பாத்ரூ(ம்)பூதம் (டாக்டர் இல்லங்க) (A)


மாத்ருபூதம் கேள்விப்பட்டிருப்பீங்க.. அதென்ன ”பாத்ரூம்பூதம்?” இவரும் அவர மாதிரியே “அந்த” டாக்டரோ? பேர் வித்தியாசமா இருக்கே? ஒரு வேளை “அந்த” டாக்டருங்கறாதல “அடையாள”ப்பேரா இருக்குமோ? அடையாளமா இருந்தாலும் பாத்ரூமுக்கு என்ன சம்மந்தம்? என்னங்க ...? பேச்சிலர் பாத்ரூமா? ஒஹோ ...இருந்தாலும் இப்படியெல்லாமா பேர வச்சிப்பாங்க?  என்ன இப்படியெல்லாம் பலரும் பல விதமா மண்டைய உடைச்சிக்கிட்டிருக்கீங்களா? நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்லங்க.. நம்ம ஃப்ரெண்டொட 2 வயசு பொண்னு வீட்டுக்கு வந்திருந்தப்போ இருட்டுல பாத்ரூம் போக பயந்துக்கிட்டு “பாத்ரூம்ல பூதம்”னு மழலையில சொன்னதுதாங்க இது.. முதல்ல நானும் உங்கள மாதிரிதாங்க குழம்புனேன், அப்புறம்தான் புரிஞ்சுது..


அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்?

இருக்கு.. சொல்றேன்..கேளுங்க...(என்னப்பா நம்ம ட்ரூப்ல எல்லாரும் ரெடியா? “ரெடி சார்..” அப்ப ஒன்.. டூ.. த்ரீ.. ஸ்டார்ட்..)

அதாவதுங்க நம்ம நாட்டுலே படிச்சவன், படிக்காதவன்(படம் இல்லப்பா), பாமரன் இன்னும் பல பேர்  இந்த விஷயத்துலே தெளிவான அறிவில்லாமத்தான் இருக்காங்க..  எந்த விஷயத்துல? அதாங்க “அந்த”  விஷயத்துல..

“யோவ் தெளிவு இல்லாமலா நாம உலத்துலயே ரெண்டாவது இடத்துல இருக்கோம்?”

ரெண்டாவது இடத்துக்கு வரக்காரணமே தெளிவு இல்லாததுதான்..புரியுதா..? சித்த நாழி சு(ழிய) வச்சிட்டு சும்மா இருக்கியாடா தம்பி? எல்லா ஊர்லயும் மூத்திர சந்துல பத்திரமா ஒளிஞ்சுக்கிட்டு ஓஹோன்னு யாவாரம் பாத்துக்கிட்டு இருக்கற டாக்டர்களயும் அவங்க பக்கம் பக்கமா கொடுக்கிற விளம்பரத்த பாத்து, அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம, களத்து மேட்ல குத்த வச்சவன்லேருந்து, ஃபில்டர் சிகரெட் பத்த வைக்கறவன் வரைக்கும், செட்டியார்ட்டயோ, சேட்டுக்கிட்டயோ சொத்த வச்சிட்டு மொத்தமா ஏமாந்த கதையையும்தான் நாம இப்ப பாக்கப்போறோம்.. 

உங்களுக்கு தெரியுமா? இந்த விஷயத்துக்காக உலகெங்கும் ஒர் ஆண்டுக்கு மனிதர்கள் செலவழிக்கும் தொகை எவ்வளவென்று? (டாக்டருக்கும், மருந்துக்கும்(மற்ற செலவுகள் சேர்க்காமல்) சில ஆயிரம் கோடிகள்... வாயப்பொளக்காதீங்க... பதிவு கொஞ்சம் சென்சிடிவ் மேட்டர்ங்கறாதல எதாவது அசம்பாவிதம் நடந்தா நான் பொருப்பல்ல....


டவுசர் டாக்டரோட பூசனிக்கீரை ஸ்பெஷல், பிரபல பொறனி கோ.கோழிகுத்து, ஆந்திர அடிவேறு வைத்தியர் மற்றும் எனக்கு பெயர் தெரியாத மேலும் பல பிரபலங்கள்... அப்புறமா எந்தக்கட்டுப்பாடும் இல்லாம நீட்டா(neat-ஆ (கரெக்டா படிச்சீங்கள்ல?) விக்கற இங்க்லீஷ் மருந்துகள் ...


