannen

Menaga Sathia said...

நல்ல பகிர்வு!!

Anonymous said...

WELL JOB.ALL THE BEST

அண்ணாமலையான் said...

இங்க வந்து எனக்கு ஆதரவு அளிச்சு கமெண்ட் போட்டீங்களே எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.

அண்ணாமலையான் said...

”ungaluku 325 number pidikuma
pidikanum ena nan than unga blogah 325th ah open pannen”
எனக்கு நம்பர்கள விட நபர்களத்தான் பிடிக்கும். உங்களோட ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..

சரவணன். ச said...

வழக்கம் போல் நல்ல பதிவு காலிங்
இத விட பெரிய கொடுமை இலவச பஸ் பாஸ்ல நடக்கிற கொடுமை பெரிய கொடுமை.ஒரு தனியார் பள்ளி வேன் கவுந்ததால் இந்த திடிர் சோதனை, ஆனா காலையில அரசாங்க பஸ்சுல இந்த இலவச ப்ஸ் பாஸ் வச்சிருக்கிர குழந்தைங்க ஏரி இறங்கரத இன்னும் கலைஞ்சர் அய்யா காதுல விழலபோல. பஸ் நிற்கிற இடத்ததாண்டி ஒரு 10 அடி துறத்துல நிறுத்துறது பாதி பசங்க ஏரிகிட்டு இருக்கும்போதே பஸ்ச எடுக்கறதும் ரொம்ம பாவம். அய்யா கலைஞ்சர் க்கு ஒரு வேண்டுகோள் அரசியலவிட்டு ஓய்வு பெரும் நேரத்துல ஒரு இப்படி ஒரு ஆனை போடுங்கள் “பள்ளிக்கு செல்லும் நேரம்(8:00 to 9:00 a.m) and (4:00 to 6:00 p.m.(அரசு இலவச பள்ளி வாகனம்)மட்டும் இயங்கினால் இந்த பிரச்சனை குரையும். மற்ற நேரத்தில் பயனிகளுக்கு பயன்படட்டும்”. “எவ்வளவோ (இலவசமா) செய்ஞ்சிட்டோம் இத செய்யமாட்டோமா !!!!!!.

சரவணன். ச said...

வழக்கம் போல் நல்ல பதிவு காலிங்
இத விட பெரிய கொடுமை இலவச பஸ் பாஸ்ல நடக்கிற கொடுமை பெரிய கொடுமை.ஒரு தனியார் பள்ளி வேன் கவுந்ததால் இந்த திடிர் சோதனை, ஆனா காலையில அரசாங்க பஸ்சுல இந்த இலவச ப்ஸ் பாஸ் வச்சிருக்கிர குழந்தைங்க ஏரி இறங்கரத இன்னும் கலைஞ்சர் அய்யா காதுல விழலபோல. பஸ் நிற்கிற இடத்ததாண்டி ஒரு 10 அடி துறத்துல நிறுத்துறது பாதி பசங்க ஏரிகிட்டு இருக்கும்போதே பஸ்ச எடுக்கறதும் ரொம்ம பாவம். அய்யா கலைஞ்சர் க்கு ஒரு வேண்டுகோள் அரசியலவிட்டு ஓய்வு பெரும் நேரத்துல ஒரு இப்படி ஒரு ஆனை போடுங்கள் “பள்ளிக்கு செல்லும் நேரம்(8:00 to 9:00 a.m) and (4:00 to 6:00 p.m.(அரசு இலவச பள்ளி வாகனம்)மட்டும் இயங்கினால் இந்த பிரச்சனை குரையும். மற்ற நேரத்தில் பயனிகளுக்கு பயன்படட்டும்”. “எவ்வளவோ (இலவசமா) செய்ஞ்சிட்டோம் இத செய்யமாட்டோமா !!!!!!.

அண்ணாமலையான் said...

நல்லா சொன்னீங்க சரவணன், தானே நின்ன தன்னிகரில்லா தலைவன்(நெசமாத்தான்) இத செய்ய மாட்டாரா என்ன?

வடிவேல் கன்னியப்பன் said...