 இந்த மாதிரி போலி டாக்டர்கள், கண்ட வீரிய மருந்தயும் கொடுத்து இருக்கற கொஞ்ச “நஞ்சையும்”(புரிஞ்சுதா?) எடுத்து வீரியம் என்ன விஷயமே இல்லாம ஆக்கிடறானுவ.. இதனால என்னாச்சுன்னா ஏகப்பட்ட குடும்பத்துல குத்து, வெட்டு, குடும்பகோர்ட், கேஸ்னு ஆகிப்போச்சு.. அது மட்டுமல்ல .. அரச மரம், ஆல மரம், வேப்ப மரம்னு சிம்பிளா மரத்த சுத்தி வந்து மாங்கா தின்னலாம்னு மட மரமா திரிஞ்ச மாதர்குலத்தை கரெக்டா கரெக்ட் பன்னி, அவங்க வயித்துல புள்ள குட்டிக்கு பதிலா நெசமாவே புழு, பூச்சி நெளிய வச்சானுவ , பிச்சக்காரனுக்கு பொறந்தவனுங்க...

பஜார்ல கிடைக்கிற  நிஜார அவுக்கற சீப்பான படத்தலாம்  கும்பலா கூடி கும்பமேளாவவா பாத்து, அத உண்மைன்னே நம்பி கற்பனை குதிரைய கன்னா பின்னான்னு ஓட விட்டுட்டு கடேசில இளைஞர்களும் இங்கேதான் வர்றாங்க...குமரன்s/oமகாலஷ்மி படத்துல. “துவண்டு கிடந்த பிஸினஸ்ச செங்குத்தா தூக்கி நிறுத்திட்டன்னு” நடிகர் வெ.ஆ.மூர்த்தி சொன்னது மாதிரி, இந்த ஃப்ராடுங்க தனக்கும் செய்வாங்கன்னு நம்பி. ஆனா இந்த போலிங்க  கருங்குரங்கு கஷாயம், குட்டிக்குருவி லேகியம், மயில் தோகை ஆயில், கடா ஆடு பேஸ்ட்டுனு  எதாவத வர்ற கஸ்டமர் இடுப்புல கட்டி அனுப்பிடுவாங்க...

அவ்வளவுதான் மருந்துங்கற பேர்ல போலிங்ககிட்ட வாங்குன   கஸ்மாலத்த உள்ளுக்க தள்ளிட்டும் வெளிய தடவிக்கிட்டும் பப்பரப்பான்னு மல்லாக்க படுத்துக்கறாங்க.. நம்பாளுங்க.  இதுல  ’நான் அவனில்லை’ கதாநாயகன் மாதிரி 5.1 (dts இல்ல) கனவு வேற... விடிய விடிய குனிஞ்சே (நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் ப்ளீஸ்..) பாத்துக்கிட்டுருந்ததுல கழுத்து வலிதான் மிச்சம். முடிவு என்ன ஆகும்? எதிர்காலத்துல 1க்கு மட்டும்தான் போலாம், வேற 1க்குள்ளயும் போக முடியாத  மாதிரி ஆயிடும்.

மாமியார், நாத்தனார், கொழுந்தனார்னு பல பேரு மருமகள மகளா நினைக்காம ”இன்னுமான்னு?” நக்கலா கேக்கற கேள்வினால அவசரப்பட்டு போலிங்ககிட்ட வர்ற பொண்னுங்கள ”கர்ப்பப்பைல அழுக்கு” இந்த மருந்த ஒரு மண்டலம் சாப்புடுங்கன்னு ஏதோ மஞ்சப்பைய அழுக்கெடுக்கறாப்புல சுலபமா அவங்க ஏக்கத்த பயன்படுத்தி பணத்த புடுங்கிடுவாங்க போக்கத்த பசங்க..

இவனுங்க மட்டும் இல்லங்க, மொட்ட தலையில முடி வளக்கிறேன், மூலம் வந்தவன கூலாக்கறேன்ன்னு  இன்னும் பல பேர் பல வகையிலே மக்களையும் சமுதாயத்தையும் நல்லா ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. அதுலயும் இந்த ”அபார்ஷன் ஸ்பெஷலிஸ்ட்”னு ஒரு கோஷ்டி அபார்ஷன்னா ஆம்லெட் போடறதுங்கற மாதிரி ஏகப்பட்ட இளம் பெண்களோட வாழ்க்கையில விளையாடிட்டு இருக்கானுங்க..

இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

இருக்கு. எல்லாரும் எல்லாருக்கும் முடிஞ்ச வரைக்கும் விழிப்புனர்வு வரவழைக்கற வகையில தெளிவான கருத்துக்களை பரப்புங்க.  நல்ல ஆரோக்யமான , காய்கறிகள் நிறைந்த, சத்தான உணவுகள எடுத்துக்குங்க. இன்றைய இளைய சமுதாயத்தினர் பலர் ”குடிக்க ஒரு பீரு
சாப்புட கொஞ்சம் சோறு
பாக்க ஒரு படம்
படுக்க சின்ன இடம்”னு
தவறான சந்தங்களோடு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. ஆகையால், குடி, பொடி, பீடி, லேடி(யுமா?) போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாமல் வாழ பழகுங்கள். எப்போ யாருக்கு என்ன பிரச்சனைன்னாலும் நல்ல மருத்துவரை அனுகுங்க.. சந்தேகங்கள தயக்கமில்லாம கேளுங்க.. நீங்களே டாக்டரா மாறி சொந்தமா கடா மார்க் லேகியம், காட்டெருமை கோமியம்னு வாங்கி சாப்புடாம மருத்துவர் அறிவுரைப்படி மட்டுமே மருந்துகள உட்கொள்ளவும். விழிப்புணர்வு இல்லாம மீறினா, கடேசில பின் விளைவா முன் விளைவே இல்லாம போய்டும் ஜாக்கிரதை. இன்றைய கால கட்டத்துல நவீன மருத்துவம் மிக பிரமாண்டமாய் வளர்ந்துள்ளது. நாம் போலி மருத்துவர்களிடத்தில் போகும் பிரச்சனைகளெல்லாம் மிக சாதாரண ஒன்றுதான் தற்கால மருத்துவ வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்கும்போது... செலவுகள் அதிகமென்று சிக்கனத்திற்காக உங்கள் வாழ்க்கையை பனயம் வைக்காதீர்கள்.. எல்லாம் சரி ஏன் இவனுங்கள அரசாங்கம் நெனச்சா கட்டுப்படுத்தலாமேன்னு சொல்றீங்களா? அப்ப உங்களுக்கு அரசியல் தெரியாதுன்னு அர்த்தம். மேலும், மருத்துவ பதிவுல அரசியல் வேண்டாம்..  ப்ளீஸ் ஓக்கே?

மகா ஜனங்களே.. இத பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்.. வழக்கம் போல கருத்து மழையா, காட்டாற்று வெள்ளமா பொங்கிட்டு போங்க..

(ஆண்குறி, ஆச்சர்யக்குறின்னு பதிவுலகத்துலயும், பத்திரிக்கையுலகத்துலயும் கவிதை, கட்டுரைன்னு கலக்குறவங்க இந்த பக்கத்துலயும் எதாவது சொன்னா அது  விழிப்புனர்வ ஏற்படுத்தற முயற்சிக்கு பெரிய  அளவுல உதவுறா மாதிரி சந்தோஷமான விஷயம்னு நெனைக்கறேன்)


அது மட்டுமல்ல  எல்லாரும், வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம வாக்குகள அள்ளி வீசுற வாக்காளர்கள் மாதிரி, ஓட்டுக்கள ’வார்ட்’ புயல் கணக்கா வாரி கொட்டுங்க....

அப்ப, மீண்டும் ஒரு அட்டகாசமான தருனத்தில் சந்திப்போமா?



82 comments:

Paleo God said...

அண்ணாமலையான்
கைய கட்டிட்டு இருக்கறாதால விவேகானந்தர் இல்லங்க...!//

ரைட்டு ::))

Paleo God said...