மிகச்சிறந்தப் பதிவு. நம்மதமிழகத்தில செத்தா ஒரு லட்சம்.வாழ்க தமிழகம்.ஆம்.குழந்தை செத்தா ஐம்பதாயிரம்.டீச்சர் செத்தா ஒரு லட்சம்.ஐந்தரை லட்சத்துடன் அவ்விசயம் நிறைவு பெற்றது.

Ananya Mahadevan said...

nalla vishayam. petrorgal ellaam avasiyam idhai padikkanum.

அண்ணாமலையான் said...

கிழிஞ்சுது போங்க. அப்டியே படிச்சுட்டாலும்...

Anonymous said...

//“படிச்சவன் பாடம் நடத்துறான்.... படிக்காதவன் பல்கலைக்கழகமே நடத்துறான்...”//

கலக்கல்.
//இப்படியெல்லாம் ஜனங்க ரத்தத்த சுத்தமா மொத்தமா குடிச்சு, ஆறேழு மாடியும் கூட ரெண்டு லேடியும் சேத்து கட்டிக்கிட்ட கம்மனாட்டிங்க எதயாவது ஒழுங்கா செய்றானுவளா? இல்லயே...நடத்துற ஸ்கூலுக்கு பெர்மிஷன் இல்ல..ஓடுற வண்டிக்கு ஒழுங்கான பேப்பர் இல்ல..அப்புறமா அத ஓட்டுற ட்ரைவருக்கு லைஸென்ஸ் இல்ல (நாங்கள்லாம் ஸ்கூலுக்கே வாங்கலே வேனுக்கா வாங்குவோம்? எந்த ஊருடா நீங்க?) கடைசியா இந்த மாதிரி இடத்துல உயிரினும் மேலான புள்ளங்கல சேக்கற பெற்றோருக்கு தலையில மூளையும் இல்ல..//

பள்ளிக்கூடம்/காலேஜ் கொஞ்சம் பாக்க நல்லா இருந்துச்சுனா என்ன எதுன்னு விசாரிக்காம கொண்டு போய் சேர்க்கறது எல்லா ஊர்லயும் நடந்துட்டு தான் இருக்கு.
எனக்கு தெரிஞ்சு **கு னு ஒரு காலேஜ்ல) எஞ்சினீரிங் காலேஜ்) மூன்று வருடங்கள்முன்னாடி என்ன சேர்க்க விசாரிக்க போனப்போ..ஒரு பெரியவர் அங்க வெளில வயதுள வாயில அடிசுகுட்டு நின்னுட்டு இருந்தாரு.என்னனு விசாரிச்சபோ அவரு விவசாயியாம்.அவரு பையன ந்த காலேஜ்ல சேர்க்கணும் வந்து டோக்கன் அட்வான்ஸ் ஐம்பதாயிரம் கொடுத்துட்டு போயிருக்கார்.இவரோட பையன் அம்பது சீட்டுகளுக்கு உள்ள வரல.அதுனால புல் பேச்சும் கட்டினாத்தான் சேர்த்துக்குவோம்.டோக்கன் அட்வான்ஸ்ஸ திருப்பி தர மாட்டோம்.பீஸ்லையும் களிசுக்க மாட்டோம் னு சொளிடான்கலாம்.புல் பேஸ் கற்ற அளவு வசதி இல்ல தாயி வேற கால்லேஜ்ல சேர்க்கலாம்ன அம்பதாயிரத்த திருப்பி தர மட்டேன்க்ரானுக னு சொல்லி அழுதுட்டு இருந்தாரு.அவர் குடுத்ததுக்கு சாட்சியா பில்ல் ஒண்ணும் இல்ல.கேட்ட நாங்க மொதல்லையே சொன்னோம் அவர்ட்ட னு சொல்றானுங்க காலேஜ்ல.
பெரியவருக்கு இவ்வளவு பணம் குடுக்கரோமே ரசீது வாங்கணும்னு கூட யோசிகலா பாருங்க.

பின்னூட்டம் கொஞ்சம் பெருசாயிருச்சு.எடிட் பண்றதுன்ன பண்ணிருங்க.

Post a Comment