என்னையா நீர்... ஒரு பதிவ போட்டுட்டு நிம்மதியா தூங்கலாம்னு போனா பூதத்த கிளப்பிட்டீறு...சிரிச்சு வயிறு வலிக்கிதுங்க... இப்படி ஒரு சீரியஸ் மேட்டர சிரிச்சு சிரிச்சு படிச்சதில்லைங்க... ::))) அருமையான கருத்து... ச்ச என்னமா எழுதறீங்க... வாழ்த்துக்கள் அண்ணாமலையான். தொடர்ந்து கலக்குங்க.

பாலா said...

ஹா.. ஹா.. ஹா.. தல.. பின்னிடீங்க. சிரிச்சிகிட்டே இருக்கேன்.

இதுக்கு முன்னாடி லேகியம் வித்த பிதாமகன் சூர்யாவையே தூக்கி சாப்பிட்டுட்டீங்க..!!! அருமையான வார்த்தை கோர்ப்புகள்! :) :)

----

இந்த மேட்டரை... முதல்ல.. உங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட இருந்து ஆரம்பிக்கனும். அவங்கதான் தெளிவா இருக்கோம்னு நினைச்சிகிட்டு.. முதல்ல குழம்பறவங்க.

ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை... பெரும்பாலும்.. மனம் சம்பந்தப் பட்டதாதான் இருக்கும். ஏற்கனவே எனக்கு ‘லேகியப் பதிவர்’-ன்னு நம்ம ரசிகர்கள் எல்லாம் முத்திரை குத்திட்டாங்க. இதையும் எழுதினா.... அம்புட்டுதான்.

நானும் ஒரு ஓரமா..கடைய போட்டு உட்கார்ந்துக்கலாம். இந்த டாக்டர் பதிவர்கள் எல்லாம் என்ன பண்ணுறாங்க?

வேலன். said...

சார் அருமையாக இருக்கு...தமிழ் எழுத்துப்பிழைகள் அங்கங்கே தென்படுகின்றது...குறைத்துக்கொள்ளுங்கள் நண்பரே....
வாழ்க வளமுடன்,
வேலன்.

அண்ணாமலையான் said...

வந்துட்டீங்களா? வந்துட்டீங்களா? வந்துட்டீங்களா? நன்றி கருத்துக்கும், வருகைக்கும்..பலா பட்டறை, ஹாலிவுட் பாலா, வேலன்.

பூங்குன்றன்.வே said...

ரொம்ப சென்சிடிவான விஷயத்தை நகைச்சுவையா சொல்லியிருப்பது புதுசு.நல்லா இருக்கு அண்ணாமலையானே !!!

அண்ணாமலையான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூங்குன்றன்.வே

அ.ஜீவதர்ஷன் said...

சூப்பர் அப்பு , தொடர்ந்து கலக்குங்க .......

புலவன் புலிகேசி said...

என்னா நகைச்சுவையா சொல்லிருக்கீங்க...

அண்ணாமலையான் said...

நன்றி எப்பூடி, புலவன் புலிகேசி வருகைக்கும், கருத்துக்கும்..

Priya said...

//“யோவ் தெளிவு இல்லாமலா நாம உலத்துலயே ரெண்டாவது இடத்துல இருக்கோம்?”

ரெண்டாவது இடத்துக்கு வரக்காரணமே தெளிவு இல்லாததுதான்..புரியுதா..?//....
சரியா சொல்லியிருக்கீங்க‌!

அண்ணாமலையான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா...

Chitra said...

எப்போ யாருக்கு என்ன பிரச்சனைன்னாலும் நல்ல மருத்துவரை அனுகுங்க.. சந்தேகங்கள தயக்கமில்லாம கேளுங்க.. நீங்களே டாக்டரா மாறி சொந்தமா கடா மார்க் லேகியம், காட்டெருமை கோமியம்னு வாங்கி சாப்புடாம மருத்துவர் அறிவுரைப்படி மட்டுமே மருந்துகள உட்கொள்ளவும். விழிப்புணர்வு இல்லாம மீறினா, கடேசில பின் விளைவா முன் விளைவே இல்லாம போய்டும் ஜாக்கிரதை. ................... good advice! நல்லா எழுதி இருக்கீங்க.

Unknown said...

"குடிக்க ஒரு பீரு
சாப்புட கொஞ்சம் சோறு
பாக்க ஒரு படம்
படுக்க சின்ன இடம்”னு
தவறான சந்தங்களோடு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க"

தொடர்ந்து கலக்குங்க

கண்மணி/kanmani said...

கொஞ்சம் 'அப்படி இப்படி' இருந்தாலும் சொல்ல வந்த விஷயம்.நன்று.
முதல்ல உங்க யூனிவர்ஸ்ட்டி பசங்க திருந்தினாலே போதும்.
தினமும் தப்பில்லாம தமிழ் எழுதிப் பழகுங்க சாரே
முக்கியமா ன ண மேட்டர்
அவசர டைப்பிங் னா மன்னிப்பு உண்டு

கண்மணி/kanmani said...

எப்படி எழுதினா பதிவுகள் ரீச் ஆகும்னு வலைக்கு வந்து சீக்கிரமே புரிஞ்சிகிட்டீங்க போல..ம்ம்ம் கலக்குங்க

சாருஸ்ரீராஜ் said...

நல்லா நகைசுவையா எழுதி இருக்கீங்க,

கண்மணி/kanmani said...

எங்கே தமிழ்மணக் கருவிப் பட்டை?
இணைக்கலையா?

அண்ணாமலையான் said...

Chitra, parthi_a3 , கண்மணி, sarusriraj உங்களோட வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

”தப்பில்லாம தமிழ் எழுதிப் பழகுங்க ” அதத்தான் ப்ளாக்ல எழுதி பழகறேன்.
“கொஞ்சம் 'அப்படி இப்படி' இருந்தாலும் ” டைட்டில்ல (A)போட்டிருக்கேனே?
”எப்படி எழுதினா பதிவுகள் ரீச் ஆகும்னு வலைக்கு வந்து சீக்கிரமே புரிஞ்சிகிட்டீங்க போல”
இது அந்த நோக்கத்துல எழுதனதுல்ல... நம் சகோதர, சகோதரிகள் ஏமாறவும், ஏமாற்றப்படக்கூடாதெனவும் கருதி எழுதப்பட்டது. நீங்கள் கூறிய படி ‘ரீச்’ ஆனால் சந்தோஷமே... ஏனெனில் சம்மந்தப்பட்டவர்கள் நிச்சயம் ப்ளாக் படிக்க போவதில்லை.. நாம்தான் முடிந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த முயல வேண்டும்.. அனைவரும் இயன்ற அளவு ஒத்துழையுங்கள்...

சிநேகிதன் அக்பர் said...

வரிக்கு வரி வாரியிருக்கிறத படிச்சி வயிரு புண்ணாப்போச்சி.

கலக்கியிருக்கீங்க தல.

நானும் யோசிச்சது உண்டு அரசாங்கம் ஏன் இவங்க மேல நடவடிக்கை எடுக்கமாட்டுக்குன்னு.

மணிஜி said...

நல்ல நகைச்சுவையான இடுகை. தொடர்ந்து வாசிக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே..

சரவணன். ச said...

//சித்த நாழி சு(ழிய) வச்சிட்டு சும்மா இருக்கியாடா தம்பி? //

//எதிர்காலத்துல 1க்கு மட்டும்தான் போலாம், வேற 1க்குள்ளயும் போக முடியாத மாதிரி ஆயிடும். //

தம்ப்ரிரிரிரி.......
வெ.மூர்த்தியே தேவலாம் போல...

எதையும் கவர்ச்சியா சொன்னாத்தான் மக்களுக்கு புரியும்ன்னு நல்லா தெரிஞ்சிவச்சிரிக்கீங்க

சூப்புரப்பு....

ஸ்ரீராம். said...

நல்ல விஷயத்தை நகைச் சுவையோடு சொல்லி இருக்கிறீர்கள்...மென்மையாகச் சொல்லி இருப்பதை எழுத்துப் பிழையாகக் கொள்ளக் கூடாது... இல்லை மலை சார்?

U.P.Tharsan said...

:-)) ஓட்டு போட்டாச்சு... ஆனாலும் இது வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டுமான பதிவு என்கிறதால.. இந்த வயதுக்கு வரதா பிள்ளை கருத்து சொல்லாமல் ஒதிங்கிக்குது.....

Thenammai Lakshmanan said...

நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை அண்ணாமலையான்

Anonymous said...

ennatha solla neengathqan ellathayum puttu puttu vachitingal appuram soluvathrkku onnoum illay neengal valarnthu avrra illaya thali muraya ppathi miga theliva ezhuthi irukkirrirkal ungalathu pani thodar enathu manmarntha vallthukkal

திவ்யாஹரி said...

மகா ஜனங்களே.. இத பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்.. வழக்கம் போல கருத்து மழையா, காட்டாற்று வெள்ளமா பொங்கிட்டு போங்க..

அருமை நண்பா.. கலைவாணர் போல சிரிப்போட சிந்திக்கவும் வச்சிட்டிங்க.. நன்று..

(பி.கு) பொங்கனும்னு நெனச்சி தான் எழுத ஆரம்பிச்சேன்.. ஆனால் தமிழகத்தில் (உங்கள் வலைதளத்தில்) ஆங்காங்கே மழை (பல நண்பர்களின் கருத்துரை..) பெய்கின்ற காரணத்தினால்.. நான் பொங்கியது தெரியாம போய்டுச்சி...

அண்ணாமலையான் said...

அக்பர்,தண்டோரா ...... சரவணன். ச ,ஸ்ரீராம்.,U.P.Tharsan ,thenammailakshmanan,Anonymous, திவ்யாஹரி உங்க எல்லோரட வருகைக்கும், அன்பான கருத்துக்கும் நன்ற். தொடர்ந்து வாங்க...

Tharshy said...

ஆழமான கருத்துகளை அழகாகவும் நகைச்சுவை உணர்வோடும்
தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்…வாழ்த்துகள் அண்ணா!!!:)

அண்ணாமலையான் said...

tharshy மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்.. உங்கள் வாழ்த்தை.......

நினைவுகளுடன் -நிகே- said...

நல்லா நகைசுவையா எழுதி இருக்கீங்க,
வாழ்த்துக்கள் நண்பரே..

suvaiyaana suvai said...

கலக்குங்க!! கலக்குங்க!!

அண்ணாமலையான் said...

நினைவுகளுடன் -நிகே, suvaiyaana suvai தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்..

Malar Gandhi said...

I appreciate your comment at my space. Wish I could read your page'...unfortunately I can't...I can talk Tamil...can't read or write efficeiently. Hope you will understand. Guess you are shaping your blog into good one'...happy blogging.

சிவாஜி சங்கர் said...

ஹஹஹா. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு இதுக்கும் ஏதாச்சும் வைத்தியம் வெச்சிருக்கீங்களா?

அண்ணாமலையான் said...

Sivaji Sankar இன்னும் 3 தடவை படிங்க சரியா போய்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஆதி மனிதன் said...

நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. ஆனால் இம் மாதிரி போலி மருத்துவர்களிடம் ஏமாறுபவர்கள் பெரும்பாலும் பாமரர்களே. அவர்களுக்கு இவையெல்லாம் சென்றடைய என்ன வழி?

எங்கள் ஊர்பக்கம் இது மாதிரி மருந்து விற்பார்கள். ஆனால் சாப்பிடும்போது கருங்குரங்கை நினைக்க கூடாது. நினைத்தால் மருந்து வேலை செய்யாது என்று ஒரு டிஸ்கியும் சேர்த்து கொள்வார்கள். அப்படி சொன்னதை கேட்டவுடன் சாப்பிடும் போது குரங்கு ஞாபகம் வராமல் இருக்குமா?

அண்ணாமலையான் said...

ஆதி மனிதன் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

malarvizhi said...

நல்ல ஒரு கருத்தை மிகவும் நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக உள்ளது. நீங்கள் சொன்னதை நான் அடிக்கடி மனதில் நினைத்ததுதான். எனக்கு தெரிந்து நம் ஊரிலேயே நிறைய போலி டாக்டர்கள் உண்டு. இப்படி மக்களை ஏமாற்றுகிறார்களே என்று நினைப்பேன். ஆனால் அவர்களிடம் தானே மக்கள் போகிறார்கள். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது தவிர மருத்துவ மனையில் சில நாட்கள் வேலை செய்துவிட்டு தனியாக போய் புதிதாக ஆஸ்பத்திரி ஆரம்பித்து வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் . இந்த கொடுமை எங்கள் மருத்துவமனையிலிருந்து சென்றவர்களும் செய்கிறார்கள். இதற்கெலாம் எப்போது விடிவு என்று தெரியவில்லை..

அண்ணாமலையான் said...

வாங்க மலர்விழி, உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. விடிவு தானாக வராது, நாம்தான் முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்...

malar said...

அண்ணாமலையான் சார் திருத்திவிட்டேன் ஓட்டை போடுங்கள்

Nandinis food said...

Wonderful advice with humour! Happy to read in tamil.

அண்ணாமலையான் said...

hi thank u nandini for ur visit and comment. pls be try 2visit this blog regularly.





and to the query abt the new post, am thinkng .. pls b wait...

ராஜேஷ் said...

எளிய நடையில் அற்புதமான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி

அண்ணாமலையான் said...

thank u rajesh for ur visit & comment. தொடர்ந்து வாங்க.. ரொம்ப சந்தோஷம்.. உங்க வருகை..

Ash said...

Thanks for the love shared on my post...... by those kind words....

Happy Celebrations to u & your family toooooo!!!!!

Ash...
(http://asha-oceanichope.blogspot.com/)

ஹேமா said...

இது நகைச்சுவை.சிரிக்காம இருக்கிற உம்மணாம்மூஞ்சியக்கூடச் சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிட்டீங்க.நிறைய விஷயம் இருக்கு.

அண்ணாமலையான் said...

வாங்க வாங்க லேட்டா வந்தாலும் ஷார்ட்டா சொல்லிட்டீங்க.. நன்றி, வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து வாங்க.....

Jaleela Kamal said...

போலி டாக்டர பற்றி சரியான விழிபுணர்பு கட்டுரைய நல்ல நகைச்சுவையுடன் அள்ளி தெளித்து இருக்கீங்க.

பாராட்டுக்கள்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

ஜனரஞ்சகமான மொழி நடை...துள்ளலும், எள்ளலும் கலந்த பதிவு. வாழ்த்துகள்.

தோழன் மபா
தமிழன் வீதி

அண்ணாமலையான் said...

hayyram, Jaleela, தோழன் மபா வாங்க வாங்க . உங்க வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வந்து ஆதரவு தாங்க...

ஸாதிகா said...

இந்த பதிவு சிரிக்கவும் வைத்தது.சிந்திக்கவும் வைத்தது.

அண்ணாமலையான் said...

வாங்க ஸாதிகா உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாங்க... (நீங்கதான்50)

malarvizhi said...

தகவல் கொடுத்தமைக்கு நன்றி , தோழரே ! தவறை திருத்தி விட்டேன் . இனி உங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

ருத்ர வீணை® said...

//கடா மார்க் லேகியம், காட்டெருமை கோமியம்//

டைமிங்கோட நல்ல ரய்மிங்கோட சும்மா பட்டய கிளப்பறீங்க..

அண்ணாமலையான் said...

வாங்க ருத்ர வீணை..உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... தொடர்ந்து வாங்க....

Thenammai Lakshmanan said...

நன்றி அண்ணாமலையான்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

That was indeed a good analysis and awakening message. You are right, the change has to start from us and your efforts in this direction is a welcome sign. Keep it up.
Rajan, Abu Dhabi
Ex Annamalayan 1978 Passed out from Technology Dept

அண்ணாமலையான் said...

rajan sir very happy to c u here. thnk u very much for ur presence and valuable comment.. pls try to be a regular visitor to my blog..

Annamalai Swamy said...

Nice article Mr. Annamalaiyaan.

அண்ணாமலையான் said...

thanx mr.Annamalai Swamy for ur visit & comment

அன்புடன் மலிக்கா said...

ஹா.. ஹா.. ஹா.. பின்னிடீங்க. சிரிச்சிகிட்டே அழறேன் சிரிச்சதில்.. சூப்பர்..

அண்ணாமலையான் said...

ரொம்ப நன்றி.. உங்க வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து வாங்க... ப்ளீஸ்.

malarvizhi said...

நண்பரே உங்கள் கேள்விக்கு பதில் என்னுடைய வலைத்தளத்தில்.( சீரியல்கள் )நீங்கள் கேட்ட பெரியகோயில் படங்கள் நான் எடுக்கவில்லை. மற்ற படங்கள் (பெரியகோயில்) நான் எடுத்தவை.

Jaleela Kamal said...

உங்கள் மைக் டெஸ்டிக் பதிவு என் மேடை பேச்சுக்கு ரொம்ப உதவியா இருந்தது. , சமையல் அட்டகாசங்களை வந்து பாருங்கள்.

கமலேஷ் said...

//“யோவ் தெளிவு இல்லாமலா நாம உலத்துலயே ரெண்டாவது இடத்துல இருக்கோம்?”

ரெண்டாவது இடத்துக்கு வரக்காரணமே தெளிவு இல்லாததுதான்..புரியுதா..?//....
சரியா சொல்லியிருக்கீங்க‌!

கலக்குரிங்கன்னே ரொம்ப சீரியசான விஷத்தை ரொம்ப அழகா ரசிக்கும் படி சொல்லி இருக்கீங்க...வாழ்த்துக்கள்...

மாதேவி said...

நகைச்சுவையான பதிவு.

அண்ணாமலையான் said...

kamalesh, மாதேவி தங்களின் வருகையும், கருத்தும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து வாருங்கள்...

அண்ணாமலையான் said...

”Jaleela said...உங்கள் மைக் டெஸ்டிக் பதிவு என் மேடை பேச்சுக்கு ரொம்ப உதவியா இருந்தது. ,”
அப்படியா... ரொம்ப சந்தொஷம்......

SUFFIX said...

நல்லா கல கல கலன்னு இருக்கு உங்க எழுத்துக்கள்!!

அண்ணாமலையான் said...

வாங்க SUFFIX வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. தொடர்ந்து வாங்க....

Jaleela Kamal said...

vanthu paarkkalaiyaa,மைக் டெஸ்டிக் பதிவு

samaiyal addakaasaththil paarkkavum.

Magia da Inês said...

Amigo...

...que a fé e a esperança num mundo melhor sejam revividas a cada dia em seu coração!
Feliz 2010!!!

Beijinhos.
Itabira - Brasil

Nimmy said...

முக்கியமான ஒரு விடயத்தை இலகு தமிழில் கூறியிருக்கிறீர்கள்.
மிகவும் நன்றாக இருக்கிறது.

கண்மணி/kanmani said...

ஹாப்பி நியூ இயர் டு யூ
கனவுகள் நனவாக ஆசிகள்

Gita Jaishankar said...

Wish You a Very Happy New Year!!!

அண்ணாமலையான் said...

thanku for ur new year wishes, Magia da Inês
Nimmy உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாங்க...

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Prathap Kumar S. said...

//“யோவ் தெளிவு இல்லாமலா நாம உலத்துலயே ரெண்டாவது இடத்துல இருக்கோம்?”//

அதானே நியாயமான கேள்வி...

என்னங்க இப்படி சிரிக்க வைச்சு சிந்திக்க வைக்கிறீங்க... சூப்பர்... தேவையான ஒன்றுதான்... சில டிவி சேனல்ளுக்கு பொழைப்பே இதைவச்சுத்தான்...

கலக்குங்க வாத்யோரே...

அண்ணாமலையான் said...

சூர்யா ௧ண்ணன், நாஞ்சில் பிரதாப் உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....

Anonymous said...

குடிக்க ஒரு பீரு சாப்புட கொஞ்சம் சோறு பாக்க ஒரு படம் படுக்க சின்ன இடம் ஆகா... என்னா வரிகள் ,சூப்பர் தலீவா.

அண்ணாமலையான் said...

ஒருவார்த்தை, இப்படி தலீவான்ற ஒரு வார்த்தைல பாம் வைக்கலாமா?

Post a Comment